Tuesday, 3 April 2012

பாப்ட்ரே- வைரஸ்களை சர்வரிலேயே நீக்க…--பிரவுசர்கள் ஓர் அலசல்--எதிர்காலத்தில் பாஸ்வேர்ட்கள்--கேம்ஸ் ஏன் கிராஷ் ஆகிறது?--ஏன் கிடைக்கிறது ‘Session Expired’?--சேட் ரூம்களில் பாதுகாப்பு--சாப்ட்வேர் இன்ஸ்டலேஷன் லோகோ டெஸ்டிங் + டிரைவர் சைனிங்


பாப்ட்ரே- வைரஸ்களை சர்வரிலேயே நீக்க…
நமக்கு வரும் இமெயில் கடிதங்களில் பெரும்பாலும் பல ஸ்பேம்கள் எனப்படும் வேண்டாதவையாகவும் வைரஸ் பைல்களாகவும் உள்ளன. இவற்றைச் சந்தேகப்பட்டால் படிக்காமல் நீக்குகிறோம். ஆனால் இது கம்ப்யூட்டரில் இறக்கிவைத்துப் பிரித்துப் பார்த்த பின்னர் அல்லது பிரித்துப் பார்க்கு முன்னர் நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு இல்லாமல் சர்வரிலேயே வைத்துப் பிரித்துப் பார்த்து இவற்றை நீக்கினால் நம் கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும். இந்த வசதியை பாப் ட்ரே என்னும் புரோகிராம் நமக்குத் தருகிறது. பாப்ட்ரே இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தவுடன் ஒரு கவர் போன்ற ஐகான் நம் கம்ப்யூட்டரின் நோட்டிபிகேஷன் ஏரியாவில் அமைகிறது. இந்த புரோகிராம் மூலம் பல இமெயில் அக்கவுண்ட்களை நாம் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை செக் செய்திடும்படி செட் செய்திடலாம். நமக்கு வந்துள்ள மெயில்களை டவுண்லோட் செய்திடாமலே பிரித்துப் படிக்கலாம். இந்த புரோகிராமினை இறக்கிப் பதிந்து பயன்படுத்துவது குறித்து இங்கு காணலாம்.
இன்டர்நெட்டில் இணைந்த பின்னர் www.poptray.org என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த இணைய தளம் கிடைத்தவுடன் Download என்ற லிங்க்கில் கிளிக் செய்து poptray.exe என்ற இன்ஸ்டலேஷன் பைலை டெஸ்க்டாப்பில் டவுண்லோட் செய்து சேவ் செய்திடவும். டவுண்லோட் செய்தவுடன் அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். இந்த பைல் தரும் விஸார்ட் வழி தேவையான தகவல்களைத் தந்து செல்லவும். இதில் இன்ஸ்டால் என்று கிடைத்தவுடன் அதில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்திட வழி தரவும். இன்ஸ்டால் செய்தவுடன் Run Poptray என்பதில் கிளிக் செய்து பின் Finish என்பதிலும் கிளிக் செய்திடவும்.
இப்போது பாப் ட்ரே புரோகிராமின் முதல் பக்கம் கிடைக்கும். இதில் உங்கள் இமெயில் அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தந்து அவற்றை செட் செய்திடவும். இதற்கு உங்கள் இமெயில் அக்கவுண்ட்டின் சர்வர் பெயர், உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கைவசம் இருக்க வேண்டும். இதற்கு Accounts , Add Account அக்கவுண்ட் உங்களுக்கு உதவும். ஒவ்வொரு இமெயில் அக்கவுண்ட்டினையும் அடையாளம் காண அதற்கு ஒரு வண்ணத் தினைத் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அதனை சேவ் செய்திடவும். இவ்வாறு செய்தவுடன் இதனைச் சோதித்துப் பார்க்கலாம். இதற்கு டெஸ்ட் அக்கவுண்ட் என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் உடனே குறிப்பிட்ட இமெயில் அக்கவுண்ட் செக் செய்யப்பட்டு நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகள் காட்டப்படும். இப்படியே நீங்கள் அமைத்துள்ள இமெயில் அக்கவுண்ட்கள் அனைத்தையும் செக் செய்து கொள்ளவும். இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் நீங்கள் கொடுத்த தகவல்களைச் சரியாகத் தந்து மீண்டும் செட் செய்திடவும்.
ஒரு இமெயில் அக்கவுண்ட்டில் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு வந்திருக்கும் இமெயில்கள் வரிசையாக டேப்களாகக் காட்டப்படும். பாப் ட்ரே புரோகிராம் உங்கள் இமெயில் அக்கவுண்ட்களை ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை செக் செய்து உங்களுக்கான இமெயில் சர்வரிலிருந்து தகவல்களைப் பெற்றுக் காட்டும். அல்லது நீங்களே அதன் ஐகானில் கிளிக் செய்து அப்போது இமெயில் செக் செய்திடும்படி செயல்படலாம். பாப் ட்ரே புரோகிராம் கவர் போன்ற ஐகான் மூலம் தெரிகிறதல்லவா! இது உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிற்கு மெயில்கள் வந்தவுடன் பிளாஷ் செய்து காட்டும். எத்தனை மெயில்கள் வந்துள்ளன என்றும் காட்டும்.
உங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்தியைக் காண அதற்கெனக் காட்டப்படும் டேப்பில் கிளிக் செய்திடலாம். செய்திகள் மட்டும் அதில் இருக்கும். அதனுடன் வந்துள்ள அட்டாச்மென்ட் பைல்கள் தனியே பட்டியலில் இருக்கும். இந்த மெயில்களின் செய்தியைப் பார்த்தவுடன் இது ஸ்பாம் மெயில் எனத் தெரிந்தால் அவ்வாறே மார்க் செய்திடலாம். அது போலவே மீண்டும் மீண்டும் வரும் மெயில்களை புரோகிராமே குறித்துக் கொள்ள சப்ஜெக்ட் மற்றும் இமெயில் அனுப்பப்படும் முகவரிகளை அடையாளம் காட்டி அமைக்கலாம். தேவையற்ற இமெயில் முகவரிகளை பிளாக் லிஸ்ட் செய்து அவற்றை அழிக்கும்படியும் செட் செய்திடலாம். இதனால் நம்முடைய கம்ப்யூட்டரில் இறக்கிவைத்துப் பின் அதன் மூலம் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. வைரஸ் மெயில்கள் எனில் சர்வரில் வைத்தவாறே உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் மூலம் கண்டறிந்து நீக்கலாம். பாப்ட்ரே புரோகிராம் இலவசமாகவே இணையத்தில் கிடைக்கிறது.
90 லட்சம் கம்ப்யூட்டர்கள் அவுட்
கம்ப்யூட்டர் மலரில் அடிக்கடி நம் சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் மாதந்தோறும் தரும் பேட்ச் பைல்களைக் கொண்டு அப்டேட் செய்திட வேண்டும் என எழுதி வருகிறோம். சென்ற மாதம் திடீரென வழக்கமான கால அட்டவணை இன்றி மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு பேட்ச் பைலை வெளியிட்டு விண்டோஸ் பயன்படுத்துபவர்களை அப்டேட் செய்திடக் கொடுத்தது. வழக்கமான பேட்ச் பைல் இல்லையே எனப் பல நாடுகளில் மக்கள் இது குறித்து சீரியஸாக எண்ணவில்லை. விளைவு என்ன தெரியுமா? “Downadup,” என்னும் வைரஸ் (வோர்ம்) 90 லட்சம் கம்ப்யூட்டர்களில் வந்தமர்ந்து அவற்றை முடக்கிப் போட்டது.
இந்த வோர்ம் வெப்சைட்டுகளில் சென்று அமர்ந்து கொள்கிறது. அதன் பின் அந்த வெப்சைட்டுகளுடன் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணையும் கம்ப்யூட்டர் களுக்குச் சென்று அமர்ந்து கொள்கிறது. பின் தன் நாச வேலையைத் தொடங்குகிறது. இன்னும் இந்த வோர்ம் வேகமாகப் பரவி வருகிறது. எனவே இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் உடனடியாக அப்டேட் செய்வது நல்லது. உங்கள் கம்ப்யூட்டரை அப்டேட் செய்திடப் பல வழிகள் உள்ளன. இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். (இந்த வேலைக்கு பயர்பாக்ஸ் வேண்டாம்) http://windowsupdate.microsoft.com என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் செல்லவும். இந்த வெப்சைட் உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த அப்டேட் வேண்டும் எனச் சொல்லும். அந்த தளம் கூறும் அத்தனை அப்டேட் பைல்களையும் உங்கள் கம்ப்யூட்டருக்கு இறக்கி இன்ஸ்டால் செய்திடவும். இந்த வேலையை முடித்தவுடன் கையோடு கையாக மைக்ரோசாப்ட் தரும் Malicious Software Removal Tool என்ற பைலையும் இறக்கிப் பதிந்திடவும். இந்த டூல் http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=AD724AE0E72D4F549AB375B8EB148356&displaylang=en என்ற முகவரியில் கிடைக்கிறது.

No comments:

Post a Comment