Thursday 22 March 2012

பொது அறிவு வினா-விடை page 3

201. ஆஜ்மீரை தலைநகராகக் கொண்டு ஆண்ட மரபினர்

அ. பாலர்கள்
ஆ. சௌகான்கள்
இ. சந்தேளர்கள்
ஈ. எவருமில்லை 


202. வங்காளத்தை ஆண்ட பாலர் மரபின் முதல் அரசன்

அ. தர்மபாலன்
ஆ. கோபாலன்
இ. மகிபாலன்
ஈ. உத்திரபாலன் 


203. இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்

அ. பாபர்
ஆ. கஜினி முகமது
இ. முகமது கோரி
ஈ. முகமது பின் காசிம் 


204. கீழ்க்கண்ட எது முகமது கோரி இந்தியாவில் படையெடுத்தபோது அவர் கைப்பற்றாத இடம்

அ. மீரத்
ஆ. ஆஜ்மீர்
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை 


205. கீழ்க்கண்ட யார் சையத் மரபை சார்ந்த சுல்தானிய மன்னர்

அ. முகமது ஷா
ஆ. ஆலம் ஷா
இ. முபாரக் ஷா
ஈ. அனைவரும் 


206. தாம் வெளியிட்ட நாணயங்களில் தன்னை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பதிவித்தவர்

அ. அலாவுதீன் கில்ஜி
ஆ. கியாசுதீன் துக்ளக்
இ. ஜலாலுதீன் கில்ஜி
ஈ. முகமது பின் துக்ளக்


207. சௌகான் மரபில் வந்த விசால்தேவர் தோமரர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதி

அ. கன்னோசி
ஆ. மாளவம்
இ. டெல்லி
ஈ. வங்காளம் 


208. ஷா நாமாவை எழுதியவர்

அ. அல்பரூனி
ஆ. இபன்படூடா
இ. பிர்தௌசி
ஈ. பக்தியார்கில்ஜி


209. பொருத்துக

I. லிங்கராஜா ஆலயம் - 1. புவனேஸ்வரம்
II. கோனார்க் - 2. சூரிய கடவுள்
III. தில்வாரா - 3. சமணர் கோயில்
IV. சித்கோதர் - 4. வெற்றிகோபுரம்

அ. I-1 II-2 III-4 IV-3
ஆ. I-1 II-2 III-3 IV-4
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3 


210. இரண்டாம் தரெயின் போரின் முக்கியத்துவம் 
அ. முகமது கோரி தோற்கடிக்கப்பட்டார்
ஆ. பிரதிவிராசன் கொல்லப்பட்டார்
இ. இந்தியாவில் துருக்கியர் ஆட்சி ஏற்பட இது வழிவகுத்தது 
ஈ. இந்தியாவில் ஆப்கானியர் ஆட்சி ஏற்பட இப்போர் வழிவகுத்தது 




விடை: 201. ஆ 202. ஆ 203. ஈ 204. இ 205. ஈ 206. அ 207. இ 208. இ 209. ஆ 210. இ


No comments:

Post a Comment