Thursday 19 April 2012

தற்கொலையால் ஏற்பட்ட இழப்பு


மிகவும் நேசித்த ஒருவரை தற்கொலையால் பறிகொடுத்ததிலிருந்து மீண்டும் வருவது எளிதல்ல. கீழே உள்ள சில தகவல்கள் இழப்பைச் சமாளித்து துயரத்தைக் கொடுப்பதற்கு உதவியாக இழப்பைச் சமாளித்து துயரத்தைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். உங்களுக்கும் பயன்படக்கூடிய பிற ஆதாரங்கள்: உதவியும், ஆதரவும் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ளன.

தயவுசெய்து கீழே உள்ள பிரிவுகளில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

பதில்வினைகள் மற்றும் உணர்வுகள்

தேவைகள்

உதவியும் ஆதரவும்

தற்கொலையால் ஏற்பட்ட இழப்பு

பதில்வினைகள் மற்றும் உணர்வுகள்

உதவிக்கான ஆதாரங்கள்

பீஃப்ரெண்ட் மையங்கள் நெருக்கடியில் பாதிக்கப்பட்ட எவருக்கும் உணர்வுபூர்வ ஆதரவை வழங்குகின்றன.

உங்களுக்கு நெருக்கமான ஒருவரை இழப்பது ஆழ்ந்த துக்கத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தற்கொலையால் ஒருவரை இழப்பது பெரும்பாலும் மாறுபட்ட பதில்வினைகளையும் உணர்வுகளையும் ஏற்படுத்துகிறது. தற்கொலையால் ஏற்பட்ட இழப்பின் பாதிப்பு நீடித்தது. அதிர்ச்சி, சமூகத்தில் தனிமைப்படுதல் மற்றும் குற்றவுணர்ச்சி பெரும்பாலும் அதிகமாகும். மேலும், இம்முடிவு வேதனையளிக்கும் கேள்விகளையும் எழுப்புகிறது.

கீழ்வருவனவற்றில் அனைத்தையும் அல்லது ஒரு சிலவற்றை நீங்கள் அனுபவிக்கக்கூடும்:

கடும் அதிர்ச்சி

இப்படிப்பட்ட மரணத்தினால் ஏற்படும் அதிர்ச்சியும் நம்பிக்கையின்மையும் கடுமையாக இருக்கக்கூடம். பார்க்கப்பட்டிருக்காவிட்டாலும் கூட, மரணத்தின் கோரக் காட்சிகள் திரும்ப திரும்பத் தோன்றுவது ஆழ்ந்த துக்கத்தின் பொதுவான அம்சமாகும். உடலைக் கண்டுபிடிப்பது அடுத்த மன அதிர்ச்சி தரக்கூடிய அழியாத நிகழ்வாக இருக்கக்கூடும். கோரமான வலமிகுந்த காட்சிகளும் அவை உருவாக்கும் உண்ர்வுகளும் மேன்மேலும் தோன்றுவது இயற்கையேயாகும்.

கேள்வி கேட்டல் - என்ன?

தற்கொலையால் ஏற்பட்ட இழப்பானது, பெரும்பாலும் துயரச் சம்பவத்திற்கான விளக்கத்தை தேடச் செய்கிறது. உண்மையாகவே ஏன் என்று தெரியவில்லை என்பதை பலர் இறுதியில் ஏற்றுக்கொள்கின்றனர். விளக்கத்திற்கான தேடலின்போது, ஏன் இந்த மரணம் நடந்தது என்பது பற்றி அதே குடும்பத்தின் உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். இது குறிப்பான காரணம் ஏதாவது இருக்கும்போது குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

கேள்வி கேட்டல் - இதைக் தடுத்திருக்க முடியுமா?

இந்த இறப்பை எப்படித் தடுத்திருக்கலாம் மற்றும் நேசிக்கப்பட்டவரை எப்படிக் காப்பாற்றியிருக்கலாம் என மேன்மேலும் நினைப்பது பொதுவானது. நடந்ததைப் பற்றி திரும்ப நினைக்கும்போது அனைத்தும் வலிமிகுந்ததாகவே இருக்கும் 'அதானால் தானோ - இப்படி இருந்திருந்தால்' போன்ற எண்ணங்கள் முடிவற்றவையாக நீளக்கூடம். என்ன நடந்ததோ அதைச் சமாளிக்க நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தால் இயற்கையான அல்லது தேவையான வழியாகும். தற்கொலையால் ஏற்பட்ட இழப்பினால் துயரப்படுவார்கள் மற்ற வகைகளில் துயரப்படுவதைக் காட்டிலும் தன்னைத்தானே கேள்வி கேட்பவர்களாகவும், தன்மீதே கோபப்படுபவர்களாகவும், இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கைவிடுதல்/விலக்குதல்

புறக்கணிக்கப்பட்டதாக நீங்கள் உணரக்கூடும். இறக்க முடிவு செய்தவரால் புறக்கணிக்கப்படாத உணர்வது பொதுவானது.
"அவன் எங்களோடு பேச வரவில்லை என்பதால் நான் விரக்கியடைந்தேன் ஒரு கட்டத்தில் நாங்கள் அனைவரும் கோபமடைந்தோம். நினைத்துப்பார்: "எங்களுக்கு எப்படி நீ இதைச் செய்யமுடியும்?'

தற்கொலை செய்து கொண்ட ஒரு நபரின் சகோதரி

தற்கொலை உணர்வு பயங்களும் உணர்வுகளும்

நம்பிக்கையிழத்தல் ஆழ்ந்த துக்கத்தின் இயற்கையான வெளிப்பாடேயாகும். ஆனால் நேசிக்கப்பட்ட ஒருவரின் தற்கொலை மரணத்திற்குப் பிறகு நம்பிக்கையின்மையானது ஒருவரின் சொந்தப் பாதுகாப்பு பற்றிய பயத்துடன் சேரவும் கூடும். தற்கொலை செய்து கொண்டவரோடு ஒருவர் தொடர்புபடுத்திப் பார்த்தால் அவரது பாதுகாப்பு உணர்வு குறித்து ஆழ்ந்த அச்சத்தைத் தோற்றுவிக்கக்கூடும். மற்ற வகையில் இழந்தவர்களைக் காட்டிலும் நீங்கள் அதிகத் துயரத்தாலும், மனக் கவலையாலும் பாதிக்கப்படக்கூடும், மேலும், தற்கொலை உணர்வால் அதிகம் பாதிக்கப்படவும் கூடும்.

ஊடக கவனம்

தற்கொலையாலோ அல்லது எதிர்பார்க்காத பிற காரணங்களினாலோ ஒருவர் மரணமடைந்தால் அது பொது மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடும். சட்டத்திற்குத் தேவைப்படும் துர்மரண விசாரணை மரணித்தவர் மீதும் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீது பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிறது. குறிப்பாக பொறுப்பற்ற அல்லது தவறான முறையில் மரணம் நிகழ்ந்தால் இழப்பால் துயரப்படும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஊடகத்தின் இந்த கவனக்குவிப்பு அதிகம் மன அழுத்தம் தரக்கூடியதாக இருக்கும்.

களங்கம் மற்றும் தனிமைப்படுதல்

தற்கொலை மீதான சமூகத்தின் மனப்பான்மை மாறிக் கொண்டிருக்கிறது, ஆனால், கிடைக்கக் கூடிய ஆதரவு குறைவாக இருக்கக்கூடும். மற்றவர்கள் காட்டும் அமைதியானது களங்கம், வெட்கம் மற்றும் "மாறுபட்டிருத்தல்" போன்ற உணர்வுகளை மேலும் தட்டியெழுப்பக்கூடும். தற்கொலையினால் மற்றவர்கள் சங்கடப்பட்டாலோ? அசெளகரியப்பட்டாலோ அல்லது நிச்சயமில்லாதிருந்தாலோ நீங்கள் மிகவும் தனித்துவிடப்பட்டதாக உணரக்கூடும். நேசிக்கப்பட்டவரின் வாழ்க்கை மற்றும் தனித்தன்மையை பற்றி அனைத்தையும் பேசுவதற்கான, நினைப்பதற்கான மற்றும் கொண்டாடுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படலாம். நேசிக்கப்பட்டவரைப் பற்றிய மற்றவர்களின் கணிப்புகளில் இருந்து அவரின் மதிப்பீட்டைக் காக்க வேண்டும் என்ற தீவிர உந்துதல் தோன்றக்கூடும்.
தனது மகளின் மரண் பற்றி ஒரு பெண்மணி குறிப்பிடும்போது தங்கள் குடும்பத்தில் தற்கொலைச் சம்பவம் நேரிட்ட ஒருவரிடம் என்ன சொல்வது என்று எங்களுக்கு ஒருபோதும் கூறப்படவில்லை என எழுதுகிறார். நெருங்கிய ஒருவரை இழந்த வேறு எவரிடமும் கூறப்படக்கூடிய அதே விஷயங்களை அவர் கேட்டிருக்க வேண்டும். "உங்களுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நான் செய்யக்கூடியது ஏதாவது இருக்கிறதா? அதைப்பற்றி நீங்கள் பேச விரும்பினால் கேட்க நான் தயாராயிருக்கிறேன். உங்கள் துயர் துடைக்க நான் தோள் கொடுப்பேன்."

© இராயல் உளவியல் நிபுணர்கள் கல்லூரி 1997.


காதே ஹில், கீத் ஹாவ்டன் அஸ்லாக் மால்ம்பெர்க் மற்றும் சூசிம்கின் ஆகியோரால் எழுதப்பட்ட இழப்புத்துயர் தகவல் பொதியிலிருந்து எடுக்கப்பட்டது.

இராயல் உளவியல் நிபுணர்கள் கல்லூரியினரின் அனுமதியுடன் மறு உருவாக்கம் செய்யப்பட்டது

^^ மேலே செல்க

தேவைகள்


கனடாவில் தற்கொலையால் ஏற்பட்ட இழப்பினால் வாடுபவர்களில் சிலரைக் கலந்தாலோசித்தபோது அவர்களுக்கு:
தற்கொலையைத் தெளிவான முறையில் அறிதல்
தற்கொலையின் காரணத்தால் குடும்பத்தில் உண்டான பிரச்சனைகளைக் கையாள
அவர்களைப் பற்றி நல்லவிதமாக உணர
தற்கொலை பற்றி பேச
தற்கொலை மற்றும் அதன் விளைவுகள் பற்றிய உண்மையான தகவல்கள் பெறுவதற்காக
அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு பாதுகாப்பான இடத்திற்காக
தற்கொலை பற்றிய மற்றவர்களின் பின்விளைவுகளைக் கையாளவும் புரிந்துகொள்ளவும்
நடைமுறை/சமூக அம்சங்களின் மீது அறிவுரைகளைப் பெற உதவியும் ஆதரவும் தேவைப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

© இராயல் உளவியல் நிபுணர்கள் கல்லூரி 1997

காதே ஹில், கீத் ஹாவ்டன் அஸ்லாக் மால்ம்பெர்க் மற்றும் சூசிம்கின் ஆகியோரால் எழுதப்பட்ட இழப்புத்துயர் தகவல் பொதியிலிருந்து எடுக்கப்பட்டது.

இராயல் உளவியல் நிபுணர்கள் கல்லூரியினரின் அனுமதியுடன் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

^^ மேலே செல்க

உதவியும் ஆதரவும்


உதவி பெறுவதற்கான நேரம் எது?

துயரம் மிகவும் வலிமிகுந்ததும் மனச்சோர்வடைய வைப்பதுமாகும் உதவி பெறுவதற்கான நேரம் எது, என்று முடிவெடுப்பது எப்போதும் சுலபமானதல்ல. நீங்கள்:
மரணம் நிகழ்ந்து சில மாதங்கள் கழித்தும், தொடர்ந்து வெறுமையாகவும், உணர்ச்சியற்றும் உணர்ந்தால்
உறங்க முடியவில்லை அல்லது கெட்ட கனவுகள் தோன்றினால்
தீவிர உணர்வுகள் மற்றும் சோர்வு, குழப்பம், மனக்கவலை அல்லது பயம், பதட்டம், ஆகியவற்றை சமாளிக்க முடியவில்லை என்று நீங்கள் கருதினால்
நேசிக்கப்பட்டவரின் மரணத்தைப் பற்றி அதிகமான எண்ணங்களாலும் உணர்வுகளாலும் பீடிக்கப்பட்டிருந்தால் எ.கா. கோபம், குற்றண் உணர்ச்சி, விலக்கல்
உங்கள் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உணர்ந்தால், ஆனால் அப்படி பகிர்ந்து கொள்ள யாருமில்லை என்றால்.
உணர்வுகளால் பாதிக்கப்படாமல் இருப்பதாக சீராக ஏதாவது செய்து கொண்டிருப்பது (எ.கா. எந்நேரமும் வேலை செய்து கொண்டே இருப்பது).
அதிக அளவிலான மதுவும், போதைப் பொருளும் உட்கொள்வதாக நீங்கள் நினைத்தால்
நீங்களும் தற்கொலை செய்து கொள்வது பற்றி நினைத்துக் கொண்டும் கவலைப்பட்டுக்கொண்டும் இருந்தால்.
உங்களைச் சுற்றியுள்ளவர்கள் எளிதில் இலக்காவார்கள் மற்றும் சமாளிக்க முடியாது என்று பயந்தால்.

நீங்கள் உதவியை நாட வேண்டும்.

ஆதரவிற்கான சில ஆதாரங்களும் அவை எந்த விகிதத்தில் உங்களுக்கு உதவி புரியக்கூடும் என்பதும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சுய உதவிக்குழுக்கள்

மற்றவர்களுடன் உங்களைச் சந்திக்க வைத்து உங்களது அனுபவங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளுதல் மூலம் உங்களுக்கு மறு நம்பிக்கை அளிக்கக்கூடும்.

உள்ளூர் மருத்துவர்கள்
கேட்கவும், பேசவும் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கவும் கூடும்.
உறக்கமின்மை, மனஅழுத்தம் மற்றும் மன வருத்தம் போன்றவற்றிலிருந்து நீங்கள் விடுபட உங்களுக்கு உதவ முடியும்
உங்களுக்கு உதவக்கூடிய மற்ற ஆதாரங்களைப் பற்றி தெரிவிக்கலாம்.

ஆதரவானது மருத்துவருக்கு மருத்துவர் வேறுபடக்கூடும். குறுகிய சந்திப்பில் என்ன நடந்தது என்பதைப் பற்றி விரிவாக எடுத்துக்கூற எப்போதும் நேரமிருக்காது. உங்கள் சந்திப்புக்கு முன் இதைப் பற்றி விரிவான கடிதம் ஒன்றை மருத்துவருக்கு நீங்கள் எழுதலாம்.

கவுன்ஸிலிங்
நிகழ்வுகளைப் பற்றிப் பேச அதிக காலமும் அல்லது நீண்ட கால ஆதரவும் அளிக்கிறது.
உங்கள் கடந்த கால சம்பவங்களை பற்றி யோசிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, நீங்கள் எதிர்கொள்ளும் உணர்வுப்பூர்வ நெருக்கடி மற்றும் வாழ்க்கை மாற்றங்களை சமாளிப்பதற்கு உதவிகளை வழங்குகிறது.
வேற்று நபர் ஒருவரிடம் பாதுகாப்பான சூழ்நிலையில் மனம் திறந்து பேசும் வாய்ப்பை அளிப்பதால் உங்களுக்கு ஆறுதலைத் தரக்கூடியதாக இருக்கும்.

மதம்
ஆழ்ந்த மத நம்பிக்கைகளை நீங்கள் கைக்கொண்டிருந்தால் அது பெரும் ஆதரவிற்கும் பலத்திற்குமான ஆதாரமாக இருக்கக்கூடும்.
உள்ளூர் மதத் தலைவர்கள் மிகப்பெரும் ஆதரவிற்கான அடிநாதமாக இருக்க்கூடும்

பீஃப்ரெண்டர்ஸ் மையங்கள்
துக்கத்திலும், மனஅழுத்தத்திலும் இருப்பவர்களுக்கு அல்லது தற்கொலை எண்ணத்தால் உந்தப்பட்டிருப்பவர்களுக்கும் இரகசியமான ஆதரவையும் உதவியையும் வழங்குகிறது. உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஹெல்ப்லைனைக் கண்டறிய கொடுக்கவும்.

இழப்புத்துயர் துடைப்பு நிருபணத்துவ அமைப்புகள்

கீழ்வரும் தொடர்புகளில் சில இழப்புத் துயர் துடைக்கும் அமைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன:-
கொடுக்கவும்.

இழப்புத்துயர் துடைப்பு நிருபணத்துவ அமைப்புகள்

கீழ்வரும் தொடர்புகளில் சில இழப்புத் துயர் துடைக்கும் அமைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன:-
கொடுக்கவும்.

இழப்புத்துயர் துடைப்பு நிருபணத்துவ அமைப்புகள்

கீழ்வரும் தொடர்புகளில் சில இழப்புத் துயர் துடைக்கும் அமைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன:-

தற்கொலை தடுப்பிற்கான சர்வதேச சங்கம்
www.med.uio.no/iasp/english/cs.html

அமெரிக்க தற்கொலை தடுப்புச் சங்கம்
www.suicidology.org/displaycommon.cfm?an=6

கனடிய தற்கொலை தடுப்புச் சங்கம்
www.casp-acps.ca

UKஆதாரங்கள்

UK-வில் உள்ள இழப்புத் துயர் துடைப்பு அமைப்புகள், பயனுள்ள புத்தகங்கள் பற்றிய இராயல் உளவியல் நிபுணர்கள் கல்லூரியின் இழப்புத் துயர் துடைப்பு பொதியில் குறிப்பிட்டுள்ளது. முழுப்பொழுது pdf வடிவக்கோப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்யவும

© இராயல் உளவியல் நிபுணர்கள் கல்லூரி 1997


காதே ஹில், கீத் ஹாவ்டன் அஸ்லாக் மால்பெர்க் மற்றும் சூசிம்கின் ஆகியோரால் எழுதப்பட்ட இழப்புத்துயர் தகவல் பொதியிலிருந்து எடுக்கப்பட்டது.

இராயல் உளவியல் நிபுணர்கள் கல்லூரியினரின் அனுமதியுடன் மறு உருவாக்கம் செய்யப்பட்டது

No comments:

Post a Comment