Thursday 5 April 2012

பொன்மொழிகள்


திகதி 1

மனவெளி யாவும் அவனொளி நிறைந்தால்
உயிரொளி வீச‌ உலகில் வாழலாம்.

திகதி 2

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி
போல் இனிதாவதெங்கும் காணோம்.

திகதி 3

யார் பார்க்கா விட்டாலும் கட‌வுள்
நம்மை பார்க்கிறார்.

திகதி 4

உயர்ந்த விச‌யங்கள் எல்லோரையும்
நிமிர்ந்து பார்க்க செய்யும்.

திகதி 5

கெளரீச‌ன் கெளரீயை அடித்ததில்லை
இவன் அவளை அடிக்கலாமா?

திகதி 6

சீட்டால் பிழைத்துக் கொண்டால் வட்டி குட்டி போடும்:
சீட்டே பிழைத்தால் முதலும் குட்டி போடும்.

திகதி 7

அற்ப சலுகைகளுக்காக மதம் மாறுபவன்
சொற்ப சலுகைகளுக்காக மனைவியை மாற்ற மாட்டானா?

திகதி 8

மனசாட்சிக்கு மேலானதொரு சாட்சியில்லை
அதை மதிக்கா விட்டால் உனக்கு ஆட்சியில்லை.

திகதி 9

அர்த்தமற்ற‌ கண்ட‌றியாத புதுப் பெயர்களை விட‌
அழகு தமிழ் பழைய பெயர்களே மேல்.

திகதி 10

சுதந்திர‌ம் தருபவர் முன் அட‌ங்கி இரு:
அட‌க்குபவர் முன் சுதந்திர‌மாய் இரு.

திகதி 11

சின்னத் திரைக்குள் தொலைக்கும் மாந்தரே!
சிந்தித்து எழா விட்டால் சிதையும் குடும்பம்.

திகதி 12

புகையிலையைப் பற்ற வைத்தால் அது நெஞ்சின் மேல் புற்று
வைத்துப் பின்னர் உயிருக்கு முற்று வைக்கும்.

திகதி 13

பெண் சுதந்திர‌ம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல,
கட்டுக்கள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு.

திகதி 14

வாழ்க்கை என்பது வாகனமல்ல, அடுத்தவன்
வண்டியில் பழகிய பிறகு சொந்த வண்டி வாங்குவதற்கு. 
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

No comments:

Post a Comment