Monday, 2 April 2012

பி.டி.எப். பைல் தரும் புரோகிராம்கள்,, எம்பி 3- அடுத்து மியூசிக் டி.என்.ஏ.,, வேர்ட் தொகுப்பில் உங்கள் டூல்பாரை உருவாக்க


பி.டி.எப். பைல் தரும் புரோகிராம்கள்

பி.டி.எப். பைல் தரும் புரோகிராம்கள்
டாகுமெண்ட் பார்மட்களில், பயன்பாட்டில் நமக்கு அதிகம் உதவுவது பி.டி.எப். (PDFPortable Document Format) பார்மட் ஆகும். இதனை உருவாக்க அடோப் சாப்ட்வேர் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க அடோப் ரீடர் இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. பைல்களை (எக்ஸெல், வேர்ட், பி.பி.டி., போன்றவற்றை) பி.டி.எப். பைலாக மாற்ற வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பி.டி.எப். பைல்களை உருவாக்கவும், உருவாக்கிய பைல்களைப் பிரித்து வைக்கவும், பகுதி பகுதியாக அவற்றை அமைக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப். பைல்களை இணைக்கவும் இணையத்தில் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. பி.டி.எப். மேக்கர் (PDF Maker from http://www.pdfmaker.biz/): ஒரே கீ கிளிக்கில் பி.டி.எப். பைலாக மாற்றும் திறன் கொண்டது இந்த சாப்ட்வேர். எந்த டெக்ஸ்ட் எடிட்டரிலும் டாகுமெண்ட் ஒன்றை தயாரித்துவிட்டு, இந்த தளம் சென்று டவுண்லோட் பட்டனில் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் லோக்கல் டிரைவில், பைலுக்கான பி.டி.எப். டாகுமெண்ட் கிடைக்கும். எந்த பைல் வகையாக இருந்தாலும் பி.டி.எப். டாகுமெண்ட்டை இந்த தளம் தரும். அத்துடன் இதற்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். புதிய டெக்ஸ்ட்டை இணைக்கலாம். பி.டி.எப். ஆன பின்னும் டெக்ஸ்ட்டில் அடிக்கோடிடலாம்; போல்ட் செய்திடலாம்; புதிய படங்களைச் சேர்க்கலாம்; ஏற்கனவே இருக்கிற கிராபிக்ஸ் ஆப்ஜெக்டை நீக்கலாம். பி.டி.எப். ஆன பக்கங்களை சுருக்கலாம், நகர்த்தலாம், ஒன்றுடன் ஒன்றை இணைக்கலாம். என்கிரிப்ட் மற்றும் டி கிரிப்ட் செய்திடலாம்.
2. பி.டி.எப் – டு – வேர்ட் (PDF2Word from http://www.pdfonline.com/pdf2word /index.asp): எந்தவிதமான சிக்கலும் இன்றி பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலை மீண்டும் வேர்ட் டாகுமெண்ட்டாக மாற்றலாம். எந்த புரோகிராமினையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இந்த தளம் சென்று, உங்கள் கம்ப்யூட்டரில் பிரவுஸ் செய்து,பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால், அது வேர்ட் பைலாக மாற்றம் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். இது போல மேலும் ஆறு புரோகிராம் களைப் பயன்படுத்திப் பார்த்ததில், இதுதான் மிகச் சிறந்ததாகவும், வேகமாகவும் செயல்படும் புரோகிராமாகத் தெரிகிறது. பி.டி.எப்.பைல்களை வேர்டுக்கு மாற்றம் செய்து, பின் அவற்றை எடிட் செய்து, பின் மீண்டும் பி.டி.எப். ஆக மாற்றம் செய்திட விரும்புவோருக்கு இது மிகவும் பயன்படும்.
3. பி.டி.எப். கிராக் (PDFCrack): நீங்கள் ஒரு பி.டி.எப். பைலை பாஸ்வேர்டுடன் உருவாக்கிய பின் பாஸ்வேர்டை மறந்துவிட்டீர்கள். கவலையே வேண்டாம்.http://www.ensode.net/pdfcrack.jsf என்ற முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். அங்கு Browse என்ற பீல்டில் கிளிக் செய்து உங்கள் பைல் எங்கு உள்ளது என்று காட்டவும். உடன் அந்த திறக்கப்படும். அது மட்டுமின்றி, பி.டி.எப். பைலை உருவாக்கியவர் இதில் காட்டிய வரையறைகள் எதுவும் இல்லாமல், அந்த பைல் புதிய பிரவுசர் விண்டோவில் காட்டப்படும்.
4. பி.டி.எப். டு எக்ஸெல் ஆன்லைன் (pdftoexcelonline): எக்ஸெல் ஒர்க்ஷீட்கள் பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால், அதனை மீண்டும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டாக மாற்றhttp://www.pdftoexcelonline.com என்ற முகவரியை அணுகவும். எக்ஸெல் பைல் உங்களுக்கு இமெயில் வழியே அனுப்பப்படும்.
5. பி.டி. பைண்ட் (PD Find): கூகுள் மற்றும் பிங் போன்ற தளங்கள் வழியே நீங்கள் பைல்களைத் தேடிப் பெறலாம். ஆனால் சில வேளைகளில்நீங்கள் தேடும் சொற்களை பி.டி.எப். பைல்களில் மட்டும் தேடிப் பெற வேண்டியதிருக்கும். இந்த (http://pdfind.com)தளத்தில் தேடும் சொற்களைக் கொடுத்தால், அவை உள்ள பி.டி.எப். பைல்கள் இருக்கும் இடம், அந்த பைல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற விபரங்களுடன் காட்டப்படும்.
6. பி.டி.எப். வியூ (PDFVue): அடோப் அக்ரோபட் ரீடர் செய்திடும் உதவியை இந்த தளம் ஆன்லைனில் நமக்குத் தருகிறது. http://www.pdfvue.com என்ற தளத்தில் இது கிடைக்கிறது. உங்கள் டாகுமெண்ட்டை இதில் அப்லோட் செய்து பி.டி.எப். பைலாகவும் மாற்றி எடிட் செய்திடலாம்.
7.எச்.டி.எம்.எல். டு பிடிஎப் கன்வெர்டர் (Html to PDF Coverter): எந்த ஒரு இணைய தளத்தினையும் அல்லது எச்.டி.எம்.எல். பைலையும் பி.டி.எப். பைலாக மாற்றித் தரும். செல்ல வேண்டிய தளம் http://htmlpdfconverter.com
8. மெர்ஜ் பிடிஎப் (Merge PDF): எந்த சாப்ட்வேர் தொகுப்பையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடாமல், அதிக பட்சம் பத்து பி.டி.எப். பைல்களை இணைக்கலாம். இதனை மேற்கொள்ள நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி http://www.mergepdf.net. ஒவ்வொருபைலும் 5 எம்பி க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் 10 பைல்களை இணைக்கலாம். பி.டி.எப். பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால் போதும்.
9.கவுண்ட் ஆன் இட் (Count On It): பி.டி.எப். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள கேரக்டர்களையும் சொற்களையும் எண்ணி அறிய வேண்டுமா? 1 எம்பி வரை உள்ள பி.டி.எப். பைல்களை இதன் மூலம் பயன்படுத்தி எண்ணிக்கையைப் பெறலாம். http://felixcat.com/tools/wordcount/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த வசதி கிடைக்கிறது. PDF, HTML, XML, CSV,, பார்மட் பைல்களை மட்டுமே சப்போர்ட் செய்திடும். எம்.எஸ். ஆபீஸ் பைல்களை பயன்படுத்தாது.
10. ஸ்பீடி பி.டி.எப். (SpeedyPDF): இது ஒரு சிறிய அப்ளிகேஷன். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், இது ஒரு பிரிண்டராக உங்கள் கம்ப்யூட்டரில் அமர்ந்துவிடும். நீங்கள் பி.டி.எப்.பார்மட்டில் ஒரு பைலை மாற்ற வேண்டும் என்றால், அதனை பிரிண்ட் கட்டளை கொடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில் பிரிண்டராக ஸ்பீடி பிடிஎப் தேர்ந்தெடுக்க வேண்டும். பைல் பி.டி.எப். பைலாக மாற்றித் தரப்படும். செல்ல வேண்டிய தள முகவரி http://www.brothersoft.com/ speedypdf30012.html

No comments:

Post a Comment