சூடான சப்பாத்தி, புலாவுடன் சாப்பிட ஏற்ற வெஜிடபிள் குருமா செய்வது எப்படி? இதோ எளிய செய்முறை.
தேவையான பொருள்கள்:
உருளைக் கிழங்கு - 3
கேரட் - 1
குடமிளகாய் - 2
தேங்காய்த்துருவல் - 1 கப்
பட்டை - சிறிதளவு
பூண்டு - 10 பல்
கொத்துமல்லித்தழை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 2
பட்டாணி - 1 கப்
காலிஃப்ளவர் - சிறியது
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - சிறிதளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* காய்கறிகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் மைக்ரோ ஹையில் மூடி வேகவிடவும்.
* ஒரு மைக்ரோ வேவ் பாத்திரத்தில் எண்ணெயையும் மசாலாப் பொருள்களையும் போட்டு 3 நிமிடம் மைக்ரோ ஹையில் வைக்கவும்.
* இதில் பூண்டு, வெங்காயம், தேங்காய் சேர்த்து 3 நிமிடம் மைக்ரோ ஹையில் வைக்கவும்.
* இவற்றை மிக்சியில் விழுதாக அரைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மல்லித்தூள் ஆகியவைகளையும், காய்கறிகளையும் கலந்து 5 நிமிடம் மைக்ரோ ஹையில் சமைக்கவும்.
* கொத்துமல்லித் தழை தூவி அழகுபடுத்தவும்.
No comments:
Post a Comment