Thursday 26 April 2012

அறிவுப் புதிர்கள்


அறிவுப் பதிர்கள் 11-20

11) கோணல் இருந்தாலும் குணம் மாறாது.-அது என்ன?
12) நீல நிற மேடையில் கோடி மலர் காயுது.-அது என்ன?
13) தாவி வருவான் தவழ்ந்தும் வருவான்
சீறியும் வருவான் சிதிலம் ஆக்குவான், -அவன் யார்?
14) கறுப்பர்கள் கூட்டம்,சீப்பைக் கண்டால் ஓட்டம்,-அது என்ன?
15) கைக்குள் வரைபடம், நம்பினோர்க்கு அது வாழ்க்கை நிலவரம் -அதுஎன்ன?
16) சின்னப் பெட்டிக்குள் சிறை இருப்பான், வெளியே வந்தால் ஒளிகொடுப்பான், அவன் யார்?
17) ஒற்றைக் காலில் நிற்கும் பசு,உயரமான கருத்தப் பசு
கன்று ஈனாத பசு,கலம்நிறைய பால் தருகிறது.-அது என்ன?
18) கிளையில்லாத செடியிலே ஐந்து வெண்டைக்காய்,-அது என்ன?
19) கடித்தால் கதற வைக்கும்,ஒருகால் மனிதனுக்கு வயிறு நிறையமுட்டை,-அவன் யார்?
20) தந்திரத்துக்கு உவமை சொல்வர், இவனோ ஊளையிட்டே ஊரைக்கூட்டுவான்
***************************************************************************
விடைகள்
20. நரி
19. பச்சை மிளகாய்
18. விரல்கள்
17. பனைமரம்
16. தீக்குச்சி—சிப்பிமுத்து
15. கைரேகை
14. பேன்கள்
13. காற்று… கடல் அலை
12 நட்சத்திரம்
11. கரும்பு

அறிவுப் புதிர்கள்- 1-10

1)அரைச்சாண் ராணி,அவளுக்குள்ளே,ஆயிரம் முத்துக்கள்–
அது என்ன ?
2)இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.-
அது என்ன?
3)எட்டுக்கால் ஏகாம்பரம்,வலை பின்னுவதில் கெட்டிக்காரன்
.-அவன் யார்?
4)எண்ணைய் வேண்டா விளக்கு,எரியும் போதே உருகும்-விளக்கு,
-அது என்ன?
5)ஓடியாடி உழைத்தும், மூலைதான் இவன் இருப்பிடம்,
-அது என்ன?
6)பூக்காமல் பூத்திருப்பாள்,தெரியாமல் மறைந்திருப்பாள்
-அவள் யார் ?
7)மரத்துக்கு மரம் தாவியோடும்,முத்தம்மா மகனுக்கு
முதுகிலே மூன்றுகோடு, -அது என்ன ?
8)விரித்தால் நாம் தூங்கலாம், சுருட்டினால் அது தூங்கும்
-அது என்ன ?
9)ஒரு மழை பெய்தாலே பல குடை வந்துவிடும்
.-அது என்ன ?
10)குண்டுச் சட்டியில் கெண்டை மீன்,
-அது என்ன ?
விடைகள்
10.நாக்கு
9.காளான்
8.பாய்
7.அணில்
6.அத்திப்பூ
5.துடைப்பம்
4..மெழுகு வர்த்தி
3.சிலந்தி
2.வெங்காயம்
1.வெண்டைகாய்
*************************************************

வேடிக்கையான விடுகதைகள்

வேடிக்கையான விடுகதைகள்
ஆயிரம் பேர் பார்க்க
ஆத்தங்கரை ஓரத்திலே
கட்டிப் பிடிக்கிறான்
கள்ளப்பயல்
கன்னத்தைக் கடிக்கிறாள்
கள்ளியவள்-அது என்ன?
2) உழவன் விதைக்காத விதை
கொத்தன் கட்டாத கட்டிடம்
வண்ணான் வெளுக்காத வெள்ளை
சிற்பி செதுக்காத சிலை- அது என்ன?
(3) கவி பாடும் கட்டழகி
காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன ?
(4) உழைப்பால் மலமும் பூ
உடனடி மலரும் பூ- அது என்ன ?
விடை (1) திரைப்படம் (2) பல்  (3) குயில் (4) வியர்வை
நூல்; வேடிக்கையான விடுகதைகள்

விடுகதை

1. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை
2. அம்மா சேலையை மடிக்க முடியாது, அப்பா காசை எண்ண முடியாது.
3. வெள்ளிக் கிண்ணத்தில் தங்க காசு
4. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.
5. வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது.
6. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
7. மழையில் பூக்கும் பூ
8. ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான்.
9. ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம்
10. வெள்ளிக் கிணத்துல தண்ணி
விடைகள்தென்னை மரம், வானம் – நட்சத்திரம், முட்டை, ஆட்டுக்கல், கண், கொசு, குடை, செருப்பு, வாய், தேங்காய்
*******************************************************

விடுகதைகள்

வெண்டிக்காய்
2.        வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?
நிழல்
3.        ஒட்டியவன் ஒருத்தன்பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
கடிதம்
4.        பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
மிளகாய்
5.        இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?
கண்ணீர்
6.        கண்ணுக்குத் தெரியாதவன்உயிருக்கு உகந்தவன். அவன் யார்?
காற்று
7.        தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
பென்சில்
8.        சுற்றுவது தெரியாதுஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
பூமி
9.        வெள்ளை மாளிகையில்  மஞ்சள் புதையல்அது என்ன?
முட்டை
10.     கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
பாம்பு
11.     அள்ள அள்ளக் குறையாதுஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
கடல்நீர்
12.     முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
பலாப்பழம்
13.     உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?
தீக்குச்சி         

No comments:

Post a Comment