Saturday 21 April 2012

வயர்லெஸ்சில் முள்ளிவாய்க்கால் பிரச்சாரம்: புது யுகம் !


 
அநேகமாக எல்லாத் தமிழ் வீடுகளிலும் கணணியும் அதனுடன் கூடைய இன்டர்நெட் வசதியும் உள்ளது. உங்கள் இன்டர்நெட் வழங்குனர் நிச்சயமாக உங்களுக்கு ஒரு வயர்லெஸ் ரூட்டரை தந்திருப்பார்கள். அதற்கு SSID என்று தனிக் குறியீடு இருக்கும். உங்கள் வீதியில் வசிக்கும் பல வேற்றின மக்கள் , தமது மடிக் கணணியை(Laptop) உபயோகிக்கும் போது, உங்கள் ரூட்டரின் பெயரையும் பார்ப்பார்கள். அதில் நீங்கள் எதை எழுதினாலும் அவர்களுக்கும் அது காட்டும். எனவே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பான வாசகங்களை எழுதும்படியும் அதனை எவ்வாறு செய்வது என்பது குறித்து நாம் இங்கே பிரசுரித்துள்ளோம் !

எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,


முள்ளிவாய்க்கால் பேரவலம் நடபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது, ஆனால் இன்னமும் எம் உறவுகள் நிம்மதியாக வாழமுடியவில்லை உண்மையைச் சொன்னால், எமக்கென்று ஒரு தேசம் பிறக்கும் வரை ஈழத்தமிழனால் நிம்மதியாக வாழ முடியாது. வயது வேறுபாடின்றி எம் தமிழனை சகட்டுமேனிக்கு படுகொலை செய்து எம்மவர் இரத்தம் குடித்த சிங்கள தேசத்தை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கவும், அத்தேசத்திற்கான சர்வதேச பொருளாதார, நிதி மற்றும் பிற ஆலோசனை போன்ற உதவிகளை தடுக்கவும், புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாம், எம்மாலான அனைத்து வழிகளிலும் போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

இதில் ஒன்று தான் மிகவும் சுலபமான பிரச்சாரம்:


பொதுவாக நம்மில் பலர் இணைய வசதியை பெற்றுள்ளோம், அதிலும் ''வயர்லெஸ் றூட்டர்''(Wireless router) இணைப்பு தான் தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது, அப்படி இணைய வசதி உங்களிடம் இருந்தால், உங்களது வயர்லெஸ் நெற்வேர்க் நேம் [Wireless network Name (SSID)] என்பதற்கு நேராக இலங்கையின் போர்குற்ற நாள்18052011 என எழுதி அப்டேட்(Update) செய்யவும், இப்படி நாம் செய்தால் எம் சுற்றுச் சூழலில் உள்ளவர்கள் தங்களது வயர்லெஸ்(Wireless) இணைப்பினை ஏற்படுத்த முனையும் பொழுது உங்களது நெட்வேர்க்(Network Name) பெயரும் அவர்களது கணினியில் தோன்றும், அப்போது அவர்களுக்கும் இலங்கையை பற்றிய செய்தி தானாகவே சென்றடையும் இப்படி அடிக்கடி வேறு வசனங்களை எழுதி உங்களது நெட்வேர்க் பெயரை ( Network Name)மாற்றினால் எம் சுற்றாடலில் உள்ள வேற்றின மக்களுக்கு 'இலங்கையில் இனப்பிரச்சினை' உண்டு என்பது தெரியப்படுத்தப்படும்.


இந்த மாற்றங்களை எப்படி செய்வது:


பிரிதானியாவில் TALK TALK இணைய வசதி உள்ளவர்கள் பின்வருமாறு செய்யலாம்,
உங்கள் அட்ரெஸ் பாரில்(Address bar) 192.168.1.1 என டைப்(Type) செய்து உள்நுழையவும்(Enter) அடுத்து வரும் பெட்டிகளுக்குள் அட்மின்(Username& password - admin) என டைப் (Type) செய்து உள்நுழையவும் பின்பு இடது பக்கதில் மூன்று தெரிவுகள் கொடுக்கப்பட்டிரும்(Options) அதில் மேலேயுள்ள குயிக் ஸ்ரார்ட்(Quick start) என்பதை அழுத்தவும், அதன் பிறகு வரும் பெட்டிக்குள் உள்ள வயர்லெஸ் நெர்வேர்க் நேம் ([Wireless network Name (SSID)]) என்பதற்கு எதிராக நீங்கள் விரும்பியதை எழுதி, அதற்கு மேலே எனேபிள் வயர்லெஸ்(Enable Wireless) என்பதை அழுத்தி சரி அடையாளமிட்டு பின்னர் வலது பக்க கீழ் மூலையில் உள்ள Connect என்பதை அழுத்தி பின்னர் OK என்பதை அழுத்தவும், இப்போது உங்கள் வயர்லெஸ்(Wireless) இணைப்பு பூரணமாகிவிடும்.


இதை போல வேறு இணைய சேவையை பயன்படுத்துபவர்கள் உங்களது இணைய சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்று உங்களது வயர்லெஸ்(Wireless) பெயரை மாற்றி கொள்ளலாம்.

நன்றி அதிர்வு

No comments:

Post a Comment