அக்கணத்தின் தூண்டுதலால் தற்கொலை செய்வது மிகவும் அரிதாகும். தற்கொலை செய்து கொள்வதற்கு பல நாட்கள் அல்லது மணி நேரங்களுக்கு முன்பாகவே எச்சரிக்கை சமிக்கைகளும் துப்புகளும் வெளிப்படுகின்றன.
வலுவான மற்றும் மிகவும் தொந்தரவு தரக்கூடிய சமிக்கைகள் ஆகும். "இனியும் என்னால் தொடர முடியாது" "இதற்கு மேல் ஒன்றுமில்லை"அல்லது "அனைத்திற்கும் ஒரு முடிவு காண்கிறேன்." இதுபோன்ற கருத்துக்கள் எப்போதும் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
பிறபொதுவான எச்சரிக்கை சமிக்கைகள் கீழ்வருவற்றை உள்ளடக்கும்:
மன அழுத்தமடைதல் அல்லது பிடிப்பில்லாதிருத்தல்
கவலையற்று நடந்து கொள்ளுதல்
உறவுகளைச் சந்தித்தல் மற்றும் மதிப்பு வாய்ந்த பொருட்களை ஒப்படைத்தல்
நடத்தை, மனப்பான்மை மற்றும் தோற்றத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றம்.
அளவுக்கதிகமாக மது அருந்துதல், அல்லது போதை மருந்து பயன்படுத்துதல்
மிகப்பெரிய இழப்பு அல்லது வாழ்க்கை மாற்றத்தால் பாதிக்கப்படுதல்
அதிக எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி சிந்தித்துக் கொள்வதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பவரின் அறிகுறிகளாக இவைகள் இருக்கக்கூடும். பெரும்பாலான சமயங்களில் இந்த சூழ்நிலைகள் தற்கொலையில் முடிவதில்லை. ஆனால் பொதுவாக ஒரு நபர் இந்த சமிக்கைகளை அதிக அளவில் வெளிப்படுத்தும்போது தற்கொலைக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
சூழ்நிலைகள்
தற்கொலைகள் அல்லது வன்முறை உள்ள குடம்பப் பிண்ணனி
பாலியல் அல்லது உடல்ரீதியான தகாத பழக்கம்
நெருங்கிய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரின் மரணம்
விவாகரத்து அல்லது பிரிவு, உறவு முறிதல்
படிப்பில் தோல்வி, வரப்போகிற தேர்வுகள், தேர்வு முடிவுகள். வேலை இழப்பு, பணிபுரியுமிடத்தில் பிரச்சனை
வரப்போகிற சட்ட நடவடிக்கை
சமீபத்திய சிறைவாசம் அல்லது வரக்கூடிய விடுதலை
நடத்தைகள்
அழுதல்
சண்டையிடுதல்
சட்டத்தை மீறுதல்
உணர்ச்சி வசப்பட்ட செயல்கள்
தன்னையே காயப்படுத்திக் கொள்ளல்
மரணம் மற்றும் தற்கொலை பற்றி எழுதுதல்
முன்ப தற்கொலைக்கு முயற்சித்திருத்தல்
அதீத நடத்தைகள்
நடத்தையில் மாற்றங்கள்
உடல்ரீதியான மாற்றங்கள்
பலவீனம்
உறக்கத்தில் மாற்றம் - அதிகமாக உறங்குவது அல்லது குறைவாக
உறங்குவது
பசியின்மை
உடல் எடை கூடுதல் அல்லது குறைதல்
சிறு உடல் உபாதைகள் அதிகரித்தல்
பாலுறவு விருப்பத்தில் மாற்றம்
தோற்றத்தில் திடீர் மாற்றம்
தோற்றத்தைப் பற்றிய அக்கறையின்மை
எண்ணங்கள் மற்றும் உணர்வுகள்
தற்கொலை எண்ணங்கள்
தனிமை - நண்பர்களிடமிருந்து குடும்ப உறுப்பினர்களிடமிருந்து
தரவுக் குறைவு
விலக்கல், ஒதுக்கப்பட்டதாக நினைத்தல்
ஆழ்ந்த வருத்தம் அல்லது குற்ற உணர்ச்சி
குறுகிய கண்ணோட்டத்தை தாண்டி சிந்திக்க இயலாமை
பகல்கனவு காணுதல்
மனக்கவலை மற்றும் அழுத்தம்
உதவி கிடைக்காமை
சுயமதிப்பை இழத்தல்
உங்களுக்கு தெரிந்தவரைப் பற்றி நீங்கள் கவலை கொண்டிருந்தால், எங்களுடைய பக்கங்களைப் படித்ததை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment