கூகுள் லேப்ஸ் – புதிய அம்சங்கள்
கூகுள் சர்ச் தேடல் பகுதிகளில் ஏதேனும் புதுமையான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வசதிகள் தரப்பட்டால், உடனே அதனை அறிந்து கொண்டு பயன்படுத்துகிறோம். கூகுள் தன் பிரிவுகள் அனைத்திலும் அதே போல புதிய அம்சங்களை அறிமுகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. கூகுள் லேப்ஸ் பிரிவில் அறிமுகப்படுத் தியுள்ள சில அம்சங்களை இங்கு காண்போம்.
ஜிமெயிலில் செட்டிங்ஸ் (Settings) பிரிவில் லேப்ஸ் (Labs) என்பதில் கிளிக் செய்தால் இவற்றைப் பார்க்கலாம்.
Google Search ஜிமெயிலில் நீங்கள் இருக்கையில், ஏதேனும் ஒன்றை கூகுள் சர்ச் இஞ்சினில் தேட வேண்டும் என்றால், உடனே வெளியேறி, அல்லது அடுத்த டேப்பில் கூகுள் சர்ச் தளத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. கூகுள் மெயிலில் இருந்தவாறே தேட வசதி தரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வழக்கமான தேடல் இஞ்சினில் உள்ளது போல டிக்ஷனரி விளக்கம்,ஸ்பெல் செக், கால்குலேட்டர், சீதோஷ்ண நிலை அறிதல், செய்திகள் என அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளன.
Undo Send: இந்த வசதி மூலம், Send பட்டனில் கிளிக் செய்து அனுப்பிய மெயிலை சில நொடிகளில் திரும்பப் பெறலாம்.
Snake: கூகுள் தளத்தில் இருக்கையில்,சிறிய பெர்சனல் பிரேக் எடுக்க வேண்டும் என்றால், விளையாட்டு ஒன்றை விளையாடலாம். Old Snakey என்னும் விளையாட்டினை முதலில் இயக்கிக் கொள்ளுங்கள். பின் ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று ஷார்ட் கட் கீ இயக்கத்திற்கு உயிர் (Enable) கொடுங்கள். அதன் பின் ஷார்ட் கட் கீயாக – கீயை அழுத்தினால் பிரபலமான ஸ்நேக் விளையாட்டு கிடைக்கும்.
Attachment Detector: அட்டாச்மென்ட் இணைப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு, பின் அதனை இணைக்காமலேயே மெயிலை நாம் பல முறை அனுப்பி விடுகிறோம். பின்னர் தவறை உணர்ந்து மீண்டும் ஒரு முறை அந்த மெயிலை அட்டாச்மெண்ட் பைலுடன் அனுப்புகிறோம். இந்த தவறைக் கண்டறியும் வசதியாக, அட்டாச்மென்ட் டிடெக்டர் (Attachment Detector) உள்ளது. இதனை இயக்கி விட்டால், அது நாம் தயாரிக்கும் இமெயிலை ஸ்கேன் செய்கிறது. அதில் அட்டாச் செய்வதாக செய்தி இருந்தால், பைல் அட்டாச் செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, இல்லை எனில் நம்மை உஷார்படுத்துகிறது.
Hide Unread Counts: நமக்கு வந்த பல மெயில்களை நாம் வெகுநாட்கள் திறக்காமல் வைத்திருப்போம். இது தலைப்பில் இத்தனை மெயில்கள் படிக்கப்படாமல் உள்ளன என்று காட்டப்பட்டு நம் மானத்தினை வாங்கும். இந்த செய்தி வராமல் இருக்க இந்த டூல் உதவுகிறது.
Vacation Time : வெளியூர் செல்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இன்பாக்ஸில் வந்து சேரும் மெயில்களுக்கு யார் பதில் சொல்வது. இங்கு தான் Vacation Time என்ற வசதி பயன்தருகிறது. இதனை இயக்கி எந்த நாள் முதல் எந்த நாள் வரை என தேதிகளை வரையறை செய்தால், மெயில் வந்தவுடன், அதனை அனுப்பியவருக்கு, நீங்கள் விடுமுறையில் உள்ளதாகவும், குறிப்பிட்ட இந்த நாளில் வருவீர்கள் என்றும் செய்தி மின்னஞ்சலாகத் தானாகச் செல்லும்.
You Tube Preview: உங்களுக்கு வந்த மின்னஞ்சலில், அதனை அனுப்பியவர் யு ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ ஒன்றுக்கு லிங்க் அனுப்பி இருந்தால், அது என்ன என்று அறியாமல், புதிய டேப்பில் அதனை இயக்க வேண்டியதில்லை. இந்த வசதி மூலம், மெயிலிலேயே அந்த வீடியோவின் பிரிவியூ ஒன்றைக் காணலாம்.
Insert Image: இந்த வசதி மூலம் இமேஜ் ஒன்றை இமெயிலில் இணைக்கலாம். அப்படியே அனுப்பலாம்.

வேர்ட் பேட் – நோட்பேட்
எம்.எஸ். வேர்ட் சில வேளைகளில் இயங்காமல் தொல்லை கொடுக்கையில், அல்லது எளிய முறையில் சில சிறிய டெக்ஸ்ட்டை அமைக்க முயற்சிக்கையில், புரோகிராமிங் வரிகளை அமைக்கையில் நாம் நோட்பேட் புரோகிராமினை இயக்கி வேலை பார்க்கிறோம்.
நோட்பேடிலிருந்து சில கூடுதல் வசதிகளுடன் நமக்குக் கிடைப்பது வேர்ட் பேட். இது வேர்ட் புரோகிராம் அளவிற்கு அனைத்து வசதிகளும் கொண்டது இல்லை என்று தெரிந்தாலும், எந்த வகைகளில் இவை வேறுபட்டுள்ளன என்று இங்கு பார்க்கலாம்.
நோட்பேட் மற்றும் வேர்ட் பேட் – ஆகிய இரண்டும் டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம்களாகும். இவை அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இணைந்தே கிடைக்கின்றன. உங்களிடம் எம்.எஸ். வேர்ட் போன்ற புரோகிராம்கள் இல்லை என்றால், இவற்றில் இரண்டையும் அல்லது ஒன்றைப் பயன்படுத்தலாம். அது எந்த வகையான டாகுமெண்ட்டை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
நோட்பேடில் வெறும் அடிப்படை டெக்ஸ்ட் மட்டும் அமைக்கலாம். வேர்ட் பேட் அதற்கும் மேலாக ஒரு வேர்ட் ப்ராசசர் வரை செல்லும். நோட்பேட் ஒரு எச்.டி.எம்.எல். எடிட்டர் ஆகும். எனவே அதனை ஒரு வெப்சைட்டை உருவாக்கும் சாதனமாகப் பயன்படுத்தலாம். ஆனால் வேர்ட்பேடினை ஒரு எச்.டி.எம்.எல். எடிட்டராக இயக்க முடியாது. இன்னும் சில வேறுபாடுகளை இங்கு பட்டியலிடலாம்.
1. பார்மட்டிங் / பேஜ் செட் அப்
நோட்பேட் அடிப்படையில் ஒரு டெக்ஸ்ட் எடிட்டர் மட்டுமே. ஒரு எழுத்து வகையினைத் தேர்ந்தெடுத்து, முழு டாகுமெண்ட்டிற்கு டேப் இடைவெளியினை இடைச் செருகலாம். பாராக்களை வேறு வகையில் பார்மட் செய்திட முடியாது. மேலும் இந்த எழுத்து வகை டாகுமெண்ட்டுடன் சேவ் ஆகாது. அந்த பாண்ட் இல்லாத இன்னொரு கம்ப்யூட்டரில் அந்த டாகுமெண்ட்டைப் பார்க்கும் போது, எந்த பாண்ட் இருக்கிறதோ அதில் காணலாம்.
வேர்ட் பேடில் பல வேர்ட் ப்ராசசிங் திறன்கள் இணைந்து தரப்பட்டுள்ளன. பாராக்களை ஒழுங்கு வரிசைப்படுத்தலாம். நோட்பேடில் இருப்பது போல் அல்லாமல், வேர்ட் பேடில் டாகுமெண்ட் ஒன்றை சேவ் செய்கையில், அதன் பார்மட் சமாச்சாரங்களும் சேர்த்து சேவ் செய்யப்படும். எனவே எப்படி டாகுமெண்ட்டை உருவாக் கினீர்களோ, அதே வடிவில் டாகுமெண்ட் களைப் பிற வேர்ட் ப்ராசசரில் காணலாம்.
வேர்ட்பேட், நோட்பேட் ஆகிய இரண்டும் அடிப்படை பக்க அமைப்புகளைக் கொண்டுள்ளன. புட்டர்களையும் ஹெடர் களையும் இணைக்கலாம்; மார்ஜின்களை அமைக்கலாம். நெட்டாகவோ, படுக்கை வகையிலோ அச்சடிக்குமாறு வரையறை செய்திடலாம்.
2. கிராபிக்ஸ்:
நோட்பேடில் கிராபிக்ஸை இடைச் செருக முடியாது. ஆனால் வேர்ட்பேடில் எந்த கிராபிக்ஸையும் செருகி அமைக்க முடியும். அவற்றை எடிட் செய்திடவும் முடியும்.
3. டெக்ஸ்ட் பைல்கள்:
நோட்பேட் அதன் பைல்களை டெக்ஸ்ட் பைல்களாக சேவ் செய்கின்றன. இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இதனைப் படித்துக் காட்ட முடியும். அதே நேரத்தில் மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் மற்ற பார்மட்களைப் படித்தறிய முடியாது.
4. இணைய தளங்கள்:
இங்கு தான் நோட்பேட் ஜொலிக்கிறது. தங்கள் இணைய தள வடிவமைப்பில், எச்.டி.எம்.எல். (HTML–Hyper Text Markup Language) பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், நோட்பேடினை ஒரு பயனுள்ள எடிட்டராகக் காண்கின்றனர். ஸ்பெஷலாக பார்மட்டிங் மேற்கொள்பவர்கள், வேறு ஒரு எச்.டி.எம்.எல். எடிட்டரை நாடுவார்கள். சுருக்கமாகவும் முடிவாகவும் கூறுவதென்றால், நீங்கள் ஓர் எளிய டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள் என்றால், அல்லது ஒரு இணையப் பக்கத்தினை எடிட் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் நோட்பேடினைப் பயன்படுத்தலாம். ஆனால் கூடுதல் பார்மட்டிங் வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் வேர்ட் பேடினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நோட்பேடினைத் திறக்க, Start >> Programs >> Accessories சென்று அடுத்து Notepad என்பதில் இடது கிளிக் செய்திடவும்.
வேர்ட் பேடினைத் திறக்க Start >> Programs >> Accessories சென்று அடுத்து Wordpad என்பதில் இடது கிளிக் செய்திடவும்.
இந்த இரண்டு புரோகிராம்களுமே அளவில் சிறிய பைல்களைக் கொண்டிருப்பதால், இரண்டும் வெகு சீக்கிரம் இயக்கப்பட்டு, செயல்பாட்டிற்குத் தயாராய் இருக்கும்.

2009ஆம் ஆண்டின் இன்டர்நெட் புள்ளி விபரங்கள்
நடந்து முடிந்த 2009ஆம் ஆண்டின் இன்டர்நெட் புள்ளி விபரங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் அனுப்பப்பட்ட இமெயில்கள் – 90 ட்ரில்லியன். நாளொன்றுக்கு சராசரியாக 24.7 கோடி இமெயில்கள் அனுப்பப்பட்டன. உலக அளவில் 140 கோடி பேர் இமெயில்களைப் பயன்படுத்தினர். இந்த ஆண்டில் புதிதாய் இமெயில் அனுப்பி யவர்கள் 10 கோடி. மொத்த இமெயில்களில் குப்பையாக மொத்தமாக அனுப்பப்பட்டவை 81சதவீதம். ஆண்டின் இறுதியில் இந்த ஸ்பேம் மெயில்கள் 92 சதவீதம் வரை உயர்ந்தன. சென்ற ஆண்டு மட்டும் ஸ்பேம் மெயில்களின் எண்ணிக்கை 24 சதவீதம் உயர்ந்திருந்தது. நாளொன்றுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ஸ்பேம் மெயில்கள் அனுப்பப்பட்டன. டிசம்பர் இறுதியில் மொத்தம் 23.40 கோடி இணையதளங்கள் இருந்தன. இவற்றில் 4.7 கோடி இணையதளங்கள், 2009ல் உருவாக்கப்பட்டவை. மொத்த தளங்களில் .COM என்ற வகை தளங்கள் 8.18 கோடி, .NET என்ற பெயரில் 1.23 கோடி, .ORG என்ற வகையில் 78 லட்சம், .IN போன்ற நாட்டின் துணைப் பெயர்களில் 7,63 கோடி இருந்தன. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இன்டர்நெட் பயன்படுத்து வோர் எண்ணிக்கை 18% உயர்ந்திருந்தது. ஆசியா – 73,82,57,230, ஐரோப்பா – 41,80,29,796, அமெரிக்கா 25,29,08,000, கரிபியா, லத்தீன் அமெரிக்க நாடுகள் – 17,90,31,479, ஆப்பிரிக்கா – 6,73,71,700, மத்திய கிழக்கு நாடுகள் – 5,74,25,046, ஆஸ்திரேலியா, ஓசியானியா நாடுகள் – 2,09,70,490. பிளாக்குகள் எனப்படும் சிறிய வலை மனைகளின் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டில் 12.6 கோடி. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் வலைமனை 84 சதவீதம் கூடுதலாகும். பேஸ்புக் தளத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கை 35 கோடி. இவர்களில் 50சதவீதம் பேர் நாள்தோறும் இதனைப் பயன்படுத்தினர். 5 லட்சம் பேர் தொடர்ந்து பயன்படுத்து பவர்களாக இருந்தனர். 2009 டிசம்பரில் பிரவுசர் பயன்பாடு கீழ்க்குறித் தபடி இருந்தது. இன்டர்நெட் எக்ஸ் புளோரர் – 62.7சதவீதம், பயர் பாக்ஸ் 24.6 சதவீதம், குரோம் 4.6 சதவீதம், சபாரி 4.5சதவீதம், ஆப்பரா 2.4 சதவீதம், மற்றவை 1.2 சதவீதம்.
கண்டறிந்து மாற்று (Find and Replace)
வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல் அல்லது சொல் தொடருக்குப் பதிலாக நாம் வேறு சொற்களை அல்லது சொல் தொடர்களை அமைக்கலாம். இதற்காக ஒவ்வொன்றாகத் தேடித் தேடி அமைக்க வேண்டிய தில்லை. இந்த தொகுப்பில் உள்ள Find and Replace டூல் இந்த செயலை மேற்கொள்ளும். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. நாம் மாற்றி அமைக்க விரும்பும் டெக்ஸ்ட் 255 கேரக்டர்களுக்குள் இருக்க வேண்டும். இல்லையே சிக்கல் ஏற்படும். அல்லது ஏதேனும் கிராபிக் ஆப்ஜெக்டாக இருந்தாலும், இதன் மூலம் மேற்கொள்ள முடியாது. ஆனால் இந்த விதியை நாம் மாற்ற முடியும். அதற்கான வழியை இங்கு பார்க்கலாம்.
1. முதலில் எந்த டெக்ஸ்ட் அல்லது கிராபிக்ஸ் படத்தை மாற்ற வேண்டுமோ, அதனை காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லுங்கள். காப்பி செய்தாலே அது கிளிப் போர்டில் அமர்ந்து கொள்ளுங்கள்.
2. அடுத்து எடிட் (Edit) மெனு செல்லுங்கள். வேர்ட் 97 மற்றும் பின்னர் வந்தவேர்ட் தொகுப்புகளில் Find and Replace பாக்ஸ் கிடைக்கும். அதற்கு முந்தைய தொகுப்புகளில் (இன்னும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால்) ரீபிளேஸ் டயலாக் பாக்ஸ் தனியே கிடைக்கும்.
3. Find What பாக்ஸில், எந்த டெக்ஸ்ட்டின் இடத்தில் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் அல்லது படத்தை ரீபிளேஸ் செய்திட வேண்டும் என்பதனை அமைத்திடுங்கள்.
4. அடுத்து Replace With பாக்ஸில் ^c அழுத்துங்கள். இந்த கட்டளை வேர்டுக்கு கிளிப் போர்டில் உள்ளதை இங்கு கொண்டு வா என்று சொல் கிறது.
5. அடுத்து Find Next என்பதில் கிளிக் செய்தி டவும்.
இப்படி யே நீங்கள் விரும்பிய வகையில் ரீபிளேஸ் செய்திடலம.

பி.டி.எப். பைல் தரும் புரோகிராம்கள்
பி.டி.எப். பைல் தரும் புரோகிராம்கள்
டாகுமெண்ட் பார்மட்களில், பயன்பாட்டில் நமக்கு அதிகம் உதவுவது பி.டி.எப். (PDFPortable Document Format) பார்மட் ஆகும். இதனை உருவாக்க அடோப் சாப்ட்வேர் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க அடோப் ரீடர் இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. பைல்களை (எக்ஸெல், வேர்ட், பி.பி.டி., போன்றவற்றை) பி.டி.எப். பைலாக மாற்ற வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பி.டி.எப். பைல்களை உருவாக்கவும், உருவாக்கிய பைல்களைப் பிரித்து வைக்கவும், பகுதி பகுதியாக அவற்றை அமைக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப். பைல்களை இணைக்கவும் இணையத்தில் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. பி.டி.எப். மேக்கர் (PDF Maker from http://www.pdfmaker.biz/): ஒரே கீ கிளிக்கில் பி.டி.எப். பைலாக மாற்றும் திறன் கொண்டது இந்த சாப்ட்வேர். எந்த டெக்ஸ்ட் எடிட்டரிலும் டாகுமெண்ட் ஒன்றை தயாரித்துவிட்டு, இந்த தளம் சென்று டவுண்லோட் பட்டனில் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் லோக்கல் டிரைவில், பைலுக்கான பி.டி.எப். டாகுமெண்ட் கிடைக்கும். எந்த பைல் வகையாக இருந்தாலும் பி.டி.எப். டாகுமெண்ட்டை இந்த தளம் தரும். அத்துடன் இதற்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். புதிய டெக்ஸ்ட்டை இணைக்கலாம். பி.டி.எப். ஆன பின்னும் டெக்ஸ்ட்டில் அடிக்கோடிடலாம்; போல்ட் செய்திடலாம்; புதிய படங்களைச் சேர்க்கலாம்; ஏற்கனவே இருக்கிற கிராபிக்ஸ் ஆப்ஜெக்டை நீக்கலாம். பி.டி.எப். ஆன பக்கங்களை சுருக்கலாம், நகர்த்தலாம், ஒன்றுடன் ஒன்றை இணைக்கலாம். என்கிரிப்ட் மற்றும் டி கிரிப்ட் செய்திடலாம்.
2. பி.டி.எப் – டு – வேர்ட் (PDF2Word from http://www.pdfonline.com/pdf2word /index.asp): எந்தவிதமான சிக்கலும் இன்றி பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலை மீண்டும் வேர்ட் டாகுமெண்ட்டாக மாற்றலாம். எந்த புரோகிராமினையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இந்த தளம் சென்று, உங்கள் கம்ப்யூட்டரில் பிரவுஸ் செய்து,பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால், அது வேர்ட் பைலாக மாற்றம் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். இது போல மேலும் ஆறு புரோகிராம் களைப் பயன்படுத்திப் பார்த்ததில், இதுதான் மிகச் சிறந்ததாகவும், வேகமாகவும் செயல்படும் புரோகிராமாகத் தெரிகிறது. பி.டி.எப்.பைல்களை வேர்டுக்கு மாற்றம் செய்து, பின் அவற்றை எடிட் செய்து, பின் மீண்டும் பி.டி.எப். ஆக மாற்றம் செய்திட விரும்புவோருக்கு இது மிகவும் பயன்படும்.
3. பி.டி.எப். கிராக் (PDFCrack): நீங்கள் ஒரு பி.டி.எப். பைலை பாஸ்வேர்டுடன் உருவாக்கிய பின் பாஸ்வேர்டை மறந்துவிட்டீர்கள். கவலையே வேண்டாம்.http://www.ensode.net/pdfcrack.jsf என்ற முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். அங்கு Browse என்ற பீல்டில் கிளிக் செய்து உங்கள் பைல் எங்கு உள்ளது என்று காட்டவும். உடன் அந்த திறக்கப்படும். அது மட்டுமின்றி, பி.டி.எப். பைலை உருவாக்கியவர் இதில் காட்டிய வரையறைகள் எதுவும் இல்லாமல், அந்த பைல் புதிய பிரவுசர் விண்டோவில் காட்டப்படும்.
4. பி.டி.எப். டு எக்ஸெல் ஆன்லைன் (pdftoexcelonline): எக்ஸெல் ஒர்க்ஷீட்கள் பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால், அதனை மீண்டும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டாக மாற்றhttp://www.pdftoexcelonline.com என்ற முகவரியை அணுகவும். எக்ஸெல் பைல் உங்களுக்கு இமெயில் வழியே அனுப்பப்படும்.
5. பி.டி. பைண்ட் (PD Find): கூகுள் மற்றும் பிங் போன்ற தளங்கள் வழியே நீங்கள் பைல்களைத் தேடிப் பெறலாம். ஆனால் சில வேளைகளில்நீங்கள் தேடும் சொற்களை பி.டி.எப். பைல்களில் மட்டும் தேடிப் பெற வேண்டியதிருக்கும். இந்த (http://pdfind.com)தளத்தில் தேடும் சொற்களைக் கொடுத்தால், அவை உள்ள பி.டி.எப். பைல்கள் இருக்கும் இடம், அந்த பைல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற விபரங்களுடன் காட்டப்படும்.
6. பி.டி.எப். வியூ (PDFVue): அடோப் அக்ரோபட் ரீடர் செய்திடும் உதவியை இந்த தளம் ஆன்லைனில் நமக்குத் தருகிறது. http://www.pdfvue.com என்ற தளத்தில் இது கிடைக்கிறது. உங்கள் டாகுமெண்ட்டை இதில் அப்லோட் செய்து பி.டி.எப். பைலாகவும் மாற்றி எடிட் செய்திடலாம்.
7.எச்.டி.எம்.எல். டு பிடிஎப் கன்வெர்டர் (Html to PDF Coverter): எந்த ஒரு இணைய தளத்தினையும் அல்லது எச்.டி.எம்.எல். பைலையும் பி.டி.எப். பைலாக மாற்றித் தரும். செல்ல வேண்டிய தளம் http://htmlpdfconverter.com
8. மெர்ஜ் பிடிஎப் (Merge PDF): எந்த சாப்ட்வேர் தொகுப்பையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடாமல், அதிக பட்சம் பத்து பி.டி.எப். பைல்களை இணைக்கலாம். இதனை மேற்கொள்ள நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி http://www.mergepdf.net. ஒவ்வொருபைலும் 5 எம்பி க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் 10 பைல்களை இணைக்கலாம். பி.டி.எப். பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால் போதும்.
9.கவுண்ட் ஆன் இட் (Count On It): பி.டி.எப். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள கேரக்டர்களையும் சொற்களையும் எண்ணி அறிய வேண்டுமா? 1 எம்பி வரை உள்ள பி.டி.எப். பைல்களை இதன் மூலம் பயன்படுத்தி எண்ணிக்கையைப் பெறலாம். http://felixcat.com/tools/wordcount/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த வசதி கிடைக்கிறது. PDF, HTML, XML, CSV,, பார்மட் பைல்களை மட்டுமே சப்போர்ட் செய்திடும். எம்.எஸ். ஆபீஸ் பைல்களை பயன்படுத்தாது.
10. ஸ்பீடி பி.டி.எப். (SpeedyPDF): இது ஒரு சிறிய அப்ளிகேஷன். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், இது ஒரு பிரிண்டராக உங்கள் கம்ப்யூட்டரில் அமர்ந்துவிடும். நீங்கள் பி.டி.எப்.பார்மட்டில் ஒரு பைலை மாற்ற வேண்டும் என்றால், அதனை பிரிண்ட் கட்டளை கொடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில் பிரிண்டராக ஸ்பீடி பிடிஎப் தேர்ந்தெடுக்க வேண்டும். பைல் பி.டி.எப். பைலாக மாற்றித் தரப்படும். செல்ல வேண்டிய தள முகவரி http://www.brothersoft.com/ speedypdf30012.html
No comments:
Post a Comment