எதற்கு மைக்ரோசாப்ட் மலிசியஸ் புரோகிராம்?
எதற்கு மைக்ரோசாப்ட் மலிசியஸ் புரோகிராம்?
மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயன் படுத்தி வரும் அனைவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஒவ்வொரு முறை மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் அப்டேட் பைல்களை வெளியிடும் போதெல் லாம் அத்துடன் சேர்த்து Microsoft Windows Malicious Software Removal Tool என்ற ஒரு புரோகிராமினையும் சேர்த்து வெளியிடும்.
இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்தால் நீங்கள் பதியும் அப்ளிகேஷன் புரோகிராம் களில் ஏதேனும் கெடுதல் விளைவிக்கும் வகையிலான புரோகிராம்கள் இணைந்து வருகிறதா என இது கண்காணித்து உங்களை எச்சரித்து அதனை நீக்கும்.
எடுத்துக் காட்டாக பிளாஸ்டர், சாசர் மற்றும் மைடூம் போன்ற கெடுதல் விளைவிக்கும் புரோகிராகளை இந்த புரோகிராம் அறிந்து நீக்குகிறது. பதியப்பட்ட புதிய புரோகிராமினை ஸ்கேன் செய்து அதில் இது போன்ற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் இருந்தால் நீக்கிவிட்டு உங்களுக்கும் தகவல் தரும்.
இந்த சாப்ட்வேர் ரிமூவல் டூல் புரோகிராமும் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்புகளில் வெளிவருகிறது.
ஒவ்வொரு முறை அப்டேட் பைல்களுடன் வரும் இந்த புரோகிராமின் பதிப்பு உங்கள் கம்ப்யூட்டரின் பின் புலத்தில் அமர்ந்து கொண்டு இயங்கி இந்த பாதுகாப்பு வேலையை மேற்கொள்கிறது.
அப்படியானால் நாமாக இந்த தொகுப்பை இறக்கிக் கொள்ள முடியுமா என்றால் தாராளமாக மைக்ரோசாப்ட் இணையதளம் சென்று இதனை இறக்கிப் பதிந்து பின் இயக்கலாம்.
எப்படி ஆண்டி வைரஸ் மற்றும் வைரஸ் ஸ்கேனர் போன்ற புரோகிராம்களை அவ்வப் போது அப்டேட் செய்து மேம்படுத்திக் கொள்கிறோமோ அதே போல இந்த Malicious Software Removal Tool புரோகிராமினையும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
வேர்டில் கோடுகள் உருவாக்கம்
வேர்டில் கோடுகள் உருவாக்கம்
வேர்ட் டாகுமெண்ட்கள் தயாரிக்கையில் கோடுகளை அமைப்பது நாம் அனைவரும் மேற்கொள்ளும் வழக்கமான செயலாகும். வெவ்வேறு பொருள் குறித்துச் சொல்லும் சொற்களை அல்லது பத்திகளை கோடுகளால் எல்லை கட்டிப் பிரித்துக் காட்டுகையில் அவற்றை தெளிவாக எடுத்துக் காட்ட முடிகிறது.
ஆனால் கோடுகள் அமைப்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. மெனு சென்று பார்மட் தேர்ந்தெடுத்து கோடுகளை அமைத்து பின் மீண்டும் டெக்ஸ்ட் திரும்பி அவற்றை அமைக்க வேண்டியுள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு முறை இந்த வழியைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு மெனுக்களை நாடாமல் வேகமாக கோடுகளை அமைப்பதற்கு ஆறு வழிகள் காட்டப்படுகின்றன.
1. மூன்று முறை ஹைபன் – – – அடையாளக் கோட்டினை அமைத்து என்டர் தட்டுங்கள்; நீளமான சாதாரண கோடு தானே உருவாகும்.
2. கீழான கோடு சுசுசுசு மூன்று முறை அமைத்து என்டர் தட்டினால் நீளமான திக் கோடு அமையும்.
3. மூன்று ஆஸ்டெரிக்ஸ் (*) அடையாளத்தை அமைத்து என்டர் கொடுக்க புள்ளிகள் அமைந்த அழகான கோடு கிடைக்கும்.
4. ஈக்குவல் (=) அடையாளத்தை மூன்று முறை அமைத்து என்டர் அழுத்த மெல்லிதான இரண்டு கோடுகள் இணையாகச் செல்வதைப் பார்க்கலாம்.
5. மேலாகவும் கீழாகவும் மெல்லிய கோடுகளையும் இடையே திக்கான கோடும் அமைந்ததாக பார்டர் லைன் வேண்டும் என்றால் ஹேஷ் என்னும் அடையாளக் குறியீட்டை (#) மூன்று முறை டைப் செய்து என்டர் கொடுக்க வேண்டும்.
6. அலை அலையாய் நீளமான கோடு வேண்டுமா? டில்டே என்னும் அடையாளக் குறியீடு தெரியும் அல்லவா! கீ போர்டில் மேல் வரிசையில் முதல் கீ ஒன்று இருக்கும். இதனை ஷிப்ட் கொண்டு அழுத்த டில்டே (நு) கிடைக்கும். இதனை மூன்று முறை அமைத்து என்டர் தட்ட அலை அலையாய்கோடு கிடைக்கும்.
டிவைஸ் மேனேஜர் ஒரு சிறிய விளக்கம்
டிவைஸ் மேனேஜர் ஒரு சிறிய விளக்கம்
கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்கள் குறித்தும் தகவல்களைக் கொண்டுள்ள இடம் தான் டிவைஸ் மேனேஜர். மவுஸ், கீ போர்டு, மோடம், மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து ஹார்ட்வேர்களும் எப்படி ஒவ்வொன்றுடனும் இணைக்கப்படுகின்றன என்று இதில் தெரியவரும். அத்துடன் ஒவ்வொரு ஹார்ட்வேர் சாதனமும் எப்படி இயங்க வேண்டும் என்பதனையும் இதன் மூலம் சென்று கான்பிகர் செய்திடலாம். இதன் மூலம் டிரைவர்களை அப்டேட் செய்திடலாம்; ஹார்ட்வேர் செட்டிங்குகளை மாற்றிடலாம்; ;பிரச்னைகளை எளிதாக தீர்த்துவிடலாம். ஏதாவது ஒரு ஹார்ட்வேர் சாதனத்தில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் டிவைஸ் மேனேஜர் சென்று அந்த குறிப்பிட்ட சாதனம் எப்படி கான்பிகர் செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்து பிரச்னைகளைத் தீர்க்கலாம். தற்காலிகமாக அவற்றை நீக்கி மீண்டும் இன்ஸ்டால் செய்திடலாம். ஆனால் இவை எல்லாம் நன்றாகத் தெரிந்த பின்னரே இவற்றில் கை வைக்க வேண்டும். என்ன என்று தெரிந்து கொள்வதில் தவறில்லை. டிவைஸ் மேனேஜரைக் காண My Computer ஐகானை ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள டேப்களில் Hardware என்ற டேபைக் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Device Manager என்ற பட்டனைக் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜரைப் பெறலாம். இங்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களும் இடம் பெற்றிருக்கும். ஏதாவது ஒரு சாதனத்தின் இயக்கநிலையை அறிய வேண்டும் என்றால் பட்டியலில் அதனைப் பார்த்து அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். அந்த சாதனத்துடன் தொடர்புடையவை தெரியவரும். அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் டேப்களில்Generalஎன்ற டேபைக் கிளிக் செய்தால் பாக்ஸ் கிடைக்கும். இங்கு அந்த சாதனம் சரியாகச் செயலாற்றுகிறதா என்ற தகவல் கிடைக் கும். உங்களைப் பொறுத்தவரை அதில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் Troubleshoot பட்டனை அழுத்தி பிரச்னையைச் சரி செய்வதில் முனையலாம்.
விண்டோஸ் விஸ்டா Windows Vista
விண்டோஸ் விஸ்டா Windows Vista
நீங்கள் விண்டோஸ் விஸ்டா பயன் படுத்துகிறீர்களா! அப்படியானால் நீங்கள் அவசியம் இதனைப் படித்து செயல்பட வேண்டும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத் திற்கான சர்வீஸ் பேக் 2ஐ மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த சர்வீஸ் பேக்கில் முதல் சர்வீஸ் பேக் வெளியான பின் வந்துள்ள அனைத்து மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான பைல்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. கூடுதலாக விஸ்டாவுடனான அனுபவத்தினை மேம்படுத்தும் விஷயங்களும் தரப்பட்டுள்ளன.
புதிய அனுபவம் எது என மைக்ரோசாப்ட் கூறுவதனைப் பார்க்கலாமா!
1. இதன்புளுடூத் புரோடோகால் தொகுப்பு மேம்படுத்தப்பட்டு இப்போது புளுடூத் 2.1 பதிப்பிற்கான வகையில் மாற்றப் பட்டுள்ளது.
2. தனி புரோகிராம் எதுவும் இணைக்காமல் புளு ரே டிஸ்க்கினை இயக்கலாம். (ஆனால் புளு ரே பர்னருக்கு இணையான புரோகிராம் தேவைப் படும்)
3. விஸ்டா சைட் பாருக்கான மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது.
4. ஸ்லீப் மோடிலிருந்து வெளியே வந்தபின் நன்றாக இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட வை–பி வசதி தரப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக மைக்ரோசாப்ட் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்.பி.2 பேக்கில் ஏறத்தாழ 700 பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவது 10 சதவிகித அளவில் மேம்பாடு அடையும்.
விஸ்டா எஸ்.பி. 2 பைல் சற்று பெரியதாக உள்ளது.
உங்களிடம் டயல்அப் கனக்ஷன் இருக்கும் பட்சத்தில் இன்று இரவு இதனை டவுண்லோட் செய்திடுவது நல்லது. பைலின் அளவு 348.3 எம்பி ஆகும். இரவில் பேண்ட்வித் ட்ராபிக் அவ்வளவாக இருக்காது என்பதால் இந்த அறிவுரை.
நீங்கள் சர்வீஸ் பேக் 2 இறக்கிப் பதிய வேண்டுமென்றால் சர்வீஸ் பேக் 1 ஏற்கனவே பதிந்திருக்க வேண்டும். இந்த சர்வீஸ் பேக் இரண்டும் மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் கிடைக்கின்றன.
32 பிட் விஸ்டா சிஸ்டத்திற்கான சர்வீஸ் பேக் பெற தள முகவரி:http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyIDa4dd31d5f90744069012a5c3199ea2b3&DisplayLangen
64 பிட் விஸ்டா சிஸ்டத்திற்கான சர்வீஸ் பேக் பெற தள முகவரி:http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID656c9d4a55ec4972a0d7b1a6fedf51a7&DisplayLangen
64 பிட் விஸ்டா சிஸ்டத்திற்கான சர்வீஸ் பேக் பெற தள முகவரி:http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID656c9d4a55ec4972a0d7b1a6fedf51a7&DisplayLangen
உங்கள் மூளையின் அட்லஸ்
உங்கள் மூளையின் அட்லஸ்
மூளை, மூளையிலிருந்து மட்டுமே நம் சுகம், இன்பம், சிரிப்பு, திட்டம், சிரிப்பு, சோகம் என அனைத்தும் வெளியாகின்றன என ஹிப்போகிரேட்டஸ் என்னும் அறிஞர் கூறுவார்.
இத்தகைய அற்புதமான சக்தி கொண்ட மூளையைப்பற்றி நாம் அறிந்திருக்கிறோமா? இல்லையே. நாம் நம் கம்ப்யூட்டரின் சிபியுவில் உள்ளதைப் பற்றி அறிந்த அளவு கூட நம் மூளையைப் பற்றி அறிந்ததில்லை. ஏன்? பயமா? இல்லை. அதனை ஒரு பொருட்டாக நாம் கருதுவதே இல்லையா? அல்லது மூளை தான் நம் வாழ்க்கை யின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி காரணமாய் உள்ளது என்று தெரியாதா?
ஏதோ ஒன்று நாம் நம் மூளையின் வெவ்வேறு செயல்பாடுகள் குறித்து அறியாமல் இருக்கி றோம். இனிமேல் அறிய வேண்டும் என்றால் என்ன செய்யலாம்? இருக்கவே இருக்கிறது இன்டர்நெட். ஒரு சாதாரண மனிதனும் மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அறியும் வகையில் ஓர் இணைய தளம் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இதன் முகவரி http://www.brainexplorer.org இந்த தளத்தில் நாம் எதனை எல்லாம் அறிய விரும்புவோம் என்று தீர்க்கதரிசனமாக ஆய்வு செய்து கிடைத்த தகவல்களின் படி பல பிரிவுகளை அமைத்துள்ளனர்.
முதல் பிரிவு Brain Atlas இதில் மூளையின் கட்டமைப்பு நமக்குக் காட்டப்படுகிறது. முன் மூளை, பின் மூளை, நடுமூளை, தண்டுவடம் எனப் பல பிரிவுகள் இருப்பது இதில் தெரிய வருகிறது. ஒவ்வொரு பிரிவும் எந்த உடல் பகுதியுடன் சம்பந்தப்பட்டது, எந்த வேலையை ஆணையிடுகின்றன, எந்த செயல்பாட்டினைக் கட்டுப்படுத்துகின்றன என்று செயல்படுத்திக் காட்டப்படுகிறது. இந்தப் பிரிவு முழுவதும் நமக்கு மிகவும் ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் தரப்படுகின்றன.
அடுத்த பிரிவு Focus on Brain Disorders. இதில் நம் உணர்வு பூர்வமான நோய்களும் மூளை நோய்களும் விளக்கப்படுகின்றன. மூளையின் எந்த பகுதி எதனால் பாதிக்கப்படுகிறது என்பது சிறப்பாக விளக்கத்துடன் காட்டப்படுகிறது.
எதிலும் அளவுக்கதிகமாக ஆர்வம் கொண்டிருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள், மனக் குழப்பம், வலிப்பு, ஒற்றைத் தலைவலி, அடுக்கடுக்கான தலைவலி, பயத்தால் நிதானமிழத்தல், பார்க்கின்ஸன் வியாதி, தூக்க வியாதி, பக்க வாத நோய் எனப் பல வகையான மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கான காரணங்கள், அவற்றை முன்கூட்டியே தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என எக்கச்சக்க தகவல்கள் காணப்படுகின்றன.
இந்த பிரிவினை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். மூளை சம்பந்தப்பட்ட சொற்களையும் அதற்கான விளக்கங்களையும் Glossary பிரிவு தருகிறது.
அடுத்ததான பிரிவு மூளை கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலம் குறித்த தகவல்களைத் தருகிறது. பலவகையான நோய்களின் அடிப்படை குறித்து விளக்கம் தந்து அவை எதனால் ஏற்படுகின்றன என்றும் வழி காட்டுகிறது.
மூளை எப்படி எல்லாம் இருக்கிறது என்று பார்க்க விருப்பமா? Gallery என்ற இதன் பிரிவிற்குச் செல்லுங்கள். இங்கு மூளையின் படங்கள் பல்வேறு வகையான தோற்றங்களில் தரப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு இது மிகவும் உதவும் பிரிவாகும். இந்த தளத்தின் சிறப்பு இதன் ஸ்டைல் ஆகும். அனைவருக்கும் புரியும் வகையில் மிகவும் குழப்பமான விஷயங்களை வெளிக் கொண்டு வருவதை இந்த தளம் மிகச் சிறப்பாகச் செய்கிறது. அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய இணைய தளம் இது.
பைலை மவுஸ் தூக்கிக் கொண்டு வருமா!
பைலை மவுஸ் தூக்கிக் கொண்டு வருமா!
மவுஸ் – இன்று கம்ப் யூட்டரின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மவுஸ் மாறிவிட்டது. லேப் டாப்பிற்கான டச் பேட் மற்றும் கிராபிகல் பென் போல, மவுஸ் மாறிவிட்டது; செயல்படுகிறது. மவுஸ் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தை எண்ணிப் பாருங்கள். அய்யய்யோ என்கிறீர்களா! ஆம் நிச்சயம் அது வெகு கஷ்டமான காரியம். குறிப்பாக இன்டர்நெட் அல்லது வழக்கமான செயல் பாடு இல்லாமல் மிகவும் ஹெவியான கம்ப்யூட்டர் செயல்பாடாக இருப்பின் மவுஸ் இல்லாமல் இயங்குவது மிகவும் சிரமமான ஒன்றாக மாறிவிடும்.
மவுஸ் – இன்று கம்ப் யூட்டரின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மவுஸ் மாறிவிட்டது. லேப் டாப்பிற்கான டச் பேட் மற்றும் கிராபிகல் பென் போல, மவுஸ் மாறிவிட்டது; செயல்படுகிறது. மவுஸ் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தை எண்ணிப் பாருங்கள். அய்யய்யோ என்கிறீர்களா! ஆம் நிச்சயம் அது வெகு கஷ்டமான காரியம். குறிப்பாக இன்டர்நெட் அல்லது வழக்கமான செயல் பாடு இல்லாமல் மிகவும் ஹெவியான கம்ப்யூட்டர் செயல்பாடாக இருப்பின் மவுஸ் இல்லாமல் இயங்குவது மிகவும் சிரமமான ஒன்றாக மாறிவிடும்.
இதற்குக் காரணம் மவுஸ் நம் பெரும்பாலான கம்ப்யூட்டர் பணிகளை மிக மிக எளிதாக மாற்றுகிறது. எடுத்துக் காட்டாக டைரக்டரி ஒன்றில் உள்ள ஒரு பைலை மவுஸ் வருவதற்கு முன்னால் டாஸ் இயக்கத்தில் இன்னொரு டைரக்டரிக்கு மாற்ற வேண்டுமானால் டிரைவில் உள்ள கமாண்ட் ப்ராம்ப்ட் என்னும் கட்டளைப் புள்ளியில் சரியான வகையில் அதன் வழியினை அமைத்து என்டர் தட்ட வேண்டும்.
இதில் ஏதேனும் கூடுதலாக ஒரு கமா, அல்லது இடைவெளி இருந்தால் கட்டளை நிறைவேறாது. மவுஸ் என்றால் அப்படியே இரண்டு எக்ஸ் புளோரர் விண்டோவினைத் திறந்து பைலின் மீது மவுஸின் கர்சரை வைத்து அழுத்திப் பிடித்தவாறே இழுத்து வந்து போட்டுவிடலாம்.
இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை; கம்ப்யூட்டர் பயன் படுத்தும் நான் அனைவரும் செய்திடும் வேலைதான். இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? மேலே படியுங்கள்.
எப்படி வெவ்வேறு இடங்களுக்கு பைலை மவுஸ் மூலம் எடுத்துச் செல்கிறீர்கள். முதலில் பைலின் பெயர் மீது கிளிக் செய்கிறீர்கள்.
பின்னர் மவுஸின் இடது பட்டனை (இடது கைப் பழக்கம் இருந்தால் வலது பட்டன்) அழுத்தியவாறே இழுத்து எங்கு விட வேண்டுமோ அங்கு விட வேண்டும். இடையே எங்காவது விட்டுவிட்டால் என்னவாகும்? திருவிழாவில் தொலைந்த குழந்தை போல எந்த போல்டர் அல்லது டைரக்டரி என்று அறியமுடியாத இடத்தில் பைல் அமர்ந்து கொள்ளும்.
மவுஸைக் கட்டாயம் கவனமாக அழுத்தியவாறு தான் இந்த பைல் இட மாற்று வேலையைச் செய்திட வேண்டுமா? இதற்குப் பதிலாக விண்டோஸ் இயக்கத்திடம் எனக்குப் பதிலாக உன்னுடைய மவுஸை இந்த பைலைப் பிடித்து எடுத்துக் கொண்டு போகச் சொல்லு.
நான் அந்த நேரத்தில் ஒரு மடக்கு காப்பியைக் குடித்துக் கொள்கிறேன் என்று சொல்ல முடியுமா? முடியும். என்ன முடியுமா? எப்படி என்று ஆச்சரியப்பட வேண்டாம். மேலே படியுங்கள்.
விண்டோஸ் இயக்கத்தில் மவுஸ் பேனலில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. மவுஸால் பைலை சில நொடிகள் கிளிக் செய்திடலாம். பின் அப்படியே அந்த பைலை மவுஸ் பிடித்துக் கொள்ளும்.
நீங்கள் விரல்களை அல்லது கையை எடுத்துவிடலாம். அப்போது உங்கள் பைல் மவுஸுடன் தானாக லாக் ஆகிவிடும். இதன் பின் உங்கள் மவுஸை அதன் பட்டனைப் பிடித்து அழுத்தாமல், அதனை மட்டும் இழுத்து பைலை வேண்டிய இடத்தில் விட்டுவிடலாம். இது எப்படி என்று பார்த்து செட் செய்வோமா!
இந்த தொழில் நுட்பத்தை (!) மேற்கொள்ள முதலில் Start பட்டன் அழுத்தித் திறக்கவும். பின் Control PanelIz ஐத் திறக்கவும். கண்ட்ரோல் பேனலில் நீங்கள் Classic View வினைக் கொண்டிருப்பதனை உறுதி செய்து கொள்க.
Category வியூவில் இருந்தால் மாற்றிக் கொள்க. இந்த பட்டியலில் Mouse ஐகானத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Mouse Properties விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவின் மேலாக உள்ள டேப்களைக் காணவும். Buttons என்று ஒரு டேப் காணப்படும்.
இந்த விண்டோவின் கீழ்ப்பகுதியைப் பார்க்கவும். இங்கு தான் Click Lock Properties காணப்படும். இதில் “Turn On ClickLock ” என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
இப்போது கிளிக் லாக் செட்டிங்ஸ் பட்டன் தெரியும். இதில் கிளிக் செய்தால் ஒரு சிறிய விண்டோ எழுந்து வரும். இதுதான் கிளிக் லாக் செட்டிங்ஸ் விண்டோ. இதில் ஒரு பார் இருக்கும்.
2) இந்த பாரில் செட் செய்வதன் மூலம் (Short Long) மவுஸ் உங்கள் ஆப்ஜெக்டை எவ்வளவு நேரம் உங்களுக்காகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கலாம்.
நீண்ட நேரம் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் Long என்பதை செலக்ட் செய்திடலாம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பைல் அல்லது ஆப்ஜெக்ட்டைப் பிடித்துக் கொண்டிருக்கும் வேலையை நீங்கள் உங்கள் மவுஸ் மூலம் பிடித்துக் கொள்ளவில்லையே தவிர அதனை அதற்கென உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது.
இதனை சோதனை செய்திட Short அருகே ஒரு புள்ளியில் செலக்ட் செய்து பின் மவுஸால் விண்டோவின் மேல் பாரில் கிளிக் செய்து பின் மவுஸை மட்டும் நகர்த்துங்கள். விண்டோ நகர்வதனைப் பார்க்கலாம்.
மவுஸின்பட்டனை அழுத்தாமல் விண்டோ நகர்வது ஆச்சரியமாக இல்லை! Long தேர்ந்தெடுத்தால் அந்த நேரத்திற்கு முன்பாகவே ஆப்ஜெக்டை விட வேண்டும் என்றால் நீங்களாக மேனுவலாக பட்டனைக் கிளிக் செய்து மேற்கொள்ள வேண்டும். இந்த கிளிக் லாக் செட்டிங்ஸ் முடித்து அனைத்து ஓகே பட்டன்கள் மீதும் கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி மவுஸுக்கு பைல் தூக்கும் வேலையைக் கொடுங்கள்.
டிஸ்க் டிக்கர்
டிஸ்க் டிக்கர்
எத்தனை முறை பைல்களைக் கையாளும் விதம் குறித்தும் அவற்றை அழிக்கும் முன் எச்சரிக்கையாகச் செயல்படுங்கள் என்று எழுதினாலும் பல வாசகர்கள் தாங்கள் தெரியாமல் ஒரு சில பைல்களை அழித்துவிட்டோம்; எப்படியாவது அவற்றைப் பெற உதவிடுங்கள் என்று கடிதங்கள் எழுதுகின்றனர்.
இந்த மலரில் அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு உதவிடும் புரோகிராம்கள் குறித்து பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.
சில வாரங்களுக்கு முன் ரெகுவா என்று ஒரு அழித்த பைல்களை மீட்டுத் தரும் புரோகிராம் பற்றி எழுதி இருந்தோம். இதோ இன்னொரு பயனுள்ள புரோகிராம்:
டிஸ்க் டிக்கர் (Disk Digger) கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.
மீண்டும் பார்மட் செய்யப் பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். விண்டோஸ் இயக்கத்தில் இயங்குகிறது. இதனை உருவாக்கியவர் டிமிட்ரி ப்ரையண்ட் என்பவர். இது ஓர் அளவில் சிறிய எக்ஸிகியூட்டபிள் புரோகிராம்.
ஒரு ஸிப் பைலுக்குள்ளாகக் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதன் எக்ஸிகியூட்டபிள் பைலை இயக்கி எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அழிந்த பைல்களை மீட்டுத் தர இரு வழிகள் தரப்பட்டுள்ளன. ஆழமாக (“dig deep”) டிரைவ்களில் மூழ்கி அழிக்கப்பட்ட பைல்களைத் தேடுதல். இந்த வகையில் முழு டிரைவும் ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. விண்டோஸ் இயக்கத் தில் நாம் அதிகம் புழங்காத பைல் வகைகளை விட்டுவிடும்.
அதிக ஆழமாகத் தேடும் வகையில் இந்த புரோகிராம் அழித்த பைல் குறித்த தகவல்களைப் பெறும். ஆனால் பைலின் பெயரைப் பெற்றுத் தராது. எந்த எந்த அழிக்கப்பட்ட பைல்களை மீண்டும் பெற முடியும் என்று அதன் பெயர்கள் அல்லது தானாக அமைந்த பெயர்கள், உருவாக்கப்பட்ட தேதி, எடிட் செய்யப்பட்ட தேதி, பைலின் அட்ரிபியூட்ஸ் என்று சொல்லப் படுகிற பைலின் தன்மை, அதன் அளவு ஆகியவை பட்டியலிடப் படும்.
இந்த பட்டியலைப் பார்த்து இன்னும் அந்த பைலில் டேட்டா பத்திரமாக உள்ளதா என அறிந்து கொள்ளலாம். பின் அந்த பைல் அல்லது பைல்களைத் தேர்ந்தெடுத்து Restore selected file(s)” என்ற கட்டளை கொடுக்கலாம். அதன் பின் எந்த டைரக்டரியில் இந்த பைல்களை வைத்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து கட்டளை கொடுத்தால் பைல்கள் மீட்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.
இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற http://dmitrybrant.com/diskdigger என்ற முகவரிக்குச் செல்லவும்.
எக்ஸெல் – ஷிப்டிங் செல்ஸ்
எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் டேட்டாவினை அமைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கையில் சந்தோஷமாக அதனை முடிக்கும் வேளையில் மீண்டும் ஒரு சில தகவல்கள் வருகின்றன. அந்த டேட்டாக்களை ஏற்கனவே அமைக்கப்பட்ட செல்களின் ஊடாக அமைக்க வேண்டும். இந்த டேட்டாவிற்கு என புதிய வரிசைகளை இன்ஸெர்ட் செய்தால் மற்ற நேரான டேட்டா மாறிவிடும்.
அப்படியானால் நெட்டு வரிசையில் மட்டும் நமக்கு இரு செல்களை இணைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது?
இணைக்க வேண்டிய இடத்தின் கீழாக உள்ள செல்களில் உள்ள டேட்டாவினை மொத்தமாக செலக்ட் செய்து அப்படியே கீழே இழுக்கலாமா? இதுவும் பிரச்சினையில் முடியும். ஏனென்றால் பெரிய அளவில் டேட்டா இருந்தால் சிக்கல்தானே.
இதற்கான தீர்வினை எக்ஸெல் கொண்டுள்ளது. டேட்டாக்கள் அமைக்கப்பட்ட செல்களின் ஊடாக மேலும் டேட்டாவினை அமைக்க காலி செல்களைத் தருகிறது. செல்கள் மட்டுமே தருகிறது. முழு வரிசைகளை அல்ல. அருகில் உள்ள படத்தைப் பாருங்கள்.
நெட்டு வரிசையில் ஒருசெல் மட்டும் இடையே செருகப் பட்டுள்ளது. இதனால் மற்ற வரிசைகள் பாதிக்கப்படவில்லை. இது எதற்குப் பயன் படுகிறது என்று பார்க்கலாம். முதலில் உங்களுக்கு ஏற்கனவே டேட்டாக்களுடன் அமைந்த செல்களில் சில வற்றை மாற்ற வேண்டும் என்ற தேவை ஏற்பட வேண்டும்.
பின் சரியாக எத்தனை செல்கள் நகர்த்தப்பட வேண்டும் என்று கண்டறிந்து குறிக்க வேண்டும். இதன் பின் எத்தனை செல்கள் காலியாகத் தேவை என நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
எந்த செல்கள் காலியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் இன்ஸெர்ட் மெனு செல்லவும். அதில் செல்ஸ் என்பதைத் தேர்ந் தெடுக்கவும். அல்லது இதற்குப் பதிலாக கண்ட்ரோல்+ ஷிப்ட்++ (கூட்டல் அடையாளம்) அடுத்து இன்ஸெர்ட் விண்டோ கிடைக்கும். அதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும்.
செல்களை வலது புறம் அல்லது கீழாக நகர்த்த ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதற்கும் கீழே முழு நெட்டு வரிசை அல்லது முழு படுக்கை வரிசையையும் மாற்றிட ஆப்ஷன்ஸ் இருக்கும்.
எந்த மாதிரியான ஷிப்ட் தேவை என நீங்கள் திட்டமிடுகிறீர்களோ அதற்கான வரியைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். உடனே உங்களுக்குத் தேவையான காலி செல்கள் மற்ற டேட்டாக்களை மாற்றிடாமல் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இதற்கு மாற்று இணையாக செல்களை அழிப்பதற்கு டெலீட் விண்டோவுடன் இதே போன்று ஆப்ஷன்களுடன் விண்டோவும் தரப்படும். அதன் மூலம் செல்களை அழிக்கலாம்.
No comments:
Post a Comment