எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தேதி பார்மட்
எக்ஸெல் ஒர்க் ஷீட்களை அமைக்கையில் தேதிக்கான பார்மட்களை செட் செய்கையில் பலரும் தடுமாற்றம் அடைகின்றனர். ஏனென்றால் நாம் அமைக்கும் தேதி பார்மட்டும், எக்ஸெல் தொகுப்பில் கிடைக்கும் மாறா பார்மட்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருப்பதுதான். இருப்பினும் நாம் விரும்பும் வகையில் தேதிக்கான பார்மட்டை அமைத்திட வழி தரப்பட்டுள்ளது. இதனை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் எந்த செல்களில் தேதி அமைய வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின் Format மெனு சென்று அதில் Cells என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + 1 அல்லது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells தேர்ந்தெடுக்கலாம். பின் கிடைக்கும் பார்மட் செல்ஸ் டயலாக் விண்டோவில்

Number டேபினைக் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில் இடது பக்கம் கேடகிரி என்பதன் கீழாக Custom என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Type என்பதில் பல ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இவற்றில் நீங்கள் விரும்பும் வகையில் தேதி மற்றும் ஆண்டினை அமைக்கும் வகையைக் காணலாம். அவை என்னவென்று இங்கு பட்டியலிடலாம்.
தேதி வகைகள்:
d என்பது ஒரு நாளின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 … 30, 31)
d d என்பது நாளின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
d d d என்பது நாளினைச் சுருக்கித் தரும் (Mon, Tue ….)

d d d d என்பது நாளினை அதன் முழு பெயரில் தரும் (Monday, Tuesday, etc).
மாதத்திற்கான குறிப்புகள்:
m என்பது ஒரு மாதத்தின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 … 30, 31)
mm என்பது மாதத்தின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
mmm என்பது மாதத்தினைச் சுருக்கித் தரும் (Jan, Feb,….)

mmmm என்பது மாதத்தினை அதன் முழு பெயரில் தரும் (January, February etc).
mmmmm என்பது மாதத்தின் முதல் எழுத்தினைத் தரும் (J, F, M, A,)
ஆண்டுக்கான குறிப்புகள்:
yy என்பது வருடத்தின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (07,08,09)
yyyy என்பது வருடத்தின் எண்ணை நான்கு இலக்கங்களில் தரும் (2007, 2008, 2009)
ஓ, இப்போது நாள், மாதம் மற்றும் ஆண்டுக்கான குறியீடுகளைக் கற்றுக் கொண்டீர்கள். இனி இவற்றை எப்படி அமைப்பீர்கள் என்று பார்க்கலாம்.
Custom கேடகிரியில் கிளிக் செய்கையில் வலது பக்கத்தில் Type என்ற சொல்லுக்குக் கீழாக ஒரு பீல்டு கொடுக்கப்பட்டு அதில் உங்கள் தேதியின் பார்மட்டை டைப் செய்திட இடம் கொடுக்கப்பட்டிருக்கும். இங்கு ஏற்கனவே நீங்கள் கற்றுக் கொண்டதன் அடிப்படையில் உங்களுக்கு எப்படி தேதி இருக்க வேண்டுமோ அதன்படி அமைக்கவும். பின் நீங்கள் தரும் தேதி அதற்கேற்றபடி அமைக்கப்படுவதனைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக dddd, mmmm d, yyyy என நீங்கள் தேர்ந்தெடுத்தால், 52609 என டைப் செய்திருந்தால் அது Friday, May 26, 2009 எனக் காட்டப்படும். ஒன்றைக் கவனித்தீர்களா! நாம் இடையே செருகிய கமாக்களும் அதற்கான இடத்தில் காட்டப்பட்டுள்ளன. கமா இடத்தில் சிறிய இடைக்கோடு மற்றும் வேறு அடையாளங்களையும் பயன்படுத்தலாம். Type பீல்டின் மேலாக Sample என ஒரு பிரிவியூ பாக்ஸ் இருப்பதனைக் காணலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த வகையில் செல்களில் உள்ள டேட்டா எப்படிக் காட்டப்படும் என இங்கு காட்டப்படுவதனையும் காணலாம். இதன் மூலம் நீங்கள் விரும்பும் வகைக்கான பார்மட்டினை நீங்கள் அமைக்கிறீர்களா என்று இதில் செக் செய்து கொள்ளலாம். இவ்வாறு செட் செய்துவிட்டு ஒர்க் ஷீட்டிற்குள் நுழைந்தால் நீங்கள் செட் செய்தபடி செல்களில் உள்ள தேதி பார்மட் மாற்றப்பட்டிருப்பதனைக் காணலாம்.

டுவிட்டர் ஜனத்தொகை 7.5 கோடி
சமுதாய இணையதளமாக இயங்கும் ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 7 கோடியே 50 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த தளத்தில் சேரும் புதியவர்களின் எண்ணிக்கை உயர்வு குறைந்து கொண்டு வருகிறது. மேலும் இதில் உறுப்பினரான பலர் எந்த செயல்பாட்டினையும் இதில் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது. கடந்த ஜூலையில் தான் ட்விட்டர் தளத்தில் புதியதாய்ச் சேருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமானது. அப்போது 78 லட்சம் பேர் சேர்ந்தனர். அடுத்த மாதங்களில் இந்த எண்ணிக்கை 60 லட்சம் என்ற அளவில் இருந்தது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மொத்த ட்விட்டர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் சேர்ந்துள்ளனர். ஆனால் சேருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு சிறிய செய்தி கூட அனுப்புவதில்லை. தொடர்ந்து குறுஞ்செய்திகளை இந்த தளத்தில் போடுபவர்களின் எண்ணிக்கை 10 அல்லது 15 லட்சம் பேர் தான்.
பாலியல் தளங்களுக்குத் தடா
இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலியல் தொடர்பான தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வீடுகளிலும் பள்ளிகளிலும், குழந்தைகளை இது போன்ற பாலியல் தளங்களையும், ஏமாற்றும் தளங்களையும் அடையாளம் கண்டு பாதுகாப்பது சிரமமான காரியமாக உள்ளது.
இணையத்தில் கே9 வெப் புரடக்ஷன் (K9 Web Protection) என்ற பெயரில் இது போன்ற தளங்களை வடிகட்டும் சாப்ட்வேர் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் தளத்தில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை எப்படி டவுண்லோட் செய்து பயன்படுத்துவது என்று படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.
முதலில் http://www.k9webprotection.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இந்த சாப்ட்வேர் புரோகிராமினை டவுண்லோட் செய்திடுங்கள். டவுண்லோட் செய்திடும் முன் உங்கள் பெயர், முகவரி போன்ற பெர்சனல் தகவல்கள் கேட்கப்பட்டு படிவம் ஒன்றில் நிரப்பி இணையத்தில் அனுப்ப வேண்டும். பின் கே9 தளம் நீங்கள் தந்த இமெயில் முகவரிக்கு ஒரு அஞ்சல் அனுப்பும். அதில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த ஒரு கீ தரப்படும். சாப்ட்வேர் தொகுப்பினை டவுண்லோட் செய்த பின், அதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும். இந்த புரோகிராம் தானாகவே பாலியல் தகவல்கள் கொண்டுள்ள தளங்களைத் தடுத்துவிடுகிறது. இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தளம் இடம் பெற்றால், அதனை அந்த பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். தடை செய்யக் கூடிய பொருட்கள் குறித்த பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.
கே 9 வெப் புரடக்ஷன் சாப்ட்வேர் இந்த வகையில் மிகவும் பயனுள்ள புரோகிராமாக உள்ளது. குழந்தைகள் மோசமான தளங்களைப் பார்ப்பதிலிருந்து தடுக்கிறது.

திருடப்பட்ட பாஸ்வேர்ட்
என்னதான் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாத்தாலும், சில ஹேக்கர்கள் பாஸ்வேர்ட்களைக் கண்டறிந்து, திருடுவதிலும், நாசம் செய்வதிலும் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு பாஸ்வேர்ட் திருடப்பட்ட கம்ப்யூட்டர் களை ஆய்வு செய்த போது மிகவும் பிரபலமான பாஸ்வேர்ட் ஒன்று பெரும்பா லானவர்களால் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அந்த பாஸ்வேர்ட் 1234356. 3 கோடியே 20 லட்சம் திருடப்பட்ட பாஸ்வேர்ட்களை ஆய்வு செய்திடுகையில் இந்த தகவல் தெரிய வந்தது. பாஸ்வேர்டை நினைவு வைப்பதில் உள்ள சோம்பேறித்தனமும், அதனை எளிதாக டைப் செய்திட வேண்டும் என்கிற ஆசையுமே இந்த பாஸ்வேர்டைப் பலர் பயன்படுத்த இடம் அளித்துள்ளது.
பொதுவாக சிறிய பாஸ்வேர்ட்கள், சிறிய பெரிய எழுத்துக்களையும் எண்களையும் கலந்திடாத பாஸ்வேர்ட், டிக்ஷனரியில் உள்ள சிறிய சாதாரண சொற்கள் ஆகியவை பாஸ்வேர்ட்களாக இருந்தால் ஹேக்கர்கள் மிக எளிதாக அவற்றைக் கண்டறிந்து விடுகின்றனர். இந்த ஆய்வில் இன்னும் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
110 முறை முயற்சி செய்தால், நிச்சயம் ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு பாஸ்வேர்டைக் கண்டறியலாம். ஆயிரம் அக்கவுண்ட்களை உடைத்தெறிய ஒருவருக்கு 17 நிமிடங்களே ஆயின. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் 30% பேர் மிகச் சிறிய, ஆறு எழுத்துக்களுக்கும் குறைவாக, பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்துகின்றனர். 60 சதவீதம் பேர் பயன்படுத்தும் எழுத்துக்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.
50 சதவீதம் பேர் பெயர்கள், வழக்குச் சொற்கள், அகராதியில் உள்ள சில குறிப்பிட்ட சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால் தான் ட்விட்டர் போன்ற தளங்கள் நூற்றுக் கணக்கான சொற்களை, பாஸ்வேர்ட்களாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது.
பாஸ்வேர்ட்களை எப்படி அமைக்க வேண்டும் என்ற அறிவுரையைப் பெற விரும்புகிறீர்களா!http://www.imperva.com/ docs/WP_Consumer_Password_ Worst_Practices.pdf என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள்.

இலவச அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் – புதிய பதிப்பு
இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தக் கூடிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் மிகவும் பிரபலமானது அவாஸ்ட் (avast!) தொகுப்பாகும். இது தற்போது அதன் பதிப்பு 5க்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் புதிய யூசர் இன்டர்பேஸ் மற்றும் நவீன வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த புதிய பதிப்பு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் கிடைக்கிறது. இதில் இணைக்கப்பட்டுள்ள புதிய வசதிகள்:
1. ஸ்பைவேர் தொகுப்புகளைக் கண்டறிய புதிய அப்ளிகேஷன்
2. அவாஸ்ட் இன்டெலிஜன்ட் ஸ்கேனர்
3. சைலண்ட்/கேமிங் வசதி
4. புதிய கிராபிகல் யூசர் இன்டர்பேஸ்
5. வைரஸ் இயங்கும் விதம் அறிந்து பாதுகாப்பு
6. மிக வேகமாக அப்டேட் பைல்கள் ஏற்பு
7. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஸ்கேனிங் என இன்னும் பல வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பதிப்பு மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இயங்குகிறது.
ஏறத்தாழ 10 கோடிப் பேருக்கும் மேலாக,இலவச ஆண்ட்டி வைரஸ் அவாஸ்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.avast.com/freeantivirusdownload என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்

No comments:
Post a Comment