பூரட்டாதி
(12 இலக்கின பொதுப் பலன்கள்)
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், பணம் சம்பாதிப்பதில் வெற்றி காண்பீர்கள் அதிகமாகப் பேசக்கூடிய நீங்கள், நன்கு படித்தவர் தேர்ச்சிபெற்றவர். நண்பர்களுடன் உங்களுக்கு நல்ல உறவுகள் இருந்து வரும். நீங்கள் தெளிவாகப் பேசுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை, பெரும்பாலும் ஒரு பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவராக இருப்பார். நீங்கள், வெகு எளிதில், எதிர்பாலைச் சேர்ந்தவர்களால் ஈக்கப்படுகிறீர்கள். குழந்தைகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். உங்களுக்கு, நல்ல, உடல்கட்டு இருக்கும் உங்கள் வாழ்க்கையில் 19 வது மற்றும் 21 வது வயதில்தான் மிகவும் அதிருஷ்டமான காலத்தை எட்டுவீர்கள்.
உத்ரட்டாதி
(12 இலக்கின பொதுப் பலன்கள்)
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், ஒரு சிறந்த மேடைப் பேச்சாளராகவும், மகிழ்ச்சி நிறைந்தவராகவும், நற்குணமும், எதிரிகளை ஒடுக்கி வெற்றி கொள்ளும் திறனும் மிக்கவராகவும் விளங்குவீர்கள். நீங்கள், தாராள சிந்தையுடையவராகவும், செல்வவளமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் இருப்பீர்கள். உங்களுக்கு கவர்ச்சிகரமான, வசீகர உடற்கட்டு இருக்கும். உங்களுக்கு குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையில், 27, 31 ஆம் வயதில்தான், நல்ல அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள்.
ரேவதி
(12 இலக்கின பொதுப் பலன்கள்)
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நல்ல சுபாவம் உடையவராகவும், பணக்காரராகவும், நன்னம்பிக்கையும், அறிவாற்றலும் படைத்தவராகவும், நியாயமான வழிகளில் பணம் சம்பாதிப்பவராகவும் நீங்கள் விளங்குவீர்கள். நீங்கள், வயதில் பெரியவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பணிந்து நடப்பதுடன், மரியாதையும் அளிக்கிறீர்கள். நீங்கள் இந்த குந்த் முல நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், பூஜை செய்திடவேண்டும். உங்கள் 17, 21, மற்றும் 24 ஆம் வயதை எட்டும்போது , நல்ல அதிருஷ்டத்தைப் பாக்கலாம்.
No comments:
Post a Comment