வேர்டில் டெக்ஸ்ட் பாக்ஸ் ஷேடோ
வேர்ட் டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட் பாக்ஸ்களை உருவாக்கி, டாகுமெண்ட் தோற்றத்தினை அழகு படுத்துவோம். இந்த பாக்ஸ்களை இன்னும் அழகாகத் தோற்ற மளிக்க அதன் கீழாக நிழல் படிந்தாற்போன்ற தோற்றத்தினைத் தரலாம். இதற்கு வேர்ட் வழி தருகிறது. இதனை ஆங்கிலத்தில் drop shadow என அழைப்பார்கள். பொதுவாக டெக்ஸ்ட் பாக்ஸில் தரப்படும் டெக்ஸ்ட், டாகுமெண்ட்டின் மையப் பொருளுக்குத் துணை சேர்க்கும் கருத்துக்கள் அல்லது தகவல்களாக அமையும். எனவே இந்த பாக்ஸை நன்றாக எடுத்துக் காட்டும் வகையில் அமைப்பது, பக்க வடிவமைப்பில் ஒரு அம்சமாகும். இதனை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம்.
நீங்கள் வேர்ட் 2007க்கு முந்தைய வேர்ட் புரோகிராம் பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்க்கண்ட வழிகளில் செட் செய்திடவும்.
1. முதலில் ட்ராயிங் டூல்பார் காட்டப்படுவதை உறுதி செய்திடவும். இதற்கு ஸ்டாண்டர்ட் டூல் பாரில் உள்ள டிராயிங் டூல்பாரினைக் கிளிக் செய்தால் போதும்.
2. அடுத்து நீங்கள் எந்த டெக்ஸ்ட் பாக்ஸ் பார்மட்டை விரும்புகிறீர்களோ, அந்த டெக்ஸ்ட் பாக்ஸினைத் தேர்ந்தெடுக்கவும். அந்த டெக்ஸ்ட் பாக்ஸின் எல்லைக் கோடு களை ஒட்டி சிறிய செலக்ஷன் ஹேண்டில் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம்.
3. ட்ராயிங் டூல்பாரில் ஷேடோ டூல் ஒன்று கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2002 மற்றும் வேர்ட் 2003 புரோகிராம்களில் இது Shadow Style என அழைக்கப்படுகிறது. இதில் இங்கு செட் செய்யக் கூடிய பல ஸ்டைல் வகைகள் காட்டப்படுகின்றன.
4. எந்த ஷேடோ உங்களுக்குப் பிடிக்கிறதோ, அதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக் கவும்.
அடுத்து வேர்ட் 2007 வைத்திருப் பவர்களுக்கு. வேர்ட் 2007ல் ட்ராயிங் டூல்பார் பயன்படுத்தப்படுவதில்லை.
1. நீங்கள் பார்மட் செய்திட வேண்டிய டெக்ஸ்ட் பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வழக்கம்போல அதன் எல்லைகளில் செலக்ஷன் ஹேண்டிலைக் காணலாம்.
2. இப்போது ரிப்பனில் பார்மட் டேப்பினைக் கிளிக் செய்திடவும். இது 1ல் சொல்லியபடி, நீங்கள் டெக்ஸ்ட் பாக்ஸைத் தேர்ந்தெடுத்தால் தான் காட்டப்படும்.
3. இனி ஷேடோ எபக்ட்ஸ் Shadow Effects) என்னும் குரூப்பில் உள்ள ஷேடோ ஸ்டைல் (Shadow Style) என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு வேர்ட் கிடைக்கக் கூடிய அனைத்து ஷேடோக்களையும் காட்டும்.
4. எந்த ஷேடோ வேண்டுமோ அதனைக் கிளிக் செய்தால், டெக்ஸ்ட் பாக்ஸில் ஷேடோ கிடைக்கும்.
உங்கள் மனதிற்குப் பிடித்த வகையில் ஷேடோ கிடைக்கும் வரை இதனை மாற்றி மாற்றி அமைக்கலாம்.

உணவுப் பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வலைப்பக்கம் -”twofoods”
உணவுப் பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க மக்கள் எல்லாரும் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு குறித்துத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டனர். எந்த உணவுப் பொருளில் எத்தனை கலோரி சக்தி உள்ளது; கொழுப்புச் சத்து எவ்வளவு, புரோட்டீன் எவ்வளவு என்று அறிய ஆசைப்படுகின்றனர். அதற்கேற்ற வகையில் தங்கள் உணவுப் பழக்கங்களை வரையறை செய்திடவும் செய்கின்றனர். சில வேளைகளில் தாங்கள் எடுத்துக் கொள்ளும் இரண்டு உணவுப் பண்டங்களில் இந்த சத்துப் பொருட்கள் எவ்வளவு உள்ளன என்று அறிய விரும்புகின்றனர்.அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ஒரு உணவினைத் தேர்ந்தெடுத்து தங்கள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்கின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காகவே “twofoods” என்ற இணையதளம் இயங்குகிறது. இதில் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் காண விரும்பும் இரண்டு உணவுப் பொருட்களை அருகருகே அமைத்து என்டர் செய்தால், அந்த உணவுப் பொருட்களின் சத்து விகிதம் தனித்தனியே காட்டப்பட்டு ஒப்பீடு அட்டவணை கிடைக்கிறது. குறிப்பிட்ட அளவில் எவ்வளவு கலோரிகள், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரோட்டீன் சத்து உள்ளதாகக் காட்டப்படுகிறது. இதனைக் கொண்டு நாம் நம் உடல்நிலைக்கேற்ப, அல்லது டாக்டரின் ஆலோசனைக்கேற்ப உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஆப்பிள்/ஆரஞ்சு, வெள்ளை / பிரவுண் அரிசி, கோதுமை/அரிசி, கேழ்வரகு /அரிசி என எந்த வகை ஒப்பீட்டிற்கும் பதில் கிடைக்கிறது. இதனைக் காண http://www.twofoods.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
ஸ்டார்ட்அப் புரோகிராம்கள் எவை
உங்கள் கம்ப்யூட்டர் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக இயங்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது பல புரோகிராம்கள் இயக்கப்பட்டு, பின்னணியில் இயங்கி இருப்பதுதான். இந்த புரோகிராம்களை நீங்கள் இன்ஸ்டால் செய்திருக்கலாம்; அல்லது கம்ப்யூட்டரைத் தந்த நிறுவனம், தானே சில புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து அனுப்பியிருக்கலாம்.
எம்.எஸ்.கான்பிக் மூலம் தேவையற்றதை எல்லாம் நீக்கிவிட்டேனே என்று நீங்கள் கூறலாம். நீங்கள் அறியாமலேயே சில புரோகிராம்கள் ஸ்டார்ட் அப்பில் தொடங்கி ராம் மெமரியை நிரப்பலாம். நீங்கள் நீக்கிய சில புரோகிராம்கள், மீண்டும் ஸ்டார்ட் ஆகும் போது, இயங்கி பின்னணியில் இருக்கலாம்.
அப்படியானால் இதற்கு என்னதான் வழி என்று கேட்கிறீர்களா? ஸ்டார்ட் அப் ஆகும்போது என்ன என்ன புரோகிராம்கள் இயங்கி நிற்கின்றன என ஒன்றுவிடாமல் அறிய என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறீர்களா? WhatInStartup என்ற இலவச புரோகிராம் இதற்கானத் தீர்வினைத் தருகிறது. இதனை கீழே தந்துள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். மேற்படி தளத்திலிருந்து இது ஒரு ஸிப் பைலாகக் கிடைக்கிறது. இதனை விரித்துப் பதிந்து கொள்ளலாம்.
இதனை இயக்கினால் என்ன என்ன அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஸ்டார்ட் அப் சமயத்தில் இயங்கி நிற்கின்றன என்று பட்டியலிட்டு காட்டுகிறது. ஒவ்வொரு புரோகிராமும் இயங்கும் தன்மை, கட்டளை சொற்கள், புரோகிராமின் பெயர், பைல் உருவாக்கப்பட்ட நாள், மாற்றம் ஏற்படுத்தப்பட்ட நாள், அந்த புரோகிராம் குறித்து ரெஜிஸ்ட்ரியில் உள்ள வரிகள் ஆகியவை காட்டப்படுகின்றன. எனவே இந்த புரோகிராம்களை இயங்கும்படி வைக்கலாம்; தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்; மொத்தமாக நீக்கிவிடலாம்.
ஏற்கனவே அழித்த பைல், தற்போது மீண்டும் ஸ்டார்ட் அப்பில் இயங்கும் வகையில் உயிர்ப்பித்து வருகிறது என்றால், இந்த WhatInStartup மூலம் அதனை நிரந்தரமாக நீக்கிவிடலாம். இந்த புரோகிராமினை ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் வைத்து இயக்கலாம். இந்த புரோகிராம் கிடைக்கும் தளத்தில் எப்படி பிளாஷ் டிரைவில் வைத்து இயக்கலாம் என்பதற்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
இந்த புரோகிராம் கிடைக்கும் தள முகவரி: http://www.nirsoft.net/utils/ what_run_in_startup.html

பயர்பாக்ஸ் 3.6 இறுதிச் சோதனை தொகுப்பு
மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் 3.6 பதிப்பிற்கான, இறுதிச் சோதனைத் தொகுப்பினை அண்மையில் எந்த விளம்பர ஆரவாரமின்றி வெளியிட்டுள்ளது. இது இரண்டாவது ரிலீஸ் கேண்டிடேட் தொகுப்பாகும். (புதிய அப்ளிகேஷன் தொகுப்பு வெளியிடும் முன் இறுதியாக வெளியிடப்படும் சோதனைத் தொகுப்பினை ரிலீஸ் கேண்டிடேட் (Release Candidate) எனப் பெயரிட்டு வெளியிடுவது வழக்கம்) இந்த சோதனைத் தொகுப்பு விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்கள் அனைத்திற்கும் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் எந்த குறிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த இரண்டாவது தொகுப்பினை மிகவும் பாதுகாப்பானது மற்றும் ஸ்திரமானது என்று மொஸில்லா கூறியுள்ளது. இதனைhttp://www.mozilla.com/firefox/allrc.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
தற்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயர்பாக்ஸ் 3.6 பதிப்பின் சோதனைத் தொகுப்பைப் பயன்படுத்தி அதன் நிறை குறைகள் குறித்து தெரிவித்து வருகின்றனர். பயர்பாக்ஸ் பிரவுசரை மொத்தத்தில் 30 கோடிக்கும் மேலானவர்கள் தங்கள் பிரவுசராகப் பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய சோதனைத் தொகுப்பில் கூடுதலாக “பெர்சனாஸ்’ தரப்பட்டுள்ளது. இதன் மூலம் இதனைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் விருப்பத்திற்கே படங்களை அமைத்து இதன் தோற்றத்தை அமைத்துக் கொள்ளலாம். பாதுகாப்பினைப் பொறுத்தவரை, நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டருக்குள் ஊடுருவ முயற்சிக்கும் தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தொகுப்புகளைத் தடுக்கும் வகையில் இதில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பயர்பாக்ஸ் பிரவுசரை கிராஷ் செய்திட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முறியடிக்கப்படுகின்றன.
பயர்பாக்ஸ் இயங்கத் தொடங்க வெகு நேரம் ஆகிறது என்ற குற்றச்சாட்டு பலவாறாக இருந்து வருகிறது. இதனைப் போக்கும் வகையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கமும் துரிதப்படுத்தப்பட்டு ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

விண்டோஸ் 7 சில வசதிகள்….
சென்ற வாரம் புதியதாக அறிமுகமாகித் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் 7 தரும் சில சிறப்பு வசதிகள் குறித்த டிப்ஸ்கள் இந்த பகுதியில் தரப்பட்டன. அதன் தொடர்ச்சி இங்கே தரப்படுகிறது.
விண்டோவை கீகள் மூலம் செட் செய்திட:
விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்பில், விண்டோ மானிட்டர் ஸ்கிரீனில் இடம் பெறுவதனை எளிதாக கீ போர்டின் கீகள் மூலமே மாற்றி அமைக்கலாம். அப்போதைய விண்டோவினைச் சிறிதாக அல்லது பெரிதாக அமைக்கலாம். வலது அல்லது இடது ஓரத்திற்குத் தள்ளலாம். இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் இயங்குகையில், அதிகம் தேவைப்படாத விண்டோவினைச் சுருக்கி ஓரம் தள்ளலாம். இதனால் இரண்டு விண்டோக்களில் இயக்கத்தினை மேற்கொள்வது எளிதாகும். இதற்கான ஷார்ட்கட் கீகளைப் பார்க்கலாம்.
விண்டோஸ் கீ + மேல் அம்புக் குறி கீ: அப்போதைய விண்டோவினைப் பெரிதாக்கும். விண்டோஸ் கீ + கீழ் அம்புக் குறி கீ: பெரிதாக்கிய விண்டோவினைப் பழைய நிலைக்குக் கொண்டு வரும்.
விண்டோஸ் கீ + இடது அம்புக் குறி கீ: இடது பக்கம் விண்டோவினைக் கொண்டு செல்லும்.
விண்டோஸ் கீ + வலது அம்புக் குறி கீ: வலது பக்கம் விண்டோவினைக் கொண்டு செல்லும்.
எக்ஸ்புளோரரில் டிக் செய்து தேர்ந்தெடுக்க:
விண்டோஸ் 7 சிஸ்டத்தின் எக்ஸ்புளோரர் புரோகிராமில், அது காட்டும் பைல்களை, டிக் செய்து தேர்ந்தெடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.
பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரர் புரோகிராமில், பைல்கள் மற்றும் போல்டர்களை ஒரே நேரத்தில் இயக்க, அவற்றைத் தேர்ந்தெடுக்கப் பல வழிகள் உள்ளன. இந்த வழிகள் மூலம் தேர்ந்தெடுத்த பின் அவற்றை மொத்தமாக பெயர் மாற்றலாம், அழிக்கலாம், காப்பி செய்திடலாம், ப்ராப்பர்ட்டீஸ் பார்க்கலாம், இன்னொரு இடத்திற்கு அப்படியே நகர்த் தலாம். இவற்றைத் தேர்ந்தெடுக்கையில் கண்ட்ரோல் கீயை அழுத்தினால், அடுத்தடுத்து இல்லாத பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம். மொத்தத்தில் முதல் பைலைத் தேர்ந்தெடுத்து பின் ஷிப்ட் கீ அழுத்தி பின் இறுதி பைலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், வரிசையாக, தொடர்ச்சியாக பைல்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
அல்லது மவுஸ் மூலம் ஒரு செவ்வகமாகக் கோடு வரைவது போலக் கொண்டு சென்று, இவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
1. ஸ்டார்ட் பட்டன் மீது கிளிக் செய்திடவும்.
2. பின் Folder Options என டைப் செய்து கிடைக்கும் Folder Options லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து Folder Options என்ற பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.
4.இதில் View என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.
5. பின் Use check boxes to select items என்பதில் டிக் செய்திடவும்.
6. பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸ்களை மூடவும்.
இதன் பின்னர் எக்ஸ்புளோரர் விண்டோவில் உள்ள பைல்களை, அதன் முன் உள்ள சிறிய கட்டங்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம்.
விண்டோஸ் டாஸ்க் மேனேஜர்:
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கிடைக்கும் டாஸ்க் மேனேஜர் டிஸ்பிளே விண்டோ வினைப் பெரிதாகத் தெரியும்படி அமைக்கலாம். இதனால் இதில் கிடைக்கும் வரைபடம் பெரிதாகத் தெரியும். அல்லது இயக்கத்தில் என்ன நடக்கிறது என்ற செயல்பாடு இன்னும் சற்றுத் தெளிவாகக் கிடைக்கும்.
டாஸ்க் மேனேஜரை எப்படிக் கொண்டு வருவது? விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Start Task Manager என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது கண்ட்ரோல் +ஷிப்ட்+எஸ்கேப் (Ctrl + Shift + Esc) கீகளை அழுத்தவும்.
டாஸ்க் பார் மேனேஜர் டிஸ்பிளேயில் இரு முறை கிளிக் செய்தால் அது விரிந்து கொடுக்கும். விரிந்த நிலையிலோ அல்லது விரியாத நிலையிலோ கீழ்க்காணும் கீகளைப் பயன் படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள வேலைப்பாடினை மேற்கொள்ளலாம்.
Ctrl + Tab அடுத்த டேப் செல்லும்.(சுழற்சியில் தொடக்கத்திற்குச் செல்லும்)
Ctrl + Shift + Tab: முந்தைய டேபிற்குச் செல்லும். (சுழற்சியில் இறுதி டேப்பிற்குச் செல்லும்)
Ctrl + Right: அடுத்த டேபிற்குச் செல்லும்.
Ctrl + Left: முந்தைய டேபிற்குச் செல்லும்.

டிப்ஸ்… டிப்ஸ்… 30.1.2010
அகர வரிசைப்படி புரோகிராம்கள்
நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துள்ள புரோகிராம் களுக்கு ஐகான்களை திரையில் அமைத்து கிளிக் செய்து இயக்குகிறோம். ஆனால் சில புரோகிராம்களை இயக்க Start>All Programs சென்று குறிப்பிட்ட புரோகிராமினைப் பட்டியலில் தேடி கிளிக் செய்கிறோம். இந்த புரோகிராம்கள் எழுத்து வரிசைப்படி இருப்பதால் நம் தேடும் வேலை எளிதாகிறது. ஆனால் புதிய புரோகிராம்களை நாம் இன்ஸ்டால் செய்வதால் அவை லிஸ்ட்டின் பின்புறம் ஒட்டிக் கொள்கின்றன. நம் தேடும் பணி கடினமாகிறது. அவற்றையும் அகர வரிசைப்படி அடுக்கினால் வேலை எளிதாகும் அல்லவா? அதற்கு பட்டியலிடப்பட்டுள்ள புரோகிராம்களில் ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Sort by Names என்பதில் ஒரு முறை கிளிக் செய்திடவும். அனைத்து புரோகிராம்களும் அகர வரிசைப்படுத்தப்படும். பின் நம் வேலையும் எளிதாகும்.

வேர்ட்: சில வழிகள்
உடனடியாக ஒரு டாகுமெண்ட்டில் ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும். ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்.
குறுக்கே வரும் மவுஸ் கர்சரை ஒதுக்க : மவுஸ் கர்சர் நமக்குப் பல வழிகளில் உதவிடும் ஒரு சாதனமாகும். ஆனால் வேக வேகமாக டைப் செய்பவர்களுக்கு அது ஒரு தொல்லை தரும் இடமாகும். இதை ஒதுக்க முடியவில்லையே என அவர்கள் ஆதங்கப்படலாம். அதனை ஒதுக்கவும் வழி உள்ளது. Start, Settings, Control Panel எனச் செல்லவும். பின் Mouse என்று உள்ள ஐகானில் இருமுறை கிளிக் செய்திடவும். இப்போது மவுஸ் பிராபர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் உள்ள ஐந்து டேப்களில் Pointer Options என்று ஒரு டேப் நடுநாயகமாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள மூன்று பிரிவுகளில் மூன்றாவதில் நடுவில் Hide Pointer While Typing என இருக்கும். இதில் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்றை மேற்கொள்ளவும். பின் அப்ளை, அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் டைப் அடிக்கையில் மவுஸ் கர்சர் குறுக்கே வராது.
ஐகான் பட்டன்கள் எதற்காக?
வேர்டில் மெனு பாரினை ஒட்டி நிறைய பட்டன்கள் உள்ளன. இந்த பட்டன்களின் பெயர்கள் என்னவென்று தெரியவில்லை. சிறிய ஐகான்களாகத் தோற்றமளிக்கின்றன. பெயர் தெரிய வேண்டுமா? உடனே மவுஸின் கர்சரை இந்த பட்டன் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் தெரியும்.
பைலை அறவே நீக்கிட ஒரு பைலை அழிக்கிறீர்கள். அது நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும்; ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால் அந்த பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டனை அழுத்துகையில் ஷிப்ட் கீயை அழுத்தியபடி அழுத்தவும். பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது.
மார்ஜின் மாற்ற
டாகுமென்ட் அமைக்க காலி பக்கம் ஒன்றைத் திறந்தவுடன் அதில் தரப்பட்டிருக்கும் மார்ஜின் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அதனை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் File மெனுவில்Page Setup செல்லவும். அங்கு Margins டேப்பில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் மார்ஜின் வெளியைக் கூட்டவும் குறைக்கவும் வசதிகள் தரப்பட்டிருக்கும். மாற்றிக்கொள்ளலாம். காலியாக இருக்கும்போதுதான் மாற்ற வேண்டும் என்பதில்லை. டாகுமெண்ட் உருவானபின்னும் மேலே சொன்ன வழியில் மாற்றலாம். மாற்றுவதற்கேற்ப உங்கள் டாகுமெண்ட் தோற்றமும் மாறும்.

விரும்பிய வகையில் கலரில் பார்டர் அமைக்க:
வேர்ட் டேபிளில் விரும்பிய கலரிலும் வகையிலும் பார்டர்களை அமைக்கலாம். Tables and Borders மெனுவினைத் திரையில் பெறவும். இதற்கு View மெனுவிலிருந்து Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் துணை மெனுவில் Tables and Borders என்பதைத் தேர்ந்தெடுத்தால் இந்த மெனு திரைக்கு வரும். லைன் ஸ்டைல் என்ற பீல்டில் கிடைக்கும் ட்ராப் டவுண் லிஸ்ட்டில் உங்களுக்குப் பிடித்த பார்டர் Line Style ஐத் தேர்ந்தெடுக்கவும். பார்டருக்கான கலர் தேர்ந்தெடுக்க Border Color என்பதில் கிளிக் செய்திடவும். இனி Draw Table என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் பென்சில் போன்ற கர்சரின் துணை கொண்டு நீங்கள் விரும்பிய பார்டர் லைனை தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அமைக்கலாம். மேலே கூறிய வழிகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து டேபிளில் பார்டர்களை அமைக்கலாம்.

வேர்ட் டிப்ஸ் -29.1.2010
டாகுமெண்ட் விண்டோவைப் பிரித்து வேலை
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் பணிபுரிய விருப்பமா? எப்படி முடியும் என்று கேட்கிறீர்களா? வேர்டில் அதற்கான செட் அப் செய்துவிட்டல் முடியும். டாகுமெண்ட் விண்டோவினைப் பிரித்து, ஒவ்வொன்றிலும் அந்த டாகுமெண்ட்டின் இரு வேறு இடங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றலாம்.
வேர்ட் 2003 வைத்திருப்பவர்கள், கீழே காட்டியுள்ளபடி செட் செய்திடவும். குறிப்பிட்ட டாகுமெண்ட்டைத் திறக்கவும். மெனு பாரில் விண்டோ (Window) என்பதில் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பைல் இரு பிரிவுகளாகக் காட்டப்படும். புதிதாய்த் திறக்கப்பட்ட பிரிவில் டாகுமெண்ட்டின் தொடக்க பக்கம் காட்டப்படும். இனி நீங்கள் ஒரே டாகுமெண்ட்டில் இரண்டு இடங்களில் செயல்படலாம்.
வேர்ட் 2007 வைத்திருப்பவர்கள் ரிப்பனில் வியூ (View) டேப்பில் கிளிக் செய்திடவும். அதன்பின் விண்டோ குரூப்பில் ஸ்பிளிட் Split டூலில் கிளிக் செய்திடவும்.
நீங்கள் ஸ்பிளிட் கட்டளை கொடுத்தவுடன், நீளமான படுக்கைக் கோடு ஒன்று டாகுமெண்ட்டில் காட்டப்படும். இதனை மவுஸ் மூலம் நகர்த்தலாம். பின் கிளிக் செய்தால், எங்கு அந்த கோட்டினை வைத்தீர்களோ, அந்த இடத்தில் கோடு அமைக்கப்பட்டு, டாகுமெண்ட் பிரித்துக் காட்டப்படும்.
இந்த பிரிவு தேவையில்லை என்று முடிவு செய்தால், மீண்டும் அதே மெனுவில் சென்று நீக்கலாம்.
நெடும் பத்திகள் அமைக்க
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கிறோம். டெக்ஸ்ட்டை தொடர்ந்து டைப் செய்துவிடுகிறோம். முடித்தபின் இதனை இரண்டு அல்லது மூன்று நெடும் பத்திகளில் (Columns) அமைத்தால் நன்றாக இருக்கும் என்று திட்டமிடுகிறோம். அல்லது குறிப்பிட்ட டெக்ஸ்ட் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட காலம் களில் அமைந்தால் சிறப்பான தோற்றம் கிடைக்கும் என எண்ணுகிறோம். ஆனால் டெக்ஸ்ட்டை டைப் செய்து முடித்துவிட்டோமே என்று கவலைப்பட வேண்டாம். எந்த டெக்ஸ்ட்டைப் பிரித்து ஒன்றுக்கு மேற்பட்ட காலம்களில் அமைக்க விரும்புகிறீர்களோ, அந்த டெக்ஸ்ட் முழுவதும் தேர்ந்தெடுக்கவும். பின் மெனு பார் சென்று பார்மட் பிரிவில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் என்பதைத் தேர்ந்தெடுத்தால் அதற்கான சிறிய விண்டோ கிடைக்கும். இதில் எத்தனை நெடும் பத்திகள் அமைக்க வேண்டும் என்பதனை வரையறை செய்திடவும், ஒவ்வொரு பத்திக்குமான அகலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதனையும் அமைக்கலாம். எந்த பத்தி எந்த பக்கம் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால், தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட், கொடுக்கப்பட்ட பத்திகளில் அமைக்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.

எக்ஸெல் பார்முலா
எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பலவகை பார்முலாக்களை அமைக்கிறோம். இவற்றில் சில பார்முலாக்கள் ஒர்க்ஷீட்களில் உள்ள மற்ற செல்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்படும். அப்படிப்பட்ட பார்முலா ஒன்றைக் காப்பி செய்து வேறு ஒரு செல்லில் காப்பி செய்கையில், எக்ஸெல் அந்த பார்முலாவினை, காப்பி செய்யப்படும் செல்லுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளும். ஆனால் பல ஒர்க் ஷீட்கள் அமைந்த ஒர்க் புக்கில் ஒர்க்ஷீட் பெயர் உள்ள பார்முலாவினைக் காப்பி செய்கையில், எக்ஸெல் அந்த செல்களுக்கு ஏற்றவகையில்தான் மாற்றங்களை மேற்கொள்ளும். ஒர்க்ஷீட்களின் பெயர்களில் மாற்றம் செய்யாது. அதனையும் மாற்றிக் கொள்ளும் வழியை இங்கு காணலாம்.
எடுத்துக்காட்டாக, B7 செல்லில் =B6+A7 என்னும் பார்முலாவினை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். இதனை D7 என்னும் செல்லுக்கு காப்பி செய்கையில், எக்ஸெல் தானாக செல் தொடர்புகளை மாற்றிக் கொள்கிறது. மேலே சொன்ன பார்முலா =D21+C22 என மாற்றப்படும். ஆனால் ஒர்க்ஷீட் பெயர் இணைந்த பார்முலாவில் இந்த மாற்றம் முழுமையாக நடைபெறாது. ஒர்க்ஷீட் பெயர் மாற்றம் இருக்காது. எடுத்துக்காட்டாக, ஒர்க்புக் ஒன்றில் January, February, மற்றும் March என மூன்று ஒர்க்ஷீட்கள் வைத்துள்ளீர்கள். பிப்ரவரி ஒர்க்ஷீட்டில் =January!B7*1.075 என்ற பார்முலாவினை அமைத்திருக்கிறீர்கள். இந்த செல் பார்முலாவினை மார்ச் ஒர்க்ஷீட்டிற்கு மாற்றுகையில், எக்ஸெல் பார்முலாவில் உள்ள செல் தொடர்பை (B7) நீங்கள் மாற்றம் செய்திடும் செல்லுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும். ஆனால் ஒர்க்ஷீட்டின் பெயர் பிப்ரவரி என மாறாது. உங்கள் ஒர்க்ஷீட்டில் ஒன்றிரண்டு ஒர்க்ஷீட்கள் இருந்தால், நீங்களாக இந்த மாற்றத்தினை மேற்கொள்ளலாம். அதிக எண்ணிக்கையில் ஒர்க்ஷீட்கள் இருந்தால் அது சிரமமான வேலையாக இருக்கும். இந்த சிரமத்தைப் போக்கும் வழியைப் பார்க்கலாம்.
1. முதலில் அனைத்து பார்முலாக்களையும் தேவையான ஒர்க்ஷீட்டிற்கு, தேவைப்படும் செல்லிற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது செல் பெயர்களில் எக்ஸெல் மாற்றத்தை மேற்கொண்டிருக்கும். அனைத்து காப்பி மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்ட பின், காப்பி செய்யப்பட்ட ஒர்க்ஷீட்டிற்குச் செல்லவும்.
2. இனி Ctrl+A அழுத்தவும். இது அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கும்.
3. பின் எடிட் மெனு சென்று அதில் Replace தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl+H அழுத்தவும். இப்போது Find and Replace டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. இதில் Find What பாக்ஸில் January! என டைப் செய்திடவும்.

5. அடுத்து Replace With பாக்ஸில் February! என டைப் செய்திடவும்.
6. பின் Replace All என்பதில் கிளிக் செய்தால் காப்பி செய்யப்பட்ட பார்முலாக்களில் உள்ள அனைத்தும் மாற்றப்படும். இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் மேலே உள்ள ஸ்டெப் 4 மற்றும் 5ல் மாற்றுவது மாதங்களின் பெயரை அல்ல. பார்முலாவில் உள்ள சிறப்பு குறியீட்டுடன் உள்ள பெயரை மட்டுமே. ஏனென்றால் ஒர்க்ஷீட்டில் உள்ள மற்ற செல்களில் மாதங்களின் பெயர் இருந்தால், அவையும் இந்த மாற்றத்தில் மாற்றம் அடையும் அல்லவா!
எக்ஸெல்: பார்முலா கண்காணிப்பு
எக்ஸெல் தொகுப்பில் பெரிய அளவிலான ஸ்ப்ரெட் ஷீட்டில் பணியாற்றிய அனுபவம் பலருக்கும் உண்டு. அதில் பல்வேறு செல்களில் பார்முலாக்களைப் போட்டிருப்போம். செல்களில் மதிப்புகளைத் தருகையில் இந்த பார்முலாக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் கணக்குகளை மேற்கொண்டு முடிவுகளை செல்களில் அமைக்கும்படி ஏற்பாடு செய்திருப்போம். இதனால் புதிய பார்முலாக்கள் அமைக்கையில் அவை தொடர்புடைய செல்களில் சரியாகச் செயலாற்றி விடைகளைத் தருகிறதா என்பதைக் கண்காணிக்க பல இடங்களில் உள்ள செல்களுக்குச் சென்று பார்க்க வேண்டியதிருக்கும். சில நேரங்களில் தவறான செல்களைப் பார்த்து தவறான தகவல்கள் மற்றும் பார்முலாக்களைத் தரும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இவற்றைத் தவிர்க்க எக்ஸெல் தொகுப்பு தரும் வசதி தான் எக்ஸெல் வாட்ச் விண்டோ.
அடுத்தடுத்து எக்ஸெல் பார்முலாக்கள் கணக்கிடுவதனைக் கண்காணிக்க நமக்குக் கிடைத்திருக்கும் வசதிதான் வாட்ச் விண்டோ. நாம் செல்களின் மதிப்பை மாற்றும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட செல்களில் என்ன மாறுதல்கள் ஏற்படுகிறது என்று நமக்குக் காட்டும் ஜன்னல் தான் இந்த வாட்ச் விண்டோ. இதனால் நாம் ஒவ்வொரு செல்லுக்கும் தாவிச் சென்று கண்காணிக்கும் வேலை மிச்சமாகிறது. இந்த வாட்ச் விண்டோவினை அமைத்திட முதலில் Tools மெனு சென்று அதில் துணை மெனுவான Formula Auditing என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் உள்ள Show Watch Window என்பதனைக் கிளிக் செய்திட வேண்டும். Formula Auditing விண்டோவில் கண்கண்ணாடி படத்துடன் உள்ள சிறிய பிரிவுதான் Watch Window. இதனை கிளிக் செய்தவுடன் நமக்கு வாட்ச் விண்டோ கிடைக்கும். இப்போது எந்த செல்லில் உள்ள பார்முலா செயல்படுவதனைக் கவனிக்க விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுத்து Add Watch என்னும் பட்டனை அழுத்த வேண்டும். இப்போது வாட்ச் விண்டோவில் பார்முலா சம்பந்தப்பட்ட செல்கள் அவற்றின் மதிப்பு, கணக்கிடப்பட்ட விடை ஆகியவை தெரியும். இதே போல எந்த பார்முலாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க விரும்புகிறீர்களோ அவற்றை வரிசையாகத் தேர்ந்தெடுத்து Add பட்டனை அழுத்தினால் அவை அனைத்தும் Watch விண்டோவில் சேர்க்கப்படும். இந்த விண்டோனை மானிட்டரின் எந்த மூலையிலும் வைத்துக் கொள்ளலாம். இனி செல்களில் மதிப்புகளை மாற்றும் போதெல்லாம் இந்த பார்முலாக்கள் மூலம் எந்த செல்களில் மதிப்புகள் மாறுகின்றன என்று இந்த ஒரே விண்டோவில் கண்காணிக்கலாம். ஏதாவது ஒரு பார்முலா செயல்படுவதனைக் கண்காணிக்க விரும்பவில்லை என்றால் அதனை தேர்ந்தெடுத்து Delete Watch button ஐ அழுத்தி நீக்கிவிட்டு மற்ற பார்முலாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம். ஒவ்வொரு செல்லுக்காய் மவுஸ் மூலம் ஓடி ஓடிப் பார்ப்பதனைத் தவிர்த்து ஒரே ஜன்னலில் அனைத்தையும் கண்காணிப்பது எவ்வளவு எளிது பாருங்கள்.

எக்ஸெல் ஷார்ட்கட் கீகள்
காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.

ஆன்லைன் கீபோர்டு
இங்கு சொல்லப்பட இருக்கிற கீ போர்டு இசை அமைக்கப் பயன்படும் கீ போர்டு. பெரிய, சிறிய நகரங்களில் வாழும் குடும்பங்களில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கீ போர்டு வாசிப்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். ஒரு சிலர் சிறிய அல்லது பெரிய எலக்ட்ரானிக் கீ போர்டுகளை வாங்கித் தருகின்றனர். சிலர் அருகில் கற்றுக் கொடுக்கும் மையங்களுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பி கீ போர்டை இசைக்கக் கற்றுக் கொடுக்கின்றனர். இவர்களில் குறிப்பிட்ட சிலரே தொடர்ந்து இசை உருவாக்குவதன் முழு பரிமாணங்களையும் கற்றுக் கொள்கின்றனர்.
இது போன்ற ஆசையைத் தீர்க்கும் வகையில் ஆன்லைனில் பல விஷயங்களைக் கற்றுத் தரும் தளம் ஒன்று, கீ போர்டினையும் கற்றுத் தருகிறது. இதன் தளத்திலேயே ஒரு கீ போர்டு தரப்படுகிறது. இதில் Piano, Organ, Saxophone, Flute, Pan Pipes, Strings, Guitar, Steel Drums மற்றும் Double Bass ஆகிய அனைத்து வாத்தியங்களிலும் கிடைக்கும் இசையைக் கற்றுக் கொள்ளலாம்; உருவாக்கலாம். இசைக்கையில் துணை புரிய ஆறு வகையான ட்ரம் பீட்ஸ் தரப்பட்டுள்ளது. இந்த கீ போர்டின் இடது பக்கம் மூன்று பட்டன்கள் தரப்பட்டுள்ளன. அவை Chord Mode, Play Chord மற்றும் Instructions. இந்த வழிகளில் சில கீகளைத் தேர்ந்தெடுத்து, அவை தொடர்ந்து வாசிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ளலாம். Instructions என்ற பிரிவில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்று குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்த கீ போர்டில் நாம் விரும்பும் வாத்தியத்தைத் தேர்வு செய்து கீகளை அழுத்திப் பழகலாம். ஏற்கனவே கீ போர்டு இயக்கத் தெரிந்தவர்கள் இதில் இசை அமைக்கலாம். முதலில் உங்கள் சிஸ்டத்தின் ஸ்பீக்கர்களை இயக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒலி மிகத் தெளிவாகக் கிடைக்கிறது.
இசையில் ஆர்வம் இல்லை என்றாலும், ஆன்லைனில் உள்ள கீ போர்டு எப்படி இசை ஒலியைத் தருகிறது என்று விளையாட்டுக்காகக் கூட இதனை ஒலித்துப் பார்க்கலாம். நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.bgfl.org/index.cfm?s= 1&m=239&p=167,view_resource&id=50

ஜிமெயிலில் சிக்கலாமா?
இன்று உலக அளவில் இமெயில் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயிலில் அக்கவுண்ட் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அதனை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். அதனை அவ்வளவாகப் பயன்படுத்தாதவர்களும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை வைத்து எப்போதாவது பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஜிமெயில் சர்வீசஸ் திடீரென முடங்கிப் போனால், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் பதறிப் போய்விடுவார்கள்; அது சரியாகிக் கிடைக்கும் வரை புலம்பித் தவித்துவிடுவார்கள். ஆனால் கூகுள் மெயிலை வேறு சில வழிகளிலும் பெறலாம் என்பதைப் பலர் அறிந்திருப்பதில்லை. இங்கு அந்த வழிகளைக் காணலாம்.
கூகுள் மெயில் மூன்று வழிகளில் இயங்குகிறது. அவை ஸ்டாண்டர்ட், எச்.டி.எம்.எல். மற்றும் மொபைல் (standard, HTML and mobile) ஸ்டாண்டர்ட் வகையில் எர்ரர் காட்டப்பட்டு பிரச்னை இருந்தாலும், மற்ற இரண்டு வகைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் ஸ்டாண்டர்ட் வகை தான் சிக்கலில் மாட்டிக் கொண்டு நமக்குக் கிடைக்காமல் இருக்கும். எனவே அந்த வேளைகளில் எப்படி மற்ற வகைகளில் ஜிமெயிலைப் பெறலாம் என்று பார்க்கலாம்.
முதலாவதாக எச்.டி.எம்.எல். வகையில் சென்று பெறுவது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி http://mail.google.com/mail/?ui=html இது ஸ்டாண்டர்ட் வகைக்கு மாற்றானதாக இருக்கும். படங்கள் ஏதுமின்றி மிகவும் சாதாரணத் தோற்றத்தில் கிடைக்கும். இந்த இணைய முகவரியை உங்கள் புக்மார்க் / பேவரிட் தளப் பட்டியலில் வைத்துக் கொண்டால், ஸ்டாண்டர்ட் ஜிமெயில் பிரச்னைக் குள்ளாகுகையில் இதனைப் பயன்படுத்தலாம்.
இரண்டாவதாக, கூகுள் மெயிலின் மொபைல் பதிப்பை நாடுவது. இது நம் மொபைல் போன்களுக்கானது. இதனை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பெறலாம். இதனைப் பெற உங்கள் பிரவுசரின் அட்ரஸ் பாரில் m.gmail.com என டைப் செய்திட வேண்டும். இதன் வடிவமும் எலும்புக் கூடு போலக் காட்சி அளிக்கும். ஆனால் இது டெக்ஸ்ட் மட்டுமே காட்டுவதால், விரைவில் உங்கள் மெயில்கள் கிடைக்கும். இதனைப் பார்த்து நீங்கள் அசௌகரியப்பட்டால், ஐபோனுக்கான கூகுள் மெயில் தளத்தினைப் பெறலாம். இதனைப் பெற http://mail.google.com/mail/x/gdlakb/gp/ / என்ற முகவரியினை டைப் செய்திடவும். இறுதியாக நமக்குக் கிடைக்கும் ஐகூகுள் வசதி. நீங்கள் igoogle பயன்படுத்தாதவராக இருந்தாலும் அதன் தளத்தின் மூலம் ஜிமெயில்களைப் பெறலாம். இன்னும் சொல்லப் போனால், ஐ கூகுள் தளத்தில் மூலம் நீங்கள் உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் முழுவதும் காண முடியும். ஜிமெயில் மட்டுமே பயன்படுத்தும் அனைவருக்கும் ஐ கூகுள் மிகச் சிறந்த தளமாகும். இதனைப் பெற http://www.google.com/ig/gmailmax என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். மேலே காட்டப்பட்டுள்ள நான்கு வழிகளிலும் நீங்கள் உங்கள் ஜிமெயிலைப் பெறலாம். சரி, இந்த நான்கு வழிகளிலும் பெற முடியவில்லை என்றால் என்ன செய்வது? உங்கள் டெஸ்க் டாப் மெயில் கிளையண்ட் புரோகிராம்களை நாடவேண்டியதுதான். போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் நமக்கு இந்த வகையில் உதவிடும். ஜிமெயில் சர்வரை இந்த புரோகிராம்கள் அணுகி, மெயில்களைப் பெற நிச்சயம் உங்களுக்கு இது உதவும். இதற்கு எப்படி செட் செய்வது என்ற வழியை http://mail.google.com/support/bin/answer.py?hl=en&answer=12103 என்ற முகவரியில் உள்ள கூகுள் தளம் உங்களுக்குப் படிப்படியாக விளக்கும். எனவே ஜிமெயில் என்றைக்கும் எப்போதும் கை கொடுக்கும் என்பதே இன்றைய நிலை.

No comments:
Post a Comment