Monday, 2 April 2012

ஐ பேட் – புதிய டிஜிட்டல் ஆப்பிள்,,வெளியானது பயர்பாக்ஸ் 3.6,,ஐ.பி.எல். போட்டி லைவ்வாக இன்டர்நெட்டில்,,யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி,,வேர்ட் டேபிள் டிப்ஸ்


ஐ பேட் – புதிய டிஜிட்டல் ஆப்பிள்

ஒவ்வொருமுறை ஆப்பிள் ஒரு புதிய சாதனத்தைக் கொண்டு வருகையில், இந்த உலகம் அதனை வியந்து பார்க்கிறது. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆப்பிள் ஐ–போனைக் கொண்டு வந்த போது, ஆச்சரியப்பட்ட விழிகள் இன்று மீண்டும் விரியத் தொடங்கி உள்ளன.
மேக் கம்ப்யூட்டர், ஐபாட் மியூசிக் பிளேயர் மற்றும் ஐ போன் மொபைல் என முற்றிலும் புதிய சாதனங்களால், டிஜிட்டல் உலகில் புரட்சி ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனம், சென்ற ஜனவரி 27ல் ஐ–பேட் (iPad) என்ற பெயரில் இன்னொரு டிஜிட்டல் அதிசயத்தைக் கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட் போனுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டருக்கும் இடைப்பட்ட சாதனமாக இது இயங்குகிறது. இருந்தாலும் இரண்டினையும் தன் திறமையில் ஓரம் கட்டும் சாதனமாக உள்ளது. நெட்புக் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஆனால் முற்றிலும் புதுமையான அனுபவத்தினைத் தரும் சாதனமாக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் இறுதியில் விற்பனைக்கு பொது மக்களுக்குக் கிடைக்க இருக்கும் ஐ–பேட், ஆப்பிள் நிறுவனம் தன் திறமையைக் காட்ட வெளியிட்ட அதிரடி சாதனமாகும். ஆறு மாடல்களில் வெவ்வேறு திறனுடன் இது வெளி வருகிறது. இணையத்தைப் பிரவுஸ் செய்திடவும், அன்றாட வேலைகளான இமெயில், பாட்டு, படங்களைக் கையாளவும் மொபைல் போன் போதுமானதாக இல்லை; ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் சற்று அதிகமானது. எனவே தான் இடையே ஒரு சாதனத்தைக் கொண்டால் என்ன என்ற எண்ணத்தில், ஆப்பிள் நிறுவனம் ஐ–பேட் உருவாகியுள்ளது. இதில் ஐ–போன் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் இயக்கலாம்.
சிறிது வளர்ந்த ஐ–போன் போலத் தோற்றமளிக்கும் இதன் பரிமாணம் 243 x 190 x 13mm. வை–பி போன் 680 கிராம்; வை–பி + 3ஜி இணைந்த ஐ–பேட் 730 கிராம். இதன் தொடுதிரை அனைத்து மாடல்களிலும் 9.7 அங்குல அகலத்தில் 1024 x 768 ரெசல்யூசனைக் கொண்டது. வை–பி, புளுடூத் 2.1., ஜி.பி.எஸ்., காம்பஸ், மைக், ஸ்பீக்கர், ஆப்பிள் வடிவமைத்த 1எஏத் வேகத்தில் இயங்கும் ஆப்பிள் 4 ப்ராசசர், யு.எஸ்.பி. இணைப்பு எனப் பல வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் பேட்டரி 10 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.
ஐ–பேட் பயன்படுத்தி இணையத்தை உலா வரலாம்; கேம்ஸ் விளையாடலாம்; இசையை ரசிக்கலாம்; போட்டோ பார்க்கலாம்; காலண்டர், மேப் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஐ ட்யூன்ஸ் ஸ்டோர் பெற்று தேவைப்படும் மியூசிக் மற்றும் வீடியோ பைல்களை வாங்கி ரசிக்கலாம். ஒரு 3ஜி போனாகப் பயன்படுத்தலாம். இணையப் பக்கங்களை இதில் பார்ப்பது மிகவும் தெளிவாக உள்ளது. போர்ட்ரெய்ட் அல்லது லேண்ட்ஸ்கேப் என எந்த தோற்றத்தில் பார்த்தாலும் வண்ணங்களும், எழுத்துக்களும் மிகவும் துல்லியமாக உள்ளன. விரல்களால் தொட்டு இணையப் பக்கங்களில் மேலும் கீழும் செல்ல முடிகிறது. போட்டோக்களைச் செல்லமாகக் கிள்ளினால் விரிகிறது, சுருங்குகிறது. ஐ–பேடை அழகான டிஜிட்டல் போட்டோ பிரேமாகப் பயன்படுத்தலாம்.
இமெயில்களைப் பார்ப்பது தனி அனுபவம். லேண்ட்ஸ்கேப் வகையில் திறந்திருக்கும் மெயிலும், மெயில் இன்பாக்ஸும் தெரிகின்றன. ஐ–பேடை போர்ட்ரெய்ட் வகைக்குத் திருப்பினால், பார்த்துக் கொண்டிருக்கின்ற மெசேஜ் மட்டும் திரை முழுவதும் தெரிகிறது. மெசேஜ் டெக்ஸ்ட் அமைப்பது எளிது; அதே போல ஒரு விரலால் தட்டினால் மெயிலை அழிக்கவும் முடிகிறது. யாஹூ மெயில், ஜிமெயில், ஹாட் மெயில் என அனைத்து பெரிய மெயில் தளங்களுடனும் இது செயல்படுகிறது.
வீடியோக்களின் தெளிவு பிரம்மிக்க வைக்கிறது. குறிப்பாக யு–ட்யூப் எச்.டி. வீடியோக்கள் அழகாகவும் ஆழமாகவும் காட்சி அளிக்கின்றன.
ஐ–பாட் மியூசிக் பிளேயர் இதில் இணைந்துள்ளது. மியூசிக் ஆல்பம், பாடல், பாடியவர், பாடல் வகை எனப் பல வகைகளில் வகைப்படுத்திப் பார்க்க முடிகிறது. இதில் உள்ள திறன் கொண்ட ஸ்பீக்கரிலும் கேட்கலாம்; புளுடூத் வயர்லெஸ் ஹெட்போன் மூலமாகவும் கேட்கலாம்.
ஐ–ட்யூன்ஸ் ஸ்டோர் ஒரு விரல் தட்டில் கிடைக்கிறது. பாடல்கள், வீடியோக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை வேகமாக பிரவுஸ் செய்திடலாம். பாடல்களை வாங்கும் முன் சிறிது கேட்டு பின் தேர்ந்தெடுக்கலாம். பின் வாங்கலாம். உங்களிடம் ஏற்கனவே உள்ள பாடல்களை இதில் இணைக்கலாம்.
ஆப்பிள் ஸ்டோரும் இதே போல எளிதாகக் கிடைக்கிறது. கேம்ஸ், பிசினஸ் அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் அனைத்து வகைகளிலும் புரோகிராம்கள் குவிந்து கிடக்கின்றன. 140,000 அப்ளிகேஷன்கள் விற்பனைக்கு உள்ளன.
எந்த ஐ–புக்கையும் இதில் படிக்கலாம். ஸ்டோரிலிருந்து விலைக்கு வாங்கலாம். வாடகைக்குப் பெற்று படிக்கலம்.
உலகின் அனைத்து பகுதிகளின் சாட்டலைட் இமேஜ்களைத் தெருவாரியாகப் பெறலாம். இவற்றையும் உணவு விடுதி, பள்ளிகள், திரை அரங்குகள் என வகை வகையாய்ப் பிரித்துப் பெறலாம். இதில் உள்ள காலண்டரைப் பயன்படுத்தி, நம் வேலைக்கான அட்டவணையை அமைக்கலாம்.
நாம் அழைக்க வேண்டிய தொடர்புகளைப் பெயர், தொலைபேசி எண்கள் மற்றும் முக்கிய தகவல் அடிப்படையில் பிரித்துக் காணலாம். ஒரு தொடர்பினைக் காண்கையில் மற்றவற்றின் பட்டியலும் அருகே காட்டப்படுகிறது. இதில் உள்ள ஸ்பாட் லைட் என்னும் தேடல் வசதி மூலம் மெயில், காலண்டர், காண்டாக்ட்ஸ், ஐபாட், நோட்ஸ் ஆகிய அனைத்தையும் ஒருங்கே வைத்துத் தேட முடிகிறது.
ஐ–பேட் சாதனத்தில் ஒரு நேரத்தில் ஒரு அப்ளிகேஷனை மட்டுமே இயக்க முடியும். இது ஒரு பிரச்னைதான். இதில் கீ போர்டு இல்லை. ஆனால் அகலமான திரையில் உள்ள விர்ச்சுவல் கீ போர்டு எளிதாக இயக்கும் வகையில் உள்ளது. தனியே வாங்கி இணைத்துப் பயன்படுத்த கீ போர்டு ஒன்றினை ஆப்பிள் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. கேமரா இணைக்கப் படவில்லை. மெமரி கார்ட் இணைப்பு இல்லை.இன்ப்ரா ரெட் இணைப்பு இல்லை. ஜாவா இல்லை. ஐ–பேட் சாதனத்தின் தொடக்க விலை 499 டாலர். மக்களுக்கு எட்டும் தொலைவில் உள்ளது. ஆனால் இதன் பலவகை திறன் கொண்ட ஆறு மாடல்களுக்கு இடையே உள்ள விலை வேறுபாடு மலைக்க வைக்கிறது. அதிகபட்ச விலை 829 டாலர். இந்த வேறுபாட்டினை நீக்கி ஆப்பிள் ஏதேனும் ஒரு அறிவிப்பினை வெளியிட அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

வெளியானது பயர்பாக்ஸ் 3.6


உலகின் மிகச் சிறந்த பிரவுசர் என்ற உரையுடன் மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் பதிப்பு 3.6 னை ஜனவரி 21ல் வெளியிட்டுள்ளது. இந்த பிரவுசரின் முதல் சோதனைத் தொகுப்பு வெளியான ஐந்தாவது மாதத்தில் இது வெளியாகியுள்ளது. எப்படியும் ஒரு நல்ல பிரவுசரைத் தந்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் மொஸில்லா உழைத்தது, இந்த பிரவுசரின் இயக்கத்தில் தெரிகிறது.
விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்கங்களுக்கான பிரவுசர்கள் மொஸில்லாவின் தளத்தில் கிடைக்கின்றன. பன்னாட்டளவில் 65 மொழிகளில் இவை உருவாக்கப்பட்டுள்ளன என்பது மொஸில்லாவின் உலகளாவிய பார்வையினைக் காட்டுகிறது. இந்த புதிய தொகுப்பினை http://www.mozilla. com/enUS// என்ற முகவரியில் உள்ள மொஸில்லா தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே 3.5 பதிப்பு இயக்குபவர்கள், பைல் மெனு சென்று Check for Updates என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
இந்த புதிய பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயங்குவது துரிதப்படுத்தப்பட்டு, இணையதளங்கள் மிக வேகமாக இறங்குகின்றன. முந்தைய பதிப்பினைக் (3.5) காட்டிலும் 12 சதவீதம் வேகம் இருப்பதாக இதனைச் சோதனை செய்தவர்கள் கூறுகின்றனர். சோதித்துப் பார்த்ததில் 15 சதவீதம் கூடுதல் வேகம் தெரியவந்தது. ஆப்பரா பிரவுசரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் 3.6 மூன்று மடங்கு அதிக வேகத்தில் இயங்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு அதிக வேகம் எனலாம். குரோம் பிரவுசரைக் காட்டிலும் 40 சதவீதம் பின் தங்கியே உள்ளது. ஆனால் மெமரியைப் பயன்படுத்துவதில் குரோம் அதிக இடத்தை எடுத்துக் கொண்டு பின் தங்கியே உள்ளது. பயர்பாக்ஸ் 100.3 எம்பி இடம் எடுக்கும் தளத்திற்கு குரோம் 194.6 எம்பி எடுத்துக் கொள்கிறது.
இந்த பிரவுசரின் அடுத்த முக்கிய அம்சமாக பிளக் இன் சோதனையைக் கூறலாம். பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்களை பாதுகாப்பு அடிப்படையில் முற்றிலுமாகச் சோதனை செய்த பின்னரே இந்த பிரவுசர் ஏற்றுக்கொள்கிறது. இதனால் தேர்ட் பார்ட்டி புரோகிராம்களால், பிரவுசரில் கிராஷ் ஏற்படாது. மேலும் ஏற்கனவே ஏதேனும் ப்ளக் இன் புரோகிராம் அமைக்கப்பட்டிருந்தால் (பிளாஷ், குயிக்டைம் போன்ற) அதற்கான புதிய பதிப்பு ஏதேனும், அதன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளதா என்று பயர்பாக்ஸ் சோதனை செய்து அறிவித்து, புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறது. ஏனென்றால் ஹேக்கர்கள் பழைய பதிப்புகள் மூலமே தங்கள் நாசவேலையை மேற்கொள்கின்றனர். புதிய பிரவுசர் வீடியோவினை முழுத் திரையில் காட்டுகிறது. Oணிஞ் ஙணிணூஞடிண் என்னும் பார்மட்டில் அமைந்துள்ள வீடியோவை இவ்வாறு காணலாம். இதனைச் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றால் http://en.wikipedia.org /wiki/File:Bus_Ride_ Through_Downtown_ Seattle_ %28Timelapse%29.ogv என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த பார்மட்டில் அமைந்துள்ள வீடியோ வினை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்க்கவும். இயங்கும் போது அதன் மீது ரைட் கிளிக் செய்து, முழுத்திரைக்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த பிரவுசரில் இணைய தளங்கள் வேகமாக இயங்குகின்றன. இந்த வேகம் நன்றாகவே தெரிகிறது. அடுத்ததாக புதிய ஸ்கின்களை (பெர்சனாஸ்) இந்த பிரவுசர் ஏற்றுக் கொண்டு அவற்றைச் சிறப்பாக வடிவமைக்கிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கு ஏறத்தாழ 35,000 டிசைன்களில் பெர்சனாஸ் கிடைக்கிறது. இவற்றை http://www.getpersonas.com/enUS/என்ற முகவரியில் காணலாம். இந்த பிரவுசரில் இவற்றை நிறுவுவதும் எளிது. பெர்சனாஸ் இணைப்பது இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. பெர்சனாஸ் காலரி (http://www.getpersonas.com/enUS/gallery/) சென்று, அதில் ஒரு பெர்சனாவின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அதற்கான ஸ்கின் அடிப்படையில், பயர்பாக்ஸ் தன் தோற்றத்தைத் தற்காலிகமாக மாற்றும். அது உங்களுக்குப் பிடித்திருந்தால் உடனே கிளிக் செய்திடலாம். அல்லது மற்றவற்றைச் சோதனை செய்து பார்க்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட பெர்சனாஸ் பதியப்பட்டால், அவை மெனுவாகக் கிடைக்கின்றன. தேவைப் பட்டதனைத் தேர்ந்தெடுத்தால் அது உடனே அமைக்கப்படுகிறது. பயர்பாக்ஸ் முதலில் அறிமுகமானபோது யு–ட்யூப் வீடியோ தளம் இல்லை. குயிக் டைம், விண்டோஸ் மீடியா அல்லது ரியல் பிளேயரின் துணையை நாட வேண்டியதிருந்தது. யு–ட்யூப் வீடியோ தளம் வந்த பின்னர் அதனை ஒருங்கிணைக்கும் வகையில் பிரவுசர்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் இதன் மூலம் இன்டர்நெட் பார்க்கும் ரசிகர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப தளங்களை எளிதாக அமைக்கவும் மாற்றவும் முடிகிறது. பயர்பாக்ஸ் 3.6 பிரவுசரில் வீடியோ தளங்களை நேர்த்தியாகக் கையாள முடிகிறது.
பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, அதன் ஆட் ஆன் புரோகிராம்கள் பிரசித்தி பெற்றவை. இதன் கட்டமைப்பு ஓப்பன் சோர்ஸ் என அனைவரும் அறியும் வகையில் அமைந்திருப்பதால், திறமை கொண்ட பல புரோகிராமர்கள் இதற்கான ஆட் ஆன் தொகுப்புகளை இலவசமாகத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றனர். பயர்பாக்ஸ் பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இன்டர்நெட் பிரவுசர்களின் கட்டமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இருப்பதனை உணரலாம். பயர்பாக்ஸ், சபாரி, குரோம், ஆப்பரா மற்றும் முதல் இடத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என அனைத்துமே, எதிர்காலத்தில் வெப் அப்ளிகேஷன்கள் எப்படி முன்னேற்றமடையும் என்பதைக் கவனத்தில் கொண்டே, தங்களின் பிரவுசரை வடிவமைத்துள்ளன. இணைய தளங்களை வடிவமைப் பவர்களுக்கு இந்த புதிய வகை பிரவுசர்கள் அதிகம் துணை புரிகின்றன. சூப்பர் வேகத்தில் ஜாவா ஸ்கிரிப்டை இயக்குவது,புதிய சி.எஸ்.எஸ்., எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பம், டவுண்லோட் செய்யக் கூடிய எழுத்து வகைக்கு சப்போர்ட், ஆப் லைன் அப்ளிகேஷன் சப்போர்ட் நேடிவ் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தரத் தொடங்கியுள்ளன. இவை இணையத்தைப் பயன்படுத்துவோருக்கும், இணைய தளங்களை வடிவமைப்போருக்கும் மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment