Tuesday, 3 April 2012

நெட் ராக்கெட்--பிரவுசர் பாதுகாப்பு விவரங்களும் தகவல்களும்--உங்கள் பிரவுசரை சோதனையிடலாமா?--விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ்--ஹார்ட் டிஸ்க் கட்டுப்பாடு--உடல் எடை குறைய ஓர் இணைய தளம்--கூகுள் நால்--வெப் இமெயில் சாதகங்களும் பாதகங்களும்


நெட் ராக்கெட்




அனைத்து புக்மார்க்குகளையும் பாதுகாக்க
நம்மில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசர்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவோம். ஒவ்வொரு பிரவுசரிலும் நாம் விரும்பிப் பார்க்கும் தளங்களுக்குமான புக்மார்க்குகளை அமைத்திருப்போம். இவை அனைத்தையும் அவ்வப்போது இணையத்தில் இருக்கும்போது பயன்படுத்த விரும்புவோம். ஒன்றில் உள்ளது இன்னொன்றில் கிடைக்காது. ஏன், வேறு கம்ப்யூட்டருக்குச் சென்றால் எந்த புக் மார்க்கும் கிடைக்காதே. அந்நிலையில் என்ன செய்திடலாம்?
நான் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா? புக்மார்க்குகளுக்கான இணைய தள முகவரிகள் அனைத்தையும் ஒரு சிடியில் பைலாகப் பதிந்து செல்லும் இடத்தில் இந்த சிடியை இயக்கி அந்த பைலைத் திறந்து பின் யு.ஆர்.எல். முகவரிகளை காப்பி செய்து பிரவுசரில் பேஸ்ட் செய்து பயன்படுத்தினேன்.
இது போன வாரம் வரைக்கும் தான். இப்போது நான் எந்த சிடியையும் எடுத்துச் செல்வதில்லை. என் அனைத்து புக் மார்க்குகளும் நான் நினைத்த மாத்திரத்தில் எனக்குப் பயன்படுத்த கிடைக்கின்றன. அது என்ன மந்திரம் என்கிறீர்களா! அது தான் நெட் ராக்கெட் என்னும் வித்தையாகும். இது வித்தை அல்ல. ஒரு தளத்தின் பெயர். இந்த தளத்தை http://netrocket.com/ / என்னும் முகவரியில் பெறலாம். இது என்ன செய்கிறது?
இந்த தளம் உங்களின் அனைத்து புக்மார்க்குகளையும் உங்களுக்காக இலவசமாகத் தாங்கிக் கொள்கிறது. பின் நீங்கள் இந்த தளத்திற்குச் சென்று உங்களை உங்களை யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் மூலம் அடையாளம் காட்டிய பின் உங்கள் புக்மார்க்குகள் அனைத்தையும் காட்டுகிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளம் சென்று Create Account என்பதில் கிளிக் செய்திட வேண்டியதுதான். உங்களுக்கு இந்த தளத்தில் ஒரு அக்கவுண்ட் ஒன்று வேண்டும். அப்போது தான் உங்களின் இணைய உலா முழுவதும் இது கண்காணித்துக் கொண்டு உங்களுக்கு உதவ முடியும்.
இதில் பதிய சில பீல்டுகளை நிரப்ப வேண்டும். Username, Email Address, Password, Security Question, Answer மற்றும் Time Zone ஆகியவற்றை வழக்கம் போல நிரப்ப வேண்டும். பின் அந்த தளம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துப் போவதாக சரி என டிக் செய்த பின் உங்களின் அக்கவுண்ட் பதிவு செய்யப்படும்.
நீங்கள் பதிந்தவுடன் உங்கள் பேவரிட் பிரவுசரில் நெட்ராக்கெட் பட்டனைப் பதிக்க கேட்கும். உங்களுக்குப் பிடித்த மற்றும் தொடர்ந்து பயன்படுத்தும் பிரவுசரைத் தந்தவுடன் அந்த பிரவுசரில் நெட்ராக்கெட் பட்டனைப் பதிக்க சில வழிகள் தரப்படும். இந்த வேளையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் உடனே நெட்ராக்கெட் தளத்தின் மேலாக இருக்கும் ராக்கெட் மேனுவல் லிங்க்கில் கிளிக் செய்து சந்தேகத்தினைப் போக்கிக் கொண்டு தொடரலாம். அது மட்டுமின்றி நெட்ராக்கெட்டினை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் டிப்ஸ்களைப் பார்க்கலாம்.
பிரவுசரில் நெட் ராக்கெட் பட்டன் உங்கள் இணைய உலாவினைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டு தன் தளத்தில் பதிந்து வைத்துக் கொள்கிறது. வேறு பிரவுசரில் அமைக்கப்படும் புக் மார்க்குகளையும் இவ்வாறே நெட் ராக்கெட்டில் பதிந்து வைக்கலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் என்றில்லாமல் எந்த கம்ப்யூட்டர் மூலமும் இந்த தளம் சென்று உங்கள் புக்மார்க்குகளைப் பெற்று தளங்களைக் கிளிக்கிட்டுப் பெறலாம்.
இந்த தளத்தினை நான் பெரிதும் நேசிக்கிறேன். ஏனென்றால் நான் பார்க்க விரும்பும் தளங்களை இதில் கால நேரத்துடன் குறித்து வைத்துக் கொள்ள முடியும். பார்ப்பதற்கு ரிமைண்டர்கள் வரும்படி செட் செய்து கொள்ளலாம். இந்த வசதிக்காகத்தான் நெட் ராக்கெட் தளத்தினை நான் மிகவும் மதிக்கிறேன்.
நெட் ராக்கெட் தரும் இன்னொரு சிறப்பான வசதியை இங்கே சொல்லியாக வேண்டும். நமக்குப் பிடித்த புக்மார்க் செய்த தளங்களில் குறிப்பிட்ட வகை தளங்களுக்கு லேபிள் செய்து டேக் அமைக்க முடியும். இதன் மூலம் நான் விரும்பும் வகை தளங்களை அந்த டேக்கில் கிளிக் செய்வதன் மூலம் எளிதில் பகுத்துக் காண முடியும். சினிமா பாடல்கள், மூவீஸ், நியூஸ், கம்ப்யூட்டர் டிப்ஸ் என தளங்களை வகைப்படுத்த முடியும். இன்னும் பல பயன்களை இதன் மூலம் பெற முடியும்.

No comments:

Post a Comment