அறிவியலில் அனைத்தும் இங்கு உண்டு
அறிவியலில் அனைத்தும் இங்கு உண்டு
அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சமுதாய பிரிவுகளில் இந்த கண்டுபிடிப்புகளின் பயன்கள் ஆகியன குறித்து மிக விரிவாக நீங்கள் அறிய வேண்டுமா? நீங்கள் செல்ல வேண்டிய தளம் www.newscientist.com.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பல பிரிவுகளில் தகவல்கள் இங்கு கிடைக்கின்றன. டினோசார்ஸ் முதல் அஸ்ட்ரோ பயாலஜி வரை இதன் எல்லைகள் விரிந்து கிடக்கின்றன.
மார்ஸ் கிரகம் என்னவென்று தெரிய வேண்டுமா? ஸ்டெம் செல் என்றால் என்ன? இதன் பயன் என்னவென்று தெரிய வேண்டுமா? ஜெனடிக்ஸ் சயின்ஸ் எதைக் குறிக்கிறது என அறிய வேண்டுமா? இல்லை பொதுவாக நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் கோட்பாடுகளையும் அவை பயன்படும் பிரிவுகளையும் தெரிய வேண்டுமா? இந்த தளம் உங்களுக்குத் தேவையானதை வாரி வழங்குகிறது. அறிவியல் துறை செய்திகள், தலைப்புச் செய்திகள், விந்தை மிகு கதைகள், ஆச்சரியமான உண்மைகள் என அனைவருக்குமான அறிவியல் துணுக்குகள் இங்கு உள்ளன.
மிக ஆழமான கருத்து செறிந்த கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த தளத்தில் உலா வருவதும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் கூட இதனை எளிதாகப் பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்துவது மட்டுமின்றி உங்கள் குழந்தைகளையும் இதற்கு அறிமுகப்படுத்துங்கள்.
தண்டர்பேர்டில் மொத்த மெயில்களைத் தடுக்க
தண்டர்பேர்டில் மொத்த மெயில்களைத் தடுக்க
பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்பாடு அதிகரிப்பதனால் அதனைப் பயன்படுத்தும் பலர் தண்டர் பேர்ட் இமெயில் கிளையண்ட் புரோகிராமினைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். மொத்தம் மொத்தமாக மெயில்களை அனுப்பி நமக்கு எரிச்சல் ஊட்டுபவர்களின் நடவடிக்கைக்கு இந்த புரோகிராமில் எப்படி தடை விதிப்பது எனப் பார்க் கலாம்.
முதலில் ஜங்க் மெயில் கட்டுப்பாட்டு பிரிவிற்குள் செல்ல வேண்டும். இதற்கு முதலில் Tools>Account Settings எனச் செல்லவும். “Junk Settings” என்பதற்குக் கீழ் “Do not mark mail as junk mail if the sender is in: Personal Address Book என்பதன் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
அடுத்து இந்த வகை மெயில்களை அழிக்க வேண்டும். அல்லது ஜங்க் போல்டருக்கு அனுப்ப வேண்டும். இந்த போல்டருக்கு அனுப்புவதே நல்லது. முதலில் “Move incoming messages to:” என்பதனை செக் செய்திடவும். அடுத்து “Junk folder on:” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து “Local Folders” என்பதனையும் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்ததாக ஜங்க் போல்டர் தானாகவே தன்னைக் காலி செய்து கொள்ளும்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் நாளை அமைக்கலாம். 7 அல்லது 5 நாள் என அமைக்கலாம்.
உங்களுக்கு மெயில் வந்திருக்கையில் ஜங்க் போல்டரையும் அவ்வப்போது திறந்து பார்த்து அதில் நீங்கள் காண வேண்டிய நல்ல மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளனவா என்று பார்க்கலாம்.
அப்படி ஏதேனும் சில மெயில் இருந்தால் அந்த குறிப்பிட்ட மெயிலை செலக்ட் செய்து அதன் மேலே உள்ள “Not Junk என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும்.
அதே போல இன்பாக்ஸில் ஏதேனும் ஜங்க் மெயில் இருந்தால் அதன் மேலாக உள்ள ” J ” என்ற பட்டனை அழுத்தினால் போதும். தண்டர்பேர்ட் அதனை ஜங்க் என உணர்ந்து கொண்டு அடுத்த முறை அதனை ஜங்க் மெயில் போல்டருக்குக் கொண்டு செல்லும்.
வைபி இணைப்பு ஏற்படுத்த சில ஆலோசனைகள்
வைபி இணைப்பு ஏற்படுத்த சில ஆலோசனைகள்
WiFi என்ற Wireless Fidelity இப்பொழுது பிரபலம். 802.11a, 802.11a, 802.11b, 802.11h எனப் பல வரையறைகள் இத் தொழில் நுட்பப் பயன்பாட்டில் வெளியாகியுள்ளன. 802.11g ஐ அடிப்படையாகக் கொண்ட வயர்லெஸ் நெட்வொர்க் கார்டுகளும், அக்சஸ் பாயிண்டுகளும் (Access Point) கட்டுபடியாகிற விலைகளில் கிடைப்பதால் எல்லோரும் வயர்லெஸ் நெட்வொர்க் பயன்படுத்த முனைகின்றனர்.
வயர்லெஸ் நெட்வொர்க்கில் பாதுகாப்பு அம்சம் கவனிக்கப்பட வேண்டியது. அதன் பாதுகாப்பு சரியில்லையெனில், வேண்டாத நபர்கள் அதனுள் நுழைந்து, நாசத்தை ஏற்படுத்த முடியும். உங்கள் நெட்வொர்க்கை பயன்படுத்தி மற்றொரு நெட்வொர்க்கை தாக்க முடியும்.
வயர்லெஸ் நெட்வொர்க்குகளை ஏற்படுத்துபவர்கள் அவற்றின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அதற் கான சில ஆலோசனை கள் கீழே தரப்பட்டுள்ளன.
* ஆன்டனாவை சரியான இடத்தில் வையுங்கள். உங்களுடைய நெட் வொர்க்கிற்கு வெளியே சிக்னல் செல்லக் கூடாது என்பதை மனிதில் வையுங்கள். நெட்வொர்க்கிற்கு வெளியே செல்லுகிற சிக்னலை வேண்டாத நபர்கள் கைப்பற்றி னால் ஆபத்து நேரிடும் என்பதை மறவாதீர்கள்.
* Wireless Encryption Protocol (WEP) என்ற என்கிரிப்ஷன் முறையை உங்கள் நெட்வொர்க்கில் செயல்படுத்துவது நல்லது. அக்சஸ் பாயிண்டுகளைத் தயாரிக்கிற நிறுவனங்கள் இந்த புரோடோகோலை செயல் இழக்கச் செய்வது வழக்கம். எனவே அதைச் செயல்பட வையுங்கள். எனவே உங்கள் நெட்வொர்க்கில் இருந்து வெளியேறுகிற டேட்டாவை ஹேக்கர்களும், கிராக்கர்களும் அவ்வளவு எளிதாக படித்துவிட முடியாது.
* அக்சஸ் பாயிண்டுகளில் Service Set Indentifier என்ற வசதி உண்டு. ஒரு அக்சஸ் பாயிண்டானது தனது எஸ்எஸ்ஐடி பெயரை அலைபரப்பு செய்வது வழக்கம். எனவே அந்த பெயரை தெரிந்து கொண்ட ஹேக்கர்களும், கிராக்கர்களும் அந்த அக்சஸ் பாயிண்டில் நுழைய முயற்சி செய்வார்கள். எனவே அக்சஸ் பாயிண்டின் SSID broadcast வசதியைத் தடை செய்து விடுங்கள்.
* Dynamic Host Configuration Protocol G�� DHCP என்ற வசதியைசெயல் இழக்கச் செய்து விடுங்கள். எனவே ஹேக்கர்களும், கிராக்கர்களும் உங்கள் நெட்வொர்க்கில் நுழைய முயன்றால் அவர்கள் TCP/IP புரோடோகால்களுக்கு தேவையான IP முகவரி, சப்நெட் மாஸ்க் Subnet Mask) போன்ற விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும். உங்கள் நெட்வொர்க் தொடர்பான இந்த விவரங்கள் அவர்களிடம் இல்லாததால் அவர்களால் உங் கள் நெட்வொர்க்கில் நுழைய முடியாது. TCP/IP என்றால் Transmission control protocol/ Internet Protocol எனப் பொருள்.
* Simple Network Management Protocol G�� SNMP என்ற செட்டிங்களை அக்சஸ் பாயிண்டில் செயல் இழக்கச் செய்யுங்கள்; அல்லது மாற்றி விடுங்கள். இதை நீங்கள் செய்யாமல் விட்டால் உங்கள் நெட்வொர்க் பற்றிய விவரங்களை ஹேக்கர்களும், கிராக்கர்களும் அறிந்துவிட முடியும்.
* எந்தெந்த கம்ப்யூட்டர்கள் எல்லாம் அக் சாஸ் பாயிண்டு வழியாக செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்கிற வசதி சில அக்சஸ் பாயிண்டுகளில் உண்டு. உங்களுடைய அக்சஸ் பாயிண்டிலும் அந்த வசதி இருந்தால், உங்கள் நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க் கார்டு முகவரிகளை அக்சஸ் பாயிண்டிடம் தெரிவித்து விடுங்கள். இந்த முகவரிகளை அக்சஸ் பாயிண்டிடம் தெரிவித்து விடுங்கள். இந்த முகவரிகளைத் தவிர மற்ற முகவரிகள் கொண்ட கம்ப்யூட்டர்களை அனுமதிக்காதே என அக்சஸ் பாயிண்டிடம் கூறினால் நெட்வொர்க்கின் பாதுகாப்பு கூடுமல்லவா?
பிரவுசர் இல்லாமல் கூகுள் மெயில்
பிரவுசர் இல்லாமல் கூகுள் மெயில்
இன்டர்நெட் தளங்கள் நமக்குப் பல்வேறு ஆன்லைன் சாதனங்களைத் தருகின்றன. இவற்றை ஆன்லைன் அப்ளிகேஷன் புரோகிராம்கள் என அழைக்கின்றோம். இவற்றை இன்டர்நெட் இணைப்பில் அந்த தளங்களில் இருந்தவாறுதான் பயன்படுத்த முடியும். எடுத்துக் காட்டாக கூகுள் மெயில் நமக்கு இன்டர்நெட்டில் கிடைக்கும் ஆன்லைன் அப்ளிகேஷன்களில் பிரபலமானதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படுவதும் ஆகும். இதனை ஒரு பிரவுசரைத் திறந்து அதன் மூலம் தான் பயன்படுத்த முடியும். இதற்குப் பதிலாக கூகுள் மெயில் மற்றும் இது போன்ற ஆன்லைன் அப்ளிகேஷன்களை இன்டர்நெட் இணைப்பில் பிரவுசர் இல்லாமல் தனியே ஒரு புரோகிராம் போன்று பயன்படுத்தும் வசதி கிடைத்துள்ளது. இவ்வாறு இதனை மாற்றித் தரும் புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. அதனை எப்படி இயக்கி இது போல டூல்களை அமைக்கலாம் என்று பார்ப்போம்.
1. இந்த புரோகிராம் பெயர் Mozilla Prism.. இதனை http://wiki.mozilla.org/Web Runner என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். இது இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த முகவரியினை அட்ரஸ் பாரில் டைப் செய்து இதன் தளத்தைப் பெறுங்கள். அடுத்து அந்த தளத்தில் சிறிது ஸ்குரோல் செய்து அங்குள்ள கன்டென்ட் பாக்ஸில் Installer லிங்க் என ஒன்று இருக்கும். இங்கு Latest Version பிரிவு கிடைக்கும். இதில் பல்வேறு பதிப்புகள் தரப்பட்டிருக்கும். பல வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான மொஸில்லா பிரிஸம் புரோகிராமின் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதிலும் Zip பதிப்பு மற்றும் நேரடியாக இயக்கக் கூடிய exe பைல்கள் கிடைக்கும். exe பைலையே இறக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் ஸிப் பைலை விரித்து பின் இயக்கும் காலம் நமக்கு மிச்சமாகும். இந்த ஞுதுஞு. இன்ஸ்டலேஷன் பைலை உங்கள் டெஸ்க் டாப்பில் இறக் கிக் கொள்ளுங்கள்.
2. பின் உங்கள் டெஸ்க் டாப் சென்று இந்த பைலில் கிளிக் செய்து மொஸில்லா பிரிஸம் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்த பின் Start கிளிக் செய்து All Programs சென்றால் அங்கு இந்த புரோகிராம் பட்டியலில் இறுதியாக இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் பிரவுசர் இல்லாமல் இந்த புரோகிராம் இயக்கப்படும். இந்த வேளையில் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும். மொஸில்லா பிரிஸம் புரோகிராமில் மேலாக ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் வழங்கப்படும். இதில் நீங்கள் எந்த ஆன் லைன் டூலை (எ.கா. கூகுள் மெயில்) கம்ப்யூட்டர் புரோகிராமாக மாற்ற வேண்டுமோ அதன் தள முகவரியை (எ.கா.www.googlemail.com) டைப் செய்திடவும். பின் இங்குள்ள Name பாக்ஸில் இதனைப் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பெயர் (Google Mail) வழங்கவும். இதன் கீழாகப் பல வசதிகள் தேர்ந்தெடுக்க வழங்கப்பட்டிருக்கும். இவை எல்லாம் ஒரு பிரவுசர் வழியாகச் சென்றால் என்ன என்ன வசதிகள் இருக்குமோ அவை பட்டியலிடப்பட்டிருக்கும். உங்களுக்கு என்ன என்ன தேவையோ அவற்றிற்கான பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
3. பின் இதன் கீழாக இந்த புரோகிராமிற்கான ஷார்ட் கட் கீகள் எங்கெல்லாம் ஏற்படுத்தப்பட வேண்டும் என முடிவு செய்து ஆப்ஷன் தரலாம். டெஸ்க்டாப், குயிக் லாஞ்ச் பார் போன்ற இடங்களை முடிவு செய்திடலாம். இந்த புரோகிராமிற்கான ஐகானையும் நீங்கள் செலக்ட் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிறிய போட்டோக்களைக் கூட இதற்கு ஐகானாக வைக்கலாம்.
4. இனி இந்த புரோகிராமினை இயக்கிப் பார்க்கலாம். பிரவுசரிலிருந்து விலகி நீங்கள் ஏற்கனவே அமைத்த ஷார்ட் கட் ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும். வழக்கமான பிரவுசர் விண்டோவில் உங்கள் ஆன்லைன் அப்ளிகேஷன் திறக்காமல் தனி புரோகிராம் போல திறக்கப்படும். இதில் வழக்கமாக பிரவுசர் விண்டோவில் நம் கவனத்தைத் தேவையில்லாமல் இழுக்கும் தேவையற்ற பட்டன்கள் இருக்காது. இதனை வேர்ட், எக்ஸெல் போல ஒரு புரோகிராமாக இயக்கலாம். இதற்கான டேப் டாஸ்க் பாரில் இருக்கும்.
5. மொஸில்லா பிரிஸம் ஆன்லைன் டூலை தனி புரோகிராமாக உங்களுக்கு மாற்றிக் கொடுத்தாலும் வழக்கம் போல பிரவுசர் மூலமாகவும் நீங்கள் ஆன் லைன் டூலை இயக்கலாம். மொஸில் லா பிரவுசர் மூலம் உருவாக்கிய டூலை நீங்கள் தேவையில்லை என்றால் அன் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பிரிஸம் பயர் பாக்ஸ் அடிப்படையில் உருவானதால் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு பயன்பாட்டினையும் இதில் இயக்கலாம். பிரிஸம் மூலம் உருவாக்கப்படும் ஆன் லைன் டூல்கள் எல்லாம்Web Apps என்ற போல்டரில் ஸ்டார்ட் மெனுவில் ஆல் புரோகிராம்ஸ் பிரிவில் தரப்பட்டிருக்கும்.
வைரஸை வாசலிலேயே தடுக்கும் விண் பெட்ரோல்
வைரஸை வாசலிலேயே தடுக்கும் விண் பெட்ரோல்
நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் அமர்ந்து கொண்டு நம்மை ஹைஜாக் செய்திடும் வைரஸ் புரோகிராம்கள் இப்போது அதிகம் வரத் தொடங்கி உள்ளன. மேலும் நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் வைரஸ்பைல்களும் நிறைய வருகின்றன. இவை நம் கம்ப்யூட்டரில் புகுந்து அதன் என்ட்ரியை கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்திடுகையிலேயே தடுக்க முயன்றால் எவ்வளவு நன்மையாக இருக்கும். இத்தகைய பணியைத்தான் விண் பெட்ரோல் (WinPatrol) என்ற புரோகிராம் செய்கிறது.
இந்த புரோகிராமினை ஏ.ஓ.எல். இமெயில் கிளையண்ட் புரோகிராமினை வடிவமைத்த Bill Pytlovany என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் பதிந்தவுடன் நம் கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியை ஒரு ஸ்நாப் ஷாட் எடுத்து வைத்துக் கொள்கிறது. பின் அதில் ஏதேனும் கோட் வரிகள் எழுதப்படும்போதெல்லாம் இது போல எழுதப்பட இருக்கிறது. இந்த புரோகிராம் முயற்சி செய்கிறது என்று எச்சரிக்கை செய்வதுடன் நீங்கள் அனுமதி கொடுத்த பிறகே ரெஜிஸ்ட்ரியில் எழுதவிடும்.
இதன்மூலம் நாம் விரும்பும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் மட்டுமே நாம் இதற்கு அனுமதிக்கலாம். திருட்டுத்தனமாக நுழைந்திடும் புரோகிராம்கள் எழுத முயற்சிக்கையில் அவற்றின் பெயரைப் பார்த்துவிட்டுத் தடுத்துவிடலாம். இந்த வகையில் விண் பெட்ரோல் ஒரு செக்யூரிட்டி மானிட்டராகச் செயல்படுகிறது.
வழக்கமான ஆண்டி வைரஸ் தொகுப்புகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வைரஸ் பைல்களின் செயல்பாட்டினை வைத்து அவற்றை அடையாளம் கண்டு தடுக்க முயற்சி செய்திடும். ஆனால் இந்த புரோகிராம் வைரஸ் புரோகிராம்களுக்கென உள்ள சில மாறுபட்ட செயல்தன்மைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட www.winpatrol.com என்ற தளத்திற்குச் செல்லவும்.
எச்.பி.லேசர் ஜெட் பி1008
எச்.பி.லேசர் ஜெட் பி1008
சிறிய அலுவலகங்களிலும் வீடுகளிலும் வைத்துப் பயன்படுத்த எச்.பி.நிறுவனம் அண்மையில் வேகமாகச் செயல்படும் லேசர் பிரிண்டர் ஒன்றை பி – 1008 என்ற எண்ணுடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பயன்படுத்த எளிதாகவும் மின்சக்தியை மிகவும் குறைவாகப் பயன்படுத்தும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.
பொதுவாக இங்க் ஜெட் பிரிண்டர்களைக் காட்டிலும் அதிக விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்த லேசர் பிரிண்டர்கள் தற்போது ஓரளவிற்கு விலை குறைவாக அனைவரும் வாங்கும் வகையில் கிடைக்கின்றன. அந்த வரிசையில் இந்த எச்.பி. லேசர் ஜெட் க1008 வந்துள்ளது.பேப்பர் ட்ரேயை மடக்கி வைத்துப் பார்க்கும்போது ஸ்டைலான தோற்றத்துடன் ஒரு சிறிய அழகான ஜெட் பிரிண்டராக இது தோற்றமளிக்கிறது.
சராசரி இங்க் ஜெட் பிரிண்டரைப் போலவே காட்சி அளிக்கிறது. 20 செமீ உயரத்தில் மேஜையில் மிகக் குறைந்த இடத்தையே எடுத்துக் கொள்கிறது. இதன் எடை 4.7 கிலோ. வெள்ளை மற்றும் கிரே பாலிமரில் இதன் வெளிப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. பின்புறமும் அடிப்பாகத்திலும் மெட்டல் சேசிஸ் தரப்பட்டுள்ளது.
எச்.பி. பிரிண்டர்களில் இருப்பது போல மிக எளிதாக இதன் இங்க் கேட்ரிட்ஜ் டோனரை உள்ளே செலுத்தலாம். பேப்பர் ட்ரேயில் பல அளவுகளில் தாள்களை வைத்து அச்செடுக்கலாம். ட்ரேயில் தாளை வைக்கும் போது மேலாகத் தெரியும் பகுதியில் அச்சாகும். எனவே அச்சான பக்கத்தில் மீண்டும் ஒரு முறை அச்சாகும் வாய்ப்பினை அதனைப் பார்த்தே நாம் தவிர்க்கலாம். பேப்பர் வெளியே வரும் பகுதி மேலாக 100 தாள்களைத் தாங்கிக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அச்சாகும் பகுதி கீழாக இருக்கும் வகையில் இங்கு தாள்கள் சேகரிக்கப்படுகின்றன. இரண்டே இரண்டு எல்.இ.டி. விளக்குகள் உள்ளன. பிரிண்டர் இயக்கத்தில் இருக்கும் போது ஒன்றும் பிரச்சினையில் நின்று போனால் ஒன்றும் எரிகின்றன. பவர் பட்டன் முன்புறமாக அமைக்கப்பட்டிருப்பது நமக்கு வசதியை அளிக்கிறது.
இதில் 266 மெஹா ஹெர்ட்ஸ் ப்ராசசர் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 8 எம்பி மெமரி தரப்பட்டுள்ளது. (விலை குறைந்த பிரிண்டர் க1007ல் 2 எம் பி மட்டும் உள்ளது) கம்ப்யூட்டருடன் இணைக்க அதிவேக யு.எஸ்.பி. இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. ஸ்விட்ச் போட்ட எட்டு நொடிகளில் பிரிண்டர் இயங்கத் தயாராகிறது. முதலில் நிமிடத்திற்கு 15 பக்கங்களும் பின் 17 பக்கங்களும் அச்சாகின்றன. இதனுடன் ஒரே ஒரு சிடி டிரைவர் தரப்படுகிறது. பலவகையான பிரிண்டிங் பணிகளை மேற்கொள்ளலாம். டோனர் இங்க் மிச்சப்படுத்த எகானமிக் மோட் வசதி உண்டு.
இதற்கான டோனர் கேட்ரிட்ஜ் பயன்படுத்தி 1,500 பக்கங்கள் அளவில் அச்சிட முடிகிறது. விலை ரூ. 3,460. பிரிண்டர் விலை ரூ. 8,299. சிறிது திறன் குறைந்த ஏக க1007 பிரிண்டர் ரூ.1,600 குறைவாக கிடைக்கிறது. இந்த பிரிண்டர்களை சர்வீஸ் செய்திட எச்.பி. நிறுவனம் இந்தியாவெங்கும் 90 நகரங்களில் 368 சர்வீஸ் சென்டர்களை அமைத்துள்ளது.
லேசர் பிரின்டர் வாங்கும் முன்…
டாட் மேட்ரிக்ஸ் பிரின்டர்கள் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்துவிட்டன. லேசர் பிரின்டர்களை அனைவரும் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். பலர் இங்க்ஜெட் பிரின்டர்களுக்கு கார்ட்ரிட்ஜ் வாங்கிக் கட்டுப்படியாகாததால் லேசர் பிரின்டர்களின் விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து லேசர் பிரின்டர்களை வாங்க முயற்சிக்கின்றனர். இவர்கள் விற்பனைச் சந்தையில் பல வகையான லேசர் பிரின்டர்களைப் பார்த்து திகைக்கின்றனர். விற்பனையாளர்கள் கூறும் பலவிதமான தொழில் நுட்ப சங்கதிகளைப் புரியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் தங்களின் தேவைக்கு அதிகப்படியான திறன் கொண்டதை வாங்குகின்றனர். அல்லது தேவைகளை நிறைவேற்ற முடியாத ஒரு லேசர் பிரின்டரை வாங்குகின்றனர். இந்த கட்டுரையில் எப்படிப்பட்ட லேசர் பிரின்டர் உங்களுக்குத் தேவை என்பதைச் சுட்டிக் காட்டும் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
யாருக்கு லேசர் பிரின்டர் தேவை?: தினமும் ஏராளமான பக்கங்களை அச்சடிப்பவர்களுக்கு, வேகமாக அச்சடிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, படங்களை துல்லியமாக, சீராக அச்சடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக லேசர் பிரின்டர் தேவை. விலை கட்டுபடியாகுமா? 8,500 ரூபாயில் லேசர் பிரின்டரின் விலை ஆரம்பித்து 1,50,000 வரையில் முடிகிறது. உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற பிரின்டரை வாங்கலாம்.
1.பிரின்டரில் Resolution என்பது முக்கியம். இதை Dots per inch (dpi) என்ற அலகில் குறிப்பிடுவார்கள். இந்த அளவு கூடுதலாக இருப்பது நல்லது. 300 dpi ரெசல்யூசன் கொண்ட லேசர் பிரின்டர்கள் சாதாரணமாகப் போதுமானது. சிறிது விலை அதிகமானாலும் பரவாயில்லை, அச்சின் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 600 dpi ரெசல்யூசனுக்குச் செல்லலாம். 1200 dpi அல்லது அதற்கு மேல் ரெசல்யூசன் கொண்ட பிரின்டர்களின் அச்சடிப்பு களை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். ஆனால் அவற்றின் விலை சற்று அதிகம்.
2.பிரின்டரின் Interface அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். பேரலல் போர்ட் அல்லது யுஎஸ்பி (USP) போர்ட் அல்லது இந்த இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற லேசர் பிரின்டர்கள் விற்பனைக்கு உள்ளன. உங்களிடம் பழைய கம்ப்யூட்டர் இருந் தால் அதில் யுஎஸ்பி போர்ட் இருக்காது. அப்படியானால் பேரலல் போர்ட் கொண்ட லேசர் பிரின்டரை வாங்க வேண்டும். கம்ப்யூட்டரில் யுஎஸ்பி போர்ட் உள்ளவர்கள் யுஎஸ்பி இன்டர் பேஸ் கொண்ட லேசர் பிரின்டரை வாங்க வேண்டும். காரணம், இதன் வேகம் அதிகம்.
3. எவ்வளவு காகிதங்களை பிரின்டரின் டிரேயில் வைக்க முடியும் என்பதைக் கவனியுங்கள். விலை குறைந்த சில பிரின்டர்களில் ஏறத்தாழ 100 காகிதங்களை மட்டுமே டிரேயில் வைக்க முடியும். விலை கூடிய ஒரு சில பிரின்டர்களில் ஏறத்தாழ 600 காகிதங்களை வைக்க முடியும். நிறைய காகிதங்களைப் பிரின்டரில் வைப்பதாக இருந்தால், அச்சடிக்கும் கட்டளையை கொடுத்து விட்டு வேறு வேலைகளை நீங்கள் பார்க்கலாம். இல்லையெனில் பிரின்டரின் பக்கத்திலேயே நின்று கொண்டு காகிதங்கள் தீர்ந்து போனால் புது காகிதங்களை அடுக்க வேண்டியிருக்கும்.
4.யானையைக் கொடுத்து விட்டு அங்குசத்தை கொடுக்காமல் விட்டால் என்னவாகும்? அதுபோல் பிரின்டரைக் கொடுத்து விட்டு அதற்கான இன்டர்பேஸ் கேபிளைத் தராவிட்டால் என்னவாகும்? பல நிறுவனங்கள் இந்த கேபிள்கள் இல்லாமல் லேசர் பிரின்டர்களை விற்கின்றன. தனியாக இந்த கேபிள்களை வாங்க கடை கடையாக ஏறி இறங்க வேண்டும். எனவே பிரின்டருடன் இன்டர் பேஸ் கேபிளையும் சேர்த்து தருகிறவர் களிடமே வாங்குங்கள்.
5. வாங்கப் போகும் லேசர் பிரிண்டருக்கான டோனரின் விலை குறைவாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். டோனர் தீர்ந்தவுடன் உடனடியாக கிடைக்கிறதா என்பதையும் விசாரியுங்கள்.
6. டோனரின் விலையைப் பார்ப்பதை விட மற்றொரு அம்சத்தையும் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் அச்சடிக்க எவ்வளவு பணம் செலவாகிறது என்ற அந்த அம்சத்தை பலர் கண்டு கொள்ளுவதே இல்லை. ஆனால் அதுதான் முக்கியம். ஒரு பக்கத்தை அச்சடிக்க எந்த பிரின்டரில் செலவு குறைவாக வருகிறதோ அதுதான் சிறந்த பிரின்டர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
7. LCD display உள்ள லேசர் பிரின்டராக இருந்தால் நல்லது. என்ன நிலையில் இயங்குகிறது, என்ன செய்ய வேண்டும் போன்ற விவரங்களை எல்சிடி மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
8. Led விளக்குகள் நிறைய இருந்தால் நல்லது. பொதுவாக Power, Paper jam, Toner low, load Paper, Paper out, Ready, Error, Manual, Data, Alarm போன்ற பல விஷயங்களை உங்களுக்கு தெரிவிக்க சிறு விளக்குகள் இருந்தால் நல்லது. எல்சிடி டிஸ்பிளே இல்லாத லேசர் பிரின்டர்களில் இந்த விளக்குகள்தான் உங்களுக்கு உதவும்.
9. Input Buffer எனப்படுகிற நினைவகம் அதிகம் இருக்க வேண்டும். 12 MB buffer உள்ள பிரின்டரின் விலை சற்று அதிகமாக இருக்கும். குறைந்தது 8 எம்பி பபர் உள்ள லேசர் பிரின்டரை வாங்குவது நல்லது.
10. காகிதங்களை வைப்பதற்கான டிரேக்கள் (Tray) எத்தனை தரப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். எல்லா பிரின்டர்களிலும் கண்டிப்பாக ஒரு டிரே இருக்கும். இன்னொரு டிரே கூடுதலாக இருப்பது நல்லது.
11. Manual மற்றும் Quick Start Guide ஆகிய உதவிப் புத்தகங்களை லேசர் பிரின்டருடன் தருகிறார்களா என்று பாருங்கள். சிக்கலான நேரங்களில் இருந்த புத்தகங்கள் கை கொடுக்கும்.
12. எடையும், அளவும் எவ்வளவு என்று பாருங்கள். இடம் குறைந்த அலுவலகம் அல்லது சிறிய மேஜையில் பிரின்டரை வைக்க விரும்புபவர்கள் நீள, அகலம் குறைந்த பிரின்டர்களை வாங்குவது நல்லது.
13. உத்தரவாத காலம் அதிகமாக இருக்க வேண்டும். 3 வருடங்கள் உத்தரவாத காலம் கொண்ட பிரின்டர்களாக இருப்பது நல்லது.
14. உங்கள் இடத்துக்கே வந்து பிரின்டரை சரி பார்ப்பார்களா அல்லது அவர்கள் இடத்துக்கு நீங்கள் பிரின்டரை தூக்கிச் செல்ல வேண்டுமா என்பதை விசாரியுங்கள்.
15. உங்கள் ஊரில் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் உள்ளதா என்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் ஊருக்கு அருகில் எங்கு சர்வீஸ் சென்டர் உள்ளது என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment