Thursday 22 March 2012

கடி ஜோக்ஸ்


கடி ஜோக்ஸ் 1  (கடி சிரிப்புகள்)


நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.

வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.

பட்டைய கிளப்பும் பாக்கி : "நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?"
பேட்டை மாமா : "குறுக்கு விசாரணை பண்றாராம்".

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?

வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு"
ரமனன் : "ஏன்?"
வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."

வேலு : எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .
கைப்பில்ல : இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
வேலு : நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

வேலு : என் சொந்த ஊரு மதுரை. இப்பதான் திருச்சி வர்றேன். என் பேரு 'அங்கு ராஜ்'
பாக்கி : இங்கு என்ன பேர் வச்சிருக்கீங்க?

***************===========================****************

கடி ஜோக்ஸ் 2 (கடி சிரிப்புகள்)



அரசியல்வாதி 1 : கட்சியில எந்தத் தொண்டரும் சரியா வேலை செய்ய மாட்டேங்குறாங்க.
அரசியல்வாது 2 : அப்ப 'தொண்டர்கள்' னு சொல்லுங்க.

சர்வர் : முதலாளி சதாம் உசேன உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கலாம் அதுக்காக போர்டுல இப்படியா எழுதறது.
முதலாளி : என்ன எழுதியிருக்கேன்?
சர்வர் : தயிர் சதாம் தக்காளி சதாம் லெமன் சதாம் ரெடி அப்படீன்னு எழுதியிருக்கீங்க.

பாக்கி : ஏன் சார் நீங்களோ வீணை வித்வான் பின்ன ஏன் குரல் சரியில்லைன்னு கச்சேரி வேணாண்டீங்க?
ரமனன் : நான் பாடிக்கிட்டே தான் வாசிப்பேன் அதனால தான்.

வேலு : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா
பாக்கி : நீ என்னாவே....?
வேலு : காலியாயிருவேன்.

சிலுக்கு சீனி : "படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க"
விச்சு : "கரும்பு".

ரமனன் : புத்தகக் கடைக்காரர்கிட்ட வம்பிழுத்தது தப்பாப் போச்சு.
வேலு : ஏன்?
ரமனன் : நல்லா புரட்டி எடுத்துட்டாரு.

டாக்டர் : அந்தப் பேசண்டுக்கு என் மேல கோபம் போல தெரியுது.
நர்ஸ் : எப்படிச் சொல்றீங்க ?
டாக்டர் : நாக்கை நீட்டச் சொன்னா, அந்த சாக்குல நாக்கைத் துருத்துறாரே.

வேலு : கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
பாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.
***************====================************

கடி ஜோக்ஸ் 3  (கடி சிரிப்புகள்)

அவர் : வியாபாரத்துல என்னோட பிரதிபலிப்பு என் மகனிடமும் தெரியுது.
இவர் : என்ன வியாபாரத்துல?
அவர் : கண்ணாடி வியாபாரத்துல.

பாக்கி : வாக்கு மூலம் குடுக்கும்போது உட்கார முடியாது
ரமனன் : ஏன்?
பாக்கி : அது வாக்கு 'மூலம்' ஆச்சே.

வேலு : "அங்கே என்ன பட்டிமன்றம்?"
விச்சு : "வீரப்பனா? அதிரடிப்படையா? ன்னு தான்.

வேலு : "என்னப்பா சர்வர் மெதுவடைல ஓட்டை இவ்வளவு பெரிசா இருக்கே."
பேட்டை மாமா : "நான்தான் சார் தவறுதலா கால் கட்டை விரலால ஓட்டை போட்டுட்டேன்"

நிருபர் : உங்க பேர்ல ரசிகர் மன்றம், நற்பணி மன்றம்னு வைக்கிறாங்களே, அது பத்தி என்ன நினைக்கிறீங்க?
நடிகை : அதைவிட என்பேர்ல நீதி 'மன்றம்' வச்சா ரொம்ப சந்தோசப்படுவேன்.

நண்பர் 1 : என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு.
நண்பர் 2 : இது ஸ்டூல் இல்ல மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம் பாருங்க.

பாஸ்கி : புதுசா ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணலாம்னு இருக்கேன்.
ஜோதிடர் : அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
பாஸ்கி : வாஸ்து சாஸ்திரப்படி வயசு குறிச்சுக் குருத்தீங்கன்னா நல்லா இருக்கும்.

பாஸ்கி : அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
ஏன்?
பாக்கி : ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!
********************=====================*******************

கடி ஜோக்ஸ் 4  (கடி சிரிப்புகள்)


நண்பர் 1 : என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு
நண்பர் 2 : ஏன் என்ன ஆச்சு ?
நண்பர் 1 : எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்

மனைவி : வேலைக்காரியை இனிமே வர வேண்டாம்னு சொன்னீங்களாமே,,,,,, அதைச் சொல்ல நீங்க யாரு ?
கணவன் : அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்ங்கறியா ?
மனைவி : இல்ல ,,, நானே சொல்லிடறேன் இனிமே வராதேன்னு.

நண்பர் 1 : அந்த ஊர்ல நிறைய கடன் வாங்கினேன் அதனால இந்த ஊருக்கு வந்தேன். இங்கேயும் கடன் வாங்கறேன்.
நண்பர் 2 : இப்படி கடன் வாங்கறது சரியா சொல்லு?
நண்பர் 1 : நான் கேட்கும்போதெல்லாம் தர்றாங்களே அது மட்டும் சரியா சொல்லு.

கோபு : அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு ?
பாபு : இதுவாடா முடியும்

வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார் .. ..
பாக்கி : ஏன் .. .. .. ?
வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம் .. ..

பாக்கி : அதிக விலை கொடுத்து இந்த கார வாங்கறாரு. ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது போலருக்கே.
வேலு : எத வச்சு சொல்ற?
பாக்கி : வண்டில ஸ்பீட் ப்ரேக் எங்கன்னு கேக்கறார்.

காதலி : நேற்று உங்க நண்பர் ராஜுவும் இதே ரோஜாவைக் கொடுத்துதான் ஐ லவ்யூ சொன்னார்
காதலன் : தப்பு,, தப்பு அது வேற ரோஜாவா இருக்கும். இது இன்னிக்கு எங்க தோட்டத்தில் நானே பறிச்சது.

ரமனன் : எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு . . . என்னால ஜீரணிக்கவே முடியல்ல.
முராரி : அய்யய்ய நீங்க நாயெல்லாம் சாப்பிடுவீங்களா?

*************************=========================*******************

கடி ஜோக்ஸ் 5  (கடி சிரிப்புகள்)

பாக்கி : என் மனைவியோடு ஹேhட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .
ரமனன் : என்னாச்சு ?
பாக்கி : காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா

மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. ?
கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு

மகன் : அப்பா உன்னால இருட்டுல எழுத முடியுமா?
தந்தை : ஓ! முடியுமே
மகன் : அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்க

நண்பர் 1 : எதுக்கு எல்லாப் பேஷண்டுகளும் ஜாலியா இருக்காங்க ?
நண்பர் 2 : டாக்டர்கள் ஸ்டிரைக் ஆச்சே, அதான்

ரானி : போஸ்ட் மேனைக் காதலிக்கிறீயே... என்ன சொல்றார் ?
வேனி : ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்கிறார்

பாக்கி : அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்றே ?
வேலு : சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவுன்னு கேட்டா ஒரு கிலோ 20 ரூபாய்ங்கறாரே

நண்பர் : என்ன ஜோஸியரே, கிளிக் கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு ?
ஜோசியர் : உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க

மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .
கணவன் : வேற என்னதான் போட்ட?
மனைவி : பேசாம பட்டிணி போட்டேன்
****************************=========================*******************

கடி ஜோக்ஸ் 6  (கடி சிரிப்புகள்)

மணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது ?
மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?
மணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு .. .. பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்

காதலன் : உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..
காதலி : ஏன் டார்லிங்..?
காதலன் : திருப்பிக் கொடுக்கறதே இல்லியே

நண்பர் : "டாக்டர் வெயிட் தூக்கக் கூடாதுன்னு சொன்னதுக்காக உங்க அம்மா பெரிய வெங்காயம் வாங்காம சின்ன வெங்காயம் வாங்கறதப்பாத்தா எனக்கு எரிச்சலா வருது"

தொண்டன் : வன்முறைக்குப் பள்ளியில் இடம் தராதீர்கள்னு ஒரு பள்ளிக்கூடத்தில் போய்ப் பேசினீங்களா தலைவரே
தலைவர் : ஆமாம் என்ன ஆச்சு
தொண்டன் : எந்த வகுப்புல அட்மிஷன் தரக் கூடாது ?-ன்னு ஹெட்மாஸ்டர் கேட்கிறார்.

ஆசிரியர் : உண்மைக்கு எதிர்ப்பதம் என்னன்னு கேட்டா, பதில் சொல்லாம முழிக்கிறியே .. .. ஏண்டா ?
மாணவன் :நீங்கதானே சார் பொய் சொல்லக்கூடாதுன்னீங்க .. ..

பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?
பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?
பையன் : உங்க தங்கையோட லவ்வர் தான்.

ரமனன் : லோ-பட்ஜெட் படம்கிறதுக்காக இப்படியா ?
பாக்கி : என்னவாம் ?
ரமனன் : கிளிசரினுக்குப் பதிலா நடிகர் நடிகைகளை அறை கொடுத்து அழவைக்கறhங்க.. ..

நண்பர் 1 : "உன் பொண்ணு ஓடிப்போனப்ப கௌரவம் சிவாஜி மாதிரி "கிளிக்கு ரெக்க முளைச்சுடுச்சு ஆத்த விட்டு பறந்து போயிடுச்சு" அப்டீன்ன இப்ப உன் பையன் 30 வயசாகியும் வேலைக்கு போகாம வீட்லயே உட்கார்ந்திட்டுருக்கானே இதுக்கு என்ன சொல்லப்போற?"
நண்பர் 2 : "கொரங்குக்கு கால் ஒடஞ்சுபோச்சு ஆத்லயே உக்காந்துட்டுருக்கு."
*************************=======================**********************

கடி ஜோக்ஸ் 7  (கடி சிரிப்புகள்)

நோயாளி : என்னது டி.டி.எஸ் ஆபரேஷன் தியேட்டர் திறந்திருக்கீங்களா..,,?
டாக்டர் : ஆமாம், ஆபரேஷன் தியேட்டர்ஸ் டி.டி.எஸ் சவுண்ட் எஃபெக்ட் இருக்கு .. .. ..

மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க
கணவன் : எனக்கு மறந்து போச்சு
மனைவி : இது கூடவா ?
கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும். 

ரசிகர் : ஏழை குடும்பக் கதை படம்னு சொன்னீங்க படம் ஒரே செக்ஸியா இருக்கே ?
இயக்குனர் : கதாநாயகி துணி வாங்கக்கூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க.. ..

ரமனன் : வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன். .
வேலு : வெயிலுக்கா... அதுக்கு ஏண்டா வெளியூர் போறே ? சும்மா வெளியிலே போய் நில்லு... போதும்.. .

இன்ஸ்பெக்டர் : கொள்ளைக்கும்பல்ல டிரைவரா நடிச்சு தகவல்களை அனுப்பச் சொன்னா என்ன 6 மாசமா ஒரு தகவலும் உங்கிட்டேர்ந்து வரவே இல்ல?
போலிஸ் : இங்க எனக்கு நல்ல சம்பளம் கொடுத்து வீடெல்லாம் குடுத்து பாத்துக்கறாங்க அய்யா.

இயக்குனர் : படத்தோட முடிவுல ஹீரோவான நீங்க வில்லனா மாறிடறீங்க..,.
நடிகர் : பேசின சம்பளத்தை உடனே தரல்லேன்னா இப்பவே வில்லனா மாறிடுவேன்

தயாரிப்பாளர் : முதல்வர்கிட்ட இல்லே .. .. .. இந்தப் பிரச்னையைப் பிரதமர்கிட்டேயே கொண்டுபோகப் போறேன். இன்னும் கால்வாசி படம் ஷூட்டிங் பாக்கியிருக்கு. அதுக்குள்ள முழுப்படமும் திருட்டு வி.சி.டி-ல் வந்துடுச்சு .. ..

காதலன் : கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன் ,,,,,,
காதலி : அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?
காதலன் : உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.
***********************======================***********************

கடி ஜோக்ஸ் 8  (கடி சிரிப்புகள்)


நண்பர் 1 : என் பொண்ணோட கல்யாண விசிடியக்கூட பாக்கவிடமாட்டேன்றாங்க?
நண்பர் 2 : இதென்ன அக்ரமமா இருக்கு?
நண்பர் 1 : தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிதான் பாக்கணுமாம். இல்லாட்டா 3 வருஷம் சிறை தண்டனையாம்.

வேலு : வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?
ரமனன் : ஓ, ஒரே ஒரு முறை தொடமுடியுமே!

பாக்கி : நம்ம படம் B அண்ட் உ-ல மட்டும் ஃபுல்லா ஒடுதுன்னீங்க .. .. பின்ன கலேக்ஷனே சரியில்லையே ?
முராரி : B அண்ட் உ-னு நான் சொன்னது ஏரியா இல்லே சார் .. .. தியேட்டர் வரிசை

நண்பர் 1 : என்.டி. ராமாராவும் நாகேஸ்வரராவும் திருப்பதிக்கு ஒண்ணா எப்படிப் போவாங்க?
நண்பர் 2 : ராவோட ராவா.

நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

நண்பர் : நீங்க எடுத்த சஸ்பென்ஸ் படங்கள்லேயே கடைசியா எடுத்ததுதான் ரொம்ப பயங்கர சஸ்பென்ஸ்னு சொல்றீங்களே .. .. ஏன் ?
டைரக்டர் : கடைசிவரைக்கும் கதை என்னன்னு எனக்கே புரியலையே

முதல் நடிகை : அந்த நடிகர் தயாரிக்கிற படம்னா பணத்தை மொத்தமா கொடுப்பாரே .. .. .. அப்புறமும் ஏன் அலுத்துக்கறே ?
இரண்டாம் நடிகை : எங்கே கொடுத்தார் .. .. ? முத்தமா இல்ல கொடுத்துத் தொலைச்சுட்டார்

மாலா : தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
கலா : ஏன்னா அதைத் தான் தோய்க்கிறாங்களே. அதுதான்
*********************==========================*******************

கடி ஜோக்ஸ் 9  (கடி சிரிப்புகள்)

தாத்தா : நாய்க்கு ஒரு கால் இல்லைன்னா எப்படிக் கூப்பிடுவாங்க
பேரன் : நொண்டி நாய்ன்னு, மூணுகால் நாய்ன்னு கூப்பிடுவாங்க
தாத்தா : இல்ல... நய் ன்னு கூப்பிடுவாங்க.

டைரக்டர் : நூறு கெஸ்ட் நடிகர்கள் கிடைப்பாங்களா .. .. .. ?
உதவியாளர் : எதுக்கு .. .. ?
டைரக்டர் : மகாபாரதத்துல கௌரவர்களா நடிக்கத்தான்

பூஜா : அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்?
ராஜா : அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம்.

ரமனன் : ஃபைனான்ஸ் கம்பெனியில கடன் வாங்கித்தான் அந்தப் படத்தை எடுத்தாங்களாம்
முராரி : அதான் .. .. படம் தியேட்டரைவிட்டு சீக்கிரமா ஒடிடுச்சு

நோயாளி : அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?
டாக்டர் : கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன்.

கிராமத்து ஆள்: இந்த ரூமுக்குத் தலைக்கு ஐம்பது ரூபாய் வாடகையா, சார்!
லாட்ஜ் மானேஜர்: ஒரு தலைக்கும் அதே வாடகை தான்: இராவணன் வந்து தங்கினாலும் அதே வாடகை தான்.

நண்பர் 1 : இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா?
நண்பர் 2 : ஏனாம்?
நண்பர் 1 : தீப கர்ப்பமா இருக்கிறதுனால.

நோயாளி : பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர் .. .. .. ?
டாக்டர் : பல்லைப் பிடுங்கின அப்புறம், அதுக்கு வலிச்சா உங்களுக்கு என்ன?


கடி ஜோக்ஸ் 10  (கடி சிரிப்புகள்)

தாத்தா : நாய்க்கு ஒரு கால் இல்லைன்னா எப்படிக் கூப்பிடுவாங்க
பேரன் : நொண்டி நாய்ன்னு, மூணுகால் நாய்ன்னு கூப்பிடுவாங்க
தாத்தா : இல்ல... நய் ன்னு கூப்பிடுவாங்க.

டைரக்டர் : நூறு கெஸ்ட் நடிகர்கள் கிடைப்பாங்களா .. .. .. ?
உதவியாளர் : எதுக்கு .. .. ?
டைரக்டர் : மகாபாரதத்துல கௌரவர்களா நடிக்கத்தான்

பூஜா : அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்?
ராஜா : அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம்.

ரமனன் : ஃபைனான்ஸ் கம்பெனியில கடன் வாங்கித்தான் அந்தப் படத்தை எடுத்தாங்களாம்
முராரி : அதான் .. .. படம் தியேட்டரைவிட்டு சீக்கிரமா ஒடிடுச்சு

நோயாளி : அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?
டாக்டர் : கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன்.

கிராமத்து ஆள்: இந்த ரூமுக்குத் தலைக்கு ஐம்பது ரூபாய் வாடகையா, சார்!
லாட்ஜ் மானேஜர்: ஒரு தலைக்கும் அதே வாடகை தான்: இராவணன் வந்து தங்கினாலும் அதே வாடகை தான்.

நண்பர் 1 : இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா?
நண்பர் 2 : ஏனாம்?
நண்பர் 1 : தீப கர்ப்பமா இருக்கிறதுனால.

நோயாளி : பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர் .. .. .. ?
டாக்டர் : பல்லைப் பிடுங்கின அப்புறம், அதுக்கு வலிச்சா உங்களுக்கு என்ன?

கடி ஜோக்ஸ் 11  (கடி சிரிப்புகள்)

கோபு : வெளியிலே வெயில்லே வந்தா உருகிடற மனுஷர் யாரு?
பாபு: தெரியாதே!
கோபு: பெருமாள் கோவில் பட்டர்.

நோயாளியின் மனைவி : என் கணவருக்கு டெம்பரேச்சர் பார்க்கறதுக்கு, என்னை எதுக்கு டாக்டர் வெளியே போகச் சொல்றீங்க .. .. ?
டாக்டர் : அப்பத்தானே தர்மாமீட்டர் வைக்கறதுக்கு அவர் வாயைத் திறப்பாரு

தயாரிப்பாளர் : இதோ பாருங்க சார் .. .. கதையில கிராமத்து மண் வாசனை வீசணும்னு சொன்னது என்வோ உண்மைதான் .. .. அதுக்காக எழுதி கதையைப் புழுதியில் புரட்டியா தர்றது ?

நண்பர் 1 : உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?
நண்பர் 2 : அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.

மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
மாணவன் 2 : யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.

குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. ..
நீதிபதி : ஆமா .. ..
குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. ..

ரானி : டெலிவிஷன்லே ஷோபனாரவி எப்பவும் சேலைத் தலைப்பைப்போர்த்திக்கிட்டு தான் செய்தி வாசிப்பாங்க. ஏன் அப்படீ?
வேனி : தெரியாதே!
ரானி : அவங்க வாசிக்கிறது தலைப்பு செய்தியாச்சே!

மனைவி : பந்தியிலே பூரிக்குச் சட்னியும் பொங்கலுக்குக் கிழங்குமாக மாற்றிப் பரிமாறுகிறார்களே .. .. என்ன விஷயம் ?
கணவன் : நடப்பது கலப்புத் திருமணமாம் .. ..

கடி ஜோக்ஸ் 12  (கடி சிரிப்புகள்)

ரமனன் : ஒசிப் பத்திரிகை பாக்கற கூட்டம் ஒவரா போயிருச்சா .. .. .. எப்படி ?
முராரி : பக்கத்து வீட்டுப் பிரமுகருக்குக் குற்றப்பத்திரிகை வந்துருக்கு அதைப் படிக்க ஒரே கூட்டம்

நண்பர் 1 : ஏன் வருத்தமாய் இருக்கீங்க ?
நண்பர் 2 : அடுத்தவங்க பேச்சை நான் ஒட்டுக் கேட்கிறேன்னு நிறைய பேர் பேசிக்கிறாங்க

ரானி : உங்க வேலைக்காரி துணி துவைக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்கிறாளே!
வேனி : அதுவா அவ உபயோகப்படுத்தறது ஸன்லைட் சோப்பாம்.

டாக்டர் : வாயில் என்ன கட்டு ?
நோயாளி : எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க ?

வேலு : நீங்கள் எப்பொழுதுமே இப்படித் தான் திக்குவீர்களா?
பாக்கி : எப்பொழுதும் இல்லை. டாக்டர் பே.... பே..சு..ம் பொழுது ம.... மட்..டு...ந்தான்.

கோபு : உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?
பாபு : கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.

ரமனன் : அந்த மேஜை ரொம்ப வெட்கப்படுது
முராரி : ஏன்?
ரமனன் : அதற்கு டிராயர் இல்லை.

தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

கடி ஜோக்ஸ் 13  (கடி சிரிப்புகள்)

கணவன் : நான் ஒரு ரூபாய் நாணயம் ஒண்ணைத் தொலைச்சிட்டேங்கறதுக்காக என்னை நாணயம் தவறியவன்னு உங்கப்பாகிட்டே நீ சொல்றது கொஞ்சம்கூட நல்லா இல்லே .. ..

மனைவி : கவிதா, கமலா, கிருபா, கீர்த்தனா - இவங்க பின்னாடியெல்லாம் நம்ப பையன் சுத்தறான் .. .. .
கணவன் : மு-வலமாக இருக்கே

தொண்டர் : எங்க தலைவர்கிட்டே பத்தாயிரம் ஜோடி செருப்புகள் இருக்கிறது ஆனா, அதெல்லாம் பணம் கொடுத்து வாங்கினது இல்லே மேடையில் தலைவர் பேசறப்போ வந்து விழந்த செருப்புகளைத்தான் சேகரிச்சு வெச்சிருக்கார்

முராரி : அந்த மரம் ஒரு கிராஜூவேட்.
கோபு : அப்படியா
முராரி : ஆமாம். அது பட்ட மரம்

குப்பு : உங்க பையன் பேரென்ன?
சுப்பு : ராஜ மார்த்தாண்ட வீரபாண்டிய ராம சுப்பிரமணியம்.
குப்பு : பேர் ஆசை பெரு நஷ்டம் - ன்னு சொல்லுவாங்க தெரியுமா?

தலைவர் : எதிர்க்கட்சிக்காரர், குழந்தைகளுக்கு இலவசத் துணியை மட்டும் கொடுத்துவிட்டு உங்களிடம் ஓட்டுக் கேட்கிறார். ஆனால், எங்கள் தலைவர் எத்தனையோ பெண்களுக்கு இலவசமாகக் குழந்தைகளையே கொடுத்திருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆசிரியர் : மாலா, ஆறில் பத்து போகுமா?
மாலா : போகும் சார்!
ஆசிரியர் : எப்படி?
மாலா : எங்க வீடு ஆத்துக்குப் பக்கத்திலேதான் சார் இருக்கு. எங்கம்மா தினமும், பத்துப் பாத்திரத்தை அங்கே தான் தேய்ப்பாங்க

ராமு : யானைக்கு உடம்புக்குச் சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்குப் போச்சுது. எறும்பு நானும் வரேன்னு சொல்லி கூடவே போச்சுது. ஏன்?
சோமு : தெரியலையே?
ராமு : யானைக்கு ரத்தம் தேவைப்பட்டால் கொடுக்கத்தான்
சோமு : ???????

கடி ஜோக்ஸ் 14  (கடி சிரிப்புகள்)

தொண்டர் 1 : அரசியல்ல புதுமை பண்ணறதுக்கு ஒரு எல்லையே இல்லை நம்ம தலைவருக்கு .. ..
தொண்டர் 2 : ஏன் .. .. .. ?
தொண்டர் 1 : எந்தக் கட்சியோட கூட்டணி வெச்சுக்கப் போறோம்கற விஷயத்தைத் தேர்தலுக்கப்புறம் அறிவிக்கப் போறாராம்.

வேலு : மெதுவடை, வடைகறி - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ரமனன் : ஒரு நாள் வித்தியாசம்.

பாக்கி : ஏ ரோல உட்கார்ந்து சினிமா பார்த்தா சினிமா தெரியாது,
ரமனன் : ஏன்?
பாக்கி : ஏன்னா பீ ரோ முன்னாடி இருக்கே.

வேலு : சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மாணவன் : தெரியாது!
வேலு : சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.

தொண்டர் : எந்த நம்பிக்கையில் இவ்வளவு கடன் வாங்கி எலெக்ஷன் செலவு பண்றீங்க .. .. ?
தலைவர் : ஜெயிக்கிற எம்.பிக்களை வித்துக் கடனை அடைச்சுடலாம்னுதான் .. ..

நண்பர் 1 : அது ஓர் அழுகை சினிமா. படம் பார்க்கும் போது அழுதுவிட்டேன்!
நண்பர் 2 : எந்த இடத்தில்?
நண்பர் 1 : உட்கார்ந்து கொண்டு படம் பார்த்த அதே இடத்தில் தான்.

நண்பர் : கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது ,,,,, நீங்க என்னடான்னா கவலையா காட்சி தர்றீங்களே ?
அரசியல்வாதி : இந்த தடவையாவது எப்படியும் ஜெயிச்சிடணுங்கற கவலைதான்.

வேலு : நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!
முராரி : அதிசயமாயிருக்கே!
வேலு : காரணம். அவன்தான் அவ புருஷன்.

கடி ஜோக்ஸ் 15  (கடி சிரிப்புகள்)

தொண்டர் 1 : அரசியல்ல புதுமை பண்ணறதுக்கு ஒரு எல்லையே இல்லை நம்ம தலைவருக்கு .. ..
தொண்டர் 2 : ஏன் .. .. .. ?
தொண்டர் 1 : எந்தக் கட்சியோட கூட்டணி வெச்சுக்கப் போறோம்கற விஷயத்தைத் தேர்தலுக்கப்புறம் அறிவிக்கப் போறாராம்.

வேலு : மெதுவடை, வடைகறி - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ரமனன் : ஒரு நாள் வித்தியாசம்.

பாக்கி : ஏ ரோல உட்கார்ந்து சினிமா பார்த்தா சினிமா தெரியாது,
ரமனன் : ஏன்?
பாக்கி : ஏன்னா பீ ரோ முன்னாடி இருக்கே.

வேலு : சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மாணவன் : தெரியாது!
வேலு : சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.

தொண்டர் : எந்த நம்பிக்கையில் இவ்வளவு கடன் வாங்கி எலெக்ஷன் செலவு பண்றீங்க .. .. ?
தலைவர் : ஜெயிக்கிற எம்.பிக்களை வித்துக் கடனை அடைச்சுடலாம்னுதான் .. ..

நண்பர் 1 : அது ஓர் அழுகை சினிமா. படம் பார்க்கும் போது அழுதுவிட்டேன்!
நண்பர் 2 : எந்த இடத்தில்?
நண்பர் 1 : உட்கார்ந்து கொண்டு படம் பார்த்த அதே இடத்தில் தான்.

நண்பர் : கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது ,,,,, நீங்க என்னடான்னா கவலையா காட்சி தர்றீங்களே ?
அரசியல்வாதி : இந்த தடவையாவது எப்படியும் ஜெயிச்சிடணுங்கற கவலைதான்.

வேலு : நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!
முராரி : அதிசயமாயிருக்கே!
வேலு : காரணம். அவன்தான் அவ புருஷன்.


கடி ஜோக்ஸ் 16  (கடி சிரிப்புகள்)

ரானி : ஒஙக வீட்டு டி.வில ராத்திரி பத்துமணி நியூஸ் வரும்போது டி.வில படம் ஏன் சின்னதா தெரியுது
வேனி : அது செய்திச் சுருக்கம் தானே அதான் அப்படித் தெரியுது !

இண்டர்வியூவில் அதிகாரி : என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?
வேலு : நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க!

தொண்டர் 1 : என்ன .. .. உங்க தலைவர் சென்னைக்கு வந்தா பேசவே மாட்டேங்கிறாரு .. .. ?
தொண்டர் 2 : நான்தான் சொன்னேனே அவருக்கு டெல்லிலதான் வாய்ஸ் அதிகம்னு ..

ரமனன் : சார் ,,,, மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப்போன என் மனைவி இன்னும் வீடு வரலை ..
போலீஸ் : கவலைப்படாதீங்க ,,,, எல்லா ஜவுளிக் கடையிலயும் தேடிப் பார்க்கச் சொல்றேன்.

பாக்கி : அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான் தெரியுமா?
பாபு : தெரியலையே!
பாக்கி : வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.

டாக்டர் : எங்க 'ஆ' காட்டுங்க பாக்கலாம்..
கோபு : ஏன் டாக்டர் நீங்க 'ஆ' பார்ததே இல்லையா..?

ஒருவர் : என்னது பேப்பர்ரோஸ்ட் ஓரத்திலே வரிசையா ஓட்டை இருக்குது?
மற்றொருவர் : இது கம்ப்யூட்டர் பேப்பர் ரோஸ்ட்...

தொண்டர் 1 : இந்தத் தடவை தலைவர் தேர்தலுக்கு ஓட்டுக் கேட்க தொகுதிக்கு வர மாட்டாராம் .. ..
தொண்டர் 2 : வழக்கமா தேர்தலுக்கு அப்புறமதானே தொகுதிக்கு வரமாட்டாரு .. .. ஏன் இந்தத் தடவை மாத்திட்டாரு .. .. ?

கடி ஜோக்ஸ் 17  (கடி சிரிப்புகள்)

ஒருவர் : என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒண்ணுக்கு காசு தர்றீங்க?..யோவ்..
மற்றொருவர் : நாலு கால் ஒண்ணுதனேயா....

கோபு : ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சுகிட்டு தூங்குறான், ஏன்?ஏன்னா...
பாபு : அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்..

வேலு : எல்லா மொழிகளையும் பேசக்கூடியது எது?
ரமனன் : எதிரொலி.

பெண் : பையனுக்கு பொண்ணு பார்க்கச் சொன்னேனே ,,,,,,
தரகர் : நல்ல இடம், 50 சவரன் போடுறேங்கறா ,,,,,
பெண் : அப்ப முடிச்சிட வேண்டியது தானே
தரகர் : அதில் தானே சிக்கல் ,,, மாமியார் இல்லாத இடமா வேணுமாம்.

ரமனன் : என்னப்பா.. இது நேத்து சாப்பிட்ட காபி மாதிரியே இருக்கு..?
வேலு : இது XEROX காபி

மனைவி : வர வர நீங்க இளைச்சிக் கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க,,,,
கணவன் : நீ என்ன சொன்னே ?
மனைவி : ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்னு சொன்னேங்க.

ஒருவர் : பக்கத்து தியேட்டரிலே ஆட்டுக்கார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க?
மற்றொருவர் : நம்ம தியேட்டரிலே பாயும் புலி ஓடுதுல்லே.

நிருபர் : தீபாவளிக்கு ரிலீசாகுற உங்க படம் பிச்சுக்கிட்டுபோகும்ன்னு சொல்றீங்களே,,,,, படத்துக்கு என்ன பெயர்
தயாரிப்பாளர் : "ராக்கெட்டு"

கடி ஜோக்ஸ் 18  (கடி சிரிப்புகள்)

தொண்டர் 1 : மத்தியிலே ஆட்சியைக் கலைச்சுட்டு திரும்பின நேரம் தலைவருக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கு .. ..
தொண்டர் 2 : அப்படியா .. .. என்ன பேர் வெச்சிருக்கார் .. .. ?
தொண்டர் 1 : கலை-ச்செல்வன், கலை-யரசி .. ..

வேலு : வாஜ்பாயிக்கும், மூப்பனாருக்கும் என்ன வித்தியாசம்.?
ரமனன் : வாஜ்பாயி பாக்-(Pak)கோட பேசமாட்டார்..., மூப்பனார் பாக்கோடதான் பேசுவார்...

தொண்டர் : எங்கள் தலைவர் சரியாகக் கணக்குப் பார்க்காமல் எல்லா ஸீட்டுகளையும் தோழமைக் கட்சிகளுக்கே கொடுத்துவிட்டதால், கடைசியில் எங்களுக்கு ஸீட் இல்லாமல,; போய்விட்டது. எனவே, தோழமைக் கட்சிகள் தலா இரண்டு ஸீட்டுகளைத் திரும்ப எங்களிடம் ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .. ..

ரமனன் : ஒரு டாக்டர் கதை எழுதினா எப்படி அத்தியாயம் பிரிப்பார்?
வேலு : சாப்பாட்டுக்கு முன்பு - சாப்பாட்டுக்குப் பின்புன்னு!

நடிகை : யார் இந்த பொக்கேயை கொடுத்துட்டு போனது ?
செகரட்டரி : உங்க பரம ரசிகர்னு சொல்லிட்டு பொக்கைவாய்க் கிழவர் ஒருத்தர் கொடுத்துட்டுப் போனாருங்க.

நண்பர் 1 : பெப்சி குடிக்கும்போது அவர் ஏன் டென்டுல்கரை கையில் புடிச்சிருக்காரு..?
நண்பர் 2 : டென்டுல்கர் ஓப்பனராச்சே.. அதான்.

தலைவர் : சென்ற முறை வெற்றி பெற்ற பிறகு தொகுதியை வந்து பார்க்கவில்லை என கோபப்படுகிறீர்களே .. .. டெல்லியில் உட்கார்ந்துகொண்டு, இந்திய வரைபடத்தில் எத்தனை முறை நம் தொகுதியைப் பாரத்துக் கண்கலங்கியிருக்கேன் தெரியுமா .. .. ?

ரமனன் : "பேண்ட் வாத்தியக் காரங்க ஏன் நடந்துண்டே வாசிக்கறாங்க?"
வேலு : "பேண்ட் சத்தம் பொறுக்க முடியாமத்தான்."

கடி ஜோக்ஸ் 19  (கடி சிரிப்புகள்)

தலைவர் : கடந்த ஆட்சியிலே இலவசத் திருமணங்கள் மட்டும் செய்துவைத்தார்கள். ஆனால், எதிலும் புதுமை செய்யும் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச விவாகரத்துகளையும் நடத்திக்காட்டுவோம்

செய்தி - 500 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகள் கலப்பு 
மகன் : அப்பா .. .. .. கீழே ஒரு ஐந்நூறு ரூபா நோட்டு கெடக்கு .. ..
அப்பா : பேசாம வாடா .. .. கண்ட பேப்பரையெல்லாம் பொறுக்காதே .. .

வேலு : "பாகவதர் ஏன் பாடும்போது கண்ண மூடிக்கிறார்?"
பாக்கி : "எதிர்த்தாப்ல பாட்ட கேக்கறவங்களோட முகபாவம் பாக்க சகிச்சலயாம்."

வீட்டுக்காரர் : உன் கைப்பக்குவத்தை சாப்பிட்டு என் உடம்பு எடை கூடிடுச்சு பொன்னம்மா ,,, பாரேன்,,, தொந்தி கூட வந்தாச்சு ,,,,
வேலைக்காரி : இதையே எங்க வீட்ல என் பொண்ணு கையால சாப்பிட்ட உங்க மகனும் சொன்னாருங்க எஜமான்.

கனவர் : சம்பளம் கொடுத்தா ஐந்நூறு ரூபா நோட்டா வாங்கிக்கிட்டு வராதீங்கனு நீதானே சொன்னே .. ..சில்லறையாவே வாங்கிட்டு வந்திருக்கேன் .. ..

ரமனன் : அது என்ன கோல்டு சாம்பார்...?
வேலு : இதிலே 24 கேரட் போட்டிருக்கு அதான்

ஒருவர் : அந்தப் பாடகருக்கு குரல் கடவுள் கொடுத்த வரம்னு சொல்றாங்களே?
மற்றொருவர் : ஆமாம்! அவர் வாயைத் திறக்கறதோட சரி. அதிலேருந்து என்ன வரும்னு கடவுளுக்குத்தான் தெரியுங்கறதுனால இருக்கும்.

கஸ்டமர் : நீ கொடுத்த சிக்கன் சூப் வேடிக்கையா இருந்தது
வெயிட்டர் : அப்புறம் சிரிச்சீங்களா இல்லையா?
கஸ்டமர் : ?!?!?!

கடி ஜோக்ஸ் 20  (கடி சிரிப்புகள்)


ஒருவர் பிச்சைகாரரிடம் 
நண்பர் : ஏம்பா, ஐந்நூறு ரூபா நோட்டுக்கு சில்லறை இருக்குமா .. .. ?
பிச்சைக்காரன் : நாங்களும் பேப்பர், டி.வி. நியூஸ்யெல்லாம் பார்க்கறவங்கதான் சார் .. ..

மனைவி : என்னங்க இது,,,, நடு ராத்திரியில் இப்படி எழுந்து உட்கார்ந்திருக்கீங்க?
செக்யூரிட்டி அதிகாரி : நான்தான் ஏற்கனவே உன்கிட்ட தூங்கும் போதும் உனக்கு பாதுகாப்பா இருப்பேன்னு சொன்னதை மறந்துட்டியா விமலா ,,,

வேலு : உட்காரமுடியாத தரை எது..?
பாக்கி : புளியோதரை..

கஸ்டமர் : ஏம்ப்பா காபி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கற?
வெய்டர் : நீங்கதான சார் "கப் கிளீனா" இருக்கணும்னு சொன்னீங்க.

ரமனன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன் .. ..
வேலு : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும்

காதலன் : கலா நல்லவேளை,,, 6 மணிக்குள்ள வந்து என் வயித்துல பாலை வார்த்தே ,,,,
காதலி : இல்லாட்டி ?
காதலன் : 6 மணிக்கு மேல் மாலாவை வரச் சொல்லி இருந்தேன்,,,, ரெண்டு பேர்ட்டயும் மாட்டியிருப்பேனே ,,,,

ரமனன் : அவர் ரொம்ப குண்டு தான் ஆணா அதுக்காக அந்த ஹோட்டல்ல அவரை இப்படி அவமானப்படுத்தியிருக்கக் கூடாது
பாக்கி : அப்படி என்ன பண்ணீங்க
ரமனன் : மெனுவுக்கு பதிலா "கொடேஷன்" குடுத்தாங்களாம்

நண்பர் 1 : என்னங்க இது .. .. உங்க பையன் கடிகாரத்தை டேபிள் மேலே வெச்சுட்டு, புத்தகத்தைப் படிச்சுக்கிட்டே அதைச் சுத்திச் சுத்தி வரான் .. .. ?
நண்பர் 2 : அவன் ரவுண்ட் தி க்ளாக் படிச்சுக்கிட்டிருக்கான் .. ..

No comments:

Post a Comment