பறக்கும் தட்டு மர்மங்கள்
பறக்கும் தட்டுக்கள் – இந்தப் பெயரைக் கேட்டாலே ஒருவித அச்சமும் பிரமிப்பும் பலருக்கு ஏற்படும். பறக்கும் தட்டுக்களை தாங்கள் அவ்வப்போது பார்த்ததாக உலகெங்கும் உள்ள பலர் தெரிவித்துள்ளனர். வழக்கம் போல விஞ்ஞானிகள் பறக்கும் தட்டுக்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும், அவ்வாறு ஒருவேளை இருந்தாலும் ரேடார் போன்ற கருவிகள் அவற்றைத் துல்லியமாகக் கண்டுபிடித்துக் கூறி விடும் என்றும் கூறுகின்றனர். ஒரு சில ஆய்வாளர்களோ பறக்கும் தட்டுக்கள் மிக வேகமாகப் – கிட்டத்தட்ட ஒளியின் அளவிற்கு வேகமாகப் – பறப்பவை என்றும் அதனால்தான் ரேடாரின் கண்களுக்குச் சிக்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.
1960ம் ஆண்டில் அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பகுதியில், பறக்கும் தட்டு ஒன்று இறங்கியது அதை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பார்த்தனர். பால் ட்ரெண்ட் என்பவர் அதனை படமெடுத்தார். பத்திரிகைகளிலும் அது பற்றிய செய்திகள் வெளியானது. ஆனால் அரசு மேற்கொண்டு அது குறித்து ஆய்வுகள் ஏதும் செய்யாததால் அது பற்றிய செய்திகள் பரவவில்லை. ஆனால் அதற்கு முன்னாலேயே 1947லேயே பறக்கும் தட்டை உலகெங்கும் பலர் பரவலாகக் கண்டுள்ளனர்.
அதுபோல 1973ல் அமெரிக்காவின் நியூ ஆர்லின்ஸ் துறைமுகத்தின் பணிபுரியும் இருவர் பறக்கும் தட்டைக் கண்டனர். இரவு நேரத்தில் வேலை முடித்து அவர்கள் வீடு திரும்பும் போது பறக்கும் தட்டு அவர்கள் முன் தோன்றியது. அதிலிருந்து இறங்கிய சில உருவங்கள் அவர்கள் இருவரையும் பறக்கும் தட்டுக்குள் கொண்டு சென்று சில ஆய்வுகளைச் செய்தன. அரைகுறை மயக்கத்தில் இருந்த இருவரும் தங்களுக்கு நடப்பனவற்றை உணர முடிந்தாலும் அவர்களால் அந்த பறக்கும் தட்டு மனிதர்களை எதிர்த்து எதுவும் செய்யாத நிலை.
சிலமணி நேரங்களில் அவர்களைக் கீழே தள்ளி விட்டு பறக்கும் தட்டு சென்று விட்டது. நீண்ட நேரம் மயங்கிக் கிடந்த அவர்கள் பின்னர் மயக்கம் தெளிந்து மக்களிடம் உண்மையைச் சொன்னனர். முதலில் யாரும் அவர்களது கூற்றை நம்பவில்லை. ஆனால் மருத்துவர்கள் குழு வந்து அவர்களை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்திச் சோதனை செய்தபோது, அவர்கள் பொய் சொல்லவில்லை என்பதும், அமானுஷ்யமான சில அனுபவங்கள் அவர்களுக்கு ஏற்பட்டது உண்மைதான் என்பதும் தெரிய வந்தது.
அமெரிக்கா, கனடா, ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக பறக்கும் தட்டுக்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். எந்த அரசும் இன்றுவரை பறக்கும் தட்டுக்களையோ அல்லது அன்னியர்கள் பிரவேசத்தையோ வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் பிரிட்டன் மட்டும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக தாம் சேகரித்து வைத்துள்ள இரகசிய அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டது. சுமார் 6000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 1994 – 2000 வரையான காலப் பகுதியில் பறக்கும் தட்டுக்கள் குறித்து திரட்டப்பட்ட தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. அதில் 1997ல் பிரிட்டன் கன்சவேட்டிவ் கட்சித் தலைவர் மிக்கல் கவாட்டின் இல்லத்தின் மேல் முக்கோண வடிவிலான ஒரு பறக்கும் தட்டு வந்திறங்கிய சம்பவமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் தட்டு குறித்த தகவல்களை மேலும் மேலும் மக்களிடம் மறைப்பது பயனற்றது என்பதால் தமது சேமிப்புக்களை வெளியிட்டுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
*******************
பெர்முடா மர்மங்கள்
மர்ம முகோணம் – மரண முக்கோணம்
அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவுக்குக் கிழக்காக, தீர்க்க ரேகைக்கு மேற்காக 40 டிகிரியில் பெர்முடா என்ற தீவின் அருகாமையில் அமைந்துள்ள பகுதிதான் பெர்முடா முக்கோணம். இந்த முக்கோணத்தைத் தான் இப்படி மர்ம முகோணம் – மரண முக்கோணம் என்று அழைக்கின்றனர். காரணம், இது வரை சுமார் 40 கப்பல்களும், 20 விமானங்களும், சிறு சிறு மரக்கலங்களும் இப்பகுதி மீது செல்லும் போது காணாமல் போனதால் தான். இவற்றோடு அதில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான மனிதர்களும் மாயமாய் மறைந்து போய் விட்டார்கள் என்பதுதான் பெரிய சோகம். வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொ ரிகொ ஆகிய முன்றுதுறைமுகங்களை இணைக்கும் பகுதி இது.
இந்த பெர்முடாப் பகுதியில் கப்பல்கள் ஏதும் சென்றாலோ அதன் மேல் விமானங்கள் போன்றவை பறந்தாலோ அவை திடீரென மறைந்து விடுகின்றன. ஏன், எதற்கு, எப்படி அவை மறைகின்றன என்பது சரிவரத் தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திகைக்கின்றனர். குறிப்பாக விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீர்ச்சந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே நிகழ்ந்திருக்கின்றன. அவற்றிற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. ஒருவேளை அவை கடலுக்குள் இழுக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து ஆராய்ந்து பார்த்தபோது ஆழ்கடல் பகுதியில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
மனிதனை விட தொழில்நுட்பத்திலும், அறிவிலும் மேலோங்கி இருக்கும் வேற்று கிரக மனிதர்களின் ஆராய்ச்சிப் பகுதியாக இது இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. வேற்றுக் கிரகவாசிகள் கடத்திச் செல்கின்றனர் என்றும், மக்களும் விமானங்களும் காற்றில் கரைந்து காணாமல் போய் விடுகின்றனர் என்றும், அமானுஷ்ய சக்தி படைத்த ஆற்றக் மிக்க ஆவிகளின் வேலைதான் இது என்றும் பலவித கருத்துகள் நிலவுகின்றன.
சிலர், விமானம், கப்பல்கள் மூழ்குவதற்கு கடலில உண்டாகும் பயங்கர சூறாவளிகள் காரணமாக இருக்காலாம்; சுனாமி போன்ற இராட்சச அலைகள் உருவாகி.. கப்பல்களையும், விமானங்களையும் மூழ்கடித்திருக்கலாம் என்று கூறுகின்றனர். பெர்முடா முக்கோணத்தின் மறு பகுதியில் உள்ள (பூமி உருண்டையில் மறுமுனை பகுதி) ஜப்பான் நாட்டு கிழக்கு கடற்கரைப் பகுதி – ட்ராகன் முக்கோணம் (பிசாசுக் கடல்) என்று அழைக்கப்படுகிறது இங்கும் பல கப்பல்கள் மயமாய் மறைந்துள்ளன. இந்த இரண்டு முனைகளிலுமே காந்த ஈர்ப்பு விசையானது அதிகமாக இருக்கிறது. இந்த இரண்டு கடல் பகுதிக்கும் எதோ ஒருவித தொடர்பு இருக்கவேண்டும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் அப்படி இந்தப் பகுதியில் என்னதான் இருக்கிறது எனப் பார்த்து விடுவோம் என துணிச்சலுடன் அமெரிக்க – ரஷ்ய விஞ்ஞானிகள் 14 பேர் நவீன கருவிகளுடன் கூட்டாகச் சென்றனர். ஆனால் திடீரென அவர்கள் ஏதோ ஒரு விசையால் செலுத்தப்பட்டவர்கள் போல் கடலுக்குள் மூழ்கிக் காணாமல் போயினர். எப்படி மூழ்கினர், ஏன் மூழ்கினர், அதன் பின் அவர்கள் உடல் என்ன ஆனது என்பதை மற்றவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
பெர்முடா மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
No comments:
Post a Comment