Wednesday 28 March 2012

கும்பம் உங்கள் இலக்கினம்



   


 சனியை அதிபதியாகக் கொண்ட கும்ப லக்னத்தில், நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் கும்பம்,ராசி மண்டலத்தில் 11 வது ராசி. உங்களுக்கு தடித்த கழுத்து இருக்கும். சுயமரியாதைக்கு நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருபவர். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து, உங்களுக்கு எதிர்ப்பு இருக்கும். உங்கள் தலை வழுக்கையாக இருக்கலாம் அல்லது கேசம், மிகவும் குறைவாக இருக்கலாம். உங்கள் குழந்தைப் பருவத்தில் உங்களுக்கு, சில துரதிருஷ்டங்களும் துன்பங்களும் இருந்திருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு செல்வச் செழிப்பும், சொத்துக்கள் வசதியும் கிடைக்கும். உங்கள் சகோதரர்களின் கெட்ட சகவாசம் உங்களை பாதிக்கும். 24, 25 வயதில், நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள். நீங்கள் ஒரு தத்துவஞானி எந்த ஒரு விஷயத்தையும், துருவிப்பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர். நீங்கள் அமைதி விரும்புபவர் நன்கு படித்தவர். நீங்கள் பல விஷயங்களைப் பற்றியும், சதா சிந்தித்துக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிட விரும்புகிறீர்கள். கூரிய நினைவாற்றல் கொண்ட நீங்கள், உங்கள் எண்ணங்களில் விரைவாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர் வாழ்க்கையில் பல ஏற்றதாழ்வுகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். உயரமாக இருக்கும் நீங்கள், நல்ல கவர்ச்சியான, கம்பீரமான தோற்றமுடையவர். உங்களுக்கு பல கஷ்டங்கள் இருந்தாலும், நீங்கள் அச்சமின்றி செயல்படுபவர். நீங்கள் சமயோசிதமாக செயல்படக் கூடியவர் அரசியலில் ஆர்வம் கொள்வீர்கள். பொது நிறுவனங்களிலும், நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். விளையாட்டுத் துறையில், உங்களுக்கு விருப்பம் இருக்கும். வலுவான உடற்கட்டையுடைய நீங்கள், மிகவும் தாராள சிந்தை கொண்டவர். நீங்கள், நிலபுலன்களுக்கு சொந்தமாக இருப்பதுடன், மிகுந்த கவனமாகவும் பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும், நீங்கள் மிகுந்த உறுதியுடன் இருப்பவர். நீங்கள், பலதரப்பட்ட விருந்துகளுக்கும், கிளப்புகளுக்கும் போய்வர விரும்புகிறீர்கள் அதன் விளைவாய் உங்களுக்கு அவப் பெயரும் ஏற்படும். உங்கள் உணர்ச்சிகளையோ, காதலையோ நீங்கள் வெளிப்படையாக, எடுத்துக்காட்டுவதில்லை. நீங்கள் மிகவும் தந்திரம்மிக்க சாமர்த்தியசாலி. நன்கு படித்த, புத்திசாலியான ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்ளவே நீங்கள் விரும்புகிறீர்கள்

No comments:

Post a Comment