Thursday 5 April 2012

ஆன்மீக சிந்தனை-


"உண்ணும் உணவு"


உண்ணும் உணவினைப் பொறுத்து மனிதனின் குணம் அமைகிறது. கடவுளுக்குப் படைத்த உணவு உடலையும், உள்ளத்தையும் தூரிமைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால் எந்த உணவாயினும் கடவுளுக்கு அர்ப்பணித்த பின்னரே உண்ணுங்கள். – அன்னை சாரதா தேவியார்

ஆன்மீக சிந்தனை-
* எதிலும் எப்போதும் கவனமாக இருங்கள்.
* உங்களுக்குள் ஒளியைத் தேடுங்கள்.
* ஒளி உங்கள் உள்ளிருந்து சுடர் விடுமாறு வாழுங்கள்.
* உங்களுக்கு நல்லது என்று தோன்றுபவைக்காக பாடுபடுங்கள்.
* நான் உங்களுக்கு பாதையைக் காட்ட மட்டுமே முடியும். ஆனால் நீங்கள்தான் அந்தப் பாதையில் எங்ஙனம் எவ்வளவு தூரம் பயணம் செல்லமுடியுமென முடிவு செய்யவேண்டும். உங்களுக்குள்ளே உறையும் ஒளியின் மூலம் நீங்களே வழி நடத்திக் கொள்ளுங்கள். 
ஆன்மீக சிந்தனை-
எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாக வழிபடுங்கள். சாதாரண நீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்று அவசியமில்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.
திருமுருக கிருபானந்த வாரியார்

ஆன்மீக சிந்தனை
நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பல மடங்கு பெருகி நம்மையே வந்தடையும். – சுவாமி சிவானந்தர், தெய்வீகநெறி வாழ்க்கைச் சங்கம், ரிஷிகேஷ்
ஆன்மீக சிந்தனை-
அன்பு விரிவடைவதற்கு ஏற்ப உயிர் வாழ்க்கைக்கு வலிவு அதிகம் உண்டாகின்றது. பிற உயிர்களிடத்து அன்பு பாராட்டுவதற்கு ஏற்ப ஆனந்தம் தன்னிடம் ஒங்குவதை ஆத்மா சாதகன் அனுபவத்தில் காண்கின்றான். ‘அன்பும் சிவமும் ஒன்று’ என்பது ஆப்த வாக்கியம். ‘ஆனந்தமும் பரமும் ஒன்று’ என்பதும் ஆப்த வாக்கியம். ஆதலால் அன்பை வளர்க்கின்றவர்கள் எல்லோரும் பரம்பொருளைச்சாரும் பாங்குடையவர் ஆகின்றனர். – ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
ஆன்மீக சிந்தனை

அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. – ‘திருமந்திரம்’
ஆன்மீக சிந்தனை-
இன்றைய ஆன்மீக சிந்தனை
——————————————————
விழிப்புணர்வு இல்லாமல் நீங்கள் தூவும் பல விதைகள்தான் விஷச் செடிகளாக உங்களைச்சுற்றி வளர்ந்து விடுகின்றன. அவற்றைக் கொண்டு வந்து கடவுள் உங்கள் தோட்டத்தில் நட்டு விட்டதாக நினைப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. முழுக் கவனத்துடன் உங்கள் வாழ்க்கைப்பாதையை நீங்களே விரும்பி அமைக்கும் திறமை இருந்தும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது உங்கள் தவறாகும். உங்கள் உடலின் மீது ஆளுமை கொண்டவராக நீங்கள் இருப்பீர்களானால் வாழ்க்கையின் இருபது சதவிகித விதி உங்கள் கைக்கு வந்துவிடும். மனதை ஆளப் பழகிக் கொண்டால், அறுபது சதவிகித விதியை நிர்ணயிக்க முடியும். உயிர்ச்சக்தியை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால், விதியை இயக்குபவரே நீங்கள்தான். – சத்குரு ஜக்கி வாசுதேவ்
நன்றி : தினமலர், (ஆன்மிகம் அறிவோமா), மதுரை, ஜூன் 23, 2008.

No comments:

Post a Comment