தேனீ வளர்ப்பு
விவசாயிகள், கூடுதல் வருமானத்திற்கு, விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பை, கையாளலாம்.
தேனீ’க்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும். நீண்ட காலமாக, தேனை காட்டிலிருந்து சேகரிக்கும் வழக்கம் உண்டு. தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில், தேன் மற்றும் மெழுகு, முக்கியமான வெளீயீட்டு பொருள்கள் ஆகும்
வருமானம் ஈட்டும் செயலான தேனீ வளர்ப்பின், சிறப்பம்சங்கள்
- தேனீ வளர்ப்பிற்கு, குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமே தேவைப்படும்
- குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில், தேன் மற்றும் மெழுகினை தயாரித்திடலாம்.
- தேனீ வளர்ப்பு, வேறு எந்த விவசாய செயலுக்கான வளங்களுடனும் போட்டியிடாது.
- தேனீ வளர்ப்பு, சுற்று சூழலை மேம்படுத்த உதவும். பலவிதமான பூக்களுக்கு மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால் இந்த பயிர்களில், மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- தேன், ஒரு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவாகும். முந்தைய தேனீ சேகரிப்பு முறையில் தேன் கூடுகளை அழிப்பதால் பலவிதமான தேனீக்கள் அழிக்கப்பட்டு வந்தது. ஆனால் தேனீ வளர்ப்பை கையாளுவதன் மூலம், இதை நாம் தடுக்கலாம்.
- தேனீ வளர்ப்பு, தனி நபராலோ அல்லது குழுவாகவோ தொடங்கப்படலாம்.
- தேன் மற்றும் மெழுகிற்கு சந்தையில் தேவை இருக்கிறது.
உற்பத்தி முறை
தேனீக்களை வீட்டிலோ அல்லது பண்ணைகளிலோ, பெட்டிகளில் வளர்க்கலாம்.
No comments:
Post a Comment