தண்ணீர் தாவரங்களை வெளியேற்றுதல் - அபரிமிதமான தாவர வளர்ச்சி, மீன் குளத்திலுள்ள சத்துக்களை எடுத்துக் கொள்ளுமாதலால், குளத்தின் உற்பத்திப் பெருக்கம் குறையும். இது தவிர, மற்ற உயிரினங்கள், தேவையற்ற மீன்கள், பூச்சிகளின் பெருக்கத்திற்கு இத்தாவரங்கள் உதவி செய்கின்றன. எனவே, தண்ணீரிலுள்ள தாவரங்களை முதலில் அகற்ற வேண்டும். பொதுவாக, மீன் குஞ்சு குளங்களை சுத்தம் செய்வதற்கு ஆட்கள் பயன்படுத்தப்படுகின்றனர். காரணம், இந்தக் குளங்கள் சிறியதாகவும், ஆழம் இல்லாமல் இருப்பதே. பெரிய குளங்களில் இயந்திரங்கள் மற்றும் இரசாயன உயிரின முறைகளைப் பயன்படுத்தி, குளங்களில் உள்ள தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. சிமெண்ட் தொட்டி நர்சரிகள் தேவையற்ற மீனினங்கள், ஊன் உண்ணிகளை அழித்தல் : பல்வேறு மீன் உண்ணிகள், தேவை இல்லாத மீன் இனங்கள், தவிர ஊன்உண்ணிகளான பாம்பு, ஆமை, தவளை, பறவைகள் போன்றவை குளத்திலுள்ள மீன் குஞ்சுகளுக்கு தொந்தரவு கொடுப்பதோடு, இடம், பிராணவாயு ஆகியவற்றிற்கும் போட்டியிடுகின்றன. குளத்திலுள்ள தண்ணீரை இறைத்து, காயவைத்து, சமயங்களில் சில ரசாயனங்களை பயன்படுத்தி தேவையற்ற மீனினங்களையும், ஊன் உண்ணிகளையும் அழிக்கலாம். இலுப்பை புண்ணாக்கு, ஒரு ஹெக்டேர்-மீ-க்கு 2500 கிலோ என்றளவில், மீன் குஞ்சுகளை குளத்தில் விடுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் குளத்தில் இடலாம். இந்தப் புண்ணாக்கு ஒரு கிருமி நாசினியாக செயல்படுவதோடு, மக்கிய பின், இயற்கை எருவாகவும், பயன்படுகிறது. ப்ளீச்சிங் பவுடர்-(30 சதம் குளோரினை உள்ளடக்கியது) ஒரு ஹெக்டேர்-மீ-க்கு 350 கிலோ என்றளவிலும் பயன்படுத்தலாம். யூரியா ஒரு ஹெக்டேர்-மீ-க்கு 100 கிலோ போடும்போது ப்ளீச்சிங் பவுடர் அளவை பாதியாகக் குறைத்துக் கொள்ளலாம். ப்ளீச்சிங் பவுடர் போடுவதற்கு 18- 24 மணி முன்னால் யூரியாவை போட்டு விட வேண்டும். குளத்திற்கு உரமிடுதல்: ஒரு சில நீர்த்தாவரங்களே /பாசிகளே மீனிற்கு இயற்கை உணவாகும். இந்த நீர்த்தாவரங்கள்/ பாசிகள் உற்பத்திக்கு, உரங்களை குளத்தில் இடவேண்டும். குளத்தின் கார அமிலத் தன்மைக்கு ஏற்ற படி சுண்ணாம்பு போட வேண்டும். சுண்ணாம்பு இட்ட பிறகு குளத்தில் இயற்கை உரங்களான, சாணம், கோழி எரு, அல்லது கனிம உரங்கள் அல்லது இரண்டும் சேர்ந்து ஒவ்வொன்றாக இடவேண்டும். கடலை புண்ணாக்கு 750 கிலோ, சாணம் 200 கிலோ, ஒற்றை சூப்பர் பாஸ்பேட் 50 கிலோவை ஒரு ஹெக்டேரில் போடும்போது, நீர்த்தாவரங்கள்/பாசிகள் உற்பத்தி நன்றாக இருக்கும். இந்த அளவில் பாதியை எடுத்து தண்ணீர் சேர்த்து கொழ, கொழவெனத் தயார் செய்து மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு 2-3 நாட்களுக்கு முன்னால் குளத்தில் ஊற்ற வேண்டும். மீதியுள்ள பாதியை பாசிகள் உற்பத்தியை பொறுத்து 2,3 முறையாக குளத்தில் இடலாம். கெண்டை மீன் குஞ்சு தண்ணீர்/ நீர்வாழ் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் : நீர்வாழ்பூச்சிகள் அதன் புழுக்கள், குளத்திலுள்ள சிறிய மீன் குஞ்சுகளோடு உணவிற்காக போட்டியிடுபவை. மேலும் சிறிய மீன் குஞ்சுகளை இவை அழிக்கவல்லவை. சோப்பு எண்ணைக் கரைசல் (விலை குறைந்த தாவர எண்ணெய் 56 கிலோ ஒரு ஹெக்டேருக்கு, இத்துடன் விலை குறைந்த சோப், தாவர எண்ணெய் எடையில் மூன்றில் ஒரு பங்கு எடை சேர்க்கவும்) பயன்படுத்துவது செலவு குறைந்த நுட்பமாகும். மேலும் நீர் மேற்பரப்பில் மூச்சுவிட்டு வாழும் பூச்சிகளையும் இது அழித்துவிடும். மண்ணெண்ணெய் 100-200 லிட்டர் அல்லது டீசல் 75 லிட்டருடன் சோப் திரவம் 560 மில்லி அல்லது துணி துவைக்கும் தூள் ஒரு ஹெக்டேர் தண்ணீர் அளவுக்கு 2-3 கிலோ ஆகியவற்றை சோப்பு எண்ணைக் கரைசலுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். |
No comments:
Post a Comment