வீவோ மியூசிக் வீடியோ வெப்சைட்
யு–ட்யூப் மற்றும் உலகின் முன்னணி இசை நிறுவனங்கள் இணைந்து வீவோ (ஙஞுதிணி) என்ற பெயரில் ஒரு மியூசிக் வீடியோ வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். என்ற முகவரியில் இதனைக் காணலாம். யு–ட்யூப்புடன் யுனிவர்சல் மியூசிக் குரூப் , சோனி மியூசிக் என்டர்டெய்ன்மென்ட், இ.எம்.ஐ., ஏ.டி அண்ட் ட்டி மற்றும் அபுதாபி மீடியா கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் கை கோர்த்துள்ளன. இந்த திட்டத்திற்கென இந்த நிறுவனங்கள் 30 கோடி டாலர் வழங்கியுள்ளன. தற்போது இந்த இணைய தளத்தில் 5,191 கலைஞர்களின் 14,675 வீடியோக்கள் உள்ளன. 20 வகையான வீடியோ இசை ஆல்பங்கள் கிடைக்கின்றன. இந்த தளத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் தாங்கள் விரும்பும் வகையில் பிளே லிஸ்ட்டுகளை உருவாக்கிக் கொள்ளலாம். அவ்வகையில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பிளே லிஸ்ட்டுகள் உள்ளன.
இணையம் 2009 தந்த இலவச புரோகிராம்கள்
சென்ற ஆண்டில் பல நூற்றுக்கணக்கான பயன்பாட்டு புரோகிராம்கள் இணையத்தில் புதிதாய்க் கிடைத்தன. பலவகையான பிரிவுகளில் இவை இருந்தன. மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேடிப்பிடித்து டவுண்லோட் செய்து பயன்படுத்தினர். இருப்பினும் சில புரோகிராம்கள் அனைவருக்கும் தேவையானதாய் இருந்தன. மிக அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டதன் அடிப்படையில் கீழே உள்ள புரோகிராம்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் உங்களுக்குத் தேவையானதாக இருந்தால் இப்போதும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
1. விண்டோஸ் 7: ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் விண்டோஸ், 2009ஆம் ஆண்டு பலநிலைகளில் மக்களைச் சென்றடைந்தது. ஏதாவது ஒரு வகையில் மிக அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் ஆன புரோகிராம் ஆக விண்டோஸ் 7 பதிப்பு இருந்தது. சோதனைப் பதிப்பாக பல நிலைகளிலும், இறுதிச் சோதனைப் பதிப்பாகவும் இது மக்களைச் சென்றடைந்தது. முதலில் ஜனவரியில் (http://lifehacker.com/5127294/windows7betareadyforofficialdownload) என்ற தளத்தில் இதன் சோதனைத் தொகுப்பு கிடைத்தது. ஆனால் இதில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. எனவே உடனே திரும்பப் பெறப்பட்டது; மீண்டும் (http://lifehacker.com/5128018/windows7betaproductkeysnowavailableforreal) தரப்பட்டது. அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இதனை டவுண்லோட் செய்திட முயற்சித்ததில் பிரச்சினை ஏற்பட்டு இதன் காலக் கெடு நீட்டிக்கப்பட்டது.(http://lifehacker.com/5128404/microsoftextendswindows 7betaavailabilityuntiljanuary24th) அடுத்து மே மாதம் இதன் இறுதிச் சோதனை பதிப்பு தரப்பட்டது (http://lifehacker.com/5240198/windows7rcavailablefordownloadnow) இந்த விண்டோஸ் 7 சோதனைப் பதிப்பு தந்த (http://lifehacker.com/5131371/windows7betasmanyfreeandlegitthemes) அழகான தீம்களை மக்கள் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
2. போர்ட்டபிள் உபுண்டு லினக்ஸ் (Portable Ubuntu for Windows): லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து தன் ஆதரவாளர் எண்ணிக்கையைச் சென்ற ஆண்டில் உயர்த்தியது. இதனால் பல்வேறு பதிப்புகள் வெளியாயின. இவற்றில் அதிகம் டவுண்லோட் செய்யப்பட்ட சிஸ்டம் பைல் உபுண்டு லினக்ஸ் போர்ட்டபிள் எடிஷனாகும்.http://sourceforge.net/projects/portableubuntu// என்ற முகவரியில் உள்ள தளத்தில் இருந்து போர்ட்டபிள் எடிஷன் மிக அதிகமாக இறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. விண்டோஸ் டெஸ்க்டாப்பிலேயே இதனைப் பயன்படுத்தலாம் என்ற வசதிதான் இதன் அடிப்படைக் காரணமாக இருந்தது.
3. செவன் ரீமிக்ஸ் எக்ஸ்பி (Seven Remix XP):: விண்டோஸ் 7 பதிப்பு வெளியானவுடன், பலர் தங்களுக்கும் அந்த அனுபவம் வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் அதற்கு இடமளிக்கவில்லை. இருப்பினும் விண்டோஸ்7 அனுபவத்தினை எக்ஸ்பி சிஸ்டத்திலேயே பெற்றுக் கொள்ளும் வகையில் வெளியான புரோகிராம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் ஆன புரோகிராம்களில் இதுவும் ஒன்று. http://niwradsoft.blogspot.com/என்ற தளத்தில் இது கிடைக்கின்றது.
4. நினைட் (Ninite ): விண்டோஸ் 7 வந்ததனால் உருவான பல பயன்பாட்டு புரோகிராம்களில் இதுவும் ஒன்று. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கம்ப்யூட்டரில் மாற்றுகையில், ஏற்கனவே பயன்படுத்தி வந்த புரோகிராம்களையும் அதற்கான டிரைவர்களையும், மீண்டும் புதிய சிஸ்டத்தில் அமைப்பது பெரிய வேலையாக இருக்கும். மொத்தமாக அவற்றைத் தன்னிடத்தில் வாங்கிக் கொண்டுப் பின் புதிய சிஸ்டத்தில் அவற்றைச் சரியாகப் பதியும் வேலையை இந்த புரோகிராம் செய்கிறது. எத்தனை புரோகிராம்கள் இருந்தாலும் இதன் மூலம் மிக எளிதாக அவை அனைத்தையும் பதிந்துவிடலாம். எனவே தான் இது மிக அதிகமான எண்ணிக்கையில் டttணீ://ணடிணடிtஞு.ஞிணிட்/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்யப்பட்டது.
5. எக்ஸ்பி/விஸ்டாவில் விண்டோஸ் 7 ஷார்ட் கட்ஸ்: விண்டோஸ் 7 சிஸ்டம் வந்ததனால் ஏற்பட்ட இன்னொரு விளைவு இது. விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் ஏராளம். இதுவரை வந்த விண்டோஸ் சிஸ்டங்களில் உள்ள ஷார்ட் கட் கீகளைக் காட்டிலும் அதிகம். எனவே இவற்றைப் பயன்படுத்திப் பார்க்க விரும்பிய மக்களுக்காக இந்த புரோகிராம் வடிவமைத்துத் தரப்பட்டது. விண்டோஸ் 7 தரும் மிகச் சிறந்த ஷார்ட் கட் கீகளை, அதற்கு முன் வந்த விண்டோஸ் இயக்கங்களில் பயன்படுத்தும் வகையில் இந்த புரோகிராம் இயங்குகிறது. இதனை http://lifehacker.com/5133039/windows7shortcutsenablesthebestwin7shortcutsinxporvista என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
6. ஏவிஜி இலவச ஆண்ட்டி வைரஸ்: வைரஸ்கள் நாளுக்கு நாள் பலவகைகளில் பெருகியதால், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலரும் நாடியது இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத்தான். அந்த வகையில் அதிகம் டவுண்ட்லோட் ஆன புரோகிராம் ஏவிஜி 9 ப்ரீ புரோகிராம் (http://free.avg.com /wwen/download? prd=afg#tba2). இதில் பல கூடுதல் வசதிகள் தரப்பட்டது இதன் சிறப்பாகும். அதிகம் பிரபலமான இலவச ஆண்ட்டி வைரஸ் இது.
7. கூகுள் குரோம்: கூகுள் குரோம் பிரவுசர் வெளியாகி ஓராண்டு தான் ஆகியது. ஆனால் மிக அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசராக இது தொடக்கத்தில் இருந்தே இடம் பெற்றது. இதனை டவுண்லோட் பயன்படுத்திப் பார்த்தவர்கள் இதன் வேகத்தைப் புகழ்ந்தனர். ஆனால் தொடர்ந்து பயன்படுத்தாமல் மீண்டும் பழைய பிரவுசருக்கே சென்றவர்கள் ஏராளம். இரண்டாம் பதிப்பு மே மாதமும், குரோம் 3 செப்டம்பரிலும் வெளியாகின.
8. பயர்பாக்ஸ்: பிரவுசர் மார்க்கெட்டில் தொடர்ந்து நிலையாக மக்களைக் கவரும் பிரவுசராக பயர்பாக்ஸ் (http://www.mozilla .com/enUS/firefox/firefox.html) பெயர் எடுத்து வருகிறது. இதன் பயர்பாக்ஸ் பதிப்பு 3.5, 2009 ஆம் ஆண்டில் பிரபலம் அடைந்தது. டவுண்லோட் செய்யப்பட்டதிலும் சாதனை படைத்தது. இதன் சார்பாக வெளியான ஆட் ஆன் தொகுப்புகள் இதன் இயக்கத்திற்கு வலு சேர்த்தன. அந்த வகையில் டவுண்லோட் செய்யப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளும் அதிகம்.
9. தண்டர்பேர்ட் 3 (Thunderbird 3): மொஸில்லாவின் இன்னொரு மக்கள் அபிமான சாப்ட்வேர் இது. எளிமையான, பயன்படுத்த வேகமான இமெயில் கிளையண்ட் புரோகிராம் இது. இதன் பதிப்பு 3 அண்மையில் வெளியாகி அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தண்டர்பேர்ட் பதிப்பு 2 வெளியானது. தற்போது வெளியாகியுள்ள பதிப்பு 3ல் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.http://www.mozillamessaging.com/enUS/thunderbird/ முகவரியை அணுகவும்.
10. கம்ப்யூட்டர் ரிப்பேர் கிட் (Computer Repair Kit): கம்ப்யூட்டரில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் புரோகிராம்களை இங்கு மொத்தமாக ஒரே புரோகிராமாகப் பெறலாம். இதன் பயன்தன்மை காரணமாகப் பலரால் http://www.technibble. com/computerrepairutilitykit/என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
விண்டோஸ் கூடுதல் பயன் பெற
இணையத்தில் பல தளங்களில் விண்டோஸ் இயக்கத்தொகுப்பின் சில குறைகளை, நிறைவான பயனுள்ள வசதிகளாக மாற்றும் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. கீழே தரப்பட்டுள்ள குறிப்புகளைப் படித்தபின் நீங்கள் நிச்சயம் அவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்த திட்டமிடுவீர்கள்.
1.பென்சஸ் (Fences) : உங்கள் மானிட்டரின் திரை முழுவதும் ஐகான்கள் குவிந்து கிடக்கின்றனவா? சில வேளைகளில் டவுண்லோட் செய்த பைலுக்குரிய ஐகானைக் காண முடியவில்லையா? சிதறிக் கிடப்பதனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பைல்களை அடையாளம் காண முடியவில்லையா? விண்டோஸ் இயக்கம் இவற்றை வகைப்படுத்தி வைக்கும் வசதியைத் தரவில்லை. இந்தக் குறையை நீக்கும் வகையில் செயல்படுகிறது Fences என்னும் இலவச புரோகிராம். ஸ்டார்டாக் என்னும் நிறுவனம் இந்த புரோகிராமினைhttp://www.stardock. com/products/fences/ என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் தருகிறது. இது உங்கள் ஐகான்களை குழு குழுவாக அமைத்து வேலிகளுக்குள் அமைத்துத் தருகிறது. எனவே மெயில், மூவி, இசைப்பாடல், ஷார்ட் கட்ஸ், கேம்ஸ், இன்னும் சில பிரிவுகளில் வேலி கட்டி ஐகான்களை அதற்குள் வைக்கலாம். திரையில் காலியாக உள்ள இடத்தில் இருமுறை கிளிக் செய்தால் அனைத்து வேலிகளும் அவற்றின் உள்ள அமைக்கப்பட்டுள்ள ஐகான்களுடன் மறைந்து போகும். மீண்டும் டபுள் கிளிக் கொடுத்தால் அவை அனைத்தும் மீண்டும் காட்டப்படும். இந்த புரோகிராமினை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த யு–ட்யூப் வீடியோ ஒன்றை http://www.youtube.com/ watch?v=kSTnuRSKymwஎன்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.
2. விண்டோஸ் ஆப்டிமம் (Windows Optimum): முடிந்த அளவிற்கு முழுமையான பயன்பாட்டினை ஆங்கிலத்தில் Optimum என்று கூறுவார்கள். அப்படி விண்டோஸ் இயக்கத்தினைப் பயன்படுத்தத் தான் பல புரோகிராம்கள் உள்ளன. அப்படியானால் இந்த ஆப்டிமம் புரோகிராம் என்ன செய்திடும்? இது விண்டோஸ் இயக்கத்தின் அனைத்து வேலைகளையும் கட்டுப்படுத்தும் சக்தியை உங்களுக்குத் தருகிறது. இப்போது இந்த வேலை முடியாதே என்று விண்டோஸ் கூறும் வேலைகளையும் முடிக்கும் பவர் உங்களுக்கு இதன் மூலம் கிடைக்கும். ஒரு பைலை ரீநேம் செய்திட முயற்சிக்கிறீர்கள்; அல்லது அழிக்க கட்டளை கொடுக்கிறீர்கள். உடனே “”பைலை இன்னொரு அப்ளிகேஷன் அல்லது இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே முடியாது” என்று விண்டோஸ் கூறும் செய்தியைக் காணலாம். இந்த புரோகிராம் இந்த தடைகளைத் தகர்க்கிறது.
இதன் மூலம் விண்டோஸ் சிஸ்டம் வழங்கும் எந்த ஒரு சர்வீஸையும் நிறுத்தலாம்; ரெஜிஸ்ட்ரியில் உள்ள கீகளை நீக்கலாம்; நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராக லாக் இன் செய்யவில்லை என்றாலும் இந்த புரோகிராம் உங்களுக்கு அந்த அனுமதியைத் தருகிறது. ஒரு பைலைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், அதனை நீக்கலாம்; “Access denied” A�x “Another application is using the file” என்ற செய்தி எல்லாம் இனிமேல் வராது.எனவே இந்த புரோகிராமினை விண்டோஸ் இயக்கத்தினைப் புதிதாக இயக்குபவர்கள் சற்றுக் கவனத்துடன் கையாள வேண்டும். அல்லது பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். இதனைப் பெறhttp://netstudio.org/eng/windowsoptimum.html என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
3. மீடியா இன்போ (Media Info): ஒரு ஆடியோ அல்லது வீடியோ பைல்கள் குறித்து, அதன் பைல் ப்ராப்பர்ட்டீஸ் தரும் தகவல்கள் உங்களுக்கு நிறைவைத் தரவில்லையா? அப்படியானால் இந்த சிறிய அப்ளிகேஷன் உங்களுக்கு உதவும். ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள் குறித்து, மிக விரிவான தகவல்களை இது தருகிறது. இதன் சிறப்பு இது அனைத்து வீடியோ மற்றும் ஆடியோ பைல் பார்மட்டுகளைக் கையாள்வதுதான். http://mediainfo. sourceforge.net/en என்ற தளத்தில் இதனைப் பெறலாம்.

2010 காலண்டர் வேண்டுமா!
வரப்போகிறது ஜனவரி. எது இருக்கிறதோ இல்லையோ! நம் அறையில் காலண்டர் ஒன்று வேண்டும். எங்கு தேடியும் இலவசமாகக் கிடைக்கவில்லையா? இன்டர்நெட்டில் ஒரு தளம் நாடு வாரியாக, விடுமுறை நாட்களுடன் காலண்டரைத் தருகிறது. மாதவாரியாகவும், ஆண்டு முழுமைக்கும் ஒன்றாகவும் இதனைப் பெறலாம். இவை பி.டி.எப். பைலாகவும், டாகுமெண்ட் பைலாகவும் கிடைக்கின்றன. தரும் காலண்டரில் மாற்றங்கள் செய்திட வேண்டும் என எண்ணினால், டாகுமெண்ட் பைலாக இறக்கிக் கொள்ளுங்கள். இதனை அச்செடுக்கலாம்; அல்லது கம்ப்யூட்டரிலேயே பைலாக வைத்தும் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: http://www.calendarlabs. com/onlinecalendar.php இங்கு சென்றவுடன் நாடு தேர்ந்தெடுத்து அமைத்து ஓகே தந்துவிட்டால், உடன் காலண்டர் கிடைக்கும்.
இதே போன்று காலண்டர் தரும் தளங்கள் வேறு சிலவும் உள்ளன.
இதே போன்று காலண்டர் தரும் தளங்கள் வேறு சிலவும் உள்ளன.
அவை:
ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்கள்
வைரஸ்கள் மட்டுமே தொல்லை தந்து கொண்டிருந்த நேரத்தில், நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதற்காகவென்றே உருவாக்கப்பட்டு உலவ விடப்பட்டவை தான் ஸ்பைவேர் புரோகிராம்கள். இதனை மால்வேர் எனவும் சிலர் கருதி வகைப்படுத்துகின்றனர். இவை நேரடியாகக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பிரச்சினை செய்யாது என்றாலும், நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடுவதில் ஈடுபடுகின்றன. இவற்றை வடிவமைத்தவர் களுக்கு இந்த தகவல்கள் அனுப்பப்பட்டு நம் பெர்ச்னல் வாழ்க்கையில், நம் பேங்க் நிதி பரிமாற்றங்களில் கெடுதல் செய்கின்றன. எனவே இவற்றை அவ்வப்போது நீக்குவதற்கு நமக்கு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன.
இணையத்தில் பல இலவச ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்த நபர்களின் எண்ணிக்கையை வைத்து, மிகப் பிரபலமான சில புரோகிராம்கள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
1. AdAware Free: தொடர்ந்து மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம் இது. இதன் அண்மைக் காலத்திய பதிப்பு 8.1.1. ஆகும். விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் இயங்குகிறது. இதனை இயக்க பெண்டியம் 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிப் இருந்தால் போதும். ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் 100 எம்பி இதற்கெனத் தேவை. இதன் பைல் அளவு 89198 கேபி.
சென்ற வாரம் வரை இதனை 1,59,34,537 பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருவதாக இதன் இணைய தளத்தில் தகவல் உள்ளது. இந்த புரோகிராமினைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் லாவா சாப்ட். இதன் இணைய தளம்

http://www.lavasoft.com/ இதனை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய தளத்தின் முகவரி : http://www.pcworld.com /downloads/file/fid,7423order,1/description.html
2. Spybot Search & Destroy: சேபர் நெட்வொர்க் கிங் (http://www.safernetworking.org/en/index. html) என்னும் நிறுவனம் இதனைத் தயாரித்து வழங்குகிறது. இதன் அண்மைக் காலத்திய பதிப்பு 1.6.2. ஆகும். விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் இயங்குகிறது. இதனை இயக்க பெண்டியம் 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிப் இருந்தால் போதும். ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் 100 எம்பி இதற்கெனத் தேவை. இதன் பைல் அளவு 16026 கேபி. இறுதியாக மே 20 அன்று புதுப்பிக்கப்பட்டது. சென்ற வாரம் வரை 85,42,006 பேர் இதனை டவுண்லோட் செய்துள்ளனர்.
இலவசமாக இதனை டவுண்லோட் செய்திடலாம். கீழ்க்காணும் முகவரியிலும் இது டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது. http://www.pcworld.com/downloads/file_download/fid,22262order,4c, antispywaretools/download.html
இலவசமாக இதனை டவுண்லோட் செய்திடலாம். கீழ்க்காணும் முகவரியிலும் இது டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது. http://www.pcworld.com/downloads/file_download/fid,22262order,4c, antispywaretools/download.html
3. சி.டபிள்யூ. ஷ்ரெடர் (CWShredder): இதன் பெயர் பைலை மற்றவர் படிக்க முடியாமல் அழிக்கும் தன்மையுடையதாகத் தெரிந்தாலும், இதுவும் ஆண்ட்டி ஸ்பைவேர் பைல் வகையைச் சேர்ந்ததுதான். இது பிரபலாமவதற்குக் காரணம், ஸ்பை ஸ்பாட் மற்றும் ஆட்–அவேர் ஆகிய இரு புரோகிராம்களும் நீக்க முடியாத ஒரு ஸ்பைவேர் புரோகிராமினை இது நீக்கியதுதான். ஆனால் இந்த புரோகிராம் அவ்வப்போது அப்டேட் செய்யப்படவில்லை; இருந்தாலும் மிகச் சிறப்பாக இயங்கி தன் பணியைச் செய்கிறது. இதனைப் பெறhttp://www.pcworld. com/downloads/file/fid,23551order,1/description.html என்ற முகவரிக்குச் செல்லவும்.
4.விண்டோஸ் டிபெண்டர் (Windows Defender): ஆண்ட்டி வைரஸ் தொகுப்பிற்கு பெயர் பெற்ற, பிரபலமான ஏ.வி.ஜி. நிறுவனத் தயாரிப்பு. பொதுவாக ஸ்பைவேர் புரோகிராம்கள் நமக்குத் தெரியாமல் ஸ்டார்ட் அப் புரோகிராமாக நம் கம்ப்யூட்டரில் இடம் பெற்று, நாம் கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன் தானும் இயங்கி, தன் ஸ்பை வேலையைத் தொடங்கும். எனவே ஸ்டார்ட் அப்புரோகிராம்களின் மீது கண் வைத்துக் கண்காணித்தால், பெரும்பாலான ஸ்பைவேர் புரோகிராம்களை முடக்கிவிடலாம். விண்டோஸ் டிபெண்டர் அதைத்தான் செய்கிறது. இதனை டவுண்லோட் செய்திட http://www.pcworld.com/downloads/file/fid, 24761order,1/description.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
5. ஸ்பைவேர் கார்ட் (SpywareGuard): முதலில் இதனை பிரவுசர் ஹைஜாக் ப்ளாஸ்டர் என்ற பெயரில் அழைத்தனர். இதனை http://www.pcworld.com /downloads/file/fid,22955order,1/description.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். ஐந்து லட்சம் பேருக்கு மேல் இதுவரை இதனை டவுண்லோட் செய்துள்ளனர்.
மேலே குறிப்பிட்ட ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களுடன் இன்னும் சில புரோகிராம்களும் இணையத்தில் இலவசமாய்க் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறிப்பிட்ட சில ஸ்பைவேர்களை மையமாகக் கொண்டே தயாரிக்கப்பட்டவை. அந்த ஸ்பைவேர் இருப்பதாகத் தெரிந்தால், அவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். அல்லது அவற்றை டவுண்லோட் செய்து ஒருமுறை இயக்கி நீக்கலாம்.

No comments:
Post a Comment