Tuesday, 3 April 2012

கூகுள் விளம்பரம் கெடுதல் விளைவிக்குமா?--புதுக் கம்ப்யூட்டரா! படியுங்கள் கீழே--மொஸில்லா பயர்பாக்ஸ் புதிய வசதிகள்--மேப்பூச்சு அல்ல மேட்டர் அதிகம்-விண்டோஸ் 7--புத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7


கூகுள் விளம்பரம் கெடுதல் விளைவிக்குமா?


கூகுள் விளம்பரம் கெடுதல் விளைவிக்குமா?
நெய்வேலியில் இருந்து வாசகர் ஒருவர் குகூள் தளம் தங்கள் வாடிக்கையாளர்களின் பெர்சனல் விருப்பங்களைக் கேட்டு அறிவதாகவும் அவற்றைத் தன் விளம்பரங்கள் சார்ந்து பயன்படுத்திக் கொள்வதாகவும் படித்ததாக எழுதி இருந்தார். தொடர்ந்து இது உண்மையா? உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது நம் கம்ப்யூட்டருக்குக் கெடுதல் விளைவிக்காதா? என்றும் கேட்டிருந்தார். அவருடைய கேள்வி பலரின் மனதில் இருக்கும் சந்தேகங்களை எதிரொலிப்பதாக உள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் கீழே தரப்படுகின்றன. இன்டர்நெட் விளம்பரத்தினை கூகுள் Internet based advertising என அழைக்கிறது. இந்த வகையில் அண்மையில் புதிய தொழில் நுட்பம் ஒன்றினையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் உங்களுடைய பெர்சனல் விருப்பங்கள் பெறப்படுகின்றன. இவற்றைப் பெற்றுக் கொண்ட பின்னர் நீங்கள் கூகுள் சார்ந்த தளங்கள் செல்கையில் உங்கள் விருப்பங்களுக்கேற்ப விளம்பரங்கள் பாப் அப் முறையில் காட்டப்படும். இவ்வாறு விளம்பரங்களை உங்களுக்குக் காட்டுவதன் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு பணம் சேரும்.
இப்போது எதனால் இந்த விளம்பரம் என்று தெரிந்து கொண்டீர்களா? இனி இது எப்படி செயல்படுகிறது என்பதனையும் அதனால் தீங்கு எதுவும் ஏற்படாது என்பதனையும் காணலாம்.
இன்டர்நெட் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்டுவதற்கான அடிப்படை குக்கிகள் தான். இணைய தளம் ஒன்றுக்குச் செல்கிறீர்கள். நிச்சயம் அங்கு கூகுள் நிறுவனத்தின் விளம்பரங்கள் காட்டப்படும். இந்த தளத்திற்கு நீங்கள் செல்கையில் உங்களுக்கென ஒரு அடையாள எண் தரப்படும். இது ஒரு குக்கி பைலாக உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்டோர் செய்யப்படும். இந்த எண் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணாது. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரை அடையாளம் கண்டு கொள்ளும். இந்த குக்கியில் உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல் எதுவும் ஸ்டோர் செய்யப்படாது.
நீங்கள் தொடர்ந்து மேலும் பல தளங்களைப் பார்க்கிறீர்கள். இது போன்ற அடையாளம் எண் குறிக்கப்பட்ட தளத்திற்கு நீங்கள் செல்கையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட குக்கி நீங்கள் இது போல இந்த தளத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்ற செய்தியினை கூகுள் சர்வருக்கு அனுப்பும். இப்போது பெரும்பாலான இணைய தளங்களில் கூகுள் விளம்பரங்கள் இருப்பதால் நிச்சயம் நீங்கள் தளங்களைப் பார்க்கும் போதெல்லாம் உங்கள் அடையாள எண் கூகுள் சர்வருக்கு அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு கூகுள் நீங்கள் எந்த வகை தளங்களைப் பார்க்கிறீர்கள் என்பதை தகவலாக ஸ்டோர் செய்து கொள்ளும். அவற்றின் அடிப்படையில் தன்னிடமுள்ள விளம்பரங்களை உங்களுக்கு பாப் அப் முறையில் காட்டும்.
அடுத்து இதில் தனிமனித உரிமை, விருப்பங்கள் குறித்த சர்ச்சைகளைப் பார்ப்போம். இதனை முதலில் தெரிந்து கொள்ளும் பலர் ஏன் கூகுள் என் விருப்பங்களை தெரிந்து கொள்கிறது? நான் எந்த தளத்திற்குப் போனால் இதற்கென்ன? என்றெல்லாம் மனதிற்குள் குமைந்து போவார்கள். நானும் கூட முதலில் இப்படித்தான் எண்ணினேன். பின் என் முடிவை மாற்றிக் கொண்டேன். ஏன்? முதலாவதாக கூகுள் உங்களைப் பின்பற்றி வரவில்லை. அந்நிறுவனம் நீங்கள் எந்த மாதிரி தளங்களைப் பார்க்கிறீர்கள் என்றுதான் கண்காணித்து தகவல்களை சேர்க்கின்றனர். உங்களுடைய பெயர், இமெயில் முகவரி அல்லது முகவரியினை எல்லாம் தெரிந்து கொள்வதில்லை. மிக எளிதாக ஏதோ ஒரு எண்ணை உங்கள் கம்ப்யூட்டரை அடையாளம் காண அனுப்புகிறது.
எனக்குப் பிடித்த விஷயங்கள் குறித்த விளம்பரங்களை நான் காண வேண்டும் என்றால் அதற்கென சிரமம் எடுத்தல்லவா நான் என் நேரத்தையும் செலவழித்துச் செல்ல வேண்டும். அதற்குப் பதிலாக கூகுள் தானே எடுத்துக் கொடுக்கையில் ஏன் அதனைத் தடுக்க வேண்டும். ஆனால் கூகுள் நீங்கள் செல்லும் தளங்கள் குறித்த தகவல்களைப் பின் தொடர்ந்து பார்க்கக் கூடாது என்று எண்ணினால் அதனையும் மேற்கொள்ளலாம். இதற்குhttp://www.google.com/ads/preferences/html/about.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
வித்தியாசமான சர்ச் இஞ்சின் Wolfram/Alpha
Wolfram/Alpha  இந்த சொல்லைப் படித்தவுடன் இது என்ன விநோதமான பெயராக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இது ஒரு விடை தரும் இஞ்சின். யாஹூ ஆன்ஸர் தளம் போல இயங்குகிறது. ஆனால் இதன் செயல்பாட்டில் பெரும் வேறுபாடு உள்ளது. இதில் பார்முலா, கேள்விகள் என எதனை வேண்டுமானாலும் டைப் செய்து விடையை எதிர்பார்க்கலாம். எடுத்துக்காட்டாக நான் இந்த தளம் சென்ற போது “Where is Fiji?”என்ற கேள்வியை டைப் செய்தேன். மற்ற தளங்கள் என்ன செய்திடும்? அனைத்து சர்வர்களிலும் தேடி ஒரு நீள பட்டியலைக் கொடுக்கும். பின் அதனைப் படித்துப் பார்த்து தளத்தைக் கிளிக் செய்து தகவல்களைத் தேடிப் பெற வேண்டும். ஆனால் இந்த இஞ்சின் எனக்கு ஒரு உலக மேப்பினைத் திரைக்குக் கொண்டு வந்து இதுதான் பிஜி தீவு என்று காட்டியது.
இது எப்படி செயல்படுகிறது? இணையப் பயனாளர்கள் தரும் கேள்வியைக் கொண்டு தன்னுடைய டேட்டா ஸ்ட்ரக்சரைத் தேடி விடையை அமைத்து இந்த தளம் கொடுக்கிறது. ஏறத்தாழ ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் எனச் சொல்லப்படும் வகையில் இது செயல்படுகிறது. மேத்ஸ் பார்முலா, நகரங்களின் பெயர்கள், சில தேதிகள் மற்றும் இது போன்றவற்றை இந்த தேடல் இஞ்சினில் கொடுத்துப் பார்த்தால் இதன் வழிமுறை தெரிய வரும்.

No comments:

Post a Comment