Thursday 26 April 2012

விடுகதைகள்


பொய் சொன்ன பூ – (விடுகதைகள்)

1) கோட்டைக்குள் உள்ள வெள்ளைக்காரர்கள்,
வயதானால் வெளியேறுவார்கள் – அவர்கள் யார்?
-
2) வெள்ளை நிறத்தானாம், வாசலில் இருப்பானாம்,
பாவையரின் தோழனாம், பார்ப்போரை இழுப்பானாம் -
அவன் யார்?
-
3) தண்ணீரிலே கண்ணீருடன் தலை நீட்டிக் காத்திருக்கும்
கதிரவன் வரவு கண்டால் முகம் மலர்ந்துதான் இருக்கும் -
அது என்ன?
-
4) புதரின் நடுவே பொன் போலப் பூத்திருக்கும், பொய்
சொன்ன பூ என்று புராணக்கதை கூறும் – இது என்ன பூ?
-
5) பாளை போலப் பூ பூக்கும், பார்த்தவர்க்கு விருப்பூட்டும்,
தலையிலே சூடாதது, தரணிதனிலே என்ன பூ?
-
=============================================
==
விடைகள்:-
1) பற்கள்
-
2) மல்லிகைப்பூ
-
3) தாமரைப்பூ
-
4) தாழம்பூ
-
5) வாழைப்பூ

கடுகு மடிக்க இலை இல்லை…(விடுகதைகள்)

-
1)யானை படுக்க நிழல் உண்டு. கடுகு மடிக்க இலை இல்லை -
அது என்ன?
-
2) சிறகில்லாத பறவை தேசமெங்கும் திரியும் – அது என்ன?
-
3) அந்தரத்தில் தொங்குது சொம்பும், தண்ணீரும் – அவை என்ன?
-
4) சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது – அது என்ன?
-
5) உழைக்கும் மனிதனுக்கு உடம்பெல்லாம் முத்து – அது என்ன?
-
தொகுத்தவர்: ஏ.ஹம்சத் தௌஹா, கீழக்கரை
விடைகள்:
1)   சவுக்கு மரம்
2)   கடிதம்
3)   இளநீர்
4)   கண்
5)   வியர்வை
-

உச்சிக்கிளையில் சாட்டை தொங்குது- (விடுகதைகள்)


1) பையில் இது இருந்தால் வேறு எதுவும் இருக்காது – 
அது என்ன?
-
2) நூறு கிளிக்கு ஒரே வாய் – அது என்ன?
-
3) பயந்தால் விட மாட்டான். பழகினால் மறக்க மாட்டான் 
அது என்ன?
-
4) உச்சிக்கிளையில் சாட்டை தொங்குது – அது என்ன?
-
5) ஊசி மூக்கன், உள்ளங்கை கட்டையன் , ஊருக்கு
செல்லப்பிள்ளை – அது என்ன?
-
===============================

-
விடைகள்: 
1) கிழிசல்
2) வாழைப்பூ
3) நாய்
4) முருங்கை
5) வெற்றிலை

அண்ணன் தம்பி சேராவிட்டால் ஊருக்கெல்லாம் கொண்டாட்டம் – (விடுகதைகள்)

-
6) கொடுக்க முடியும், எடுக்க முடியாது – அது என்ன?
7) அண்ணன் தம்பி சேராவிட்டால் ஊருக்கெல்லாம்
கொண்டாட்டம் – அது என்ன?
-
8) சிவப்புப் பெட்டிக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது -
அது என்ன?
-
9) மூன்று கண்கள் இருக்கும், இவனால் பார்க்க முடியாது -
அது என்ன?
-
10) நெருப்பு பட்டால் அழுவான் – அவன் யார்?
-

-
============================================
விடைகள்::-
6) கல்வி
7) தண்டவாளம்
8) மிளகாய்
9) தேங்காய்
10) மெழுகுவர்த்தி

மழலைகளின் விடுகதைகள்


1) வாசலில் பூத்திருக்கும் வாழ்வரசி – அவள் யார்?
-
2) பிடிக்கவே முடியாத கள்வன்  அவன் யார்?
-
3) பூவில் பிறக்கும், நாவில் சுவைக்கும் – அது என்ன?
-
4) மொட்டைப் பாறையில் மூடிய கண்கள் மூன்று – அது என்ன?
-
5) ஒரு பெண்ணுக்கு மூன்று கொண்டை  அது என்ன ?
-
நன்றி: அ.அபிராமி (கோகுலம் கதிர்)
====================================================
விடை கள்:
 1)கோலம்
2) புகை
3) தேன்
4) தேங்காய்
5) அடுப்பு

குண்டுக் குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நற்குது..

1) தாவி வருவான், தவழ்ந்தும் வருவான், சீறியும் வருவான்
சிதிலம் ஆகிடுவான்  – அவன் யார்?
-
2)கறுப்பர்கள் கூட்டம், சீப்பைக் கண்டால் ஓட்டம் -
அது என்ன?
-
3) கைக்குள் வரைபடம், நம்பினோர்க்கு அது வாழ்க்கை
நிலவரம் – அது என்ன?
-
4) சின்னப்பெட்டிக்குள் சிறை இருப்பான், வெளியே வந்தால்
ஒளி கொடுப்பான் – அவன் யார்?
-
5) ஒரு கரண்டி மாவில் ஊருக்கே தோசை – அது என்ன?
-
6) குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது – அது என்ன?
-
7) தரையில் இருப்பான், தண்ணீரில் படுப்பான் – அவன் யார்?
-
8) வம்புச் சண்டைக்கு இழுத்தாலும் வாசல் தாண்ட  மாட்டான் -
அவன் யார்?
-
9) வெளியே வெள்ளைக்கட்டி, உள்ளே தங்கக் கட்டி, அது என்ன?
-
10) சுற்றினால் நிற்பான், நின்றால் படுப்பான் – அவன் யார்?
-
====================================================
விடைகள்:-
1) ஆறு
2) பேன்
3) கைரேகை
4) முத்து
5) நிலா
6) தேங்காய்
7) படகு
8) நாக்கு
9) முட்டை
10) தலைமுடி

ஊருக்கு அழகு எது என்றேன்…விடுகதைகள்

1. நீல நிற மேடையிலே
கோடி மலர் கிடக்குது.
எடுப்பாரும் இல்லை
தொடுப்பாரும் இல்லை!-அது என்ன?
 2. எட்டாத தூரத்திலே
எவரும் இல்லா காட்டிலே
எழிலான பெண் ஒருத்தி
இரவெல்லாம் சிரிக்கிறாள்!-அவள் யார்?
3. விதைக்காத விதை விண்ணிலே
அறுக்காத கதிர் மண்ணிலே!-அது என்ன?
4. ஊருக்கு அழகு எது என்றேன்
ஒன்றுடன் சேர்ந்த அய்ந்து என்றார்!-அது என்ன?
5. சித்திரையில் சிறு பிள்ளை
வைகாசியில் வளரும் பிள்ளை
ஆனியில் அழகுப்பிள்ளை
ஆடியில் விழும் பிள்ளை!-அது என்ன?
6. உச்சியில் பூவிருக்கும்
ஊருணிக் கரையிலிருக்கும்
வெள்ளம் புரண்டு வரும்
அவரை வீழ்த்த முடியாது!-அவர் யார்?
7. பூத்த போது மஞ்சள்
பூத்ததும் சிவப்பு
காய்த்த போது சிவப்பு
காய்த்ததும் கறுப்பு!-அது என்ன?
8. வந்ததுதான் வந்தீர்களே
வந்து ஒருதரம் போனீர்களே
போய் ஒரு தரம் வந்தீர்களே
போனால் இனிமேல் வருவீர்களா?-அவர் யார்?
9. அண்ணன் தம்பி அய்வரும்
ஆளுக்கு ஆள் வேறு உயரம்
அய்வர் வீட்டுக்கும் ஒரே முற்றம்!-அது என்ன?
10. மூன்றெழுத்து விலங்கு.
நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர்
கடைசி எழுத்தோ மாதமாகும்!-அவை யாவை?
விடைகள் :

1. விண்மீன்கள்
2. நிலா
3. சூரியன், சூரிய ஒளி
4. ஆறு
5. பனம்பழம்
6. நாணல் புல்
7. பேரிச்சை
8. பல்
9. விரல்கள், உள்ளங்கை.
10. கழுதை
=======================================

புதிய விடுகதைகள்

1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
விடைகள்:
1. சைக்கிள், 2. பட்டாசு, 3. தராசு, 4. எறும்புக் கூட்டம், 5. அஞ்சல் பெட்டி.

புதிர்கள்…

1ஆங்கிலத்தில் மிக நீள வார்த்தை எது?
2-. கீழே குறிப்பிடப்பட்டுள்ள குதிரையின் பெயர் என்னவாயிருக்கும்?
“There once was a race horse
That won great fame 
What-do-you-think 
Was the horse’s name
-
3-ஒரு g நான்கு t கொண்ட ஆங்கில வார்த்தை ஒன்றைக் கூற முடியுமா?
4- “How quickly can you find out what is 
unusual about this paragraph?
It looks so ordinary that you would think 
that nothing was wrong with it at all, 
and in fact, nothing is. But it is unusual. 
Why? If you study it and think about it you 
may find out, but I am not going to assist 
you in any way. You must do it without 
coaching. No doubt if you work at it forlong, 
it will dawn on you. I don’t know. 
Now, go to work and try your luck.”
5-. இருட்டான அறைக்குள் நுழைகிறீர்கள். உங்களிடம் 
ஒரே ஒரு நெருப்புக் குச்சிதான் இருக்கிறது. அறைக்குள் 
மெழுகுவர்த்தி, குத்து விளக்கு, ஹரிக்கேன் விளக்கு ஆகியவை 
தலா ஒவ்வொன்றுதான் இருக்கின்றன. எதை நீங்கள் முதலில் 
கொளுத்துவீர்கள்?
=============================================
விடைகள்:-
1-. smiles (முதல் எழுத்துக்கும் கடைசி எழுத்துக்கும் 
இடையே ஒரு “மைல்” உள்ளது
2-What-do-you-think
3-Originality சரி
4-the whole para is composed without 
the most used english alphabet ‘e’ or ‘E’ !!
5-தீக்குச்சியை
============================================
நன்றி:
http://dondu.blogspot.com/

விடுகதைகள்

அழுவேன், சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்?
முகம் பார்க்கும் கண்ணாடி

ஆடும் வரை ஆட்டம், ஆடிய பின் ஒட்டம் அது என்ன?
இதயம்

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
தேள்

ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன?
நிலா

கொம்பு நிறை கம்பு அது என்ன?
http://nilamuttram.com/wp-content/uploads/2011/08/Health-Benefits-of-Pomegranate.jpg

மாதுளம்பழம்

தலையை சீவினால் திறப்பான் அவன் அது என்ன?
இளநீர்/நொங்கு

நாலு காலு உண்டு வீச வாலில்லை அது என்ன?
நாற்காலி

பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?
சீப்பு

மண்ணுக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்?
மஞ்சள்

முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை அது என்ன?
நாக்கு

No comments:

Post a Comment