Thursday 22 March 2012

முத்து வளர்ப்பு


முத்து வளர்ப்பு என்றால் என்ன?
வளர்ப்பு முறைகள்
i) சிப்பிகளை சேகரித்தல்
ii) வளர்ப்புக்கு முன் முறைப்படுத்துதல்
iii) சிப்பியின் அறுவை சிகிச்சை
iv) வளர்ப்புக்கு பின் முறைப்படுத்துதல்
v) குளத்தில் வளர்ப்பு
vi) முத்து அறுவடை
நன்னீர் முத்து வளர்ப்பு பொருளாதாரம்



நன்னீர் முத்து வளர்ப்பு

முத்து வளர்ப்பு என்றால் என்ன?
முத்து என்பது இயற்கையாக கிடைக்கக்கூடிய விலை உயர்ந்த பொருள் (ரத்தினம், மாணிக்கம் போன்றது). இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் முத்துக்கு தேவை அதிகம். அளவுக்கு மீறின பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் இயற்கையில் முத்து கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்தியா வெளி நாடுகளிலிருந்து ஒவ்வொரு வருடமும் வளர்ப்பு முத்துக்களை இறக்குமதி செய்து உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்து வருகிறது. புவனேஷ்வரிலுள்ள மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் - நன்னீரில் முத்து வளர்ப்பது குறித்த தொழில் நுட்பத்தை உருவாக்கி நாடு முழுவதும் விரிவாக்கம் செய்துள்ளது.

 அலங்கரிக்கப்பட்ட முத்து
இயற்கையில், வெளியிடத்துப் பொருள் ஒன்று அதாவது, மண் துகள், பூச்சிகள் போன்றவை, சிப்பி உடம்பினுள் சென்று, வெளிவராமல் இருக்க, சிப்பியானது அவ்வெளிப்பொருளின் மேல் ஒரு பளபளப்பான பகுதியை உருவாக்குகிறது. இதனால் முத்து உருவாகிறது. இதுதான் முத்து வளர்ப்பிலும் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாகும்.
முத்து என்பது, சிப்பியின் உள் ஓட்டுக்குள் காணப்படும் பளபளப்பான பகுதிக்கு இணையானது. இதனை முத்துப் பகுதிகளின் தாய் என்றும் அழைப்பர். இது கேல்சியம் கார்பனேட், இயற்கையான மேட்ரிக்ஸ், தண்ணீர் ஆகிய கலவையில் உருவானது. கடைகளில் கிடைக்கும் முத்துக்கள், இயற்கையில் கிடைப்பவையாக இருக்கும், அல்லது செயற்கையில் செய்தவை அல்லது வளர்த்து கிடைத்தவையாக இருக்கும். செயற்கை முத்துக்கள் அல்லது முத்துக்கள் போன்று இருப்பவை எல்லாம் முத்துக்கள் அல்ல. செயற்கை முத்துக்கள் என்பது தடிமனான, வட்டமான அடிப்பகுதியுடைய, வெளிப்புறத்தில் முத்து போன்று பளபளப்பாக முலாம் பூசப்பட்டு இருக்கும். இயற்கை முத்துக்களில் உள்கரு சிறியதாக இருக்கும். பொதுவாக இயற்கையில் கிடைக்கும் முத்து சிறியதாக இருக்கும், வடிவம் வித்தியாசமாக காணப்படும். வளர்க்கப்படும் முத்துக்களும், இயற்கையான முத்துக்கள் போலத்தான். ஒரே வித்தியாசம் மனிதனின் முயற்சியால் உட்கருவை சிப்பிக்குள் புகத்தி, நமக்கு தேவையான அளவு, வடிவம், நிறம், அழுத்தமுடைய முத்துக்களை உருவாக்குகிறோம். இந்தியாவில் கிடைக்கும் முத்துக்களை உருவாக்கும் மூன்று வகையான நன்னீர் சிப்பிகள் ஆவன, லேமல்லிடன்ஸ் மார்ஜினாலிஸ், லே. கோரியான்ஸ், பேரிசியா காருகேட்டா.
வளர்ப்பு முறைகள்
நன்னீர் முத்துக்கள் வளர்ப்பு என்பது 6 நிலைகளில், முறையாக செய்யப்படுகிறது. அவையாவன; சிப்பிகள் சேகரிப்பது, வளர்ப்புக்கு முன் முறைப்படுத்துதல், அறுவை சிகிச்சை, வளர்ப்புக்கு பின் முறைப்படுத்துதல், குளத்தில் வளர்ப்பு, முத்துக்களை அறுவடை செய்தல்
i) சிப்பிகளை சேகரித்தல்
வளமான சிப்பிகள், குளங்கள் ஆறுகளிலுள்ள நன்னீரிலிருந்து சேகரிக்கப்படுகின்றன. நேரடியாக மனிதர்களே இவற்றை சேகரித்து, தண்ணீர் உள்ள வாலி, பெரிய பாத்திரங்களில் வைக்கப்படுகின்றன. முத்து வளர்ப்பதற்கு சிப்பியின் சரியான அளவு, 8 செ.மீட்டருக்கு மேல் இருக்கு வேண்டும்.
ii) வளர்ப்புக்கு முன் முறைப்படுத்துதல்
சேகரிக்கப்பட்ட சிப்பிகள், 2-3 நாட்களுக்கு ஒரே இடத்தில் சற்று கூட்டமாக, குழாய் தண்ணீரையும் சேர்த்து இருப்பு செய்யப்படுகிறது. இவ்வாரு செய்தல், சிப்பிகளின் சில தசைகளை வலுவிழக்கச் செய்யும். இதனால் அறுவை சிகிச்சை செய்வது எளிதாக இருக்கும்.
iii) சிப்பியின் அறுவை சிகிச்சை
எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்கிறோம் என்பதை பொருத்து, தசைகளில் வெளிபொருளை உள்ளிருப்பு செய்வது மூன்று விதமாக செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யும்போது தேவைப்படும் பொருட்களாவன- உள்ளிருப்பு செய்யப்படும் மணிகள் அல்லது உட்கருவாகும்.
மான்டில் காவிட்டிக்குள் உள்ளிருப்பு செய்தல்- இம்முறையில் வட்டமான (4-6 மி.மீ.சுற்றளவு) அல்லது அலங்கரிக்கப்பட்ட (பிள்ளையார், புத்தா படம் போட்ட) மணிகள் மான்டில் காவிட்டிகுள் நிலை நிறுத்தப்படுகின்றன. மான்டில் காவிட்டியில் உள்ளிருப்பு செய்தல், சிப்பியின் இரண்டு பகுதிகளிலும் செய்யலாம். அலங்கரிக்கப்பட்ட மணிகளை உள்ளிருப்பு செய்யும்போது மணிகளிலுள்ள அலங்காரம் செய்துள்ள பகுதி ஓட்டை பார்த்து இருக்க வேண்டும். மணிகளை தகுந்த இடத்தில் வைத்த பிறகு, சிப்பியை மூட வேண்டும்.
மான்டில் திசுக்களுக்குள் உள்ளிருப்பு செய்தல்: இதில் சிப்பிகளை இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அதாவது கொடுப்பவை, வாங்குபவை. இம்முறையில் சிறிய மான்டில் திசுக்கள் தயார் செய்யப்படுகின்றன. கொடுக்கும் சிப்பிகளிலிருந்து ஒரு ரிப்பன் வடிவ மான்டில் திசுக்களை எடுத்து, இதனை 2.மி.மீட்டர் அளவில் சிறு துண்டுகளாக வெட்டி பிரிக்கப்படுகிறது. வாங்கும் சிப்பிகளில், இவை உள்ளிருப்பு செய்யப்படுகிறது. இது இரண்டு வகைப்படும். அதாவது, உட்கருவுடன், உட்கரு இல்லாமல். உட்கரு இல்லாத முறையில், மான்டில் திசுக்கள் மட்டும் சிப்பிகளின் உள்ளே வைக்கப்படுகின்றன். . உட்கரு உள்ள முறையில், மான்டில் திசுக்களுடன் உட்கருவும் சிப்பிகளின் உள்ளே வைக்கப்படுகின்றன்.
இனப்பெருக்க உடல் உறுப்புகளுக்குள் உள்ளிருப்பு செய்தல்:இம்முறையில் மேலே கூறப்பட்ட வகையில், திசுக்களுடன் உட்கருவும் சிப்பியின் இனப்பெருக்க உறுப்பில் வைக்கப்படுகின்றன.
iv) வளர்ப்புக்கு பின் முறைப்படுத்துதல்
உள்ளிருப்பு செய்யப்பட்ட சிப்பிகளை நைலான் பைகளில் பத்து நாட்கள் வைத்து, எதிர் உயிர் மருந்துகள் அளித்து, இயற்கையான உணவுகளைக் கொடுத்து கவனமாக பராமரிக்க வேண்டும். இவை தினமும் பார்க்கப்பட்டு, செத்த சிப்பிகள் மற்றும் உட்கருவை நிகராகரித்த சிப்பிகள் வெளியில் எடுக்கப்படுகின்றன.
v) குளத்தில் வளர்ப்பு
  
நன்னீர் முத்து சிப்பி வளர்ப்பு
வளர்ப்புக்கு பின் முறைப்படுத்தப்பட்ட சிப்பிகள் குளத்தில் இருப்பு செய்யப்படுகின்றன. ஒரு நைலான் பைக்கு இரண்டு சிப்பிகள் என்ற அளவில் இருப்பு செய்யப்பட்டு, குளத்தில் ஒரு மீட்டர் ஆழத்தில் மூங்கில் அல்லது PVC குழாய் உதவியுடன் நிலை நிறுத்தப்படுகின்றன. சிப்பிகள் ஒரு ஹெக்டருக்கு 20,000- 30,000 வரை இருப்பு செய்யப்படுகின்றன. குளத்தில் இயற்கையான மற்றும் செயற்கையான உரங்கள் அவ்வப்போது இடப்பட்டு நீர்த்தாவரம், பாசிகள் உற்பத்தி கண்காணிக்கப்படுகிறது. முறையான பரிசோதனை, இறந்த சிப்பிகளை வெளியேற்றுதல், நைலான் பைகளை சுத்தம் செய்தல் இவையாவும் வளர்ப்பு காலமான 12-18 மாதங்களுக்கு செய்யப்படவேண்டும்.
vi) முத்து அறுவடை
  
வட்ட வடிவ வளர்ப்பு முத்துக்களை சேகரித்தல்
வளர்ப்பு காலம் முடிந்தபின் சிப்பிகள் அறுவடை செய்யப்படுகின்றன. தனித்தனி முத்துக்கள், மான்டில் திசுக்களிலிருந்து, இனப்பெருக்க உடல் உறுப்புகளிலிருந்து, மான்டில் காவிட்டியிலிருந்து வெளியே தனியாக பிரித்து எடுக்கப்படுகின்றன. பல்வேறு உள்ளிருப்பு செய்தல் முறையில் வளர்க்கப்பட்ட சிப்பிகளிலிருந்து அரை வட்ட மற்றும் கூட்டோடு கூடிய முத்துக்கள், வடிவமில்லாத முத்துக்கள், வட்டவடிவ முத்துக்கள் கிடைக்கும்.
நன்னீர் முத்து வளர்ப்பு பொருளாதாரம்
கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துக்கள்:
  • இப்போது கூறப்போகும் கருத்துக்கள் யாவும், மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்படுகிறது.
  • அலங்கரிக்கப்பட்ட அல்லது வடிவமைக்கப்பட்ட முத்து என்பது பழைய முறையாக இருந்தாலும், மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய ஆய்வுகளின்படி, மதிப்பு மிக்கவையாகவே இருக்கின்றன. ஆலோசனை மற்றும் விற்பனைக்கான செலவுகள் இந்த வரவு செலவில் சேர்க்கப்படவில்லை.
  • செயல்படும் விபரங்கள்
(i)         பரப்பு-0.4†ஹெக்டேர் (ஒரு ஏக்கர்)
(ii)        பொருள்- அலங்கரிக்கப்பட்ட முத்துக்கள் (இரண்டு வகை
            உள்ளிருப்பு செய்தல் முறையில்)
(iii)       இருப்பு செய்யும் அளவு - 25000 சிப்பிகள் /0.4
      ஹெக்டேருக்கு (ஒரு ஏக்கருக்கு)
(iv)       வளர்ப்பு காலம் 1.5 வருடம்.
வ.எண்
பணிகள்/ செலவுகள்
தொகை(லட்சத்தில்)
I.     
செலவுகள்

அ.   
நிலையான மூலதனம்

1.
வளர்ப்பு கூடாரம் (12மீ x 5மீ)    
1.00
2.        
சிப்பி வளர்ப்புத் தொட்டி-(20 தொட்டிகள்- ஒரு தொட்டி 1500 ரூபாய் விலையில்)
0.30
3.
வளர்ப்புத்தொகுதி(PVC பைப், மிதவை)
1.50
4.        
அறுவைசிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் (4எண்கள்- ஒவ்வொன்றும் 5000 ரூபாய்)   
0.20
5.
அறுவை சிகிச்சைக்கு தேவையான இருக்கைகள் (4 எண்கள்)  
0.10

மொத்தம்
3.10

நடைமுறை செலவுகள்


குளக் குத்தகை (1.5 வருடத்திற்கு)   
0.15
2         
சிப்பிகள் (25000) -50பைசாஒன்றுக்கு)
0.125
3.        
அலங்கரிக்கப்பட்ட முத்து கரு (50,000 எண்ணிக்கை -இருமுறை உள்ளிருப்பு செய்வதற்காக - 4 ரூபாய்ஒரு உட்கரு)
2.00
4.
உள்ளிருப்பு செய்வதற்காக தகுதியுள்ள வேலையாட்கள்(3ஆட்கள் 3மாதத்திற்கு - 6000 ரூபாய் ஒரு ஆளுக்கு ஒரு மாதத்திற்கு)   
0.54
5.
கூலியாட்கள் ( 2 பேர் - 1.5வருடத்திற்கு)- 3000 ரூபாய் ஒரு ஆளுக்கு, ஒரு மாதத்திற்கு பண்ணை பராமரிப்பிற்காக)
1.08
6.        
உரங்கள், சுண்ணாம்பு, இதர செலவுகள்
0.30
7.        
முத்துக்கள் அறுவடைக்கு பிந்தய பராமரிப்பு செலவு (9000 அலங்கரிக்கப்பட்ட முத்துக்கள் ஒரு முத்துக்கு 5 ரூபாய் வீதம்)    
0.45

மொத்தம்
4.645
இ.
மொத்த செலவு

1.        
மொத்த நடைமுறை செலவுகள்
4.645
2.        
நடைமுறை செலவுக்கு வட்டி (15% அரையாண்டுக்கு)
0.348
3.        
நிரந்தர மூலதனத்தில் தேய்மானம் (1.5 வருடத்திற்கு 10% அளவில் வருடத்திற்கு)
0.465
4.
நிரந்தர மூலதனத்திற்கு வட்டி (1.5வருடத்திற்கு 15% ஒரு வருடத்திற்கு)
0.465

ஆக மொத்தம்               
5.923
II        
மொத்த வருமானம்

1.
முத்துக்கள் விற்பனை (30000 முத்துக்கள்-15000 சிப்பிகளிலிருந்து அறுவடை செய்யப்பட்டு, 60% பிழைப்புதிறன்)


அலங்கரிக்கப்பட்ட முத்துக்கள் (முதல்தரம் -10%  மொத்தத்தில்) 3000-150 ரூபாய் ஒரு முத்துக்கு      
4.50

அலங்கரிக்கப்பட்ட முத்துக்கள்(2ம்தரம் -20%  மொத்தத்தில் 6000-60 ரூபாய் ஒரு முத்துக்கு               
3.60

ஆக மொத்தம்                 
8.10
III       
நிகர வருமானம் (மொத்த வருமானம்-மொத்தசெலவு)
2.177

No comments:

Post a Comment