Thursday 22 March 2012

குலோத்துங்க சோழன் உலா

இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒட்டக் கூத்தர் பாடியது குலோத்துங்க சோழன் உலா ஆகும். 


நூல்


தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம்
போர்மேவு பாற்கடற் பூத்தனையோன் - பார்மேல்
1

மருளப் பசுவொன் றின் மம்மர்நோய் தீர
உருளுந் திருத்தே ருரவோன் - அருளினாற்
2

பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்
ஊராக் குலிர விடையூர்ந்தோன் - சோராத்
3

துயில்காத் தரமகளிர் சோர்குழைகாத் தும்பர்
எயில்காத்த நேமி யிறையோன் - வெயில்காட்டும்
4

அவ்வா னவர்கோ னொருமணி யாசனத்தில்
ஒவ்வாம லேத்த வுடனிருந்தோன் - கல்வை
5

எழக்குரைக்கும் பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப
வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன் - பழக்கத்தாற்
6

போந்த புலியுடனே புல்வா யொருதுறைநீர்
மாந்த வுலகாண்ட மன்னர்பிரான் - காந்தெரியில்
7

வெந்தா ருயிர்பெற் றுடல்பெற்று விண்ணாள
மந்தா கினிகொணர்ந்த மன்னர்கோன் - முந்திப்
8

பொருதேர்க ளீரைந்தி னீரைவர் போர்பண்
டொருதேரால் வென்ற வுரவோன் - கருதி
9

மலைபத்தும் வெட்டு முருமின் உறவோன்
தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் - நிலைதப்பா
10

மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக்
கூளி தலைபண்டு கொண்டகோன் - நாளும்
11

பதுமக் கடவுள் படைப்படையக் காத்த
முதுமக்கட் சாடி முதலோன் - பொதுமட்க
12

வாங்கொயி னேமி வரையாக மண்ணாண்டு
தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய
13

மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து
மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன்
14

றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு
மலையெறியு மன்னர்க்கு மன்னன் - நிலையறியாத்
15

தொல்லார் கலைவலையந் தோள்வலைய முன்றிருந்த
வில்லா னடுவுள்ள வெற்பெடுத்தோன் - ஒல்லைக்
16

கொலையே நுடம்படையக் கொய்தாலு மெய்தாத்
துலையேறி வீற்றிருந்த தோன்றல் - தலையேறு
17

மண்கொண்ட பொன்னிக் கரைகாட்ட வாராாதாள்
கண்கொண்ட சென்னிக் கரிகாலன் -எண்கொள்
18

பணம்புணர்ந்த மோலியான் கோமகளைப் பண்டு
மணம்புணர்ந்த கிள்ளி வளவன் - அணங்கு
19

படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன் - அடுத்தடுத்துச்
20

சீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூறும்
ஆறும் படுதழும்பி னாகத்தோன் - ஏறப்
21

பிரம வரக்க னகலம் பிளந்து
பரமர் திருத்தில்லை பார்த்தோன் - நரபதியர்
22

தாழமுன் சென்று மதுரைத் தமிழ்ப்பதியும்
ஈழமுங் கொண்ட விகலாளி - சூழ்வும்
23

ஏறிப் பகலொன்றி லெச்சுரமும் போயுதகை
நூறித்தன் றூதனை நோக்கினான் - வேறாகக்
24

கங்கா நதியுங் கடாரமுங் கைவரச்
சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் -எங்கோன்
25

புவிராச ராசர் மனுமுதலோர் நாளில்
தவிராத சுங்கத் தவிர்த்தோன் - கவிராசர்
26

போற்றும் பெரியோ னிவன்பின்பு பூதலங்கள்
ஆற்றுந் திருந்தோ ளகளங்கன் - வேற்றார்
27

விரும்பரணில் வெங்களத்தி வேட்டுக் கலிங்கப்
பெரும்பரணி கொண்ட பெருமான் - தரும்புதல்வன்
28

கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள்
முற்றப் புரக்கு முகில்வண்ணன் - பொற்றுவரை
29

இந்து மரபி லிருக்குந் திருக்குலத்தில்
வந்து மனுகுலத்தை வாழ்வித்த - பைந்தளிர்க்கை
30

மாதர்ப் பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின்
காதற் பெயரன் கனகளபன் - யாதினும்
31

தீட்டக் கரிய திருவே திருமாலை
சூட்டத் திருமகுடஞ் சூடியபின் - நாட்டு
32

முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம்
சிறைவிட் டரசருளிச் செய்து - கறைவிட்டு
33

மைஞ்ஞாசு மெட்டு மதநாக மோரொட்டும்
பைஞ்ஞாசு மெட்டும் பரந்தீர - இஞ்ஞாலம்
34

தாதைக்குப் பின்பு தபனற்குந் தோலாத
போதத் திமிரப் பொறைநீக்கி - மாதரில்
35

ஒக்க வபிடேகஞ் சூடு முரிமைக்கண்
தக்க தலைமைத் தனித்தேவி - மிக்க
36

புவனி முழுதுடைய பொற்றொடியுந் தானும்
அவனி சுரர்கருதி யார்ப்ப - நவநிதிதூய்
37


தில்லையிற் செய்த திருப்பணிகள்

ஏத்துத் தருங்கடவு ளெல்லையி லானந்தக்
கூத்துக் களிகூரக் கும்பிட்டுப் - போத்தின்மேற்
38

றில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத்
தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து - மல்லற்
39

றசும்பு வளர்கனித் தண்பெரு நாவல்
அசும்பு பசும்பொ னடுக்கிப் -பசும்பொன்
40

அலகை யிகந்த அசலகுல வச்ரப்
பலகை ததும்பப் பதித்து - மலர்கவிகைக்
41

காக்குங் கடலேழின் முத்தும் வரகங்கை
தூக்கு மருவியிற் சூழ்போக்கி - நோக்கம்
42

தொடுக்குஞ் சிரச்சேடன் சூடா மணிகொண்
டெடுக்குந் திருத்தீப மேற்றி - அடுக்கிய
43

தூய வயிரத்தால் வாவியாய்ச் சூழ்கடந்த
பாய மரகத்தாற் பாசடையாய்த் - தூய
44

பருமுத்தா வாலியாய்ப் பற்பரா கத்தால்
திருமிக்க செந்தா மரையாய்ப் - பெருவர்க்க
45

நீலத்தால் வண்டி னிரையா யுரையிருந்த
கோலத்தாற் கோயிற் பணி குயிற்றிச் - சூலத்தான்
46

ஆடுந் திருப்பெரும்பே ரம்பலமுங் கோபுர
மாடம் பரந்தோங்கு மாளிகையும் - கூடிப்
47

பொலங்கோட்டு மாமேருப் பூதரமும் போய
வலங்கோட் டிகிரியு மானத் - தலங்கொள்
48

நிலையேழு கோபுரங்க ணேரே நெருங்க
மலையேழு மென்ன வகுத்துத் - தலையில்
49

மகரங்கொள் கோபுரங்கண் மாக விமானச்
சிகரங்க ளாகித் திகழ - நிகரில்
50

எரிபொற் படர்பாறை யென்னலா யெங்கும்
விரிபொற் றிருமுற்ற மின்னச் - சொரிபொற்
51

கடாரப் பனிநீர் கவினிக் கனபொற்
றடாகங்க ளாகித் ததும்ப - விடாதுநின்
52

றற்பக லாக வனந்த சதகோடி
கற்பக சாதி கதிர்கதுவப் -பொற்பூண்
53

வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த
சுரமகளி ராகித் துறும - ஒருதான்
54

பிறக்கு மிமயப் பெருங்கடவுட் குன்றம்
மறக்கும் படிசெல்வ மல்கச் - சிறக்கும்
55

இருக்காதி யெம்மறையு மெவ்வுலகு மீன்றாள்
திருக்காமக் கோட்டந் திகழ்வித் - தருக்கர்
56

புனையா மணியாலும் பொன்னாலு மின்ன
மனையாலோ ரோர்தேர் வகுத்து - முனைவன்
57

திருவீதி யீரண்டுந் தேவர்கோன் மூதூர்ப்
பெருவீதி நாணப் பிறக்கி - வருநாளிற்
58

பொங்கார் கவிசூழ் புவனம் பதினாலும்
கங்கா புரிபுகுந்து கண்டுவப்பத் - தங்கள்
59

புவனி பெறவந்த பூபாலர்க் கெல்லாம்
பவனி யெழுச்சி பணித்துக் -கவினும்
60

மடமயி லொக்க மகுடங் கவித்தாள்
உடனுறை பள்ளி யுணர்ந்து - தடமுகில்
61

அஞ்சன சைலத் தபிடேகஞ் செய்வதென
மஞ்சன மாடி வழிமுதற் - செஞ்சடை
62

வானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்குத்
தான மனைத்துங் தகைபெறுத்தி - வானிற்
63

கிளைக்குஞ் சுடரிந்தர நீலக் கிரியை
வளைக்கு மிளநிலா மானத் - திளைக்கும்
64

உருவுடை யாடை தவிர்த்தொரு வெள்ளைத்
திருவுடை யாடை திகழ்த்தி - ஒருபுடைப்
65

பச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொற்
கச்சை நவரத்னக் கட்டெறிப்ப - வச்ர
66

வெருவுதர வெல்லா விரவிகளும் வீழத்
திருவுதர பந்தனஞ் சேர்த்தித் - திருமார்பிற்
67

கார்க்கடன் மீதே கதிர்முத்தத் தாமங்கள்
பாற்கடல் போர்த்த தெனப்பரப்பிப் - பாற்கடல்
68

வந்த வனச மகளேபோன் மற்றது
தந்த கடவுண் மணிதயங்கப் - பந்தச்
69

சுரகனகத் தோள்வலையச் சூட்டுக் கவித்த
உரக பணாமணி யொப்ப - விரவி
70

மகரக் குழைதோண்மேல் வந்தசைவ மேருச்
சிகரச் சுடர்போற் றிகழ - நிகரில்
71

முடியின் மணிவெயிலும் முத்தக் குடையில்
வடியு நிலவு மலையப் - படியில்
72

வயங்கு கடக மகுடாதி மின்னத்
தயங்கு பெரும் போதி சாத்தி - முயங்கிய
73

செவ்வி நுதலிற் றிருநீற்றுப் புண்டரம்
வவ்வி மகளிர் மனங்கவற்ற - நொவ்விய
74

நாவியு மான்மதச் சாந்து நறையகில்
ஆவியு மாகண் டமுமளப்பத் - தீவிய
75

தோண்மாலை வாசக் கழுநீர் சுழல்சோதிக்
கோண்மாலை கூசக் குளிர்கொடுப்ப - நாண்மாலை
76

வேந்தர் தொழுதிறைஞ்ச வேதிய ரேத்தெடுப்பப்
போந்து புறநின்ற போர்க்களிற்றை - வேந்தரில்
77

மாக்காதல் யாதவனும் மாறழிந்த மீனவனும்
வீக்காம லெங்குள்ள மெய்ம்முகிற்கும் - கோக்கடவுட்
78

கெட்டாத வச்சிரமு மெலலா வுருமேறும்
வெட்டாம லெங்குள்ள வெற்பினுக்கும் - முட்டா
79

முதுவாய் வடவையு முந்நான்கு கோளும்
கதுவாம லெல்லாக் கடற்கும் - பொதுவாய்
80

அபயங் கொடுக்கு மயிரா பதத்தை
உபய வயக்கோட் டுருமை - விபவ
81

நிருத்தத் தருமோர் நிதிப்பொருப்பைக் கண்ணுற்
றெருத்தந் திருக்கவின வேறித் - திருத்தக்க
82

பள்ளித் திருத்தொங்கற் சோலை பகல்விலக்க
வெள்ளிக் கவிகை மிசையோங்க - ஒள்ளிய
83

ஒற்றை வலம்புரி யூத வதன்பின்பு
மற்றை யலகில் வளைகலிப்பக் - கற்றைக்
84

கவரி யிரட்டக் கடவுண் முரசார்த்
துவரி யுவாவாடி யொப்ப - அவிர்வாளும்
.85

சங்குந் திகிரியுஞ் சார்ங்கமுந் தண்டமும்
எங்குஞ் சுடர்விட் டிருள்களையக் - கொங்கத்து
86

விற்கொடியு மீனக் கொடியுங் கொடுவரிப்
பொற்கொடி யொன்றின் புடைபோதத் - தெற்கின்
87

மலையா னிலம்வரவே வார்பூங் கருப்புச்
சிலையான் வரவு தெரியத் - தொலையாது
88

வீசுந் திவலை விசும்புகூர் மங்குவால்
வாசவன் வந்த வரவறியக் - கூசாதே
89

யாவ ரொழிவா ரிவன்வரவே மற்றுள்ள
தேவர் வருவ ரெனத்தௌிய- யாவர்க்கும்
90

பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்றுத்
தென்னர் முதலானோர் சேவிப்ப - முன்னர்ப்
91

பரவி யுலகிற் பலமண்ட லீகர்
புரவி மிசைகொண்டு போத - அருவிபோல்
92

விட்டு மதம்பொழியும் வேழந் திசைவேழம்
எட்டு மொழியப் புகுந்தீண்டக் - கட்டி
93

இரவிக்கு நிற்பன வேழு மொழியப்
புரவிக் குலமுழுதும் போத - விரவி
94

உடைய நிதிக் கடவு ளூர்தி யொழிய
அடைய நரவெள்ள மார்ப்ப - விடையே
95

எழுந்த துகளுருவ வேறியுஞ் சுண்ணம்
விழுந்த துகளுருவ வீழ்ந்தும் - தொழுந்தகைய
96

விண்ணுலகு மண்ணுல காகி விளங்கவிம்
மண்ணுலகு பொன்னுலகாய் மாறாட - எண்ணரிய
97

மாகதரும் மங்கலப் பாடகரும் விஞ்சையர்
பூகத ராயினார் போற்பரவ - நாகர்
98

கொழுந்தெழு கற்பக சாதி குவித்துத்
தொழுந்தொறும் மன்னர் சொரிய - எழுந்துள
99

கைம்மழை யென்னக் கனகப் பெயறூர்த்து
மைம்மழை மாட மறுகணைந்தான் - தம்முடைய
100

சாலை தொறுந்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார்
மேலை நிலாமுற்ற மேற்றொகுவார் - மாலைதாழ்
101

தெற்றி யடைய மிடைவார் சிலர்பலர்
நெற்றி சுருங்க நெருங்குவார் - பொற்றொடியார்
102

மாளிகையி லேறுவார் மண்டபத்தின் மண்டுவார்
சூளிகை மாடந் தொறுந்துறுவார் - நீளும்
103

இரண்டு மருங்கினு மிப்படி மொய்ப்பத்
திரண்டு பலரெதிரே சென்று - புரண்ட
104

கரும்புருவ வல்வில்லுங் கண்மல ரம்பும்
பெரும்புவன வெல்லை பிடிப்பச் - சுரும்பு
105

நிரைக்கு நிரைமுரல நீலக் குழாங்கன்
இரைப்பின் மொகுமொகு வென்ன - விரைச்சுருள்
106

மேகா ளகங்கள் மிஞிறுவாய் வைத்தூதக்
காகாள மென்னும் படிகலிப்பப் - போகத்
107

தகரங் கமழ்கதுப்பிற் றாழ்குழை தோடாழ்
மகரம் பிறழ்கொடியின் வாய்ப்பு - இகலனங்கன்
108

சேனா சமுகந் தெரிப்ப வதனெதிர்
சேனா பராக மெனத்திகழப் - பூநாறும்
109

கண்ண மெதிர்தூ யுடனே தொடியுந்தூஉய்
வண்ண மிழப்பார் மனமிழப்பார் - மண்ணுலகில்
110

இன்னற் பகைவ னிவன்கா ணகளங்கன்
மன்னர்க்கு மன்னன் மகனென்பார் - முன்னர்
111

முதுகுல மன்னர் முடிவணங்க வந்த
விதுகுல நாயகிசே யென்பார் - குதுகலத்தாற்
112

கண்மருஞ் செவ்விக் கடவுட் டிசாதேவர்
எண்மருங் காணு மிவனென்பார் - மண்ணவர்க்கும்
113

தேவர்க்கு நாகர்க்குந் தெய்வ முனிவர்க்கும்
யாவர்க்குங் காவ லிவனென்பார் - தீவிய
114

மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும்
தாதகியுந் கொள்ளத் தரினென்பார் - மாதை
115

ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லை
இறுக்கு மவனிவ னென்பார் - மறுக்காமற்
116

சென்று கனைகட றூர்த்துத் திருக்குலத்து
நின்ற பழிதுடைப்பாய் நீயென்பார் - இன்றளவும்
117

துஞ்சுந் துயிலிழந்த தண்டர் சூழற்றுளையில்
நஞ்சுங் குமிழியெழு நாளென்பார் - பஞ்சவனே
118

வாடையினுந் தண்ணென்னும் மந்தா நிலமெமக்குக்
கோடையினுந் தீது கொடிதென்பார் - கூடி
119

முருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணாற்
பருகுவார் போல்வீழ்ந்து பார்ப்பார் - பொருமதனன்
120

பார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழி
தூர்த்தானோ யாதென்று சொல்லுகேம் - ஆர்த்தான்
121

உளைத்தான் சிலையிக் கொருகோடி கோடி
வளைத்தா னரும்புலகின் மாய்த்தான் - இளைத்தார்
122


பேதை

இனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற்
புனையுஞ் சிறுதொடிக்கைப் பூவை - கனைமுகினோர்
123

ஆடாத தோகை யலராத புண்டரிகம்
பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை -சூடத்
124

தளிராத சூதந் தழையாத வஞ்சி
குளிராத திங்கட் குழவி - அளிகள்
125

இயங்காத தண்கா விறக்காத தேறல்
வயங்காத கற்பக வல்லி- தயங்கிணர்க்
126

கூழைச் சுருண்முடிக்கக் கூடுவதுங் கூடாதாம்
ஏழைப் பருவத் திளம்பேதை - சூழும்
127

நிலைத்தாய வெள்ள நெருங்க மருங்கே
முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்பத் - தலைத்தாமம்
128

தொக்க கவிகைக் குலோத்துங்க சோழனை
மிக்க பராந்தகனை மீனவனைப் -புக்கார்
129

வணங்க வணங்கி வழுத்த வழுத்தி
அணங்க வணங்கா ளகலாள் -குணங்காவல்
130

மன்னன் புனையுந் திருமுத்த மாலையை
அன்னம் படிந்தாட வாறென்னும் - பின்னவன்
131

கோவைத் திருப்பள்ளித் தொங்கற் குழாங்கிளிக்கும்
பூவைக்கு நல்ல பொழிலென்னும் - பாவை
132

அயிர்க்கு மிருகோட் டயிரா பதத்தை
மயிற்கு மலையென்று மன்னும் - குயிற்கிளவி
133

தேன்வாழுந் தாமஞ்சூழ் தெய்வக் கவிகையை
மான்வாழ மாசின் மதியென்னும் - கோனுடையப்
134

பாங்குவளை யாழிப் பார்மடந்தை தன்னுடைய
பூங்குவளை மாலை புனைகென்னும் -தேங்கமலத்
135

தற்புத வல்லி யவளே பிறந்துடைய
கற்பக மாலையைக் காதலிக்கும் - பொற்போர்
136

பொலம்புரி காஞ்சிப் புகழ்மகட்கே தக்க
வலம்புரி மாலைக்கு மாழ்கும் - பொலன்றொடி
137

போரார வாரப் பொலன்கொடி பெற்றுடைய
பேரார மாலைக்குப் பேதுறும் - நேரியன்
138

ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாய
பூந்துழாய் மாலை புனைகென்னும் - வேந்தன்முன்
139

இவ்வகை யல்ல திலங்கிழையார் மால்கூரும்
அவ்வகை கூரா ளயலொருத்தி - எவ்வுலகும்
140

முற்ற முடிக்க முடிக்காம வேள்சூட்டும்
கொற்ற முடியனைய கொண்டையாள் - அற்றைநான்
141

சாத்து மபிடேகத் தாரைபோற் றாழ்கின்ற
கோத்த பருமுத்தக் கோவையாள் - தேத்து
142

விடம்போற் பணிகட்டு வேழங்கட் கெல்லாம்
கடம்போற் கொலையூறுங் கண்ணாள் - அடங்கா
143

வயிர்ப்பான் மறலி மகளுருக்கொ லீதென்
றயிர்ப்பா ரயிர்க்கு மழகாள் - உயிர்ப்பாவை
144

கொல்லிக்கு முண்டுயி ருண்மைத்ரி கூடத்துச்
சொல்லிக் கிடங்குந் துணைமணிக்கும் - வல்லி
145

இதற்கு நடைவாய்த் துயிர்வாய்த்த தென்ன
மதர்க்கு மொருதிரு மாது -முதற்றன்
146

பணிவாயி லாயம் பரந்தகலக் கிள்ளைக்
கணிவாயின் முத்த மருளி - மணிவாயாற்
147

சொல்ல யெனக்கன்னை சொல்லாயோ நீயன்றே
வல்லாய் பிறவறிய வல்லவோ - கல்லரணக்
148

கோழித் திருநகரக் கொற்றவற்கு வெற்றிப்போர்
ஆழித் தடக்கை யபயற்கு - வாழியாய்
149

காக்குங் கடலேழு மாடுங் கடாரமோ
ஆக்கு நதியேழு மாரமோ - தேக்கிய
150

பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ பண்டளந்த
மண்ணேழும் வாகு வலயமோ - தண்ணறுந்
151

தூவ னறவப் பொழிலேழுங் தொங்கலோ
காவன் மலையேழுங் கந்துகமோ - ஏவலால்
152

செய்யு நலனுடைய கோளேழுந் தீபமோ
பெய்யு முகிேலூம் பேரியமோ - வையகம்
153

கூறு மவையிவை யென்று குறுந்தொடி
வேறு தனிவினவும் வேலைக்கண் - சீறும்
154

ஒருத னடியின் மடிய வுபய
மருது பொருது வயவன் - விருதன்
155

விலையி லமுத மதன விமலை
முலையின் முழுகு முருகன் - வலைய
156

கனக சயில வெயிலி கணவன்
அனக னதுல னமலன் - தினகரன்
157

வாசவன் றென்னன் வருண னளநேசன்
கேசவன் பூசக்ர கேயூரன் - வாசிகை
158

ஆழிப் பெருமா னபய னனபாயன்
சூழிக் கடாயானை தோன்றுதலும் - தாழாது
159

சென்றா டிருமுன்பு செந்தளிர்க் கைகுவித்து
நின்றா ளினிவறிதே நிற்குமே - என்றாலும்
160

கோடு கழல்கண்டல் கொண்டற்கு மாலதி
ஓடு நகாதே யுடையாதே - பீடுற
161

வந்து தொடுங்குன்ற வாடைக் கிளங்கொன்றை
நொந்து தொடாதே குழையாதே - செந்தமிழ்த்
162

தென்ற லெதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்று
மன்றல் கமழாதே வாழாதே - என்றுபோய்
163

சூதள வல்ல துணைமுலை தூயகண்
காதள வல்ல கடந்தனபோய் - மாதர்
164

உருவத் தளவன் றொளியோக்க மாக்கம்
பருவத் தளவன்று பாவம் - தெருவத்
165

துடைவ துடையாதா முள்ள முறவோர்ந்
தடைவ தடையாதா மச்சம் - கடைகடந்து
166

சேயினு நல்ல பெருமா டிருந்தடந்தோன்
தோயினுந் தோய மனந்துணியும் - ஆயினும்
167

ஏந்து தடந்தோ ளிணைப்பணைப்புக் கண்டிலன்
காந்து தனதடங் கண்டிலன் - பூந்தடந்
168

தேரி னகலுந் திருந்தல்குல் கண்டிலன்
காரி னெகிழளகங் கண்டிலன் - மாரவேள்
169

எய்யு மொருகருப்பு வல்வில் லெடுத்தானோ
கொய்யு மலரம்பு கோத்தானோ - தையன்மால்
170

மந்தா கினிக்கோன் றிருப்புருவ வார்சிலையும்
செந்தா மரைக்கண்ணுஞ் செய்ததென - நொந்தார்
171

வளைத்தளிர்ச் செங்கை மடுத்தெடுத்து வாசக்
கிளைத்தளிர்ப் பாயற் கிடத்தி - துளைத்தொகை
172

ஆய்க்குழ லென்றா லதுவு மவனூதும்
வேய்க்குழ லென்று விளம்பியும் -தீக்கோள்
173

நிகழ்நிலா வன்று நிருபகுல துங்கன்
புகழ்நிலா வென்று புகழ்ந்தும் - இகலிய
174

பல்லிய மன்று பரராச கேசரி
வல்லிய மென்று மருட்டியும் - மெல்லிய
175

கல்லார மன்று கதிரோன் றிருமருமான்
மெல்லார மென்று விளம்பியும் - நல்லார்
176

அருத்தி யறிவா ரவையிவை யென்று
திருத்தி விடவிடாய் தீர்ந்தாள் - ஒருத்தி
177


மங்கை

உருவ வரிக்க ணொழுக வொழுகப்
புருவ முடன்போதப் போத - வெருவி
178

வனமுலை விம்மி வளர வளரப்
புனைதோள் புடைபோதப் போத - வினைவர்
179

அருங்கலை யல்கு லகல வகல
மருங்குபோ யுள்வாங்க வாங்க - நெருங்கு
180

பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை
வரவர வாற்றாத மங்கை - பொரவரு
181

தேமிரைக்குங் காலையின் ஞாயிற் றிளஞ்செல்வி
தாமரைக்கே சாலுந் தரத்ததோ - காமர்
182

அமுத மதியத் தலர்நிலா முற்றும்
குமுத நறுமுகைக்கே கூறோ - நமதுகார்
183

கானின் மடமயிற்கே காணியோ தண்ணிள
வேனில் குயிற்கே விதித்ததோர் - தேனிமிர்
184

தண்டா மரையா டலைவனை யாமும்போய்
கண்டாலென் னென்னுங் கடைப்பிடியாள் - பண்டை
185

ஒளியா ரணங்காத றம்மைத்தா மொன்றும்
தௌியாத வாறே தௌிந்தும் - களியன்னம்
186

வாவிக் கரையில் வரநீ ரரமகளிர்
சேவிக்க நின்றாடுஞ் செவ்வியாள் - காவிற்
187

புகுதில் வனதெய்வப் பூங்குழை யாயத்
தொகுதி புடைபரந்து சூழ்வாள் - மிகுதே
188

னிரையர வந்தரு செய்குன்ற நீங்கா
வரையர மாதரின் வாய்ப்பாள் - பெருவிலைய
189

முத்தில் விளங்கின் முளரித் தவளப்பூங்
கொத்தி னணங்கனைய கோலத்தாள் - பத்திய
190

பச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ்
கச்சை நிலமகள்போற் காட்சியாள் -நிச்சம்
191

உரக பணமணிகொண் டொப்பிக்கி லொப்பில்
வரகமலை யன்ன வனப்பாள் - நரபதி
192

மைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன்
கைம்முகில் மேல்வரக் கண்டதற்பின் - மொய்ம்மலர்
193

நீலமே வேய்ந்தெடுக்க நீலமே பூண்டுடுக்க
நீலமே யன்றி நினையாதாள் - நீலமே
194

முன்னுடைய செங்கே ழெறிக்கு முறிக்கோலம்
தன்னுடைய மாமை தழீஇக்கொள்ளப் - பின்னர்
195

நெருங்கு கழுநீரும் நீலோற் பலமும்
ஒருங்கு மலர்தட மொத்தும் -மருங்கே
196

இறங்கிய கற்பக வல்லியு மேறி
உறங்கிய தும்பியு மொத்தும் - பிறங்க
197

வயங்கு தளிரீனு மாங்கொம்பர் பூக்கொண்
டுயங்கு கருவிளை யொத்தும் - தயங்குவாள்
198

கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு
ஞாலாத்தார் ரெல்லார்க்கு நாயகற்கு - நீலத்தின்
199

காசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும்
தூசுங் துகிலுங் தொடியுநான் - கூசேன்
200

வௌியே தருவேன் விரையாரத் தொங்கல்
கிளியே தருமேனீ கேளாய் - அளியேநீ
201

தாது கடிகமழ் தாதகித் தாமத்தின்
போது கொழுதப் புறப்படாய்- ஓதிமமே
202

எங்கள் பெருமாளை யிங்கே தரவாநீ
உங்கள் பெருமா னுழைச்செல்வாய் - பைங்கழற்காற்
203

சேயை நினைந்தேகி னம்முடைய சேக்கையான்
சாயன் மயிலே தலைப்படாய் - பாயும்
204

கடமானே போல்வார்க்கு நீநின்னைக் காட்டின்
மடமானே தானே வருங்காண் - கடிதென்று
205

கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்குக் கூசித்தன்
பிள்ளைக ளோடிருந்து பேசுவாள் - உள்ள
206

அலகில் குலநீல ரத்னா பரணம்
விலகி வெயிலை விலக்க - உலகிற்
207

பெரிய பெருமாள் பெரும்பவனி வீதி
இரிய வெதிரேற் றிழந்தாள் - வரிவளை
208

ஆயத்தா ரென்னி லளியத்தா செல்லாரும்
நேயத்தா ரல்லரே நிற்பாரே - தேயத்தார்
209

மன்னனை யஞ்சாதே வாரணத்தை யஞ்சாதே
மின்னனை யாளையு மீதூரா -முன்னர்
210

கடமாக்குந் தெய்வக் களிறு விரும்பும்
இடமாதும் யாமென்பார் போலப் - படமாய்
211

இரைப்பச் சுரும்போ டிருளளக பாரம்
நிரைத்து வனமாகி நிற்பார் - விரைப்பூண்
212

முலையாய் வளரு முரட்குவடு கொண்டு
மலையாய் நெருங்க வருவார் - தொலையாத
213

பாய பருமுத்தின் மாலை பலதூக்கித்
தூய வருவியாய்த் தோன்றுவார் - சாயற்
214

கொடியா யடிசுற்றிக் கொள்வார் புரக்கும்
பிடியாய் நறுந்துகள் பெய்வார் - விடுதுமோ
215

யாழாய் மிடற்றால் வணக்குதும் யாமென்பார்
தோழாய் வளைத்தெங்குஞ் சூழ்போவார் - ஆழிக்கைத்
216

தியாகனை மானதனைத் திக்கானை யெட்டுக்கும்
பாகனையே பின்சென்று பற்றுவார் - தோகையார்
217

நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின்
பொற்றுகி றந்தருளிப் போதென்பார் - மற்றிவள்
218

தன்சங்கங் கொண்ட தடந்தா மரைக்கண்ணா
நின்சங்கந் தந்தருள னேரென்பார் - மின்கொள்ளும்
219

இன்றுயிற் கெல்லா மெறிபாற் கடற்கொள்ளும்
நின்றுயி றந்தரு ணீயென்பார் - என்றென்று
220

மானு மயிலு மனையார் வளைத்துளைப்பத்
தானூங் களிறுந் தடையுண்ட - கோனும்
221

தடுத்த கொடிக்குச் சதமடங்கு வேட்கை
அடுத்த திருநோக் கருளாக் - கொடுத்த
222

திருநகை மூர றிகழ்ந்தா னணங்கும்
ஒருநகை கூர்ந்தொருவா றுய்ந்தாள் - பெருநகை
223

எய்தி யனங்க னெழப்போனான் மாதரும்
உய்து சிறந்தா ளுழைச் சென்றார் - நொய்திற்
224

றொடுக்கும் புறஞ்சொற் றொடாமே முலைமீ
தடுக்கும் பசலை யடாமே - உடுக்கும்
225

துகிலுஞ் சரியாமே சுற்றத்தா ரெல்லாம்
புகிலும் புகாமே பொராமே - அகினாறும்
226

பள்ளியிற் செல்லாள் பருவ முருகற்றோய்
வள்ளியிற் சால வயங்கினாள் - ஒள்ளிழை
227


மடந்தை

பின்ன ரொருத்தி பெருமைக் கரமகளிர்
முன்ன ருரைக்கும் முதன்மையாள் - சென்னியில்
228

வண்ட லிடுநாவி வார்குழற்கு மாறுடைந்து
கொண்டல் சொரிமுத்தின் கொண்டையும் -பண்டுவந்
229

தேற்றுப் பணைபணைக்கு மென்றோ ளிரண்டுக்கும்
தோற்றுச் சொரிமுத்தின் சூழ்தொடியும் - ஆற்றற்
230

கலம்புரி செல்வக் கழுத்திற்குத் தோற்ற
வலம்புரி முத்தின் வடமும் - பொலம்பூண்
231

எதிர்க்கு முலைக்கிரிந்த திக்கயக்கோ டிட்ட
கதிர்க்கு நகைமுத்தின் கச்சும் - அதிர்க்கும்
232

அடல்விடு மல்குற் பரவைக் குடைந்து
கடல்விடு முத்தின் கலையும் - உடலிமேல்
233

ஏந்து மினைய விளநிலா விட்டெறிப்பப்
போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - வேந்தனும்
234

சட்கோடி மாணிக்க மொன்றுஞ் சமந்தகமும்
உட்கோடு கேயூரத் தூடெறிப்பக் - கொட்கும்
235

கடல்சேப்ப வந்த கவுத்துவ மொன்றும்
அடல்சேக்கு மார்பிற் கமைய - உடலி
236

அனந்த பணாமவுலி யாயிரமு மொற்றை
மறுகு திருமலர வந்தான் - குறுகும்
237

முறுகு கதிரின் முகந்திரிய வேற்று
மறுகு திருமலர வந்தான் - குறுகும்
238

நடையாய வெள்ளமும் நாணிரம்பு திங்கட்
குடையாய வெள்ளமுங் கூடி - அடைய
239

மதியுதய மென்று வணங்க வனச
பதியுதய மென்று பணிய - துதியில்
240

ஒருவரு மொல்வா வுருவமிக் கூறும்
இருவரு மெய்திய வெல்லைத் - தெருவில்
241

நெருங்க மகளிர் நிறந்திறக்க வெய்து
மருங்கு வருகின்ற மாரன் - திருந்திய
242

பாய பகட்டல்குல் பாரா வதன்பரப்பிற்
போய மருங்குற் புறநோக்கார் -சாயா
243

முலையின் கதிர்ப்பு முருகு கெழுதோள்
நிலையின் பணைப்பு நினையாக் - கொலையால்
244

உடைக்கு முலகடைய வூடாடு கண்ணின்
கடைக்கு முடிவின்மை காணாக் - கிடைக்கும்
245

பருவக் கொடிவதன பங்கே ருகத்தின்
புருவக் கொடி முடியப் போகா - உருவக்
246

களிக்கும் புடவி சதகோடி கற்பம்
அளிக்கும் பெருமானை யஞ்சா - குளிர்க்கும்
247

கடுங்காற் கொடுந்தேரை முட்டக் கடாவிக்
கொடுங்காற் சிலையைக் குனித்து - நடுங்கா
248

முகுந்த னிவனென்று முன்பெய்த வேவிற்
புகுந்த திதுவென்று போனான் - திகந்த
249

முழுதா ளபயனை முகிணகையுந் தோளும்
தொழுதா ெள்ாருதானே தோற்றாள் - அழுதாள்
250

திரிந்தாள் கலைநிலையுஞ் செம்பொற் றுகிலும்
சரிந்தா டுணைவியர்மேற் சாய்ந்தாள் - பரிந்தார்
251

முடைக்கை யெதிர்க்குரவை கோத்தாய் முரல்யாழ்
கடைக்கை தொடுக்கை நகையோ - விடைப்பே
252

ரினந்தழுவிப் பின்னையைக் கொள்வா யிவளைத்
தனந்தழுவிக் கொள்கை தவறோ - அனந்தம்
253

கருந்துகிலக் கோவியரைக் கொள்வாய் கமலை
தருந்துகி னோக்கத் தகாதோ - விருந்து
254

துளவ முகிற்கிது வந்தது தூய
வளவர் திருக்குலத்து வந்தோ - அளவிறந்த
255

வன்கண் ணிவளளவுங் கண்டே மடவரல்
புன்க ணடியேம் பொறேமென்று - மின்கண்
256

இவையிவை சொல்லிப்போ யின்னமளி யேற்றிக்
கவிரிதழ் பின்னுங் கலங்கத் - துவரின்
257

வியக்குந் துகிரியைய மேம்பட் டுலகை
மயங்குந் திருவாய் மலர்க்கும் - நயக்கும்
258

பொருப்புருவத் தோளின் புதுமைக்கு நேரே
திருப்புருவஞ் செய்த செயற்கும் - பரப்படையக்
259

செங்கே ழெறித்து மறிக்குந் திருநயன
பங்கே ருகஞ்சூழ் படுகொலைக்கும் - அங்கே
260

தரிக்குமே தென்றலுஞ் சந்த்ரோ தயமும்
பரிக்குமே கண்கள் படுமே - புரிக்குழலார்
261

பாலிருத்தி மம்மர் படப்படப் பையப்போய்
மாலிருத்தி யுள்ள மயங்கினாள் - மேலொருத்தி
262


அரிவை

தாளை யரவிந்தச் சாதி தலைவணங்கத்
தோளை யுரகர் தொழவிருப்பாள் - நாளை
263

வளவர் பெருமான் வரும்பவனி யென்று
கிளவி விறலியர்வாய்க் கேட்டாள் - அளவுடைத்
264

தோரிரா வன்றம்ம விவ்விரா வோதிமத்தோன்
பேரிரா வென்று பிணங்கினான் - பேரிரா
265

என்று விடியுங்கொ லென்றாள் விடிவளவும்
நின்று சுடுங்கோ னிலவென்றான் - நின்றார்
266

அடுத்தடுத் தேந்திய திவ்யா பரணம்
எடுத்தெடுத் தொப்பித் தெழுந்து - சுடர்க்கதிரோன்
267

மாலைப் பகைவியைப் போக்கி வருவித்த
காலைத் துணைவியைக் கண்டெழுந்தாள் - காலையோன்
268

சேமித்த பூங்கோயி லெல்லாந் திருவென்று
காமித் திகழின் கடைதிறப்ப - நேமி
269

மணக்கத் துணையன்றில் வாயலகு வாங்கித்
தணக்கக் கடிகாவிற் சார்ந்தாள் - கணக்கதிர்
270

வந்து பொருவதொரு மாணிக்கச் செய்குன்றில்
இந்து சிலாதலத்தி லேறினான் - குந்திக்
271

கடப்பன கன்னிமா னேக்கியு மன்னம்
நடப்பன பார்த்து நயந்தும் - தொடக்கிக்
272

களிக்கு மயிற்குலங் கூத்தாடக் கண்டும்
கிளக்குலம் பாட்டெடுப்பக் கேட்டும் - பளிக்குருவப்
273

பாவை மணக்கோலம் பார்த்தும் பலநகை
பூவை பகரப் புறஞ்சாய்ந்தும் - கோவை
274

அளிக்களி யாட்ட மயர்ந்துங் கபோத
விளிக்களி கூர்ந்து வியந்தும் - களிக்கப்
275

பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி
எழுச்சி முரசோர்ந் திருந்தாள் - கழற்செழியர்
276

தென்சங்கங் கொண்டான் றிருச்சங்கஞ் செய்குன்றில்
தன்சங்க மாகி யெதிர்தழங்க - மின்சங்கம்
277

போல விழுந்து மெழுந்தும் புடையாயம்
கோல மறுகு குறுகுவாள் - ஞாலம்
278

எடுக்கும் பணிமன்னன் மின்னென் றிறைஞ்சிக்
கொடுக்குஞ் சுடிகைக் குதம்பை -கடுக்கும்
279

மயில்வேண்டுஞ் சாயல் வதனாம் புயத்து
வெயில்வேண்ட வேண்டி விளைப்ப - பயில்கதிர்
280

வெல்லாது தோட்சுடிகை மேகா ளகவிருண்மேல்
எல்லாப் பருதியும் போலெறிப்ப - கொல்குயத்து
281

வீழ்சோதி சூழ்கச்சு மேரு கிரிச்சிகரம்
சூழ்சோதிச் சக்ரந் தொலைவிப்பக் - கேழொளிய
282

பைம்பொற் கடிதடஞ்சூழ் மேகலை பார்சூழ்ந்த
செம்பொற் றிகிரி யெனத்திகழ - அம்பொற்
283

புறவுஞ் சகோரமும் பூவையு மானும்
பிறவு மினமென்று பெட்ப - உறவாய்
284

அடர்ந்த பொலன்கே ழடிச்சிலம்புக் கன்னம்
தொடர்ந்து மறுமாற்றஞ் சொல்ல - நடந்துபோய்
285

மானவற்குப் புக்கதுறை வல்லவற்கு வில்லவற்கு
மீனவற்குச் சென்று வௌிப்பட்டாள் - தானே
286

அலகு முகமுங் குவிகையு மாகி
மலரு முகளமுமானப் - பலர்காணத்
287

தேனு மமுதுங் கலந்தனைய தீங்கிளவி
மானு மடைய மனங்கொடுத்தாள் - கோனும்
288

தடாதே தடுத்தாளைத் தன்கடைக்கண் சாத்தி
விடாதே களிறகல விட்டான் - படாமுலைமேல்
289

ஒத்திலங்கு வேர்வந் துறைப்ப நறைக்கழுத்து
நித்திலங்கால் சங்க நிதிநிகர்ந்தாள் - எத்திசையும்
290

சோர்கின்ற சூழ்தொடிக்கைச் செம்பொற் றொடிவலயம்
நேர்கின்ற பற்ப நிதிநிகர்த்தாள் - தேரின்
291

அரிவை துகினெகிழ வல்கு லரவின்
உரிவை விடும்படமு மொத்தாள் - சொரிதளிர்
292

மாங்கொம்ப ரென்ன வருவாள் சுரமரப்
பூங்கொம்ப ரென்னப் புறங்கொடுத்தாள் - பாங்கியரும்
293

ஒற்றை யுடைவா ளொருபுடையாள் கொற்றவையேல்
மற்றை யருகிவளை வைத்திலனே - பெற்றுடைய
294

வாரத் தரணியாள் வாழ்தோ ளெதிர்மற்றை
ஆரத் திருத்தோ ளளித்திலனே - நேரொத்த
295

பூந்தா மரையா ளெதிரேயிப் பொற்றொடிக்கும்
ஏந்தார மார்ப மிசைந்திலனே -வேந்தர்கோன்
296

அன்னங்கா ணீர்சென் றரற்றீர் கபோதங்காள்
இன்ன மபயம்புக் கெய்திடீர் - நன்னுதற்
297

பாவைகாள் கொல்யானைப் பாவடிக் கீழ்ப்பணியீர்
பூவைகாள் செங்கோன்மை போற்றிசெய்யீர் - தாவிப்போய்ப்
298

பேதை மடமான் பிணைகாள் வளைத்துளையீர்
கோதை மதுசுரங்காள் கூப்பிடீர் - யாதெல்லை
299

என்னா விதற்கென் றிரங்கி யிலங்கிழை
தன்னார்வ மாற்றெதிர் சாற்றினார் - பின்னர்ப்
300


தெரிவை

பொருவி லொருத்தி புறங்காக்கு மாதர்
இருவி லிடைநின் றிறைஞ்சித் - திருவுலாப்
301

போதும் பெருமாள் புகுது மளவுமிங்
கியாதும் பயிலா திருத்துமோ - சூதாடேம்
302

பந்தா டுதுநாம் பசும்பொற் குழைசென்று
வந்தாடு கண்ணாய் வருகென்று - சந்தாடும்
303

கொம்மை வருமுலையுந் தோளுங் குறியாதே
அம்மென் மருங்குல்பார்த் தஞ்சாதே - தம்முடனே
304

கொண்டா ரருகிருந்த பாணருங் கோடியரும்
கண்டா ரெவருங் கடுகினார் - மண்டி
305

எடுத்தா ரெடுத்தன யாவு மெலரும்
கொடுத்தா ரொருதானே கொண்டாள் - அடுத்தடுத்து
306

முன்ன மெறிபந்தின் மும்மடங்கு நான்மடங்
கின்ன மெறிய வருகென்றாள் - அன்னம்
307

அடியு மிருகையு மம்புய மென்று
படியு மொழுங்கிற் பயில -முடியும்
308

தொடையிடை போய சுழல்கூந்தற் பந்தர்க்
கிடையிடை நின்றகா லேய்ப்ப - அடைய
309

விழுந்தன பார்கடவா வாறுபோன் மேற்போய்
எழுந்தன கைகடவா வென்னக் - கொழுந்தளிரால்
310

ஏற்றுதி விண்கொளா வம்மனை யெம்மனை
ஆற்றுதி யீதிங் கரிதென்னப் - போற்றரும்
311

கையோ பதயுகமோ கண்ணோ கடுகினவை
ஐயோ வறித லரிதென்னப் - பொய்யோ
312

திலக நுதலிற் றிருவேயென் றோதி
உலகு வியப்பவென் றோத - அலகிறந்த
313

பந்தாட் டயர்ந்து பணைமுலையார் பாராட்ட
வந்தாட்டு நீராட்டு மண்டத்து - விந்தை
314

பெருமா னனபாயன் பேரிய மூன்றும்
தருமா வாரந் தழந்த - ஒருமாதர்
315

ஏந்து துகிலொன் றுடுத்தாளோ வில்லையோ
போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - மாந்தளிரும்
316

தாதுந் தமினிய மாலையுந் தண்கழுநீர்ப்
போதும் பிறவும் புறம்புதையா - ஓதிக்குச்
317

சென்னி யமுனைத் தரங்கமுந் தீம்புனற்
பொன்னி யறலும் புறங்கொடுப்பப் - பின்னர்
318

ஒழுங்காய் சேயரிக்கண் ணூடொட்டும் மையால்
மழுங்காது கைபோய் மதர்ப்பச் - செழுங்கழுத்
319

தொன்று புனைந்த தொருசங்க மாணிக்கம்
இன்று பயந்த தெனவிளங்க - நின்றிலங்கும்
320

உச்சக் கலனணியாத் தோளினைக் கோரிரண்டு
பச்சைப் பசுங்காம்பு பாடழிய - நிச்சம்
321

அசும்பு பொலன்கச்சி னற்றத்தே கொங்கை
விசும்பு குடிவாங்க வீங்கப் - பசுஞ்சுடர்க்
322

கோல வயிறுதர பந்தனக் கோணீங்கி
ஆவின் வளர்தளிரி னைதாகி - மேலோர்
323

இழியு மொருசாம ரேகையு முந்திச்
சுழியும் வௌிவந்து தோன்றக் - கெழிய
324

இசையின் கலாபாரம் யாப்புறா வல்குல்
திசையின் புடையடையச் செல்ல - மிசையே
325

பொறைபுரி கிம்புரி பூட்டாத் துடைதூ
சுறையு மரகத மொப்ப - அறையும்
326

சிலம்பு சுமவாத செந்தா மரைபோய்
உலம்பு குரலஞ்சா தோடக் - கலம்பல
327

தாங்கி யுலகந் தரிப்பத் தரியென்று
பாங்கிய ரெம்மருங்கும் பாராட்டப் - பூங்கே
328

ழுருவி லொளிபோ யுலகடையக் கோப்பத்
தெருவி லெதிர்கொண்டு சென்றாள் - பெருமாளும்
329

கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்றனைய
வெற்றிக் களியானை மேல்வந்தான்-பற்றி
330

இருவருந் தம்மி லெதிரெதிர் நோக்க
ஒருவ ரெனவேட்கை யொத்தார் - குருசில்
331

மறந்த கடல்கடைய வந்தாண்மே லன்பு
சிறந்த திருவுள்ளஞ் செல்லச்- சிறந்தவள்
332

ஆக னசுத்திருந்தா ளாகத் திருவுள்ளக்
கோசு னகத்திற் கொடுசென்றாள் - நாகிள
333

நல்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால்
வவ்வி யிருதோளில் வைத்தமால் - செவ்வி
334

முருகு கமழ முகந்து முகந்து
பருகு மடமகளைப் பாரா - அருகு
335

மடுத்து முயங்கி மயங்கிய தாயர்
எடுத்து மலரணைமே விட்டார் - அடுத்தொருவர்
336

நொய்யாத கற்பகப் பூமாலை கொண்டைக்கும்
நெய்யாத பொற்றுகி னீவிக்கும் - செய்யாத
337

தொங்கற் றுளைக்கோவை யல்குற்குஞ் சூழ்கனகத்
துங்கப் பணிவலையந் தோளுக்கும் - கொங்கைக்குப்
338

பொன்னிப் புகாரிற் பொலன்குழம்பும் வல்லத்திற்
கன்னிப் பனந்தோடு காதிற்கும் - சென்னி
339

அளிப்பக் கொணர்ந்தனம்யா மன்னமே யென்று
தௌிப்பச் சிறிதே தௌிந்தாள் - கிளிக்கிளவி
340


பேரிளம்பெண்

மற்றொருத்தி செந்தா மரைமலர்மே லென்னுடனே
செற்றொருத்தி வாழு மெனச்செறுவாள் - சுற்றவும்
341

தெட்டுத் தசும்பசும்பு தெங்கி னிளம்பாளை
மட்டுத் தமனிய வள்ளத்து - விட்டு
342

மறித்து வயிர மடலொன்றின் வாக்கித்
தெறித்து ஞமிறோப்பிச் செவ்வி - குறித்துக்கொண்
343

டேந்தி முகம னியம்பி யிருந்தொரு
காந்தி மதிவதனி கைக்கொடுப்ப - மாந்தி
344

குதலை சூழறிக் குயிற்குங் கிளிக்கும்
விதலை யுலகில் விளைத்து - நுதலை
345

வியரா லலங்கரியா வேந்தன் கொடுமை
அயரா வௌிவிடா வஞ்சாப்- பெயரா
346

அருகிருந்த பாணனை நோக்க அவனும்
குருசில் வருதமரங் கூறப் - பரிபுரக்
347

காலு நிதம்புமுங் கையுந் திருக்கழுத்தும்
கோலு மதாணிக் குலமெல்லாம் - மேலோன்
348

குரகத மேழு முழுகிக் குளிப்ப
மரகத சோதி வயங்கப் - புருவ
349

இடைபோய்க் குமிழின் மலர்வந் திறங்கப்
புடைபோய்க் கருவிளை பூப்ப - விடையாக
350

ஏக முருக்கு மலர விளம்பாளைப்
பூக மிடறு வரப்பொதிய - போகப்
351

பொரும்பெருங் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்கப்
பரும்பொருங் காம்பு பணைப்ப - விரும்பிய
352

நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நளியக்
குறுந்தொடிக் காந்தள் குலைப்பச் - செறிந்து
353

சலித்துத் தனியிள வஞ்சி தளரக்
கலித்துக் கதலி கவின - ஒலித்தே
354

அளிக்குஞ் சகோரமு மன்னமு மானும்
களிக்கு மயூர கணமும் - விளிக்கும்
355

புறவுந் தொடர்ந்துடனே போத வவையே
பிறவு மினமென்று பெட்பர் - சுறவுயர்த்தோன்
356

காலை புகுந்து காப்ப தொருபசும்பொற்
சோலை யெனவந்து தோன்றினாள் - ஞாலத்தோர்
357

தெய்வப் பெருமாளுஞ் சேவடி முன்குவித்துக்
கைவைத்து நின்றவளைக் கண்ணுற்றான் - தையல்
358

வெருவமுன் சூர்தடித்த வேளே நயக்கும்
பருவமு மார்பிற் பணைப்பும் - புருவமும்
359

செந்தா மரைக்கண்ணும் மாமேரு வைச்சிறிய
பந்தாகக் கொள்ளும் பணைத்தோளும் - உந்தியும்
360

உய்ய விருகாது மூக்கு முடுபதியை
நைய வெறிக்கு நகைநிலவும் - செய்ய
361

பவளத் துவர்வாயும் பாதாம் புயமும்
கவளக் களிற்றௌிதிற் கண்டு - குவளைக்
362

சுருநெடுங் கண்களிப்ப வுள்ளங் களிப்பப்
பருநெடுந் தோளும் பணைப்ப - ஒருநின்
363

சிலம்புகளோ ரேழுஞ் சென்றடைந்து நோலேன்
அலம்பு சுடலேழு மாடேன் - வலம்புவனம்
364

ஏழுஞ் செலவயரே னெங்கோவே நின்குடைக்கீழ்
வாழுந் திருவெனக்கு வாய்க்குமே - தாழி
365

முடைதழுவு தோளும் முலையுந் தழுவ
விடைதழுவு தாமரைக்கை வீரா - கடகரியைக்
366

கைதழுவிக் கோரத்தைக் காறழுவி நின்புலியை
மெய்தழுவிக் கொள்ள விடுவாயோ - மொய்திரைசூழ்
367

ஞால மறிக்கவும் நாயக நின்புகல்விற்
கால வுததி கலக்கவும் - சால
368

வருந்தா வகைவருந்த வாழி பெயரும்
பெருந்தேவி யார்க்குப் பெறலாம் - திருந்திய
369

குந்த மொசித்ததுவுங் கொற்றத் திருத்தோளால்
வந்த விடையேழு மாய்த்ததுவும் - முந்துறக்
370

கோவிய மாதர்க்கே யுள்ளங் குறைகிடந்த
ஆவியே மாதாக வஞ்சுமே - ஓவிய
371

சேரன் சிலையினுஞ் சீரிதே சென்றொசிய
மாரன் சிலையை வணக்காயால் - சேரன்றன்
372

முன்றிற் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும்
அன்றிற் பனைதடித லாகாதோ - கன்றி
373

மலைக்குஞ் செழியர் படைக்கடலை மாய்த்தாய்
அலைக்குங் கடன்மாய்த் தருளாய் - மலைத்தவர்
374

தங்கள் புகழ்நிலவை மாய்த்தா யரிமரபிற்
றிங்களின் றண்ணிலவு தீராயால் - பொங்கொலிநீர்த்
375

தெம்முனை யாழ்தடிந்தா யெங்கள் செவிகவரும்
எம்முனை யாழ்தடிந்தா லென்செய்யும் - செம்மணியின்
376

செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின்
வெஞ்சோதி கண்டால் விலக்காயால் - வெஞ்சுமத்துக்
377

காதி விடைபண்டு காடவன் முன்றடிந்தாய்
வீதி விடைதடிய வேண்டாவோ - யாதுகொல்
378

வன்பல் வலந்துகைத்த வாட்டானை யின்றிந்த
மென்பல் லவந்துகையா மேம்பாடு - தன்பூங்
379

சுருப்புச் சிலைகொண்டு மோதுங் கழுத்திற்
சுருப்புசாண் புக்கழுந்தத் தூக்கும் - நெருப்புமிழ்
380

அப்புக் கழுவேற்று மாறாப் பெருங்கோப
வெப்புப் படுத்தெங்கண் மெய்யுருக்கும் - தப்பா
381

உடல்பிள வோட வொருதேரிடட் டூரும்
அடன்மகர போசன மாக்கும்- விடுதூதால்
382

அக்கால தண்ட மகற்றி யுலகளித்தாய்
இக்காம தண்ட மௌிதன்றே - மைக்கோல
383

வண்ணா வளர்ந்த மகரா லயமறந்த
கண்ணா வநங்கன்போர் காவாயேல் - மண்ணுலகில்
384

எப்புடி யாவா ரிளம்பிடியா ரென்றென்று
மைப்படியுங் கண்ணாள் வருந்தினாள் - இப்படியே
385

தையலார் பெற்றோகைச் சாயலார் கையகலா
மையலார் போலராய் மன்றேற - வையம்
386

பெருகுடையா நீரேழும் பாரேழும் பேணும்
ஒருகுடையான் போந்த னுலா.
387


வெண்பா

என்றினி மீள்வ தரிதி னிரணியனை
அன்றிரு கூறா யடர்த்தருளிக் -கன்றுடனே
ஆவின்பின் போன வனக னனபாயன்
மாவின்பின் போன மனம்


கட்டளைக் கலித்துறை

ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம்
நீடுங் குடையிற் றரித்த பிரானென்பர் நித்தநித்தம்
பாடுங் கவிப்பெரு மாளொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்
சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெமைச் சொல்லுவரே.
2




குலோத்துங்க சோழன் உலா முற்றிற்று.

No comments:

Post a Comment