கூகுள்வேவ் – அடுத்த தலைமுறையின் அதிரடி புரட்சி
கூகுள்வேவ் – அடுத்த தலைமுறையின் அதிரடி புரட்சி
இணையம் மற்றும் டிஜிட்டல் சாதனப் பயன் பாடுகளில் அடிக்கடி ஏதேனும் புதுமையைப் புகுத்தி வரும் கூகுள் நிறுவனம் அண்மையில் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கூகுள் கருத்தரங்கில் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இணையம் மற்றும் டிஜிட்டல் சாதனப் பயன் பாடுகளில் அடிக்கடி ஏதேனும் புதுமையைப் புகுத்தி வரும் கூகுள் நிறுவனம் அண்மையில் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கூகுள் கருத்தரங்கில் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
புதுமையான கூகுள்வேவ்” என ஒரு சேவையைத் தர இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மனித வாழ்க்கையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வாழ்க்கையின் அடிப்படையில் புதிய தெரு பரிமாணத்தை இமெயில் ஏற்படுத்தியது. மற்ற இணையப் பயன்பாடுகளுடன் இது இணைந்து மனிதனின் சிந்தனைப் போக்கையும் வாழ்க்கையின் நடைமுறையையும் இமெயில் மாற்றியது.
தற்போது கூகுள் அறிவித்திருக்கும் கூகுள் வேவ் இதே போல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள்வேவ்” என்பது என்ன? தற்போதைய இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகியவற்றின் ஓர் விரிவாக்கம் என்று இப்போதைக்குச் சொல்லிக் கொள்ளலாம். இது ஒரு பைல் ஷேரிங் தொழில் நுட்பம் என்று சரியாகப் பெயர் தரலாம்.
கூகுள் வேவ் மூலம் இதனைப் பயன்படுத்துபவர்கள் படங்கள், போட்டோக்கள், வீடியோ கிளிப்களைத் தங்களிடையே பரிமாறிக் கொள்ளலாம். ஒருவருக்கொருவர் தொடர்ந்து பேசிக் கொள்ளலாம்.
இதுதான் ஏற்கனவே இருக்கிறது என்று எண்ணுபவர்கள் கூகுள் இந்த வசதியில் தான் அதிரடியாக ஒன்றைக் கொண்டு வர இருக்கிறது என்ற எதிர்பார்ப்பினை மட்டும் இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம். கூகுள் வேவ் வந்தபின் அனுபவித்துப் பார்த்தால் தான் இது தெரியவரும்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இது ஒரு ஓப்பன் சோர்ஸ் ப்ராஜக்ட்டாக கூகுள் இயக்குகிறது. இதன் கட்டமைப்பு தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
யார் வேண்டுமானாலும் இதில் பதிந்து தங்களையும் அதனை உருவாக்கும் பணியில் ஈடு படுத்திக் கொள்ளலாம். எனவே டெவலப்பர்கள் என்னும் இணைய தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் கலந்து கொள்ளலாம் கூகுள் நிறுவனத்தில் கூகுள் மேப்ஸ் தயாரித்த வல்லுநர் குழுதான் கூகுள் வேவ் உருவாக்குவதிலும் ஈடுபட்டு வருகிறது.
கூகுள் வேவ் எப்போது வெளிவரும் என இன்னும் அந்த நிறுவனம் அறிவிக்கவில்லை. நீங்கள் இது குறித்து அதிக ஆவல் கொண்டிருந் தால், கூகுள் வேவ் பற்றிய அறிவிப்புகள் உங்களை முதலில் வந்தடைய வேண்டும் என எண்ணினால் http://wave.google.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு கூகுள் வேவ் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. உங்கள் இமெயில் முகவரியினைப் பதிந்து கொள்ளுங்கள். பின் உங்களுக்கு இந்த தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்படும்.
நீங்கள் கணிப்பொறி வல்லுநராக இருந்து இந்த திட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றால்http://googleblog.blogspot.com/2009/05/wentwalkaboutbroughtbackgooglewave.html என்ற முகவரிக்குச் செல்லவும்.
ஸ்லைட் மார்ஜின் வேர்ட் – எக்ஸெல்
ஸ்லைட் மார்ஜின் வேர்ட் – எக்ஸெல்
தலைப்பைப் பார்த்தவுடன் ஸ்லைட் மார்ஜி னில் என்ன இருக்கிறது? அதுவும் வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்பு இரண்டிலுமாக என்றெல்லாம் எண்ணங் கள் ஓடுகின்றனவா? எண்ணிப் பாருங்கள்;
தலைப்பைப் பார்த்தவுடன் ஸ்லைட் மார்ஜி னில் என்ன இருக்கிறது? அதுவும் வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்பு இரண்டிலுமாக என்றெல்லாம் எண்ணங் கள் ஓடுகின்றனவா? எண்ணிப் பாருங்கள்;
ஒரு அருமையான வேர்ட் டாகுமெண்ட் தயாரித்துள்ளீர்கள். ஒரு பக்கத்திற்குள் அது முடிந் தால் நன்றாக இருக்கும் என்று சிரமத்துடன் எடிட் செய்து பார்த்தாலும் அது இரண்டு பக்கத்திற்குச் செல்கிறது. என்ன செய்யலாம்?
இதற்கான பல தீர்வுகளில் ஒன்றுதான் மார்ஜின்களை அட்ஜஸ்ட் செய்வது. இந்த முடிவு எடுத்தவுடன் உங்களில் பலர் File மெனு சென்று பின் Page Setup தேர்ந்தெடுத்து அதில் கிடைக்கும் விண்டோவில் Margins டேப் கிளிக் செய்து அட்ஜஸ்ட் செய்யலாம். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம்.
நம்மில் பலர் செய்திருக்கிறோம். ஆனாலும் இது அவ்வளவு எளிதல்ல; பல முறை இந்த பேஜ் செட் அப் விண்டோவிற்குச் செல்ல வேண்டும். மார்ஜினை இதில் அட்ஜஸ்ட் செய்தவுடன் டாகுமெண்ட் ஒரு பக்கத்திற்குள் வருமா என்று தெரியாது.
மேலும் ஒரு பக்கத்தில் மிகச் சிறியதாக அமைந்து அழகான தோற்றத்தில் அமையாது. எனவே பலமுறை இந்த விண்டோ சென்று அட்ஜஸ்ட் செய்திட வேண்டும். இது நிச்சயம் ஒரு சிலருக்கு விரக்தியைத் தரும்.
இந்த முயற்சியில் தங்களின் ஒரு பக்க டாகுமெண்ட் இலக்கையே சிலர் தியாகம் செய்துவிடுவார்கள்.
ஒரு சிலர் பேஜ் லே அவுட் வியூ சென்று இதனை மேற்கொள்ள முயல்வார்கள். View மெனுவில் Page Layout தேர்ந்தெடுத்து பின் மீண்டும் View மெனுவில் Rulers கிளிக் செய்து மேலே கூறிய அதே முயற்சியில் ஈடுபடுவார்கள்.
இந்த முயற்சி நமக்கு ஓரளவிற்குச் சுதந்திரம் தரும்; ஏனென்றால் ரூலரில் உள்ள மார்ஜினைக் கைப்பற்றி இழுத்து அமைக்கலாம். இங்கும் பிரச்சினை தான். மேலும் கீழுமாக மார்ஜின்களை மாற்றி அமைக்க வேண்டியதிருக்கும். இடது வலதாகவும் மார்ஜின் அட்ஜஸ்ட் மெண்ட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
மேலே சொன்ன அனைத்து வழிகளும் இல்லாமல் வேறு ஏதேனும் சிறப்பான சுமுகமான வழி இருக்கிறதா? ஆம், உள்ளது. ஒரே முறையில் மார்ஜின் அட்ஜஸ்ட் செய்வதன் மூலம் டாகுமெண்ட்டை ஒரு பக்கத்தில் கொண்டு வந்துவிடலாம்.
இதற்கு வேர்ட் தொகுப்பில் பிரிண்ட் பிரிவியூ (Print Preview) ஆப்ஷனை முதலில் தேர்ந்தெடுக்கவும். இதற்கு File மெனு சென்று விரியும் மெனுவில் Print Preview த் தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஸ்டாண்டர்ட் டூல் பார் மேலே காட்டப் பட்டால் அதில் உள்ள பிரிண்ட் பிரிவியூ ஐகானைக் கிளிக் செய்திடலாம். அல்லது கண்ட்ரோல் + எப்2 கீகளை அழுத்தலாம்.
சரி, ஏதோ ஒரு வழியில் பிரிண்ட் பிரிவியூ காட்சி ஸ்கிரீனில் தோன்றச்செய்துவிட்டீர்கள். இங்கு ரூலர் காட்டப்பட வேண்டும். தோன்றவில்லை என்றால் வியூ மெனு சென்று ரூலர் என்பதில் கிளிக் செய்தால் மேலாக ரூலர் கிடைக்கும். அல்லது ரூலர் பட்டனில் கிளிக் செய்திட வேண்டும்.
ரூலர் தோன்றத் தொடங்கிவிட்டால் நீங்கள் மார்ஜினைச் சுற்றி வந்து அதனைச் சரி செய்திடலாம். இனி ரூலர் மேலாக உங்கள் கர்சரைக் கொண்டு செல்லவும். குறிப்பாக எங்கு ரூலர் பளிச்சென்ற நிறத்திலிருந்து வெளிர் நிறத்திற்கு மாறுகிறதோ அங்கு கர்சரைக் கொண்டு செல்லுங்கள். இப்போது கர்சர் இரு புறம் அம்புக் குறி கொண்ட கர்சராகத் தோற்றம் பெறும்.
இப்போது மவுஸின் இடது பட்டனை அழுத்திப் பிடித்துக் கொண்டு மார்ஜின் எந்த இடத்தில் இருந்தால் சரியாக இருக்குமோ அந்த இடத்திற்கு இழுத்துச் செல்லுங்கள். இப்போது கீழாகத் தோற்றமளிக்கும் டாகுமெண்ட்டின் அளவும் மாறுவதனைக் காணலாம்.
எந்த நிலையில் நீங்கள் விரும்பியபடி டாகுமெண்ட் ஒரு பக்கத்திற்கு வருகிறதோ அங்கு மவுஸின் பட்டனை விட்டுவிடலாம். இனி குளோஸ் பட்டனை அழுத்தி மீண்டும் டாகுமெண்ட்டின் பழைய தோற்றத்திற்கு வந்து அதில் தேவையான எடிட்டிங் வேலைகளை மேற்கொள்ளலாம்.
எவ்வளவு எளிது பார்த்தீர்களா? அந்த மெனு இந்த டேப் என்று அலையாமல் ஒரே முயற்சியில் உங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதல்லவா?
வேர்ட் தொகுப்பில் உள்ளது போலவே எக்ஸெல் தொகுப்பிலும் பைல் மெனு சென்று பேஜ் செட் அப் பெற்று மார்ஜின் டேப் அழுத்தி மார்ஜின்களை மாற்றி அமைக்கலாம்.
இது மார்ஜினை மாற்றி அமைத்தாலும் பிரிண்ட் பிரிவியூ சென்று தான் ஒர்க் ஷீட்டின் அளவை மாற்றி அமைக்க முடியும். ஏனென்றால் அந்த வியூவில் தான் மார்ஜின் மாற்றி அமைக்கையில் ஒர்க்ஷீட் அளவு எப்படி மாறும் என்பதனைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
இந்த மெனு, பேஜ் செட் அப், பிரிண்ட் பிரி வியூ வேலை இன்றி எளிதாக இங்கு எப்படி இதனை மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். இதற்கான வழி பிரிண்ட் பிரிவியூ விண்டோவிலேயே உள்ளது.
இந்த திரையில் செட் அப் பட்டனைத் தேடிக் கொண்டிருக்கையில் அதன் வலது பக்கத்தில் மார்ஜின்ஸ் பட்டனைப் பார்க்கவில்லையா? இதுதான் நம் வேலைக்கான முதல் கதவு. இதனைக் கிளிக் செய்திடுங்கள். இப்போது பிரிண்ட் பிரிவியூ விண்டோவிலேயே ஒர்க் ஷீட் அளவினை மாற்றலாம் என்பதனை உணர்ந்து கொள்வீர்கள்.
இதில் கிளிக் செய்தவுடன் சிறிய புள்ளிகள் கொண்ட கோடுகள் பாப் அப் ஆகி வருவதனைப் பார்க்கலாம். இந்த வரிகள் தற்போதைய மார்ஜின் செட்டிங்குகளைக் காட்டுகிறது. உங்கள் கர்சரை மெதுவாக இந்த புள்ளிகளாலான கோட்டில் கொண்டு செல்லுங்கள். உடனே கர்சர் இரு பக்க அம்புக் குறிகள் கொண்ட கர்சராக மாறும். அப்படியே கிளிக் செய்து கோட்டைப் பிடித்துக் கொள்ளுங்கள். மார்ஜின் கோடு உங்கள் பிடியில் வந்துவிட்டதா? இனி இதனை இழுத்துச் சுருக்கலாம்; அல்லது விரிக்கலாம்.
இங்கு சில விஷயங்கள் ஒரே குழப்பமாகத் தோன்றுவதாகக் காட்டப்படலாம். மேலேயும் கீழேயும் பல கோடுகள் கிடைக்கும். இந்தக் கோடுகள் ஒர்க் ஷீட்டில் இல்லையே. பின் எப்படி இங்கு வந்தன என்று ஆச்சரியப்படலாம்.
இன்னொன்றும் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். பிரிண்ட் பிரிவியூவில் அளவினைக் காட்ட மார்ஜின் என்று எதுவும் இருக்காது. அதனை இயக்கிக் கொண்டுவரும் வழியும் இருக்காது. மார்ஜின் அளவு இருந்தால் தானே ஒர்க் ஷீட்டினை ட்ரிம் செய்திட முடியும்? என்ன செய்யலாம் என்று ஆச்சரியப்படும் நேரத்தில் இன்னொன்றும் உங்களைக் குழப்பலாம். மேலாக உள்ள புள்ளிகள் எதற்காக, எங்கிருந்து தோன்றுகின்றன என்று நீங்கள் வியப்படையலாம்.
இவை எல்லாம் நமக்காகத்தான். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் எதற்காக இந்த எக்கச்சக்க வரிகள்? மேலும் கீழும் இரண்டு கோடுகள் இருக்கின்றனவா! இவை ஒவ்வொன்றும் ஒரு மார்ஜினைக் குறிக்கிறது.
ஒர்க்ஷீட்களும் ஹெடர் மற்றும் புட்டர்களைக் கொள்ளலாம் என்பதனை இங்கு மறக்க வேண்டாம். அவற்றிற்கும் மார்ஜின் உண்டு என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.
அனைத்திற்கும் மேலாக இருப்பது ஹெடரின் மார்ஜின். இன்னும் சரியாகச் சொல்வது என்றால் ஹெடரின் மேல் பகுதி டெக்ஸ்ட்டுக்கானது. கீழாக இருப்பது புட்டரின் கீழ் பகுதி டெக்ஸ்ட்டுக்கானது.
அடுத்து எப்படி மார்ஜின் அளவுகளைக் கையாள்வது? முதலில் இழுக்கையில் மார்ஜின் நீளம் மற்றும் அகலத்தினை அறிவது கூட முடியாது என்பது போலத் தோற்றம் அளிக் கும். ஆனால் பொறுமையாக மவுஸ் கொண்டு அழுத்துவதை விட்டுவிடாமல் பாருங்கள்.
குறிப்பாக இடது பக்கம் கீழாக விண்டோவில் பாருங்கள். அங்கே மார்ஜின் அளவு கொண்டு ஒரு கட்டம் தெரிகிறதா? இப்போது புன்னகையோடு அதனைக் கையாள எண்ணுகிறீர்களா? இதனை இழுக்கையில் மூலையில் எந்த மார்ஜினை இழுக்கிறீர்கள்; அதன் அளவு என்ன என்று காட்டப்படும்.
அடுத்ததாக மேலாகக் காட்டப்படும் புள்ளிகள். இவை அந்த பக்கத்தில் உள்ள ஒவ்வொரு நெட்டு வரிசையின் வலது எல்லையைக் காட்டுகின்றன. இவற்றை மாற்ற முடியுமா? இவற்றையும் மாற்ற முடியுமென்றால் வேலை முடிந்ததே? என்று எண்ணுகிறீர்களா? ஆம், முடியும்.
மீண்டும் அதே போல மவுஸால் அழுத்தி தேவைப்படும் வகையில் இழுக்கவும். இப்படி இழுக்கையில் இடது பக்கம் விண்டோவின் கீழாகப் பார்க்கவும். நெட்டு வரிசையின் அகலமும் காட்டப்படுகிறது.
இந்த இழுவைகளை அமல்படுத்தி உங்களுக்குத் தேவையான அளவில் நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளை அமைத்து ஒர்க்ஷீட்டின் மேட்டரை ஒருஒழுங்குக்குக் கொண்டு வரலாம். என்ன! பிரிண்ட் பிரிவியூ இவ்வளவு நன்மை தருகிறதா? என்று வியக்கிறீர்களா? நிச்சயமாய். நாம் எண்ணியபடி கம்ப்யூட்டரில் எதனையும் அமைக்கவும் செயல்படுத்தவும் முடியும் என்பதற்கு இவை எல்லாம் சான்றுகள்.
எக்ஸெல் தொகுப்பில் லிஸ்ட்ஸ்
எக்ஸெல் தொகுப்பில் லிஸ்ட்கள் எங்கே இருக்கின்றன? என்று வியப்பாக இருக்கிறதா? ஆம், இருக்கின்றன; ஆனால் அவை எல்லாம் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை நினைவு படுத்தும் பட்டி யல்கள் அல்ல. அப்படியானால் அவை என்ன? இங்கே பார்க்கலாமா?
ஒர்க் ஷீட் ஒன்றின் செல்லில் “Monday” என டைப் செய்கிறீர்கள். அதன்பின் fill handle பயன்படுத்தி இழுக்கிறீர்கள். இந்த ஹேண்டில் எது என்று தெரிகிறதா? செல்லின் கீழாக வலது மூலையில் உள்ள சிறிய பாக்ஸ். இதனை இழுத்தவுடன் வாரத்தின் மற்ற நாட்கள் தாமாக அடுத்த அடுத்த செல்களில் அமைகின்றன.
பொதுவாக ஒரு டேட்டா இருந்தால் பில் ஹேண்டில் அதனை மற்ற செல்களில் காப்பி செய்திடும். ஆனால் இங்கே சார்ந்த டேட்டாக்கள் காப்பி ஆகின்றன.
அப்படியானால் என்ன நடக்கிறது இங்கே? இங்கு தான் ஒரு லிஸ்ட், குறிப்பாக custom list வருகிறது. இந்த லிஸ்ட்டில் வாரத்தின் நாட்கள் பட்டியலிடப்பட்டு காத்திருக்கிறது. நாம் அதன் ஒரு ஆப்ஜெக்டை டைப் செய்தவுடன் முழுவதையும் காட்டி வேண்டுமா எனக் கேட்டு நிரப்புகிறது.
சரி, வார நாட்கள், மாதங்களின் ஆண்டு பெயர்கள் எல்லாம் அனைவரும் விரும்பும், எதிர்பார்க்கும், பயன்படுத்தும் விஷயங்கள். அதனால் எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பில் இந்த பட்டியல்கள் அதன் கட்டமைப்பிலேயே தரப்பட்டுள்ளன.
ஆனால் நீங்களாக சில தகவல்களைக் கோர்வையாகப் பட்டியல் போட்டு வைத்திருப்பீர்கள். அவற்றை பட்டியலாக்கி நம்முடைய ஒர்க்ஷீட்டில் கேட்டு வாங்க முடியுமா? ஏன் முடியாது.
நம் வசதிக்காகத்தானே கம்ப்யூட்டரும் அதன் புரோகிராம்களும். எடுத்துக் காட்டாக ஒரு நிறுவனத்தின் ஊழியர்களின் பெயர்கள், வெவ்வேறு பதவிகளின் பெயர்கள், நிறுவனத்தின் கிளைகள், நிறுவனத்தைச் சார்ந்த தொலைபேசி எண்கள், நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் குறியீட்டு எண்கள் என எத்தனையோ இருக்கலாம்.
இவற்றை எல்லாம் எடுத்துக் காட்டில் கூறிய வார நாட்களைப் போல பட்டியலிட்டு தயாரித்து அவற்றில் ஏதேனும் ஒன்றை டைப் செய்திடும் போது அப்படியே அனைத்தும் வந்து தாமாக பில் அப் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
நம் வேலையும் நேரமும் மிச்சமாகும். எப்படி ஒரு custom list எக்ஸெல் தொகுப்பில் தயாரிப்பது என்று பார்க்கலாம். இந்த லிஸ்ட்டைத் தயாரிக்க சில ஆப்ஷன்கள் உள்ளன. Tools Options விண்டோவில் Custom Lists என்ற டேப்பினைத் தேர்ந்தெடுத்து அதில் லிஸ்ட்டுக் கான டேட்டாவினை டைப் செய்வது. இன்னொன்று ஏற்கனவே ஒர்க் ஷீட் செல்களில் இந்த டேட்டா இருந்தால் அவற்றை நாமாக ஹைலைட் செய்து பட்டியல் தயாரிப்பது.
முதல் வழிக்கு மேலே சொல்லியபடி சென்று Custom Lists விண்டோவினைப் பெறவும். (படத்தைப் பார்க்கவும்). இந்த விண்டோவின் இடது பக்கமாக எக்ஸெல் தொகுப்பில் ஏற்கனவே உள்ள வழக்கமான பட்டியல்களுடன் புதிய லிஸ்ட் தயாரிக்க வும் ஒரு ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். New List என்பதை ஹை லைட் செய்து பின் வலது புறத்தில் உள்ள கட்டத்தில் கிளிக் செய்திடவும். இந்தக் கட்டத்தில் நீங்கள் தயார் செய்திட விரும்பும் பட்டியலில் உள்ள டேட்டாவினை டைப் செய்திடவும். பட்டியலில் உள்ள டேட்டா எண்களுடன் தொடங்கக் கூடாது.
ஒவ்வொரு டேட்டாவும் டைப் செய்தவுடன் என்டர் அடிக்க மறக்கக் கூடாது. பட்டியலுக்கான அனைத்து டேட்டாவினையும் டைப் செய்து முடித்தவுடன் Add என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி அடுத்து இடது பக்கம் உள்ள கட்டத்தில் பாருங்கள், நீங்கள் டைப் செய்த டேட்டா கீழாகக் காட்டப்படும்.
அடுத்து ஏதேனும் ஒரு எக்ஸெல் ஒர்க் ஷீட்டைத் திறந்து செல் ஒன்றில் நீங்கள் தயாரித்த புதிய லிஸ்ட்டில் உள்ள டேட்டா ஒன்றை டைப் செய்து பின் பில் ஹேண்டிலை இழுங்கள். உடனே நீங்கள் கொடுத்த டேட்டா முழுவதும் ஒவ்வொரு செல்லாக அமைக்கப்படும்.
ஏற்கனவே இந்த டேட்டாவினை எல்லாம் ஒர்க் ஷீட்டில் டைப் செய்து வைத்திருக்கிறோமே! நாங்கள் லிஸ்ட் தயார் செய்திட வேண்டும் என்றால் மீண்டும் இந்த டேட்டாவினை டைப் செய்திட வேண்டுமா என நீங்கள் கேட்கலாம். வேண்டாம், வேண்டவே வேண்டாம். அதற்கு ஒரு வழி உள்ளது.
முதலில் அந்த டேட்டா உள்ள செல்களை எல்லாம் ஹை லைட் செய்திடுங்கள். பின் Tools Options விண்டோ செல்லவும். Custom Lists டேப் தட்டவும். Custom Lists என்பதன் கீழாக “Import list from cells:” என்று இருப்பதைப் பார்க்கலாம்.
அருகே ஒரு நீள கட்டம் இருக்கும். இதில் நீங்கள் ஹைலைட் செய்த செல்களின் எண்கள் காணப்படும். அருகே உள்ள Import என்ற பட்டனைத் தட்டவும். உடனடியாக டேட்டா இடது பக்கம் உள்ள Custom Lists கட்டத்தில் அமைந்திருப்பதனைக் காணலாம். அவை வலது பக்கம் உள்ள கட்டத்தில் காட்டப்படுவதனையும் காணலாம்.
உடனே Add என்ற பட்டனைத் தட்டவும். நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, இப்போது உங்கள் டேட்டா மீண்டும் டைப் செய்யப் படாமல் லிஸ்ட்டாக அமைந்திருப்பதனைக் காணலாம்.
சரி, இந்த செயல்பாட்டில் சிலர் லிஸ்ட்டில் அமைய வேண்டிய டேட்டாவினை ஹை லைட் செய்யாமல் விட்டிருக்கலாம். அவர்கள் என்ன செய்ய வேண்டும்? கேன்சல் தட்டி மீண்டும் வேலையைத் தொடங்க வேண்டுமா? தேவையில்லை.
இவர்களுக்காகவே இன்னொரு வழியும் இதே விண்டோவில் உள்ளது. “Import list from cells:” என்ற பீல்டின் இறுதியில் ஒரு பட்டன் தரப்பட்டிருப்பதைப் பாருங்கள் (பார்க்க படம்) இதனைக் கிளிக் செய்திடுங்கள்.
நீங்கள் உடனே ஒர்க் ஷீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு லிஸ்ட்டில் சேர்க்கப் பட வேண்டிய டேட்டாவினை ஹை லைட் செய்திடலாம். அவ்வாறு ஹை லைட் செய்த பின் மீண்டும் அதே பட்டனைத் தட்டவும். மீண்டும் Import கிளிக் செய்து பின் Add கிளிக் செய்து ஓகே என்டர் தட்டி வெளியேறவும்.
பாருங்கள், எவ்வளவு எளிதான வேலை. இனிமேல் நீங்கள் அடிக்கடி டைப் செய்திடும் டேட்டாவை எல்லாம் வகை வகையாய் பட்டியல் போட்டு பயன்படுத்துவீர்கள் அல்லவா!
டைப்பிங் வேகம் கணக்கிடலாமா?
டைப்பிங் வேகம் கணக்கிடலாமா?
நீங்கள் டைப் செய்வதில் நிபுணரா? உங்களின் டைப்பிங் வேகத்தின் அளவு என்ன? நிமிடத்திற்கு எத்தனை சொற்களை உங்களால் சராசரியாக டைப் செய்திட முடியும். இல்லை, எனக்கு சுமாராகத்தான் தெரியும். இன்னும் டைப்பிங் செய்வதில் பாடங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது உள்ளது. எனக்கு எழுத்துக்கள் நன்றாக வேகமாக வரும். ஆனால் எண்கள் பழக்கமில்லை. எனக்கு கீ போர்டு சரியான முறையில் பழக்கமில்லை. ஒற்றை விரலால் தான் டைப் செய்து பழக்கம் என்றெல்லாம் பலர் பலவிதமாகக் கூறுவார்கள்.
எப்படி இருந்தாலும் பலர் தாங்கள் வெகுவேகமாக டைப் செய்திடும் திறன் உள்ளவர்கள் என்று கூறுவார்கள். இவர்கள் தங்களின் வேகத்திறனை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம் உள்ளது. இதன் முகவரி http://www.typeonline.co.uk/typingspeed.php இந்த தளம் சென்றால் இங்கு உங்களின் டைப்பிங் வேகம் தெரிந்து கொள்ள பாடம் தரப்படும். முதலில் ஒரு டெக்ஸ்ட் இருக்கும். கீழாக அதே டெக்ஸ்ட்டினை டைப் செய்திட ஒரு கட்டம் தரப்பட்டிருக்கும். மேலே உள்ள கட்டத்தில் டைப் வேகத்தைக் கணக்கிட டெக்ஸ்ட்டுடன் ஒரு கடிகாரத்திற்கான லிங்க் இருக்கும்.
தொடங்குவதற்கும் நிறுத்துவதற்கும் என இரண்டு லிங்க் இருக்கும். தொடங்கிவிட்டு நீங்கள் டெக்ஸ்ட்டை டைப் செய்திடத் தொடங்கலாம். முடித்தவுடனோ அல்லது இடையேயோ டைப் செய்வதை நிறுத்திவிட்டு கடிகாரத்தையும் நிறுத்த வேண்டும். உடனே உங்கள் டைப்பிங் ஸ்பீட் என்னவென்று நிமிடத்திற்கு இத்தனை சொற்கள் என்று காட்டப்படும். மேலும் நீங்கள் டைப் செய்ததில் எந்த சொல்லில் எழுத்துப் பிழைகள் ஏற்படுத்தினீர்கள் என்றும் காட்டப்படும். இடது புறம் கீ போர்டு பழக, சொற்கள் மற்றும் எண்களைத் தனித்தனியாகவும் இணைந்தும் டைப் செய்திட பழக என லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். கிளிக் செய்து தேவையான பாடங்களை எடுத்துப் பழகலாம்.

டைப்பிங் வேகம் கணக்கிடலாமா?

டவுண்லோட் ஆகும் பைல் எது?

டாஸ்க் பேன் ஏன்? எதற்கு? எப்படி?

அட்மினிஸ்ட்ரேட்டராக் இயக்குவது எப்படி?

பிட் என்பது….

இந்திய மொழிகளில் பேஸ்புக்

சார்ட் ஆகும் டேட்டாவில் பிரச்சினையா?

விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி?

மீடியா பார்மட்டுகளை மாற்ற

பைலைத் திறக்கும் புரோகிராம் எது?

ஏன் வைரஸ்களை உருவாக்குகிறார்கள்?

விளையாட கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டுமா?

செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க

டவுண்லோட் ஆகும் பைல் எது?

டாஸ்க் பேன் ஏன்? எதற்கு? எப்படி?

அட்மினிஸ்ட்ரேட்டராக் இயக்குவது எப்படி?

பிட் என்பது….

இந்திய மொழிகளில் பேஸ்புக்

சார்ட் ஆகும் டேட்டாவில் பிரச்சினையா?

விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி?

மீடியா பார்மட்டுகளை மாற்ற

பைலைத் திறக்கும் புரோகிராம் எது?

ஏன் வைரஸ்களை உருவாக்குகிறார்கள்?

விளையாட கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டுமா?

செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க

டவுண்லோட் ஆகும் பைல் எது?
டவுண்லோட் ஆகும் பைல் எது?
இணையத்தில் உலா வரும் வேளைகளில் சில சமயம் நமக்குத் தேவைப்படும் தகவல்கள் ஒரு பைலில் இருப்பதாகத் தெரியவரும். அந்த பைலை இறக்கிப் படிக்க லிங்க் ஒன்றும் அங்கு தரப்பட்டிருக்கும். உடனே அதனைக் கிளிக் செய்து அந்த பைலை டவுண்லோட் செய்திட முயற்சிகளை எடுப்போம். எடுத்த பின்னர் தான் அந்த பைல் நாம் எதிர்பாராத பார்மட்டில் இருப்பதை உணர்வோம். பி.டி.எப்., ஸிப் ஆர்க்கிவ், வேர்ட் என ஏதோ ஒரு பார்மட்டில் அந்த பைல் இருக்கலாம். அது இறங்கிய பின்னரே தெரியவரும். சில வேளைகளில் அந்த பைல் வகை உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால் படிக்க இயலாத பைலாகக் கூட இருக்கலாம். லிங்க் கிளிக் செய்து அதனை டவுண்லோட் செய்திடும் முன்னர் அந்த பைல் குறித்து ஒரு அலர்ட் மெசேஜ் வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா!
மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் இதற்கென ஒரு ஆட்–ஆன் புரோகிராம் ஒன்றைக் கொண்டுள்ளது.இதனைப் பெற்று இன்ஸ்டால் செய்துவிட்டால், வெப்சைட்டில் லிங்க் அருகே கர்சரைக் கொண்டு செல்லும்போதே அது பைலின் எக்ஸ்டென்ஷனுக்கேற்ப தன் வடிவை மாற்றுகிறது. இதன் மூலம் பைல் வகை என்னவென்று அறிந்து கொண்டு அந்த பைல் வேண்டுமா என முடிவு செய்து அதற்கேற்ப செயல்படலாம். இதனைப் பெற கீழ்க்குறித்தவாறு செயல்படவும்.
1. Tools கிளிக் செய்து AddOns தேர்ந்தெடுக்கவும்.
2. இங்கு Add Ons டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Get Addons” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.
3. அங்கு உள்ள சர்ச் கட்டத்தில் link alert என டைப் செய்து பின் மேக்னிபை கிளாஸ் பிரஸ் செய்திடவும்.
4.உடன் Link Alert எக்ஸ்டென்ஷன் காட்டப்படும். அதில் கிடைக்கும் “Add to Firefox” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.
5. உடன் “Software Installation” என்னும் டயலாக் பாக்ஸ் தோன்றும். அதில் “Install Now ” என்னும் பட்டன் கிடைத்தவுடன் கிளிக் செய்திடவும்.
6. இந்த ஆட்–ஆன் புரோகிராம் இன்ஸ்டால் செய்தவுடன் “Restart Firefox” என்னும் பட்டனைக் கிளிக் செய்க. நீங்கள் ஏற்கனவே அதனை செட் செய்தபடி பயர்பாக்ஸ் உங்கள் விண்டோஸ் மற்றும் டேப்களை ரீஸ்டார்ட் செய்ய வேண்டியதை உணர்ந்திடும். இப்பொழுது, உங்கள் கர்சரை ஏற்கனவே குறிக்கப்பட்ட பைல் வகை மீது கொண்டு சென்றால், லிங்க் அலர்ட் அந்த கர்சரை அந்த பைல் வகை குறித்து உங்களுக்கு எச்சரிக்கை செய்தி கொடுக்கும் வகையில் மாற்றிக் காட்டும். இதனைச் சோதனை செய்து பார்க்க விரும்புபவர்களுக்காகhttp://linkalert.googlepages.com/testpage.htm என்ற முகவரியில் இந்த ஆட் ஆன் புரோகிராமைத் தயாரித்தவர் ஒரு சோதனைப் பக்கத்தினை வைத்துள்ளார். இந்த லிங்க் அலர்ட் புரோகிராமினை இன்னும் உங்கள் எண்ணங்களுக்கேற்ப வடிவமைக்கலாம். பல்வேறு ஆப்ஷன்கள் இதற் கெனத் தரப்பட்டுள்ளன.
லிங்க் அலர்ட் புரோகிராமின் ஆப்ஷன்களை மாற்ற:
1. Tools கிளிக் செய்து AddOns தேர்ந்தெடுக்கவும்.
2. இங்கு Add Ons டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Extensions என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.
3. பின் “Link Alert” என்பதன் கீழ் “Options” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.
4. உடன் “Link Alert Options” டயலாக் பாக்ஸ் தோன்றும். இதில் “Basic” என்னும் பட்டனை அழுத்தி மவுஸ் பாய்ண்ட்டரை முன்னரே வரையறை செய்த பைல் வகைகளுக்கு மாற்றவும் மாற்றாமல் இருக்கவும் செய்திடலாம். இதில் உள்ள “Advanced” பட்டன் நாம் உருவாக்கும் பைல் வகைகளை இந்த பட்டியலில் இணைக்க வழி செய்திடுகிறது. அதே போல நாம் விரும்பும் கர்சர் வகைகளையும் இதில் சேர்க்கலாம். இங்கு கிடைக்கும் “Display” பட்டன் டிஸ்பிளே வகைகளில் மாற்றத்தினை ஏற்படுத்த வழி தருகிறது. எடுத்துக் காட்டாக மவுஸ் கர்சர் சிறியதாக உள்ளதாக எண்ணினால் அதனைப் பெரிதாக்கலாம். இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால் சில வேளைகளில் அவை நடைமுறைக்கு வருவதற்கு பயர்பாக்ஸ் தொகுப்பினை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும்.
இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். லிங்க் அலர்ட் ஒரு பைலுக்கு நேரடியாக இணைப்பு கிடைத்தால் தான் நாம் செட் செய்தபடி கர்சரின் தோற்றத்தை மாற்றும். சில இணைய தளங்கள் சில ஸ்கிரிப்ட் மூலம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லலாம். வெப் பேஜ் என எண்ணப்படும் ஒரு தளம் ஒருவகை பைல் டைப்பாக இருக்கலாம்.
டாஸ்க் பேன் ஏன்? எதற்கு? எப்படி?
டாஸ்க் பேன் ஏன்? எதற்கு? எப்படி?
நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸ்பி அல்லது ஆபீஸ் 2003 பயன்படுத்துபவராக இருந்தால் டாஸ்க் பேன் (Task Pane) பார்த்திருப்பீர்கள். ஆபீஸ் புரோகிராம்கள் இயக்கப்படுகையில் மானிட்டர் திரையில் வலது பக்கமாக எழுந்து வரும் கட்டமே டாஸ்க் பேன். புதிய டாகுமெண்ட் ஒன்றை நீங்கள் உருவாக்கத் தொடங்கியவுடனேயே அது மறைந்துவிடுவதனையும் பார்க்கலாம். இதனால் நாமும் டாஸ்க் பேனை மறந்துவிட்டு டாகுமெண்ட் பக்கமே நம் கவனம் முழுவதையும் திருப்புகிறோம். இதனால் டாஸ்க் பேன் நமக்கு தரும் அனைத்து பயன்களையும் இழக்கிறோம். (ஒரு சிலர் எழுந்து வரும் டாஸ்க் பேன் எதற்கும் பயனில்லை என்று கருதி புரோகிராம்களை இயக்குகையில் அது வரக்கூடாதவகையில் ஆப்ஷன்ஸ் விண்டோவில் இது வராதவாறு அமைத்துவிடுகின்றனர்) குறிப்பாக டாஸ்க் பேன் நமக்கு டாகுமெண்ட் பார்மட்டில் அதிகம் பயன்களைத் தரும்.
மேலும் ஆன்லைன் ரிசர்ச் மேற்கொள்ள வழி வகுக்கும். ஆபீஸ் 2007 வந்த போது ரிப்பன் வழி இயக்கத்திற்காக இந்த டாஸ்க் பேன் நிறுத்தப்பட்டது. ஆனால் இன்னும் பலர் ஆபீஸ் எக்ஸ்பி அல்லது 2003 பயன்படுத்திக் கொண்டுதான் உள்ளனர். நீங்கள் அவர்களில் ஒருவர் எனில் மேலும் படியுங்கள்.
பலர் டாஸ்க் பேன் இருப்பதை அல்லது எழுந்து வருவதனை அறியாமல் இருப்பதற்குக் காரணம் இதன் பெயர் டாஸ்க் பேன் என இல்லாததும் ஆகும். இதற்குப் பெயர் Getting Started என்பதே. ஆனால் Getting Started என்பது பல டாஸ்க் பேன்களில் ஒன்றாகும். இந்த லேபிளின் அருகே உள்ள கீழ் நோக்கியுள்ள அம்புக்குறியில் கிளிக் செய்தால் மேலும் உள்ள டாஸ்க் பேன்கள் காட்டப்படும். ஒருவேளை உங்கள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்களை இயக் கத் தொடங்குகையில் டாஸ்க் பேன் கிடைக்கவில்லை என்றால் அதனைப் பல வழிகளில் பெறலாம். வியூ மெனு சென்றால் அதில் Task Pane என்பதைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். அல்லது கண்ட்ரோல் + எப்1 கிளிக் செய்தால் டாஸ்க் பேன் கிடைக்கும். மீண்டும் இதே கீகளை அழுத்தினால் அது மறையும். நிரந்தரமாக இதனை இயங்க வைக்க Tools இயக்கி அதில் Options தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய பாக்ஸில் வியூ டேப்பினை அழுத்தினால் கிடைக்கும் கட்டத்தில் Show என்பதன் கீழ் முதலாவதாக இந்த டாஸ்க் பேன் குறித்த தகவல் இருக்கும். அதன் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் செய்தால் அடுத்து ஆபீஸ் புரோகிராம் எதனை (Word, Access, Excel, Power point, Publihser மற்றும் Frontpage) இயக்கினாலும் அதில் டாஸ்க் பேன் எழுந்து வரும்.
எந்த ஆபீஸ் புரோகிராம் இயக்கப்படுகிறதோ அதற்கேற்ற வகையில் டாஸ்க் பேன் அம்சங்கள் கிடைக்கும். எடுத்துக் காட்டாக வேர்ட் தொகுப்பில் Styles and Formatting என்ற டாஸ்க் பேன் கிடைக்கும். இது எக்ஸெல் தொகுப்பில் கிடைக்காது. எக்ஸெல் தொகுப்பில் உள்ள டாஸ்க் பேனில் XML Source ஆப்ஷன் தரப்படுகிறது.
நாம் அடிக்கடி சந்திப்பது Getting Started என்ற டாஸ்க் பேன் தான். ஆபீஸ் அப்ளிகேஷன் தொகுப்பில் எந்த புரோகிராம் இயக்கினாலும் இதுவே கிடைக்கும். அண்மையில் பயன்படுத்திய டாகுமெண்ட்களின் பட்டியல் இதில் தரப்படும். அதில் தேவையானதைக் கிளிக் செய்து அந்த டாகுமெண்ட்டைத் திறக்கலாம். இதிலிருந்தவாறே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் ஆன்லைன் தளத்தைப் பெறலாம். இதில் ஒரு சர்ச் பாக்ஸும் தரப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி ஆன்லைனில் உங்கள் கேள்விகளுக்குப் பதில் பெறலாம்.
அடுத்ததாக இதில் இடம் பெற்றிருப்பது நியூ டாகுமெண்ட் பேனல். இதில் கிளிக் செய்து நீங்கள் புதிய டாகுமெண்ட் ஒன்றைத் தொடங்கலாம். பைல் உருவாக்குவதற்கும் பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும். வேர்டில் காலியான டாகுமெண்ட் ஒன்றைத் தொடங்கவா என்று கேட்கப்படும். எக்ஸெல் எனில் ரெடியாக ஆன்லைனில் கிடைக்கும் டெம்ப்ளேட் ஒன்றைப் பெறவா என்று கேட்கப்படும்.
ஹெல்ப் டாஸ்க் பேனிலும் இதே போல உதவிகள் கிடைக்கும். எப் 1 அழுத்தினால் இந்த டாஸ்க்பேன் நமக்குக் கிடைக்கும். ஆபீஸ் தொகுப்பு இயக்கத்தில் ஏதேனும் ஒரு பொருள் குறித்து இதில் தரப்பட்டுள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் டைப் செய்து என்டர் செய்தாலோ அல்லது பச்சையாக வலது பக்கம் உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தாலோ உடனே அந்த பொருள் குறித்த விளக்கங்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும். இதிலிருந்து நமக்கு வேண்டிய விளக்கங்களைக் கிளிக் செய்து பெறலாம்.
இந்த டாஸ்க் பேனை எந்த இடத்திலும் நிறுத்தி வைக்கலாம். அல்லது மிதக்கும் காலமாகவும் அமைத்திடலாம். டாஸ்க் பேனின் தலைப்பின் முன் பார்த்தால் நான்கு புள்ளிகள் தெரியும். இதன் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றவுடன் அது ஸ்வஸ்திக் சின்னம் போல மாறும். அப்படியே மவுஸ் கிளிக்கால் அதனைப் பிடித்தவாறே இழுக்கவும். இழுத்து நீங்கள் விரும்பும் இடத்தில் விடவும். இதனை மற்ற டாகுமெண்ட்களை குளோஸ் செய்வது போல மேல் வலது மூலையில் உள்ள கிராஸ் அடையாளத்தில் கிளிக் செய்து மூடலாம்.
மேலே கொடுத்த டாஸ்க்பேன் பயன்பாடுகள் ஒரு சில மட்டுமே. இன்னும் அதிகமாக நமக்கு உதவிடும் ஒரு டாஸ்க் பேன் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் அனைத்திலும் கிடைக்கும் ஆபீஸ் கிளிப் போர்டு (Office Clipboard) ஆகும். இதில் தான் நாம் காப்பி செய்திடும் அனைத்தும் நாம் பயன்படுத்துவதற்காகத் தங்கவைக்கப்படுகின்றன. இது விண்டோஸ் கிளிப் போர்டின் ஒரு எக்ஸ்டன்ஷன் ஆகும்.
இதில் காப்பி செய்யப்படும் 24 ஆப்ஜெக்ட்கள் (டெக்ஸ்ட், கிராபிக்ஸ், டேபிள், படம் முதலியன) பதியப்படுகின்றன. இறுதியாகக் காப்பி செய்யப்பட்ட ஆப்ஜெக்ட் மேலாகக் காட்டப்படும். 25 ஆவது ஐட்டம் காப்பி செய்யப்படுகையில் முதலாவதாகக் காப்பி செய்யப்பட்ட ஐட்டம் நீக்கப்படும்.
இந்த கிளிப் போர்டு டாஸ்க் பேன் காட்டப்படுகையில் என்ன என்ன ஐட்டங்கள் காப்பி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு உள்ளன என்று தெரிய வரும். இந்த கிளிப் போர்டு டாஸ்க் பேன் திரையில் தோன்ற கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு சி கீயை இருமுறை தட்டினால் போதும். அதில் காப்பி செய்யப்பட்டுள்ள ஐட்டங்களிலிருந்து நீங்கள் தேவையானதைத் தேர்ந்தெடுத்து விரும்பும் பைலில் தேவைப்படும் இடத்தில் பேஸ்ட் செய்திடலாம்.
அடுத்ததாக பயன்தரும் டாஸ்க் பேன்களாக இரண்டைக் குறிப்பிடலாம். அவை: Styles and Formatting மற்றும் Reveal Formatting. இவற்றை டாஸ்க்பேன் மெனுவிலிருந்து பெறலாம். முதலில் உள்ள டாஸ்க் பேன் மூலம் ஒரு டாகுமெண்ட்டின் தோற்றத்தை டெக்ஸ்ட் முழுவதும் மாற்றி அமைக்கலாம்.
இந்த டாஸ்க் பேனைத் திறந்தால் ஒரு டெக்ஸ்ட் டாகுமெண்ட்டில் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஸ்டைல் மற்றும் பார்மட்டிங் பட்டியலிடப்பட்டிருக்கும்.
ஏதாவது ஒரு என்ட்ரியில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று அங்கு கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால் மெனு மேலெழுந்து வரும். இதில் ஏதேனும் ஒரு ஸ்டைல் தேர்ந்தெடுத்து பின் டெலீட் பட்டனை அழுத்தினால் அந்த குறிப்பிட்ட ஸ்டைல் டாகுமெண்ட்டில் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் நீக்கப்படும். Modify அழுத்தி அந்த ஸ்டைலை டாகுமெண்ட் முழுவதும் மாற்றலாம்.
Reveal Formatting டாஸ்க் பேன் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் குறித்து இன்னும் கூடுதல் விளக்கங்களை அளிக்கும். மேலும் சில பயனுள்ள பார்மட்டிங் வசதிகளைப் பயன்படுத்த லிங்க்குகளையும் காட்டும். அலைன்மென்ட், பாண்ட் மாற்றம், பாரா இடைவெளி போன்ற விஷயங்களை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.
மேலே விளக்கப்பட்டுள்ள டாஸ்க் பேன்களைப் போலவே கிளிப் ஆர்ட் போன்ற இன்னும் பயனுள்ளவை நிறைய உள்ளன. இவற்றைப் பயன்படுத்தும் வழி தெரிந்து பயன்படுத்தினால் நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள் சிறப்பாக இருப்பதுடன் நேரமும் மிச்சமாகும்.
அட்மினிஸ்ட்ரேட்டராக் இயக்குவது எப்படி?
அட்மினிஸ்ட்ரேட்டராக் இயக்குவது எப்படி?
ஏதேனும் ஒரு புதிய புரோகிராமினை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்கையில் சில கம்ப்யூட்டர்களில் “You must have Administrator rights to install (insert program name) on this computer. Please log in to an account with Administrator rights and run this installation again.” என்று ஒரு செய்தி கிடைக்கும். இது எதைக் குறிக்கிறது? அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமைகள் என்றால் என்ன என்று முதலில் பார்க்கலாம்.
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை அட்மினிஸ்ட்ரேட்டர் என்று கருதப்படுபவர்தான் அந்த கம்ப்யூட்டரின் ஏகோபித்த தலைவர். கம்ப்யூட்டரில் எந்த தடையும் இன்றி எங்கும் செல்லக் கூடியவர். அவர் மட்டுமே கம்ப்யூட்டரில் பைல் அல்லது போல்டர் எதனையும் உருவாக்கலாம், அழிக்கலாம், எடிட் செய்திடலாம். செட்டிங் குகளை மாற்றலாம். குறைந்த பட்ச உரிமை கொண்ட யூசர்களைக் காட்டிலும் அதிக உரிமை கொண்டவர் அட்மினிஸ்ட்ரேட்டர். உங்களுடைய வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் நீங்கள் கம்ப்யூட்டர் அட்மினிஸ்ட்ரேட்டராக அக்கவுண்ட் வைத்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தைகள் அல்லது மனைவிக்கு யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கித் தரலாம்.
உங்கள் கம்ப்யூட்டரில் புதிய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில் கம்ப்யூட்டர் அந்த செயல்பாடு அட்மினிஸ்ட்ரேட்டரால் அவருக்கு அளிக்கப்பட்ட உரிமையில் மேற்கொள்ளப்படுகிறதா என்று கண்காணிக்கும். பொதுவாக இது போன்ற கண்காணிப்பு அந்த புரோகிராம் மிகவும் அட்வான்ஸ்டு ஆக அல்லது பலமுனைகளில் இயங்கக் கூடியதாக இருந்தாலே மேற்கொள்ளப்படும். எனவே இது போன்ற கண்காணிப்பின் அடிப்படையில் ஏதேனும் செய்திகள் கிடைத்தால் அவ்வளவுதான் இனி என்ன செய்திட என்று விரக்தி அடைய வேண்டாம். இந்த அட்மினிஸ்ட்ரேட்டிவ் அக்கவுண்ட் பொதுவாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும். இதனை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனைப் பெற முதல் செயலாகக் கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்குங்கள். இதற்கு கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடுங்கள். விண்டோஸ் பூட் ஆகிக் கொண்டிருக்கையில் எப்8 பட்டனை அழுத்துங்கள். அடுத்து உங்களுக்கு எந்த வகையில் பூட் செய்திட என்று ஒரு பட்டியல் தரப்படும். அதில் Safe Mode என்பதைத் தேர்ந்தெடுங்கள். பின் என்டர் கீயினைத் தட்டுங்கள். திரையில் லாக் இன் திரையில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் கிடைப்பதனைப் பார்க்கலாம். அடுத்து அட்மினிஸ்ட்ரேட்டிவ் அக்கவுண்ட்டிற்கான பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைந்திடுங்கள். இனி அனைத்தையும் உரிமையுடன் மேற்கொள்ளலாம்.
அடுத்து நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் யூசர் அக்கவுண்ட்டிற்கு எப்படி அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையினை வழங்கலாம் என்று பார்க்கலாம். அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில் நுழைந்த பின்னர் டெஸ்க் டாப்பில் உள்ள My Computer ல் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Manage என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அங்கிருந்து Local Users and Groups போல்டரை விரிக்கவும். அதன்பின் Administrators என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். பின் Add என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் எந்த அக்கவுண்ட்டிற்கு அட்மினிஸ்ட்ரேட்டிவ் உரிமையத் தர விரும்புகிறீர்களோ, அந்த வழக்கமான அக்கவுண்ட்டின் பெயரை என்டர் செய்திடவும். இது வழக்கமாக உங்கள் பெயராக இருக்கும். அல்லது வேறு வித்தியாசமான பெயராகவும் இருக்கலாம். (பெயரில் என்ன இருக்கிறது!) எதுவாக இருந்தாலும் ஏற்கனவே உள்ளதைச் சரியாக அப்படியே என்டர் செய்திட வேண்டும். இதைச் செய்து முடித்தபின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
அடுத்து கம்ப்யூட்டரை வழக்கம்போல ஸ்டார்ட் செய்திடவும். உங்கள் வழக்கமான அக்கவுண்ட்டினைத் தேர்ந்தெடுங்கள். இதற்கு அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையினைக் கொடுத்து செட் செய்துவிட்டதால் இந்த அக்கவுண்ட்டிலேயே கம்ப்யூட்டர் உள்ளே நுழைந்து புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடலாம். இனி நீங்கள் விரும்பும் அல்லது தடையைச் சந்தித்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுங்கள். அது இன்ஸ்டால் ஆகும்.
இப்போது நீங்கள் நினைக்கலாம். அட்மின்ஸ்ட்ரேட்டிவ் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்ட் மறந்து போனால் என்ன செய்திடலாம் என்று. இந்த சூழ்நிலைகளும் சில வேளைகளில் எழலாம். ஏனென்றால் இந்த அக்கவுண்ட்டை பாஸ்வேர்டுடன் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தி இருக்க மாட்டீர்கள். சரி, இப்போது என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
மறுபடியும் கம்ப்யூட்டரை சேப் மோடில் ஸ்டார்ட் செய்திடுங்கள். சேப் மோடில் சென்று இயங்கியவுடன், Start, Run பாக்ஸ் சென்று ‘Control userpasswords2’ என டைப் செய்திடுங்கள். ஒரு புதிய விண்டோ ஒன்று உங்கள் பாஸ்வேர்ட்கள் அனைத்தையும் கொண்டு தோன்றும். இங்கே உங்கள் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அக்கவுண்ட்டை கிளிக் செய்திடுங்கள். அடுத்து அதில் Reset Password என்ற பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் New Password மற்றும் Confirm New Password ஆகிய இரண்டு கட்டங்களிலும் புதிய பாஸ்வேர்டினைத் தரவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். பாஸ்வேர்ட் மாற்றப்பட்டிருக்கும். இதனை முடித்த பின்னர் மீண்டும் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடவும். இப் போது இன்னொரு யூசர் அக்கவுண்டிற்குக் கூட அட்மினிஸ்ட்ரேட்டிவ் ரைட்ஸ் கொடுக் கலாம்.
பிட் என்பது….
மே 26, 2009vayal
பிட் என்பது….
கம்ப்யூட்டர் ஏற்று எடுத்துக் கொள்ளக் கூடிய மிகச் சிறிய அளவிலான மெமரி தான் ஒரு பிட். ஒரு பிட்டில் இரண்டில் ஒரு வேல்யு தான் கொள்ளப்படும். அவை 0,1 என்பதே. அதாவது ஒரு விளக்கு இரண்டு நிலையைக் காட்டுகிறது. அது எரிந்தால் 1; எரியாமல் இருந்தால் 0. போன் அடித்தால் ஒருவர் அழைக்கிறார் (1); அடிக்கவில்லை என்றால் யாருமே அழைக்கவில்லை(0). இந்த இரண்டு பிட்கள் ஒரு சிறிய அளவில் டேட்டாவைக் கொள்ள முடிகிறது. இவற்றை ஒரு குறிப்பிட்ட அளவில் இணைத்தால் கூடுதலாக டேட்டாவினைக் கொள்ள முடியும் அல்லவா! அப்படி ஒரு தொடக்கமே ஒரு பைட். எட்டு பிட்கள் அடங்கிய யூனிட் ஒரு பைட் என அழைக்கப்படுகிறது.
ஏற்கனவே ஒரு பிட் 0 அல்லது 1 என்ற வேல்யூவினைக் கொள்ள முடியும் எனப் பார்த்தோம். எட்டு பிட்கள் சேர்ந்து ஒரு பைட் ஆகும் போது 0 முதல் 255 வரையிலான வேல்யூவினை எடுத்துக் கொள்ள முடியும். எட்டு பிட்டு தொகுதியை, அதாவது ஒரு பைட்டை இங்கு பார்ப்போம். 00000000 இங்கு எல்லாமே 0 என்பதால் இதன் மதிப்பு 0. நம் பழைய எடுத்துக் காட்டின்படி விளக்கு எரியவில்லை.
இதில் மதிப்பு 1 அளிக்க வேண்டுமானால் இதனை 00000001 என எழுதலாம். இதில் இன்னொரு மதிப்பான 2 ஐ அமைக்க என்ன செய்யலாம். சற்றே இடது புறம் நகர்ந்து 00000010 என அமைக்கலாம். இப்போது எட்டு பிட்டுகளின் மதிப்பு 2. இதனை மூன்றாக அமைக்க 00000011 என அமைக்கலாம். மதிப்பு 4 எனில் இது 00000100. இதிலிருந்து நாம் ஒரு வாய்ப்பாட்டினை அமைக்கலாம்.
பிட் 7 – மதிப்பு 128
பிட் 6 – மதிப்பு 64
பிட் 5 – மதிப்பு 32
பிட் 4 – மதிப்பு 16
பிட் 3 – மதிப்பு 8
பிட் 2 – மதிப்பு 4
பிட் 1 – மதிப்பு 2
பிட் 0 – மதிப்பு 1
எனவே 255 என்ற மதிப்பைப் பெற ஒரு பைட்டின் அனைத்து பிட்களும் ஆன் ஆகி இருக்க வேண்டும். அதாவது 11111111 என இருக்க வேண்டும். இதே போல பல பைட்களை இணைத்துத்தான் கிலோ பைட், மெகா பைட், கிகா பைட் என்றவாறு உருவாக்கப்படுகின்றன.
பைட்ஸ் ஏணி: கம்ப்யூட்டர்களும் டேட்டாவை ஸ்டோர் செய்திடும் சிடிக்கள், பிளாப்பிகள், ஹார்ட் டிஸ்க்குகள், யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்கள், டிவிடி ராம் போன்றவைகளும் பெரிய அளவில் டேட்டாவை ஸ்டோர் செய்திடுகையில் அவற்றின் அளவைக் குறிக்க கிலோபைட், மெகாபைட், கிகாபைட், டெராபைட், பெடாபைட், எக்ஸாபைட் (kilobyte, megabyte, gigabyte, terabyte, peta byte மற்றும் exabyte) எனக் குறிப்பிடுகிறார் கள்.
ஒரு கிலோ பைட் என்பது 1,024 பைட்ஸ்; பெரும்பாலானவர்கள் இதனை 1000 பைட்ஸ் என்றே எண்ணுகின்றனர். ஒரு மெகா பைட் என்பது 1,024 கிலோ பைட்ஸ், ஒரு கிகாபைட் என்பது 1,024 மெகாபைட்ஸ், ஒரு டெராபைட் என்பது 1,024 கிகாபைட்ஸ், ஒரு பெடாபைட் என்பது 1,024 பெடாபைட்ஸ்,ஒரு எக்ஸா பைட் என்பது 1,024 பெடாபைட்ஸ்
No comments:
Post a Comment