Sunday 18 March 2012

ஒளியில் கருவளர்நிலைக் காணல்,, குஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை,, குஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி,, அலகு நீக்கம் செய்தல்


ஒளியில் கருவளர்நிலைக் காணல்

அடைகாத்தலின் போது இரு முறை இவ்வாறு ஒளியில் வைத்தல் வேண்டும். முதல் முறை 7வது நாளிலும் இரண்டாவது முறை 18-19வது நாளிலும் ஒளி அளித்தல் அவசியம். இவ்வாறு 18 வது நாளில் ஒளியில் கருவளர்நிலைக் கண்டபின் குஞ்சு பொரிப்பகத்திற்கு மாற்றி விடலாம்.

குஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை


வெப்பநிலை1-18 நாட்கள்
19-21 நாட்கள்
37.5-37.8 டிகிரி செ
36.9-37.5 டிகிரி செ
ஈரப்பதம்60 சதவிகிதம் 18 நாட்கள் வரை70 சதவிகிதம் அதற்கு மேல்
திருப்பி வைத்தல்18 நாட்கள் வரை ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கொரு முறை-
காற்றோட்டம்1-18 நாட்கள்
19-21 நாட்கள்
8 மாற்றம் / மணிக்கு
12 மாற்றம் / மணிக்கு

குஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி

இதற்கென சேவல்கள் தனியே பராமரிக்கப்படவேண்டும். 100 பெட்டைக் குஞ்சுகளுக்கென 15 சேவல் குஞ்சுகள் வளர்க்கப்படவேண்டும். இந்த 15 குஞ்சுகளில் 10 வார வயதில் 12 சேவல் குஞ்சை மட்டும் தேர்ந்தெடுக்கவேண்டும். கலப்பிற்காக எடைக் குறைந்த இனமாக இருந்தால் 10-15 பெட்டைக் குஞ்சுகளுடன் ஒரு சேவலையும், எடை மிகுந்த  இனமாக இருந்தால் 6-8 பெட்டைகளுக்கு ஒரு சேவலையும் விடலாம். கலப்பிற்கு விட்ட 2 வாரங்களுக்குப் பிறகு முட்டையை சேகரிக்கத் தொடங்கலாம்.
முட்டைகளை ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை சேகரிக்க வேண்டும். சேகரித்த முட்டைகளை 1016 டிகரி செல்சியஸ் வெப்பநிலையில் 70-80 சதம் ஈரப்பதமுள்ள இடத்தில் வைக்கவும். முட்டைகளின் எடை, நிறம், தன்மை, வடிவம் ஆகியவற்றைச் சரிபார்த்துப் பிரித்து  வைக்கவும். சேமித்து வைக்கும் போதும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றும் போதும் கவனமாக அகண்ட பகுதியைத் தொட்டுக்  கையாளுதல் வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அடை காக்கவோ அல்லது முட்டை சந்தைக்கோ அனுப்பி விடலாம். 1 வார காலத்திற்கு மேல் சாதாரண சூழ்நிலையில் அடை காக்கும் காலம் 21 நாட்களாகும். குஞ்சு பொரிப்பதற்கான குறிப்பிட்ட, காற்றோட்டமும், மித வெப்பநிலையும் கொண்ட சூட்டில் நிலவவேண்டும்.

இறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை


வயது
நோய்தடுப்பூசி மருந்துசெலுத்தும் வழி
0-5 நாட்கள்வெக்கை நோய்லசோட்டா (அ) எப் தடுப்பு மருந்துகண் / மூக்கு
10-14 நாட்கள்குடல் அழற்சி நோய் (IBD)ஐபிடி (உயிர்)குடிதண்ணீர்
24-28 நாட்கள்குடல் அழற்சி நோய்ஐபிடி (உயிர்)குடிதண்ணீர்

உணவூட்டம்

2 வாரம் வரையிலும் 5 செ.மீ அளவும் 3 வது வாரத்திலிருந்து 10 செ.மீ அளவும் ஒரு குஞ்சுக்குக் கொடுக்கவேண்டும். குஞ்சு வளர வளர தீவன அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தீவனத்தொட்டியை பாதிக்கு மேல் நிரப்பக்கூடாது. குழாய் தீவன முறையாக இருப்பின் 100 குஞ்சுகளுக்கு 12 கிலோகிராம் தீவனத்தை 3 முறையாகப் பிரித்து அளிக்கவேண்டும்.

பண்ணை / கொட்டகை அமைப்பு

ஒரு குஞ்சுக்கு 930 செ.மீ 2 என்ற அளவில் நல்ல காற்றோட்டமான இடவசதி தேவை. பிற கொட்டகைப் பராமரிப்புகள் முட்டைக் கோழிகளைப் போலவே பின்பற்றப்படுகின்றன.

இறைச்சி / கறிக்கோழி

இறைச்சிக் கோழிகள் என்பவை இறைச்சித் தேவைக்காக (கறிக்காக) வளர்க்கப்படுபவை. 6லிருந்த 8 வாரங்கள் வயதுடைய இளம் ஆண் மற்றும் பெண் கோழிகள் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒளி

முட்டை உற்பத்திக்கென வளர்க்கப்படும் கோழிகளுக்கு இரவில் வெளிச்சம் தேவைப்படுவதில்லை.

கொண்டை நீக்கம்

கொண்டையானது தொங்கிக் கொண்டோ, பெரியதாகவோ இருக்கும் இனமாக இருந்தால் ஒரு நாள் வயதிற்குள் கொண்டை நீக்கம் செய்து விடவேண்டும்.

அலகு நீக்கம் செய்தல்

அலகை நீக்குவதால் தீவன விரயம் மற்றும் தன் இனத்தைத்  தானே உண்ணுதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம். மின்சார அலகு நீக்கி கொண்டு நீக்குவது நல்லது. மேல் அலகில் மூன்றில் ஒருபங்கும் கீடை அலகில் சிறிதளவு மட்டும் நீக்கவேண்டும். இது குஞ்சு பொரித்து, ஒரு வாரக் காலத்திற்குள் செய்து விடவேண்டும். மீண்டும் ஒரு முறை முட்டியிடுவதற்கு முட்டையிடும் கூண்டிற்குள் விடுமுன் 16 வார வயதில் அலகு நீக்கம் செய்யவேண்டும். கொல்லைப்புற முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு அலகு நீக்கம் செய்தல் கூடாது. நன்கு தெரிந்த பயிற்சி பெற்ற ஒருவர் மட்டுமே இதைச் செய்யவேண்டும்.
poultry_debeaking
அலகு நீக்கம்

நீர் மற்றும் தீவனம்

தீவனத் தொட்டிகள் அதிக எண்ணிக்கையிலும், தரையிலிருந்து சற்று உயரத்திலும் வைக்கவேண்டும். வளரும் குஞ்சுகளுக்கான தீவனத் தொட்டி 10 செ.மீ உயரத்தில் வைக்கவேண்டும். குழாய் முறையில் அளிப்பதாக இருந்தால் 25 கிலோ  எடையுள்ள 50 குஞ்சுகளுக்கு ஒரு குழாய் என்ற அளவில் வழங்கலாம். தண்ணீர் எந்த நேரமும் கிடைக்கும்படி இருக்கவேண்டும். 2.25 செ.மீ ஒரு குஞ்சுக்கு என்ற வீதத்தில் நீர் அளிக்கவேண்டும்.
poultry chicks feeding

வளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை


வயது (வாரங்களில்)
உணவுத் தேவை (கிராம் / கோழி / நாள்)
1053.0
1158.0
1260
1360
1460
1562
1662
1765
1870
1975
2075

No comments:

Post a Comment