துலாம் உங்கள் இலக்கினம்(12 இலக்கின பொதுப் பலன்கள்) |
நீங்கள் துலா லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் 7 - வது ஸ்தானத்தில் துலாம் அதன் அதிபதி சுக்ரன். உங்களுக்கு, எடுப்பான, கவர்ச்சியான தோற்றமிருக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். சமய முக்யத்துவம் வாய்ந்த இடங்களுக்கு பயணம் செய்வது, உங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு, பெரிய - பிரதானமாகத் தெரியும் முக்கு இருக்கும். நீங்கள், நல்ல, தகுதிவாய்ந்த ஒரு வர்த்தகர் ஜோசியத்தில் விருப்பமுடையவர். உங்கள் குரல் இனிமையானது கவர்ச்சியானது நீங்கள் பேராசை பிடித்தவர் அல்ல. நீங்கள் பல இடங்களுக்கும் பயணம் செல்வீர்கள். உங்கள் குடும்பத்திலிருந்து விலகி, வெகு தொலைவில்போய் நீங்கள் வசிப்பீர்கள். உங்கள் குழந்தைப் பருவத்தில், உங்களுக்கு சில கஷ்டங்களும், வேதனைகளும் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் நீங்கள் மிகுந்த சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுக்கு, வழக்கமான, மாமுலான ஒரு வாழ்க்கை அமையும். 31, 32 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். உங்களுக்குப் பல நண்பர்கள் இருப்பார்கள். நீங்கள் கண்யமான தோற்றமுடையவர். உங்களுக்கு முணூக்கென்றால் இருமல் வந்துவிடும் நல்ல கவர்ச்சியான தோற்றமுடைய நீங்கள், விவேகம் நிறைந்த புத்திசாலி எப்போதும் புன்சிரிப்புடன் காணப்படுகிறீர்கள். கவர்ச்சியான கண்களைக் கொண்ட நீங்கள், கடமை தவறாதவர் சாமர்த்தியசாலி மற்றவர்களின் எண்ணத்தை உங்களால் எடைபோட்டிட முடியும் எதனையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்வதில் நீங்கள் பெயர் பெற்றவர். நீங்கள், ஒரு நல்ல தகுதிவாய்ந்த நிர்வாகி. அமைதியை விரும்பும் நீங்கள் கலையிலும் இசையிலும் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டவர். பெரிய தொழில் முயற்சிகளில், நீங்கள் வெற்றியடைவீர்கள். சிற்றின்பங்களிலும் டாம்பீகமான சொகுசுப் பொருட்கள் மற்றும் வாசனை செண்டுகளிலும், உங்களுக்கு கொள்ளை ஆசை. நீங்கள் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவரானாலும் வாழ்க்கையில், நன்கு முன்னேறுவீர்கள். அரசாங்கம் மற்றும் சமுக விவகாரங்களில் நீங்கள், மகத்தான வெற்றி காண்பீர்கள். சில தொழில் திட்டங்களுக்குத் தலைமை தாங்குவீர்கள். அகலமான முகத்தையுடைய நீங்கள், நல்ல அழகிய, கவர்ச்சியான, வசீகரத் தோற்றமுடையவர். லட்சியப் பேரவா கொண்டவரான நீங்கள், பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர். பல நாடுகளுக்கு, நீங்கள் பயணம் செல்வீர்கள். நீங்கள், உண்மை விரும்பி சமுகப் பணியில் ஆர்வம் கொண்டவர்.
No comments:
Post a Comment