Friday 23 March 2012

ரிஷிபம் உங்கள் இலக்கினம் (12 இலக்கின பொதுப் பலன்கள்)




 நீங்கள் ரிஷப லக்னத்தில் பிறந்தவர். ரிஷபம், நிலம் சார்ந்த நிலையான, ராசியாகும். இதற்கு அதிபதி சுக்ரன் எனவே உங்களுக்கு நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு மற்றும் வாயும், அகலமான தோள்களும், கரிய கண்களும், தலைமுடியும் இருக்கும். உங்களுக்கு சுருட்டை முடி இருக்கலாம். நீங்கள் கோபக்காரராக இருப்பீர்கள். நீங்கள் தீய குணமுடையவர். வாழ்க்கையில், சுகபோகங்களை அடைவதற்கு நீங்கள் விருப்பம் கொண்டவர். நீங்கள் மதுபானத்தில் மிகுந்த விருப்பமுடையவர். உங்கள் எதிர்பாலைச் சேர்ந்தவர்களின் நட்பை நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்களாகவே ரசித்து, அனுபவித்து இன்பம் காணக்கூடியவர். மிகவும் மோசமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் நீங்கள் மிகவும் பொறுமையாக இருப்பவர். ஒளிவு மறைவின்றி, எதிலும் மனம்விட்டு வெளிப்படையாக இருக்கக்கூடியவர். நீங்கள் நேர்மையான சுபாவம் கொண்டவராதலால், மற்றவர்கள் உங்கள் கருத்துக்களை சார்ந்திருக்கிறார்கள். நீங்கள் ராஜ தந்திரம் படைத்தவர் உங்கள் மனதைப் புரிந்து கொள்வது, அவ்வளவு எளிதல்ல. நீங்கள் தோட்டங்கள், மனைகள் போன்ற எஸ்டேட் வசதிகளையும் அனுபவிப்பீர்கள். கலையில் ஆர்வம் கொண்ட நீங்கள், கலைசார்ந்த முயற்சிகளில் மிகப் பிரமாத வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு மென்மையான சருமம் இருக்கும். அழகையும் டாம்பீகமான சொகுசையும், மிகவும் விரும்பும் நீங்கள், உங்கள் இல்லத்தில் ஆசை கொண்டவர். உங்கள் குழந்தைகளிடம் மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்டவர். உங்கள் மனைவி/கணவர் - உயரிய அந்தஸ்தில் இருக்கக்கூடும். நீங்கள் பதட்டப்படாமல், மென்மையாக பேசக்கூடியவர் ஓரளவிற்கு, உங்கள் சுபாவத்தில், பெண்மை குடிகொண்டிருக்கும். இளகிய, கருணை நெஞ்சம் படைத்த நீங்கள், நல்ல மனிதர்களுடன் சம்பந்தப்பட்டவர். உங்களுக்கு நீண்ட பற்கள் இருக்கும். சமுதாயத்தில் நீங்கள் நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள். ஆழ்ந்த உள்ளத்து உணர்ச்சிகளைக் கொண்ட நீங்கள் அமைதியை விரும்புகிறவர். சமுக மற்றும் குடும்ப ரீதியிலான கடமைப் பொறுப்புக்களை, நீங்கள் எப்போதும் நிறைவேற்றி வைத்திட முயலுகிறீர்கள். காதல் விவகாரங்களில், நீங்கள் எப்போதுமே, விசுவாசத்துடன் இருக்க முயற்சி செய்கிறீர்கள். குடும்ப ரீதியில் நல்ல மகிழ்ச்சியை அனுபவிக்கும் நீங்கள், எப்போதுமே குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தில் மிக்க ஆர்வம் கொண்டவர். நல்ல உடுப்புக்களை விரும்பும் நீங்கள் வாழ்க்கையில், பல சுகபோகங்களையும் ரசித்து அனுபவிக்கக் கூடியவர். 36 வயதில், உங்களுக்கு சில தொல்லைகளும் பிரச்னைகளும் ஏற்படலாம் 

No comments:

Post a Comment