ஹதயோகம்
பதஞ்சலி முனிவரின் யோக சாஸ்திரத்தில் யோகா நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம் மற்றும் ராஜயோகம். ஹதயோகம் ராஜயோகத்தின் ஓர் அங்கம் என்றும் தனியான பகிரங்க யோகமென்றும் கூறப்படுகிறது. இவற்றில் ஹதயோகத்தைபற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
ஹதயோகம்
இந்த யோகா பிரிவின் அடிப்படை உடற்பயிற்சிகளால் (ஆசனங்கள்) மனதையும், உடலையும் நல்ல ஆரோக்கிய நிலையில் வைப்பது. ஹதயோகத்தின் முடிவில் ராஜயோகம் அடிப்படைகள் ஆரம்பிக்கின்றன. ராஜயோகம் மிக முன்னேறிய யோக நிலை. ஹதயோகம் ராஜயோக சித்தியை அடைய உதவும் முதல் படி.
ஹதயோகம் வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. உடலும் மனதும் செயலாற்ற வழிமுறைகளையும் போதிக்கிறது.
ஹதயோகத்தின் மூன்று முக்கிய முறைகள்
1. சுவாசகட்டுப்பாடு
2. மனக்கட்டுப்பாடு
3. யோகாசனங்கள்
ஹதயோகத்தின் குறிக்கோள்
ஹதயோகம் உடலை கட்டுப்பாடுக்குள் கொண்டு வரும் யோகா. அதன் லட்சியம் பலமான நோய் நொடியில்லாத உடலை உண்டாக்குவது. தேவையற்ற எண்ணங்கள் மனதில் அலைபாய்வதை தடுக்கும் யோகா, ஹதயோகத்தை ஆரம்பிப்பதற்கு முன், அஷ்டாங்கயோகத்தில் குறிப்பிட்ட யோகாசனங்களை கடைபிடிக்க வேண்டும். இவை யமம் (கட்டுப்பாடு), நியமம் (தூய்மை) ஆசனம், பிரணாயாமம் பிரத்யாஹாரம் (மனத்தை ஒரு நிலைபடுத்துதல்), தாரணை (சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtவீஷீஸீ), தியானம் மற்றும் சமாதி
இந்த 8 அம்சங்களிலும், உள் பகுதிகள் ஒவ்வொரு பிரிவாக உள்ளன. இவை அனைத்தும் நன்னெறி முறைகளை உபதேசிப்பவை. இதனால் தான் ஹதயோகம், பிரத்யேக சிறப்புகளை உடையதாக புகழப்படுகிறது. அஹிம்சை, வாய்மை என்ற பல வித உயர்ந்த கோட்பாடுகளை வலியுறுத்துவதால், ஹதயோகம் ஒரு முழுமையான பயிற்சி முறை. இதை கடைப்பிடிப்பவர்கள் பாக்கியசாலிகள்.
1. ஹதயோகத்தை ஆரம்பிக்கும் முன்
முதலில் ஒரு யோகாசன குரு தேவை. ஆசனங்களின் அடிப்படை
தத்துவங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் வீடியோ மூலமாக அல்லது இன்டர்நெட் மூலமாக அறிந்து கொண்டு ஆசனங்கள் செய்யப்படுகின்றன. ஒரு தடவையாவது குருவிடமிருந்து கற்றுக்கொள்வது நல்லது.
குளித்து விட்டுச் செய்யலாமா? குளிப்பதற்கு முன்பு செய்யலாமா? என்ற சந்தேகம் எழுகின்றது. யோகா குளித்து விட்டும் செய்யலாம் குளிப்பதற்கு முன்பும் செய்யலாம் அது அவரவர்கள் வசதியைப் பொறுத்தது. யோகா செய்யும் பொழுது உடலின் உஷ்ண நிலை சீராக அதிகரிக்கின்றது. அதே சமயம் குளிக்கும் பொழுது உடலின் உஷ்ண நிலை குறைகின்றது. எனவே குளிப்பதற்கும் யோகா செய்வதற்கும் இடையே போதுமான இடைவெளி இருத்தல் அவசியம். எனவே குளிப்பதற்கு முன்னர் யோகா செய்தால் அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். குளித்த பின் யோகா செய்வதாக இருந்தால் அரைமணி நேரம் கழித்து யோகா செய்ய வேண்டும். அப்பொழுது தான் உடலின் உஷ்ண நிலை சீராக இருக்கும்.
2. நேரமும் இடமும்
காலை வேளை ஆசனங்கள் செய்ய ஏற்ற சமயமாகும். வானிலை நன்றாக
குளிர்ச்சியாக இருக்கும். தூங்கி எழுந்தவுடன் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சூரியன் உதிக்கும் முன் ஆசனங்களை ஆரம்பிப்பது நல்லது. காலை வேளைகளில் ஆசனங்களை செய்யமுடியாவிட்டால், சாயங்காலமுமு செய்யலாம். செய்யும் இடம் சுத்தமாக காற்றோட்டமான இடையூறு ஏற்படாத இடமாக இருக்க வேண்டும். வெறுந்தரையில் செய்ய வேண்டாம். ஒரு விரிப்பை தரையில் விரித்து அதன் மேல் ஆசனங்களை செய்யவும்.
3. வயிறு காலியாக இருக்க வேண்டும். உணவு உண்ட பின் 3 – 4 மணி நேரம் விட வேண்டும். எனவே காலை நேரம் செய்தால் நல்லது. மலஜலம் கழித்த பின் ஆரம்பிக்கவும்.
4. யோகாசனங்களுக்கு 15 நிமிடம் முன்னாலும், பின்னாலும் தண்ணீர் குடிக்கவும்.
5. உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். முடிந்தால் குளித்து விட்டு தொடங்கவும். தொளதொளவென்று இருக்கும் ஆடைகளை அணியவும்.
6. உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் பெண்கள் மாதவிடாய் காலங்களிலிருந்தாலும் ஆசனங்கள் செய்ய வேண்டாம். வெறும் தலைவலி இருந்தால் கூட ஆசனங்கள் செய்ய வேண்டாம்.
ஆசனங்கள் செய்யும் போது
1. எளிய பயிற்சிகளுடன் தொடங்கவும். உடலின் இறுக்கம் குறைய கீணீக்ஷீனீ ஹிஜீ எனப்படும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.
2. உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, ஹெர்னியா, ஸியாடிகா இருந்தால் நல்ல யோக நிபுணர் / வைத்தியர் அறிவுரைகளின் பேரில் ஆசனங்களை செய்ய முற்படுங்கள்.
3. உடலை வருத்திக் கொண்டு பிடிவாதமாக ஆசனங்களை செய்யாதீர்கள். உங்கள் வயது, உங்கள் உடலின் சக்திக்கேற்ப செய்யுங்கள்.
4. யோகாசனங்களை செய்யும் போது, எப்போது மூச்சை அடக்குவது, எப்போது மூச்சை விடுவது என்பது மிக மிக முக்கியம். இதை தெரிந்து கொள்வது மிக அவசியம்.
5. எவ்வளவு நேரம் ஆசனங்கள் செய்ய வேண்டுமென்பது அவரவர் தேவைகளை பொருத்தது. சராசரியாக 1 மணி நேரம் செய்வது போதுமானது. ஒவ்வொருவருக்கும் வரும் சந்தேகம் இது. எந்த ஆசனத்தை எவ்வளவு நிமிடம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்- என்பன. யோகாவின் போது அவ்வாறு எந்தக் கணக்கும் இல்லை ஒவ்வொரு நிலையிலும் சில நிமிடங்கள் இருக்க வேண்டும் என்ற கணக்கு எதுவும் கிடையாது.
6. சாதாரணமாக சூரிய நமஸ்காரத்தில் ஆரம்பித்து. யோகசனங்களும், பிராணாயாமமும் தொடரும். சவாஸனத்தில் முடிவடையும்.
7. ஆசனங்கள் முடிந்த பின் தியானம் செய்யவும்.
ஹதயோகியின் லட்சணங்கள்
பருமனில்லாத மெலிந்த உருவம், சிரித்த முகம், கம்பீரமான குரல், தீட்சண்யமான ஒளிரும் கண்கள், வியாதியில்லா உடல், பாலுணர்வு கட்டுப்பாடு உள்ள குணம் நல்ல பசியுள்ள தேகம், சீரான நாடிகள் – இவை ஹதயோகியின் சிறப்புகள் இதை அடைய ஹதயோகத்தை ஆரம்பியுங்கள்.

No comments:
Post a Comment