இந்திய மொழிகளில் பேஸ்புக்
இந்திய மொழிகளில் பேஸ்புக்
சமுதாய இணைய வலை அமைப்பில் முதல் இடம் பெற்றிருக்கும் பேஸ்புக் இந்தியாவில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைப் பெறும் வகையில் இந்திய மொழிகளில் தன்வலைத் தளத்தை உருவாக்கியுள்ளது. முதல் கட்டமாக தமிழ், இந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பேஸ்புக் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தமிழிலேயே தங்கள் அக்கவுண்ட்டை உருவாக்கி அப்டேட் செய்திடலாம். பேஸ்புக் வலைத்தளத்திற்குப் போட்டியாகச் செயல்பட்டு வரும் ஆர்குட் ஏற்கனவே தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒலிக் குறிப்பின் அடிப்படையில் அந்த அந்த மொழிகளில் எழுதும் வசதியைத் தந்துள்ளது. ஆனால் பேஸ் புக் இன்னும் அந்த வசதியைத் தரவில்லை. இருப்பினும் தற்போதைய வசதியின் அடிப்படையில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பேஸ்புக் பெறுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சார்ட் ஆகும் டேட்டாவில் பிரச்சினையா?
சார்ட் ஆகும் டேட்டாவில் பிரச்சினையா?
எக்ஸெல் புரோகிராமினை அலுவலகப் பணிகளுக்குப் பயன்படுத்துகையில் வேறு புரோகிராம்களில் உருவாக்கப்பட்ட டேட்டா மிக அதிகமாக ஒர்க் ஷீட்களில் பதியப்படும் சூழ்நிலைகள் உருவாகும். இவ்வாறு பதிந்துவிட்டால் நாம் எளிதாக அவற்றை எக்ஸெல் தொகுப்பு மூலம் கையாளலாம். பொதுவாக இந்த டேட்டாவினை நாம் அடிக்கடி நம் தேவைக்கேற்றபடி வகைப்படுத்துவோம். அதற்கு சார்ட்டிங் பார்முலா பயன்படுத்தப்படுகிறது.
எக்ஸெல் புரோகிராமினை அலுவலகப் பணிகளுக்குப் பயன்படுத்துகையில் வேறு புரோகிராம்களில் உருவாக்கப்பட்ட டேட்டா மிக அதிகமாக ஒர்க் ஷீட்களில் பதியப்படும் சூழ்நிலைகள் உருவாகும். இவ்வாறு பதிந்துவிட்டால் நாம் எளிதாக அவற்றை எக்ஸெல் தொகுப்பு மூலம் கையாளலாம். பொதுவாக இந்த டேட்டாவினை நாம் அடிக்கடி நம் தேவைக்கேற்றபடி வகைப்படுத்துவோம். அதற்கு சார்ட்டிங் பார்முலா பயன்படுத்தப்படுகிறது.
டேட்டா உள்ள லிஸ்ட்டினை சார்ட் செய்தபின் சார்ட் செய்த பட்டியல் சரியாக இல்லை என்றால் ஏன் இப்படி நிகழ்கிறது என்று தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருக்கும். பொறுமையாக சிந்தித்தால் இதற்கு மூன்று காரணங்கள் கிடைக்கும். முதலாவதாக டேட்டா வரிசையில் ஏதேனும் காலியாக நெட்டு வரிசைகளோ அல்லது படுக்கை வரிசைகளோ இருக்கும். காலி வரிசைகள் இருந்தால் எக்ஸெல் சார்ட்டிங் செய்கையில் அந்த வரிசைகளில் நின்றுவிடும். எனவே இவற்றைச் சரி செய்து நாமாக வரிசைகளைத் தேர்ந்தெடுத்து சார்ட் செய்திட வேண்டும்.
இரண்டாவதாக டேட்டா மிக மிக அதிகமாக இருக்கலாம். இவற்றை வைத்து தொகுத்துத் தருவதற்கான மெமரியில் இடம் குறைவாக இருக்கலாம். இதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று மெமரியில் இடம் காலி செய்து சார்ட்டிங் செய்வது. அல்லது மெமரியைக் கூட்டுவது. மூன்றாவது வழியும் உண்டு. இதே டேட்டாவினை இன்னொரு கம்ப்யூட்டரில் சார்ட் செய்வது.
மூன்றாவது வகைப் பிரச்சினையைக் காணலாம். டேட்டாவில் சில வகை எண்கள் டெக்ஸ்ட்டாக பார்மட் செய்யப்பட்டிருக்கும். சில வேளைகளில் எண்களின் வலது பக்கமாக கணக்கு அடையாளங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக மைனஸ் அடையாளம் இருக்கலாம்.
பிரச்சினைகளை அறிந்தாயிற்று. இவற்றை எப்படி தீர்க்கலாம்? எண்கள் டெக்ஸ்ட்டாக பார்மட் செய்யப்பட்டிருப்பதுதான் அடிக்கடி நடைபெறும் செயலாகும். எடுத்துக்காட்டாக ஒரு குழு டேட்டாவை சார்ட் செய்து பின் பார்க்கிறீர்கள். நெட்டு வரிசையில் எண்கள் 1 முதல் வரிசையாக 1000 வரை இருக்கும். அடுத்த செல்லில் மீண்டும் 1 லிருந்து தொடங்கும். ஏன் இப்படி என்றால் இந்த எண்கள் டெக்ஸ்ட்டாக பார்மட் செய்யப்பட்டிருக்கலாம். சார்ட் செய்யப்படுகையில் முதலில் சரியான எண்கள் எடுக்கப்படும். பின் சரியான பார்மட்டில் இல்லாத எண்கள் எடுக்கப்படும். எண்கள் டெக்ஸ்ட்டாக பார்மட் செய்யப்பட்டிருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றி அவற்றை எண்களாக மாற்றவும்.
1. ஒரு காலி செல்லில் 1 என்ற எண்ணை அமைக்கவும்.
2. அந்த செல்லை செலக்ட் செய்து கண்ட்ரோல் + சி கீகளை அழுத்தி காப்பி செய்திடவும். இது அந்த செல்லை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்கிறது.
3. அடுத்து எந்த செல்களில் எல்லாம் எண்கள் டெக்ஸ்ட்டாக பார்மட் செய்யப்பட்டுள்ளன என்று எண்ணுகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
4. Edit மெனுவில் Paste Special பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. Multiply ரேடியோ பட்டன் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனையும் உறுதி செய்திடவும்.
6. ஓகே கிளிக் செய்திடவும்.
7. காலி செல்லில் 1 என்று டைப் செய்ததை டெலீட் செய்திடவும்.
மேற்படி செயல்முறைகள் முடிந்தவுடன் டெக்ஸ்ட்டாக பார்மட் செய்தவை எல்லாம் எண்களாக மாற்றப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.
இதில் ஒன்றை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். டெக்ஸ்ட்டாக பார்மட் செய்த வேல்யூவில் ஸ்பேஸ் தவிர வேறு கேரக்டர்கள் எதுவும் இருக்கக் கூடாது. எண்கள் இல்லாத வேறு கேரக்டர்கள் இருப்பதனை கண்டறிந்து நீக்கியபின்னரே மேலே சொன்ன செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
DATEDIF கையாளும் விதம்
எக்ஸெல் தொகுப்பில் DATEDIF பார்முலா இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள காலத்தைக் கணக்கிடுவதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த காலத்தை நாட்களாகவோ, மாதங்களாகவோ, ஆண்டுகளாகவோ கணக்கிடலாம். இது குறித்து இங்கு தெளிவாகக் காணலாம். இந்த பார்முலாவின் வடிவம் =DATEDIF(Date1, Date2, Interval) என இருக்க வேண்டும். இதில் என்பது Date1 முதல் தேதி; Date2 என்பது இரண்டாம் தேதி. Interval என்பது நாம் கண்டறிய விரும்பும் இடைவெளி; நாள், மாதம் மற்றும் ஆண்டுக் கணக்கில் பெறலாம். இதில் முதல் தேதி இரண்டாம் தேதிக்குப் பின் இருந்தால் DATEDIF கட்டளை #NUM! பிழைச் செய்தியைக் காட்டும். இந்த இரண்டு தேதிகளில் ஒன்று சரியான தேதியாக இல்லாமல் இருந்தால் #VALUE பிழையினைக் காட்டும். இடைவெளிக் காலத்தைப் பின் வருமாறு அமைக்கலாம்.
’m’ என்பது மாதங்களைக் குறிக்கிறது. இதனை அமைத்தால் இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள முழுமையான மாதங்களின் எண்ணிக்கை கிடைக்கும்.
’d’ என்பது நாட்களைக் குறிக்கிறது. இந்த கட்டளைக்கு இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள நாட்கள் கணக்கிட்டுக் காட்டப்படும்.
’y’ என்பது ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்த கட்டளைக்கு இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள காலண்டர் ஆண்டுகள் கணக்கிட்டுக் காட்டப்படும்.
’ym’ என்பது ஆண்டுகள் இல்லாமல் மாதங்களைக் குறிக்கிறது. இந்த கட்டளைக்கு இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள மாதங்கள் கணக்கிட்டுக் காட்டப்படும். இந்த மாதங்கள் கொடுக்கப்பட்ட தேதிகளில் உள்ள ஆண்டுகளை ஒரே ஆண்டாக எண்ணி மாதங்கள் கணக்கிடப்பட்டுத் தரப்படும்.
’yd’ என்பது ஆண்டுகள் இல்லாமல் நாட்களைக் குறிக்கிறது. இந்த கட்டளைக்கு இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள நாட்கள் கணக்கிட்டுக் காட்டப்படும். இந்தநாட்கள் கொடுக்கப்பட்ட தேதிகளில் உள்ள ஆண்டுகளை ஒரே ஆண்டாக எண்ணி நாட்கள் கணக்கிடப்பட்டுத் தரப்படும்.
’md’ என்பது ஆண்டுகள் மற்றும் மாதங்கள் இல்லாமல் நாட்களைக் குறிக்கிறது. இந்த கட்டளைக்கு இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள நாட்கள் கணக்கிட்டுக் காட்டப்படும். இந்தநாட்கள் கொடுக்கப்பட்ட தேதிகளில் உள்ள ஆண்டுகளை யும் மாதங்களையும் ஒரே ஆண்டாகவும் மாதமாகவும் எண்ணி நாட்கள் கணக்கிடப்பட்டுத் தரப்படும்.
நீங்கள் பார்முலாவில் மேலே சொன்ன எந்த வகையிலும் இல்லாமல் வேறு ஒரு வகையை அமைத்தால் எக்ஸெல் #NUM பிழைச் செய்தியினைக் காட்டும்.
இந்த கட்டளையில் இன்டர்வெல் ஸ்ட்ரிங்கை பார்முலாவிற்குள்ளாக அமைத்தால் அதனை டபுள் கோட்ஸ் அடையாளங்களுக்குள்ளாக அமைத்துத் தர வேண்டும். எ.கா: =DATEDIF(Date1,Date2,”m”) இந்த இன்டர்வெல் இன்னொரு செல்லில் உள்ள பார்முலாவினை அடிப்படையாகக் கொண்டு அமைந்தால் இந்தகோட் அடையாளம் தேவையில்லை. எ.கா : = DATEDIF(Date1, Date2,A1). செல் A1 ல் m இருக்க வேண்டும். ”m” இருக்கக் கூடாது.
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி?
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி?
லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் பல தாங்கள் வழங்கும் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் விஸ்டா தொகுப்பினைப் பதித்தே வழங்குகின்றன. விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பில் பழக்கப்பட்டவர்கள், தங்களிடம் உள்ள தனிப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகள் விஸ்டாவில் சரியாக வருவதில்லை என உணர்ந்த பலர் எக்ஸ்பி கேட்டால் அந்த நிறுவனங்கள் தற்போது விஸ்டா தான் பதிந்து தர முடியும். அதற்கான உரிமம் தான் தற்போது அமலில் உள்ளது என்று கூறி மறுத்துவிடுகிறார்கள்.
நாம் ஏற்கனவே விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை கட்டணம் செலுத்தி பழைய கம்ப்யூட்டருக்கென வாங்கி இருந்தாலும் அதனைப் புதிய கம்ப்யூட்டரில் பதிந்து செயல்படுத்த முடியவில்லை. மேலும் புதிய கம்ப்யூட்டருக்கான வாரண்டியின் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்றால் அதில் இருக்கும் விஸ்டாவினை நீக்கிவிட்டால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்றும் கம்ப்யூட்டரை வழங்கிய நிறுவனங்கள் கூறி விடுகின்றன. இந்நிலையில் விஸ்டா இருக்கும் கம்ப்யூட்டர்களிலேயே எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் பதிந்து இயக்க முடியுமா என்று பல வாசகர்கள் மேற்கூறிய காரணங்களைக் காட்டி கேட்டுள்ளனர். அந்த நோக்கில் செயல்படுவதற்கான வழிகளை இங்கு காண்போம்.
விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீதே எக்ஸ்பி சிஸ்டத்தினையும் பதிய முயற்சித்தால் பின் விஸ்டா இயங்காமல் போய்விடும். அதன் bootloader மீது தான் புதிய இயக்கம் அமர்ந்துவிடுவதால் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேலும் விஸ்டாவின் பூட் பைலை எக்ஸ்பி பூட் பைலை எடிட் செய்வது போல அவ்வளவு எளிதாக இயக்க முடிவதில்லை. எனவே ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இயங்கும் வகையில் டூயல் பூட் என்ற அடிப்படையில் விஸ்டா இருக்கும்போதே எக்ஸ்பியையும் பதிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போதுதான் இதற்கு உதவிடும் புரோகிராம் ஒன்று இணையத்தில் இருப்பது தெரிய வந்தது. அந்த புரோகிராமின் பெயர் VistaBootPro. இந்த புரோகிராமினை www.vistabootpro.orgஎன்ற முகவரியில் உள்ள வெப்சைட்டில் இருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.
இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து அதன் மூலம் எக்ஸ்பியை விஸ்டா இருக்கும் கம்ப்யூட்டரில் பதிந்திடும் முன் ஏற்கனவே உங்கள் முக்கிய பைல்களை பேக்கப் எடுத்து அவை சரியாகப் பதியப்பட்டிருக்கின்றனவா என்பதனைச் சோதித்து அறிந்த பின் பத்திரமாக அவற்றை வைத்திடுங்கள். பின் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
1. பார்ட்டிஷன் செய்த ஹார்ட் டிஸ்க்கை மீண்டும் பிரித்தல்: My Computer ஐகானில் கிளிக் செய்து அதில் ‘Manage’ என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் மெனுவில் ‘Disk Management’ என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு எந்த டிரைவில் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்திட விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். இதில் உள்ள காண்டெக்ஸ்ட் மெனுவில் ‘Shrink Volume’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. விண்டோஸ் எக்ஸ்பிக்கு இடம் ஒதுக்குதல்: அடுத்து தேர்ந்தெடுத்த டிரைவில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை நிறுவ இடம் ஒதுக்க வேண்டும். பொதுவாக 10 ஜிபி இடம் அதற்குப் போதும். உங்கள் டிரைவின் மொத்த இடத்தைப் பொறுத்து விஸ்டா இயக்கம் இதற்கென இடம் ஒதுக்கும். அது 10 ஜிபிக்கும் குறைவாக இருந்தால் நீங்களாக 10 ஜிபி இடம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. புது வால்யூம் உருவாக்குதல்: டிஸ்க்கை (Shrunk) ஷ்ரங்க் அல்லது மறு பார்ட்டிஷன் செய்த பின்னர் எதற்கும் இடம் ஒதுக்காத ஏரியா ஒன்று டிஸ்க்கில் தென்படும். இது கிரே கலரில் ஷேட் அடித்துக் காட்டப்படும். இந்த ஏரியாவில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் New Simple Volume என்பதில் கிளிக் செய்திடவும். அதன்பின் கீழ்க்காணும் செயல்பாட்டினைச் சரியாக மேற்கொள்ளவும்.
4. புது வால்யூம் இடத்திற்கு பெயர் சூட்டலும் பார்மட் செய்தலும்: இனி இந்த புதிய இடத்தினை பார்மட் செய்திட வேண்டும். இதில் NTFS பைல் சிஸ்டம் பயன்படுத்தி அதனை விண்டோஸ் எக்ஸ்பி எனப் புதுப் பெயர் கொடுக்கவும். Quick Format என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி பின் Next என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கம்ப்யூட்டரை விண்டோஸ் எக்ஸ்பி சிடி கொண்டு பூட் செய்து இந்த இடத்தில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை பதியவும்.
Dual Booting: (டூயல் பூட்டிங்):
1. விஸ்டாவின் BCD புரபைலை பேக் அப் செய்திட: இனி டவுண்லோட் செய்த விஸ்டா பூட் புரோ புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடவும். பின் இதனை இயக்கத் தொடங்கியவுடன் Backup / Restore சென்டருக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு Browse என்பதில் கிளிக் செய்து உங்களுடைய விஸ்டா சிஸடத்தின் தற்போதைய BCD புரபைல் பைல்களை பேக் அப் செய்திடவும்.
2. பி.சி.டி. பைல்களைப் பார்த்தல்: உங்களுடைய பி.சி.டி. ரெஜிஸ்ட்ரி உங்களுக்குக் காட்டப்படும். இதில் எதுவும் எடிட் செய்திட முடியாது.
3.விஸ்டா பூட் லோடரை ரீ – இன்ஸ்டால் செய்தல்: அடுத்து System Boot loader ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு System Boot loader Install Options (சிஸ்டம் பூட் லோடர் இன்ஸ்டால் ஆப்ஷன்ஸ்) என்ற பிரிவின் கீழ் உள்ள Windows Vista Bootloader என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் மெனுவில் All Drives என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Install Bootloader (இன்ஸ்டால் பூட்லோடர்) என்பதில் கிளிக் செய்தால் விஸ்டா ஆக்டிவேட் ஆகும்.
4. பழைய விண்டோஸ் ஸ்கேன்: Diagnostics என்ற பிரிவில் Run Diagnostics என்பதில் கிளிக் செய்தால் பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்கான பதிவுகளை சிஸ்டமே செய்துவிடும்.
5. இரண்டு சிஸ்டங்களை நிர்வகித்தல்: Manage BCD OS Entries (மேனேஜ் பிசிடி ஓ.எஸ். என்ட்ரீஸ்) என்பதில் கிளிக் செய்திடவும். Rename OS entry என்பதில் செக் செய்து ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு புதுப் பெயர் கொடுக்கவும். இறுதியாக Apply Updates அப்ளை அப்டேட்ஸ் என்பதில் கிளிக் செய்து ரீஸ்டார்ட் செய்திடவும்.
மேலே சொன்ன அனைத்தும் சரியாக மேற்கொள்ளப்பட்டால் Windows Boot Manager மெனு விஸ்டா மற்றும் எக்ஸ்பி ஆகிய இரண்டு சிஸ்டங்களிலும் பூட் செய்திட ஆப்ஷன்களைக் காட்டும்.
சில குறிப்புகள்: உங்களுடைய முக்கியமான டாகுமெண்ட் பைல்களை (இமெயில், மியூசிக், வீடியோஸ் மற்றும் முக்கிய ஆவணங்கள்) ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட்டுள்ள டிரைவில் பதியப்படுவதனைத் தவிர்க்கவும். இதன் மூலம் முக்கிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் தற்செயலாக நம்மையும் அறியாமல் அழிக்கப்படும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கலாம். விஸ்டா மூலம் டிரைவ் பார்ட்டிஷனை மீண்டும் புதுப்பிக்கும் பணியினை மேற்கொள்ளலாம். ஆனாலும் அதில் சில வரையறைகள் உள்ளன. இந்த வகையில் EASEUS Partition Manager என்னும் இலவச புரோகிராம் நமக்கு நம் தேவைக்கேற்றபடி உதவும் வகையில் உள்ளது. இதனை சர்ச் இஞ்சின் மூலம் தேடி டவுண்லோட் செய்து பதிந்து பயன்படுத்தலாம்.
மீடியா பார்மட்டுகளை மாற்ற
மீடியா பார்மட்டுகளை மாற்ற
ஒரு காலத்தில் செங்கல்கற்களைப் போல அடுக்கி வைத்து எடுத்துச் செல்லும் வி.எச்.எஸ். வீடியோ டேப்புகளைப் பயன்படுத்தி வந்தோம். பொறுமையாக அவற்றை ரீ வைண்ட் செய்தும் பார்வேர்ட் செய்தும் படங்களைப் பார்த்து வந்தோம். இப்போது அத்தகைய வீடியோ ரெகார்டர்களும் பிளேயர்களும் தூங்குகின்றன. 0,1 என டிஜிட்டல் உலகம் தலை காட்டிய பின் இவற்றிற்கு வேலையே இல்லை என்றாகிவிட்டது. பழைய அனலாக் வி.எச்.எஸ். டேப்புகளைக் காண்பது அரிதாகிவிட்டது. அரிதாகிவிட்டது என்று எழுதுவதைக் காட்டிலும் கடினமாகி விட்டது எனலாம். ஏனென்றால் டிஜிட்டல் பார்மட்டில் வீடியோவும் ஆடியோவும் வந்தபின் அவற்றைக் கையாள்வதும் தூக்கிச் செல்வதும் மிக மிக எளிதான ஒன்றாக மாறிவிட்டன.
ஆனாலும் டிஜிட்டல் வடிவங்களிலும் குழப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பலவகையான பார்மட்டுகள் உலவுகின்றன. மூவிங் பிக்சர் எக்ஸ்பர்ட்ஸ் குரூப் (Moving Picture Experts Group) MPEG 1, MPEG 2, MPEG4 எனப் பலவகையான பார்மட்டுகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த பார்மட்டுகளின் இடையே மாற்றிக் கொள்ளக் கூடிய வழிகளும் நமக்குக் கிடைக்கின்றன. இந்தக் கட்டுரையில் அது போன்ற மாற்றித் தரும் வீடியோ கன்வெர்டர் புரோகிராம்கள் சிலவற்றைப் பற்றி தகவல்கள் தரப்படுகின்றன. எடுத்துக் காட்டாக உங்களிடம் டிவிடி ஒன்றில் எடுத்த உங்களின் திருமண வைபோக விழாவின் வீடியோ உள்ளது. இதனை ஐ–பாட் சாதனம் ஒன்றில் பார்க்கும் வகையிலான பார்மட்டில் அமைத்து மனைவிக்குத் தர விரும்புகிறீர்கள். எப்படி அதற்கேற்ற பார்மட்டிற்கு மாற்றுவது?
இந்த சூழ்நிலையில் உங்களுக்கு உதவுவதற்கென்று பல மீடியா கன்வெர்டர்கள் உள்ளன. சில இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கின்றன. சிலவற்றிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். சில புரோகிராம்கள் விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் தனித்தனி புரோகிராம்களாகக் கிடைக்கின்றன.
1. Any Video Converter : இந்த புரோகிராம் பல அருமையான மாற்றங்களுக்கான வசதிகளைக் கொண்ட கட்டணம் செலுத்திப் பெறும் புரோகிராம் ஆகும். பலவகையான பார்மட்டுகள் இடையே பல கோடக் விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அதனுடன் பிரேம் ரேட் மற்றும் ரெசல்யூசன் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நம் அறியாமையைக் காட்டும் சூழ்நிலைகளை இந்த புரோகிராம் தருவதில்லை. இதன் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் மிக மிக எளிமையாக உள்ளது. மூன்றே மூன்று நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. முதலில் எந்த வீடியோவினை இன்புட் செய்திட வேண்டுமோ அதனை இயக்கி உள்ளிட வேண்டும். அடுத்து எந்த பார்மட்டில் வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்மட்டில் வீடியோ கிடைக்கும். இது மாற்றும் பார்மட்டுகளின் பல்வேறு பிரிவுகள் நம்மை வியக்க வைக்கின்றன. இதன் இலவசப் பதிப்பு கூட avi, asf, mov, rm, rmvb, flv, mkv, mpg, 3gp, m4v, and vob to avi, wmv, mp4, 3gp, mpg (PAL or NTSC), MPEG1 and MPEG2, wmv மற்றும் flv என அனைத்து பார்மட்டுகளையும் கையாள்கிறது. இதன் மூலம் யு–ட்யூப் வீடியோ காட்சிகளைக் கூட உங்கள் மொபைல் போனில் பார்த்து ரசிக்கும் வகையில் பார்மட்டினை மாற்றிக் கொள்ளலாம். இதனை டவுண்லோட் செய்திடhttp://www.anyvideoconverter.com/downloadavcfree.php என்ற முகவரிக்குச் செல்லவும்.
இந்த புரோகிராமில் ஒரு சிறிய பிரச்சினை உள்ளது. இதனால் மாற்ற முடியாத வீடியோ பார்மட் என ஒன்று இருந்தால் உடனே எர்ரர் மெசேஜ் கொடுக்காமல் ஆடியோவை மாற்றி விட்டு பின்னர் இறுதியில் எர்ரர் மெசேஜ் கொடுக்கிறது. இதனைத் தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் இறுதியில் ஆர்வத்துடன் நாம் பார்மட் மாறியிருக்கும் என எண்ணிப் பார்க்கையில் கருப்பு திரையில் அதன் ஆடியோ மட்டும் கிடைத்தால் எப்படி இருக்கும்!!
2. ஹேண்ட் பிரேக் (Handbrake): இது ஓர் இலவச சாப்ட்வேர். இதற்கான மேக் மற்றும் லினக்ஸ் வடிவங்களும் கிடைக்கின்றன. ஏறத்தாழ அனைத்து டிவிடி பார்மட் பைல்களையும் இது மாற்றித் தருகிறது. இதனுடன் கிடைக்கும் கூடுதல் வசதிகளும் அருமையாக உள்ளன. இன்புட் வீடியோவிற்கான பிட் ரேட் கால்குலேட்டர், ஓரளவிற்கு கிடைக்கும் சப் டைட்டில் வசதி, வீடியோ படங்களை இன்டர்லேஸ் செய்வது, கிராப் மற்றும் ஸ்கேலிங் செய்வது போன்றவற்றையும் இதில் மேற்கொள்ளலாம். இதில் சிரமம் தரும் விஷயம் எதுவும் இல்லை என்றாலும் இதன் கிராபிகல் யூசர் இன்டர்பேஸை இன்னும் எளிதாக வடிவமைத்திருக்கலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராம் அனைத்து பார்மட்டுகளையும் .m4v என்ற பார்மட் டுக்கு மாற்றுகிறது. இது மேக் மற்றும் ஐபாட் சாதனங்களில் பிரச்சினை எதனையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் அவற்றிற்கு .m4v பார்மட் தான் தேவைப்படுகிறது. ஆனால் வேறு இடங்களில் இயக்கப்பட வேண்டுமென்றால் அங்கு .mp4 தேவைப்படலாம். எடுத்துக் காட்டாக XBox 360 என்ற சாதனத்தில் இயக்க mp4 தான் வேண்டியதிருக்கும். இந்த பார்மட் பல இடங்களில் தேவைப்படுவதால் இதனை டிபால்ட் பார்மட்டுகளில் ஒன்றாக வைத்து பயன்படுத்துபவரிடம் ஆப்ஷன் கேட்கும் வகையில் அமைக்கலாம். இருப்பினும் அவுட்புட் பைல் எந்த பார்மட்டில் வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்பட்டு எம்பி4 கிடைப்பது ஆறுதலைத் தருகிறது. இந்த சாப்ட்வேர் புரோகிராமினை டவுண்லோட் செய்திட http://handbrake.fr/?article=download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.
3. சூப்பர் (Super) : அடுத்ததாக Super என்ற புரோகிராமினை இங்கு சொல்லியே ஆக வேண்டும். மேலே கூறப்பட்ட இரண்டு புரோகிராம்களைக் காட்டிலும் அப்படி ஒன்றும் சிறப்பான கூடுதல் வசதிகள் இதில் இல்லை என்றாலும் இதன் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் மிக மிகச் சிறப்பாக உள்ளது. அது மட்டுமின்றி அவற்றின் வழியாக பயன்படுத்துபவர் தேர்ந்தெடுக்கப் பல ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவே சராசரி பயனாளரை பயப்படவைக்கிறது. பரவலாகக் கேள்விப்படாத பார்மட்டுகளெல்லாம் இதன் வழி மாற்றப்படுகின்றன. அதனால் அவற்றின் பெயர்களைப் (TS or M2TS / FFmpeg/ MEncoder/MPlayer) படித்துப் பார்க்கையில் சாதாரணப் பயனாளர் குழப்பமடையலாம்.
மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் மீடியா மாற்றுகையில் இது சற்று அதிக நேரம் எடுக்கிறது.சி.பி.யு.விற்கு அதிக வேலை அளிக்கிறது. இதனை டவுண்லோட் செய்திடhttp://www.erightsoft.com/Superdc.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தை அணுகவும்.
இன்னும் பல மீடியா கன்வெர்டர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. MediaCoder மற்றும் Formatfactory ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்கன. இவையும் மேலே குறிப்பிட்ட மீடியா கன்வெர்டர்கள் போலச் செயல்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒரு சில கூடுதல் வசதிகளையும் தவிர்த்திருக்கக் கூடிய குறைகளையும் கொண்டுள்ளன. நமக்கு எது எளிது எனத் தெரிகிறதோ, அவற்றை டவுண்லோட் செய்து இயக்கிப் பயன்படுத்துவது நல்லது.
பைலைத் திறக்கும் புரோகிராம் எது?
இன்டர்நெட்டில் இருந்து ஆசை ஆசையாக புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்திருப்போம். உடனே அதனை இயக்கிப் பார்க்க ஆசைப்பட்டு அதில் டபுள் கிளிக் செய்து ஆஹா இதோ புரோகிராம் இயங்கப்போகிறது; அதில் உள்ள புது விஷயங்களைத் தெரிந்து கொண்டு மற்றவர்களிடம் காட்டப் போகிறோம் என்று கர்வத்துடன் மானிட்டர் திரையைப் பார்ப்போம். ஆனால் அங்கோ இந்த புரோகிராமை எதில் திறக்க? என்ற வகையில் Open With என்று ஒரு சிறிய விண்டோ திறக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட்வேர் புரோகிராம்களின் பட்டியல் இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் உட்பட. இதில் எதைத் தேர்ந்தெடுக்க? என்ற யோசனையில் சில நேரம் செலவழித்துவிட்டு இதைக் கிளிக் செய்திடலாமே என்று ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்போம். ஆனால் மீண்டும் சில நேரம் கழித்து இதை விண்டோஸ் இயக்கத்தினால் திறக்க முடியவில்லை. வேறு ஒரு புரோகிராமினை இன்டர்நெட்டில் தேடலாமா? என்று ஒரு பரிந்துரையுடன் கூடிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
என்ன செய்யலாம்? இது போன்ற ஒரு சூழ்நிலையில்தான் விரக்தியின் விளிம்பு வரை சென்று கூகுள் சர்ச் இஞ்சினில் Open With என டைப் செய்து என்டர் தட்டினால் உடனே கிடைத்த பட்டியலில் என்று ஒரு தளம் இருப்பது தெரிய வந்தது. அதனைத் திறந்து காண்கையில் இப்படிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கென்றே இந்த தளம் உருவாக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த தளத்தைப் பார்ப்பதே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. முதல் காரணம் இதன் சேவை முற்றிலும் இலவசம். அடுத்ததாக நாம் எதிர்பார்க்கும் மற்றும் எதிர்பாராத பல எக்ஸ்டென்ஷன்கள் கொண்ட பைல்களுக்கெல்லாம் இது திறக்கும் புரோகிராமின் பெயரைத் தருகிறது. ஏன் ..PNG, SQL, மற்றும் CKZ என்றெல்லாம் கூட எக்ஸ்டென்ஷன்கள் உள்ளன என்று இங்கு தான் அறிந்து கொண்டேன். நீங்கள் திறக்க விரும்பும் பைலின் எக்ஸ்டென்ஷன் பெயரின் முதல் எழுத்தை டைப் செய்தால் அந்த எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு எக்ஸ்டென்ஷன் உள்ள அனைத்து பைல்வகைகளின் பட்டியலும் அவற்றிற்கான புரோகிராம்களும் தரப்படுகின்றன. எடுத்துக் காட்டாக ஆ என டைப் செய்தால் BAT, .BFL என்ற எக்ஸ்டென்ஷன்கள் எல்லாம் காட்டப் படுகின்றன.
இவற்றைக் காட்டிவிட்டால் போதுமா? அதற்கான புரோகிராம் நம்மிடம் இல்லையே என்ற சூழ்நிலையும் ஏற்படும். இதற்கும் இந்த தளம் தீர்வினைத் தருகிறது. எந்த எக்ஸ்டென்ஷன் கொண்ட பைலைத் திறக்க புரோகிராமினைத் தேடுகிறீர்களோ அதில் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இருக்கும் தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இலவசமாக புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கலாம். இது நிச்சயமாய் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு தளமாக உள்ளது. எனவே புக்மார்க் செய்து கொள்ளுங்கள். அடிக்கடி தேவைப்படும். இதன் முகவரி http://www.openwith.org/
ஏன் வைரஸ்களை உருவாக்குகிறார்கள்?
ஏன் வைரஸ்களை உருவாக்குகிறார்கள்?
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பலரின் நேரத்தையும் உழைப்பையும் தேவையற்ற முறையில் வீணாக்குவது வைரஸ்களே. எந்த நேரமும் ஒரு பயத்தை உருவாக்கி எந்த ரூபத்தில் வந்து நம் பைல்களைக் காலி செய்திடுமோ? இயக்கத்தை முடக்கி வைத்துவிடுமோ என்ற அச்சத்துடன் நாம் கம்ப்யூட்டரை இயக்க வேண்டியுள்ளது. இந்த சிந்தனையுடன் ஏன் கம்ப்யூட்டர் வைரஸ்களை உருவாக்குகிறார்கள் என எண்ணியபோது கிடைத்த எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பலரின் நேரத்தையும் உழைப்பையும் தேவையற்ற முறையில் வீணாக்குவது வைரஸ்களே. எந்த நேரமும் ஒரு பயத்தை உருவாக்கி எந்த ரூபத்தில் வந்து நம் பைல்களைக் காலி செய்திடுமோ? இயக்கத்தை முடக்கி வைத்துவிடுமோ என்ற அச்சத்துடன் நாம் கம்ப்யூட்டரை இயக்க வேண்டியுள்ளது. இந்த சிந்தனையுடன் ஏன் கம்ப்யூட்டர் வைரஸ்களை உருவாக்குகிறார்கள் என எண்ணியபோது கிடைத்த எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
ஏன் வைரஸ்களை உருவாக்குகிறார்கள்? சரியான கேள்வி தான். இதற்கான விடைகள் பலவாறாக உள்ளன.
1. தனி மனித மனப் பிரச்சினகள்: பல பதில்கள் கிடைத்தாலும் இந்த பதில் சற்று வேடிக்கையாக இருக்கிறது. தாங்கள் மற்றவர்களைக் காட்டிலும் இந்த கம்ப்யூட்டர் உலகில் வலிமை படைத்தவராக இருக்கிறோம் என்ற உணர்வைப் பெற பலர் வைரஸ்களை உருவாக்குகின்றனர். இந்த உணர்வை மற்றவர்களிடம் காட்டாவிட்டாலும் தங்களுக்குத் தாங்களே இந்த எண்ணத்தை ஊட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு எந்த பலனும் பயனும் இதில் கிடைக்கவில்லை என்றாலும் தன் திறமையைக் கொண்டு சிறிய அளவிலாவது அழிவை உருவாக்கிவிட்டேன் என்ற தீய சிந்தனை இவர்களுக்கு ஏற்படுகிறது. வைரஸ் குறித்து பத்திரிக்கைகள் மற்றும் இணையதள மீடியாக்கள் எழுதுகையில் ஏதோ ஒரு சாதனை புரிந்தது போல் எண்ணிக் கொள்கிறார்கள். அதனால் தான் ஒருவர் தான் உருவாக்கிய வைரஸ் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது என்ற செய்தியைப் பெற்றபின் அதைக் காட்டிலும் அதிக சேதத்தை விளைவிக்கும் வைரஸை எழுத முயற்சிக்கிறார்.
2.பணம்: இதுதான் பலரை இழுக்கும் தூண்டில். வைரஸ் உருவாக்கி எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? பல வழிகளில் சம்பாதிக்கலாம் என்று தெரிகிறது. முதலாவதாக டேட்டா திருட்டு. வைரஸ் மூலம் அடுத்தவர்களின் கம்ப்யூட்டரில் நுழைந்து தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தும் தகவல்களைத் திருடுவது. தனிப்பட்டவரின் கிரெடிட் கார்டு தகவல்களைக் கண்டறிந்து அதனைப் பயன்படுத்தி பணம் திருடுவது இன்று மேல் நாடுகளில் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு குற்றம் ஆகிவிட்டது. இன்னொன்று அடுத்தவரின் கம்ப்யூட்டரை முடக்கி அதனைப் பணயக் கைதியாக்கிப் பணம் பறிப்பது. முதலாவதாக நேரடியாகவே கம்ப்யூட்டரின் உரிமையாளரை தான் தான் இப்படிச் செய்ததாகக் கூறி மீண்டும் இயக்க பணம் கேட்பது. இன்னொரு வழியில் தான் அதற்கு தீர்வு காணும் மூன்றாவது மனிதனைப் போல் சென்று பணம் பெறுவது. இவற்றை ஆங்கிலத்தில் “ransomware” என்று அழைக்கின்றனர். ransom என்ற சொல் பணயக் கைதியை விடுவிக்க வழங்கப்படும் பணம்.
3. குழு ஆதிக்கம்: ரௌடிக் கும்பல்கள் போல வைரஸ் உருவாக்கும் குழுக்கள் ஆன்லைனில் இயங்குகின்றன. இவர்கள் வைரஸ் உருவாக்கி பணம் சம்பாதிப்பதில்லை. ஆனால் குழுவாகச் சேர்ந்து கொண்டு தங்களால் வைரஸ்களை உருவாக்கி அழிவைத் தர முடியும் என ஆன்லைனில் வெப்சைட்டுகளில் ஆரவாரமிடுவது இவர்கள் பொழுதுபோக்கு. இதே போல் பல கும்பல்களை இன்டர்நெட்டில் காணலாம். இதில் ஒரு மோசமான விஷயம் என்னவென்றால் இந்த குழுக்கள் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதுதான்.
4. அரசியல் மற்றும் சமூகப் பழி தீர்த்தல்: அண்மையில் இந்திய தேசிய கட்சி ஒன்றின் இணைய தளத்தில் ஹேக்கர்கள் புகுந்து அங்கு தரப்பட்டிருந்த தகவல்களை எல்லாம் மாற்றி வைத்துவிட்டதாக செய்திகள் வந்தன. இதுவும் ஒரு குழு ஏகாதிபத்திய மனப்பான்மை தான். ஒரு அரசியல் கட்சி அல்லது சமூகக் குழுவினருக்கு தொல்லை தருவது அல்லது அதனைத் தாக்கும் ஒரு வழியாக வைரஸை உருவாக்குவது இப்படிப்பட்டவர்களின் வேலயாக உள்ளது. இவர் கள் வைரஸ்களை உருவாக்கி அழிக்கும் வழியே அலாதியாக இருக்கும். எடுத்துக் காட் டாக ஒரு அரசியல் கட்சியின் இணைய தளத் தைக் கெடுக்க ஒரு வைரஸ் எழுதப்பட் டது. ஆனால் அது நேராக அந்க கட்சியின் தளத்தை ஆக்ரமிக்கும் வகையில் எழுதப்படவில்லை. அதற் குப் பதிலாக உலகின் பல்வேறு இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த வைரஸ் புரோகிராமினைப் பதிப்பது முதல் வேலையாக உள்ளது. அந்த வைரஸ் குறிப் பிட்ட நாளில் அக்கட்சியின் இணைய தளத் தைத் தான் தங்கும் கம்ப்யூட் டரில் இருந்து தாக்குவது போல அமைக்கப் பட்டிருக்கும். அது அடுத்த நிலையாக இருக்கும். பாதிக் கப்படுபவர் இந்த வைரஸ் எங்கிருந்து உருவானது என்று அறிய முடியாது. ஏனென்றால் வைரஸ்கள் சம்பந்தமில்லாத கம்ப் யூட் டர்களிலிருந்து அந்த கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கே தெரி யாமல் அந்த அரசியல் கட்சியின் இன்டர்நெட் வெப் சைட் டைத் தாக் கியிருக்கும். இன்னும் பலவகை வைரஸ் தாக்குதல்கள் நாள்தோறும் உருவாகி வருகின் றன. சைபர் உலகின் சாபக்கேடாக இது மாறிவிட்டது. வேறு வழியின்றி இத்தகைய மோசமானவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே நாம் நம் உழைப்பையும் நேரத்தையும் செலவழிக்க வேண்டியதுள்ளது.
விளையாட கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டுமா?
விளையாட கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டுமா?
கேம்ஸ் விளையாடுவது நல்லதுதான். அது ஒரு சிறந்த பொழுதுபோக்கும் கூட. ஒரு சில கேம்ஸ் நம் தர்க்க ரீதியான சிந்தனையை, லாஜிக்கலாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கின்றன என்பதுவும் உண்மையே. அண்மைக் காலத்தில் மிக அழகான கிராபிக்ஸ் பின்னணியில் கேம்ஸ் வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இப்போது சிடி மற்று ம் டிவிடியில் கேம்ஸ் பதியப்பட்டுக் கிடைத்தாலும் பலர் இன்டர்நெட்டில் கட்டணம் செலுத்தியோ, இலவசமாகவோ கிடைக்கும் கேம்ஸ்களையே விரும்பி டவுண்லோட் செய்கின்றனர். ஆன்லைனிலேயே கேம்ஸ் விளையாடும் வசதியும் நிறைய கிடைக்கிறது. முகம் தெரியாத எங்கோ இருக்கும் ஒருவருடன் இன்டர்நெட் வழியாக விளையாட விளையாட்டுக்களைத் தரும் இணைய தளங்களும் உள்ளன.
கேம்ஸ் குறித்த இணைய தளங்களை இங்கு காணலாம். அதிகமான எண்ணிக்கையில் மிகவும் ஆர்வமூட்டும் விளையாட்டுக்களைத் தரும் தளங்கள் என எடுத்துக் கொண்டால் மூன்று தளங்களைக் கூறலாம். அவை: Game Daily (www.gamedaily.com) GameSpot (www.gamespot.com) Game Fly (www.gamefly.com) இவற்றில் முதலில் குறிப்பிட்ட Game Daily என்ற தளத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒன்றரைக் கோடி பேர் கேம்ஸ் பெற வருகின்றனர். விளையாட்டுக்களை விளையாடத் தேவையான பலவிதமான கன்சோல்கள், மெஷின்கள் மற்றும் டவுண்லோட் செய்யக் கூடிய கேம்ஸ், அவை குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் என கேம்ஸ் குறித்து அனைத்து கோணங்களிலும் தகவல் தரும் தளமாக இது உள்ளது. பல கேம்ஸ் இலவசமாக இங்கு கிடைத்தாலும் பல புதிய கேம்ஸ் பெற கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும்.
கேம்ஸ்பாட் (GameSpot) ஒரு கிராபிக்ஸ் நிறைந்த கேம்ஸ் தளமாகும். பெர்சனல் கம்ப்யூட்டர், எக்ஸ் பாக்ஸ் 360, வை, பி.எஸ்.3 என அனைத்து வகை பிரபலமான கேம்ஸ் சாதனங்கள் குறித்தும் இங்கு அறிந்து கொள்ளலாம். அவ்வப்போது வெளியாகும் புதிய கேம்ஸ் குறித்து இங்கு கருத்துக் கட்டுரைகள் வெளியாகின்றன. இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ள கேம்ஸ் தருவதுடன் கட்டணம் செலுத்திப் பெறும் கேம்ஸ்களையும் இந்த தளம் கொண்டுள்ளது.
இந்த தளத்தில் இயங்கும் குழுவில் நீங்களும் இணைந்து கேம்ஸ் குறித்த உங்கள் கருத்துக்களை மற்றவர்களுடம் பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தின் மேலாக உள்ள ஸ்போர்ட்ஸ் ஐகானில் கிளிக் செய்தால் நீங்கள் இன்னொரு இணைய தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு பலவகையான வீடியோ கேம்ஸ் பட்டியலிடப்பட்டிருப்பதனைக் காணலாம். இங்குள்ள நியூஸ் ஐகானில் கிளிக் செய்தால் வீடியோ கேம்ஸ் குறித்த அனைத்து செய்திகளையும் பெறலாம்.
கேம் ப்ளை (GameFly) என்பது வீடியோ கேம்களுக்கான இன்னொரு அருமையான வெப்சைட். இந்த தளம் லேட்டஸ்ட் வீடியோ கேம்ஸ்களை தொடர்ந்து அப்டேட் செய்து தந்து கொண்டே இருக்கிறது. இதன் மூலம் ஒரு வீடியோ கேமினை அமெரிக்காவில் வாடகைக்குக் கூட பெறலாம். இதில் தற்போது 6000க்கும் அதிகமான வீடியோ கேம்ஸ் உள்ளன.பலவகையான கேம்ஸ் விளையாடும் சாதனங்களுக்கான (Playstation 3, Playstation 2, PSP, XBox 360, Xbox, Wii, GameCube, Nintendo DS, Gameboy etc.) கேம்ஸ்கள் இங்கு உள்ளன. இது இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு கேம்ஸ்களை வழங்குமா என்பது இனிமேல் தான் தெரியும்.
செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க
செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க
வீடுகளில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்று இருப்பது வழக்கமாகிவிட்ட நிலையில் ஒரு கம்ப்யூட்டரை பலர் இயக்குவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் ஒருவருக்கு கம்ப்யூட்டர் அத்தியாவசியத் தேவையாக இருக்கும். அவரே அதில் உள்ள செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை அமைத்து இயக்கிவருவார். மற்றவர்கள் தங்கள் தேவைகளுக்கேற்ப கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால் மற்றவர்கள் அவ்வாறு பயன்படுத்துகையில் தாங்கள் விரும்பும் சில மாற்றங்களை கம்ப்யூட்டரில் ஏற்படுத்திவிடுவார்கள். இது கம்ப்யூட்டரிலேயே தங்களின் பல வேலைகளை மேற்கொள்வோருக்கு எரிச்சல் தரும் நிலையை தோற்றுவிக்கும்.
வீடுகளில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்று இருப்பது வழக்கமாகிவிட்ட நிலையில் ஒரு கம்ப்யூட்டரை பலர் இயக்குவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் ஒருவருக்கு கம்ப்யூட்டர் அத்தியாவசியத் தேவையாக இருக்கும். அவரே அதில் உள்ள செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை அமைத்து இயக்கிவருவார். மற்றவர்கள் தங்கள் தேவைகளுக்கேற்ப கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால் மற்றவர்கள் அவ்வாறு பயன்படுத்துகையில் தாங்கள் விரும்பும் சில மாற்றங்களை கம்ப்யூட்டரில் ஏற்படுத்திவிடுவார்கள். இது கம்ப்யூட்டரிலேயே தங்களின் பல வேலைகளை மேற்கொள்வோருக்கு எரிச்சல் தரும் நிலையை தோற்றுவிக்கும்.
எடுத்துக் காட்டாக வேர்டில் ரூலர் , நார்மல் டெம்ப்ளேட், எக்ஸெல் தொகுப்பில் தேதி அமைப்பு, பக்க அமைப்பு, பிரவுசர் செட்டிங்ஸ், இமெயில் செட்டிங்ஸ் ஆகியவை குறிப்பிட்ட அமைப்பில் வைத்து பழகியவர்களுக்கு திடீரென மாற்றங்கள் இருந்தால் அவற்றில் வேலை பார்ப்பது சிரமமாகிவிடும். எனவே மற்றவர்கள் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸை மாற்றுவதைத் தடை செய்திட வேண்டும் என எண்ணுவார்கள்.
குழந்தைகள் கம்ப்யூட்டரைப் பகிர்ந்து பயன்படுத்தும் இல்லங்களில் இது போன்ற சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படும். தேவையற்ற புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து வைப்பதும், இன்டர்நெட்டில் செட்டிங்ஸை மாற்றி பயன்படுத்துவதும் குழந்தைகள் அடிக்கடி செய்யும் தவறுகளாகும்.
இது போன்ற பிரச்சினைகளில் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாக்கவும் அதன் மூலம் உங்களின் நலனைப் பாதுகாக்கவும் விண்டோஸ் Steadystate என்று ஒரு புரோகிராமினை இலவசமாகத் தருகிறது. இதை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால் உங்களைத் தவிர வேறு யாரும் செட்டிங்ஸ் மாற்ற முடியாது. இதை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம்.
1. இந்த புரோகிராமின் பெயர் விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் (Windows Steadystate) இது கிடைக்கும் தள முகவரி: www.microsoft.com/windows/products/winfamily/sharedaccess இந்த தளம் சென்று புரோகிராமினை இறக்குவதற்குள் உங்கள் கம்ப்யூட்டரைத் தயார் செய்திட வேண்டும். அனைத்து டிஸ்க்குகளையும் முதலில் டிபிராக் செய்திடுங்கள். இதற்கு Start>>All Programs>> Accessories>>System Tools>>Disk Defrag menter எனச் செல்லவும். அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளையும் தேர்ந்தெடுத்து பின் டிபிராக்மெண்ட் பட்டனை அழுத்தவும். இதற்கு சிறிது நேரம் ஆனாலும் பொறுமையாக இந்த வேலையை மேற்கொள்ளவும். முடிந்தவுடன் மைக்ரோசாப்ட் அப்டேட் தளம் சென்று அண்மைக் காலத்தில் மைக்ரோசாப்ட் வழங்கிய அப்டேட் பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுவிட்டதா என்பதைச் சோதித்துப் பதியப்படாமல் இருந்தால் பதியவும். பின் நீங்கள் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் தொகுப்பிற்கான தளம் சென்று அதனையும் அப்டேட் செய்திடவும். அத்துடன் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்டிருப்பதனையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இதனை Control Panel>> User Accounts சென்று ஆப் ஷனில் உறுதி செய்யலாம்.
2. இனி விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டியதுதான். மேலே குறிப்பிட்ட மைக் ரோசாப்ட் தளம் சென்று அத்தளத்தில் உள்ள டவுண்லோட் பட்டனை அழுத்தவும். முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண் டோஸ் எக்ஸ்பி காசு கொடுத்து வாங்கிய ஒரிஜினல் பதிப்பா என்ற சோதனை மேற்கொள் ளப்படும். இந்த வேலிடேஷன் சோதனை முடிந்தவுடன் டவுண்லோட் பட்டனை அழுத்தி புரோகிராமினை டவுண்லோட் செய் திடவும். இதை டெஸ்க் டாப்பில் சேவ் செய்திடவும். பின் இது டெஸ்க்டாப்பில் இருக்கும் இடம் அறிந்து SteadyState_Setup_ENU.exe என்ற பைலை டபுள் கிளிக் செய்திடவும். டயலாக் பாக்ஸ்களுக்கு யெஸ் கொடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்தியவாறு தொடர்ந் தால் புரோகிராம் பதியப்பட்டுவிடும்.
3. அடுத்து இந்த புரோகிராமினை இயக்கவும். ஸ்டார்ட் – ஆல் புரோகிராம்ஸ் சென்று இயக்கலாம். அல்லது டெஸ்க்டாப்பில் இதன் ஐகானில் மீது கிளிக் செய்து இயக்கலாம். இந்த புரோகிராம் இயங்கத் தொடங்குகையில் உடனே ஹெல்ப் மெனு திறக்கப்படும். இதனை மூடவும். திரையின் வலது பக்கத்தில் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற யூசர் அக்கவுன்ட்ஸ் அனைத்தும் காட்டப்படும். அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் காட்டப்பட மாட்டாது. உங்களுக்குத் தேவையான பிற யூசர் அக்கவுண்ட்கள் இல்லை என்றால் புதிய யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கலாம். இதற்கு ‘Add a New user’ என்ற லிங்க் கில் கிளிக் செய்து பெயர் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து ஓகே கிளிக் செய்தால் யூசர் அக்கவுண்ட் தொடங்கப்படும்.
4. இதில் உள்ள ஜெனரல் டேப்பினைப் பயன்படுத்தி யூசர் ஒருவர் தன் அக்கவுண்ட்டிற்கு நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துவதைத் தடுக்கலாம். இதில் ஒரு யூசர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம் என்பதையும் செட் செய்திட முடியும்.
5. அடுத்து Windows Restrictions என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் இயக்கத்தின் குறிப்பிட்ட சில வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து அமைக்கலாம். இதில் High, Medium, Low மற்றும் No Restrictions என நான்கு வகையான தடுப்பு நிலைகள் உள்ளன. நீங்கள் அமைக்கவிரும்பும் வகையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இங்கு காணப்படும் பட்டியலில் விண் டோஸ் வசதிகள் அனைத்தும் காணப்படும். ஒரு குறிப்பிட்ட யூசரைக் கண்ட்ரோல் பேனல் பக்கம் செல்ல முடியாதபடி கூட அமைக்கலாம்.
6. இந்த பட்டியலில் இன்னும் கீழாக ஸ்குரோல் செய்து போனால் இன்னும் பல வகையான தடுப்பு ஆப்ஷன்களைக் காணலாம். ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அணுக முடியாமல் தடுத்தல், சிடிக்கள் தானாக இயங்கும் ஆட்டோ பிளேயைத் தடுத்தல்,சிடி மற்றும் டிவிடிக்களை உருவாக்குவதைத் தடுத்தல் போன்ற பல வழிகள் காட்டப்படும். இறுதியில் அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளும் மற்றும் இணைத்து எடுக்கக் கூடிய டிஸ்க்குகளும் பட்டியலிடப்படும். இதன் எதிரே உள்ள பாக்ஸ்களில் டிக் செய்தால் அந்த ஹார்ட் டிஸ்க் மறைக்கப்பட்டுவிடும்.
7. அடுத்ததாக Feature Restrictions டேப் செல்லலாம். இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்புகளில் குறிப்பிட்ட அளவில் தடை ஏற்படுத்தலாம். இன்டர்நெட் பயன்பாட்டினையே தடை செய்யலாம். அல்லது குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டும் செல்லும் வகையில் செட்டிங்ஸை அமைக்கலாம்.
8. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினைப் பொறுத்தவரை விசுவல் பேசிக் புரோகிராமினை செயல் இழக்கச் செய்துவிட்டால் இதில் வைரஸ் பாதிக்கும் வழிகளை அடைத்துவிடலாம். அதே போல Addin மெனுவைத் தடுத்து விட்டால் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் ஏற்கனவே இருக்கின்ற ஆட்–இன் வசதிகளை நீக்க முடியாது. புதிதாக எதனையும் சேர்க்கவும் முடியாது.
9. அடுத்து Blocked Programs என்ற டேப் செல்லலாம். இதில் கிளிக் செய்தால் இடது பக்கம் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். தடை செய்யப்பட வேண்டிய புரோகிராம்களுக்கு எதிரே டிக் செய்தால் அவை வலது புறம் மாறிவிடும். அனைத்து புரோகிராம்களையும் தடை செய்திட வேண்டும் என்றால் Block All என்பதில் கிளிக் செய்திடலாம். இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம் பட்டியலில் இல்லை என்றால் பிரவுஸ் செய்து அந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து தடுத்துவிடலாம்.
10. பிற யூசர்களுக்கு உண்டான தடையை செட் செய்துவிட்டால் இந்த அமைப்பை சேவ் செய்து கொள்ளலாம். பின் ஒரு நாளில் விண்டோஸ் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை இந்தத் தடைகளுக்கான செட்டிங்ஸ் ஏற்படுத்தும் வேலையை மேற்கொள்ளாமல் அப்படியே மீண்டும் ஒரே கிளிக்கில் அமைத்துவிடலாம். இதற்கு இந்த திரையில் கீழ் வலது மூலையில் உள்ள Export User என்ற லிங்க்கில் கிளிக் செய்து இந்த பேக் அப் எங்கு இருக்க வேண்டுமோ அந்த போல்டர் செல்ல வேண்டும். பின் யூசர் நேம் மெனுவில் எந்த யூசருக்கான தடைகளோ அதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின் Save கிளிக் செய்து வெளியேற வேண்டும். இப்படியே ஒவ்வொரு யூசருக்கும் தடைகளை செட் செய்து சேவ் செய்திடலாம்.
11. தனிப்பட்ட யூசர் அக்கவுண்ட்டில் தடை விதிப்பது மட்டுமின்றி சிலவற்றை வேறு எவரும் பயன்படுத்த முடியாதபடியும் தடை செய்திடலாம். இதற்கு மெயின் செக்ஷனில் உள்ள Global Computer Settings பயன்படுத்த வேண்டும். அதில் Set Computer Restrictions என்ற லிங்க்கைக் கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் தொடங்குகையில் யூசர் அக்கவுண்ட்ஸ் திரை தோன்றுவதையும் மறைக்கலாம். இதற்கு ‘Turn on the Welcome Screen’ என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம்.
12. பெரும்பாலான தடைகள் எல்லாமே நேரடியாக புரோகிராம்கள் மற்றும் சில வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்திடும் வகையில் அமைக்கப்படுகின்றன. ஒரு சில குறுக்கே புகுந்து தடுக்கும் வகையிலும் அமைகின்றன. எம்.எஸ்.ஆபீஸ் டாகுமெண்ட்கள் சிலவற்றை மற்ற யூசர்கள் பார்க்க முடியாதபடி தடை அமைத்திருப்போம். ஆனால் இவற்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்க முயற்சிக்கையில் தடைகள் ஒதுக்கப்பட்டு டாகுமெண்ட்கள் திறக்கப்படும். எனவே இந்த வகை முயற்சிகளுக்கும் தடை விதிக்க ஸ்டெடி ஸ்டேட் இடம் தருகிறது. இதற்கென ‘Prevent users from opening Microsoft Office Documents from within Internet Explorer’ என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இதனை இயக்கி செட் செய்தால் நாம் மறைத்திடும் டாகுமெண்ட்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்திடும்.
13. அப்டேட் பைல்கள் விண்டோஸ் சிஸ்டம் இயங்க மிக மிக முக்கியமானவையாகும். இவற்றை அவ்வப்போது தானாக சிஸ்டம் அப்டேட் செய்திடும் வகையில் அமைத்திட வேண்டும். இந்த வசதியினையும் ஸ்டெடி ஸ்டேட் தருகிறது. இதனுடைய மெயின் பேஜில் Schedule Software Update என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். பின் அதில் ‘Use Windows Steadystate to automatically download and instal updates’ என்று இருப்பதில் கிளிக் செய்து இயக்கவும். அங்கேயே இருக்கும் மெனுவில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை விண்டோஸ் இந்த அப்டேட் பைல்களை செக் செய்து அப்டேட் செய்திட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். இதே போல அப்டேட் தேவைப்படும் மற்ற செக்யுரிட்டி புரோகிராம்களுக்கும், ஆண்டி வைரஸ் போல, இதே போல் நாட்களை செட் செய்திடலாம்.
14. விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராமில் மிக மிக முக்கியமானது டிஸ்க் பாதுகாப்புதான். மெயின் ஸ்கிரீனில் உள்ள ‘Protect the Hard Disk’ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம். ஆனால் இதனைக் கவனமாகக் கையாள வேண்டும். முழுமையாக ஒரு டிஸ்க்கை பாதுகாக்க அமைத்துவிட்டால் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் எதுவும் சேவ் செய்திட முடியாது. எனவே அதற்கான வழிகளை நன்கு யோசித்த பின்னரே இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும்.
நம் கம்ப்யூட்டரை மற்றவர்களிடமிருந்து காப்பாற்ற மைக்ரோசாப்ட் தரும் அருமையான புரோகிராம் விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட். இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராமினை நம் பாதுகாப்பிற்கு பயன்படுத்துவது நல்லது. மேலே சொல்லப்பட்டிருப்பது மட்டுமின்றி இன்னும் பல பாதுகாப்பு வழிகளையும் இந்த புரோகிராம் தருகிறது. பயன்படுத்துகையில் ஒருவர் இதனை நன்கு அறிந்து கொண்டு தொடர்ந்து பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment