Tuesday, 3 April 2012

பராமரிப்பு பணிக்கு ஒரு பிளாஷ் டிரைவ்--விண்டோஸ் வேகம் பெற இனியவை நாற்பது--எம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்பு 15 நாட்களில் 10 லட்சம் டவுண்லோட்--கம்ப்யூட்டர் கிராஷ்--கண்ட்ரோல் பேனல் உங்கள் கைகளில் --கூகுள் மியூசிக் சர்ச்


பராமரிப்பு பணிக்கு ஒரு பிளாஷ் டிரைவ்


கம்ப்யூட்டர் பிரச்னைகளைத் தீர்க்கும் போர்ட்டபிள் புரோகிராம்களை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துச் சென்றால் அதுவே பராமரிக்கும் பிளாஷ் டிரைவாக மாறிவிடும். இங்கே போர்ட்டபிள் புரோகிராம் என்பது இயக்கக் கூடிய புரோகிராம்களாகும். இவற்றை இயக்க இன்னொரு கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. அதனால் தான் இவற்றை பிளாஷ் டிரைவில் புரோகிராம்களாகவே பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம் என்று எழுதப்பட்டது. இவை பெரும்பாலும் தனி நபர் பயன்படுத்தும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் சில பிரச்னைகளுக்குத்தான் தீர்வுகளைத் தரும். அத்தகைய புரோகிராம்களை இங்கு காணலாம்.
1. சிகிளீனர் (Cleaner)சிகிளீனர் புரோகிராமி னைப் பலரும் தங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, தேவைப்படாத பைல்களைக் கம்ப்யூட்டரை விட்டு நீக்குவதற்குப் பயன்படுத்துகின்றனர். பிளாஷ் டிரைவில் இருந்தவாறு பயன்படுத்த, இதன் போர்ட்டபிள் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. இதனை இலவசமாகப் பெற http://www.piriform.com/ccleaner/download/portableஎன்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும். இந்த புரோகிராம் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் உள்ள உடைந்த வரிகளை நீக்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிற பிரவுசர்கள் வைத்திருக்கும், நம்மைப் பற்றிய பெர்சனல் தகவல்களை எடுக்கிறது. குக்கீஸ், கேஷ் மெமரியில் பதிவாகும் விஷயங்களை நீக்குகிறது. செக்டிஸ்க் பைல் துண்டுகளைக் கண்டறிந்து வெளியேற்றுகிறது. ரெஸ்டோர் பாய்ண்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை பராமரித்துத் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்கிறது.
2. ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller):  இதனை பிளாஷ் டிரைவில் பதிந்து வைத்து புரோகிராம்களை எளிதாக அன் இன்ஸ்டால் செய்திட முடியும். ஏற்கனவே அன் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களின் நீக்கப்படாத விஷயங்கள் இருந்தால், அவற்றை அழகாக எடுத்தெறிகிறது. போர்ட்டபிள் பதிப்பு http://www.revouninstaller.com/ revouninstaller.zip என்ற முகவரியில் கிடைக்கிறது. அதனை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதியவும்.
3.ஈஸி கிளீனர் (Easy Cleaner)இது சிகிளீனர் மேற்கொள்ளும் பல வேலைகளையும் செய்கிறது. அது செய்யாத ஒரு அருமையான பணியை மேற்கொள்கிறது. அதிகமாக ஓவர்லோட் ஆகிவிட்ட ஹார்ட் டிரைவினைச் சரி செய்கிறது. டிரைவ் மற்றும் தேர்ந்தெடுத்த போல்டர் மற்றும் சப்போல்டர்களின் பயன்படுத்தப்பட்ட அளவினைப் படம் போட்டு காட்டி பணியாற்றுகிறது. இதனையும் பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். இதனைhttp://personal.inet.fi/business /toniarts/ecleane.htm என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
4. சூப்பர்ஆண்ட்டி ஸ்பைவேர் ஆன்லைன் சேப் ஸ்கேன் (Super Anti Spyware Online Safe Scan) : மால்வேர் எனப்படும் ஸ்பை வேலை மேற்கொள்ளும் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் போர்ட்டபிள் புரோகிராம்களைப் பல மாதங்கள் தேடிய பின் இது இருப்பது தெரிந்தது. மிகச் சிறப்பாக இது வேலை செய்கிறது. டாஸ் புரோகிராம் போல இது செயல்படுகிறது. இதனை இயக்கியவுடன் விண்டோ இன்டர்பேஸ் ஒன்று தந்து நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, ஸ்பை வேர்களைக் கண்டறிகிறது. இதன் சிறப்பு இந்த புரோகிராம் அடிக்கடி அப்டேட் செய்யப்படுவதுதான். இதனை http://www.superantispyware. com/onlinescan.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, அப்படியே பிளாஷ் டிரைவில் வைத்து இயக்கலாம்.
5. ஹைஜாக் திஸ் (HijackThis) : ட்ரென்ட் மைக்ரோ நிறுவனம் தரும் புரோகிராம். இது எந்த மால்வேர் புரோகிராமினையும் பிக்ஸ் செய்வதில்லை. ஆனால் கண்டவுடன் நமக்கு ஒரு ரிப்போர்ட் தருகிறது. இதனை நாம் படித்து அறிந்து கொள்ள முடியாது. அப்படியே இந்த தளம் தரும் ஆன்லைன் அமைப்புகளில் பேஸ்ட் செய்தால், மால்வேர்களை நீக்கும் வழிகள் கிடைக்கும். http://hjtdata.trendmicro.com/hjt/analyzethis/index.php என்ற தளத்தில் இது கிடைக்கிறது.
6. ரெகுவா Recuva) ): . இதன் போர்ட்டபிள் புரோகிராம் http://www.piriform. com/recuva/download/portable என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இது பிளாஷ் டிரைவில் இருப்பது மிக அவசியம். அறியாமல் அழித்த பைல்களை நீக்கும் பணியை இதன் மூலம் அழகாக மேற்கொள்ளலாம். சிகிளீனர் தயாரித்து வழங்கும் நிறுவனமே இதனையும் தயாரித்து வழங்குகிறது.

விண்டோஸ் வேகம் பெற இனியவை நாற்பது


21. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.
22. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவது சிரமத்தைத் தரும். இதனை அதிகரிக்கலாமே!
23. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ பெற்று, பெர்பார்மன்ஸ் டேப் கிளிக் செய்து அதில் Adjust for best performance”தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
24. எப்போதாவது விண்டோஸ் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? அப்படியானால் உங்கள் ஹார்ட் டிரைவ் சரியாக பார்ட்டிஷன் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். டிஸ்க்கில் உள்ள பைல்களை அழிக்காமலேயே, ஹார்ட் டிரைவை பார்ட்டிஷன் செய்யக் கூடியபுரோகிராம்கள் நிறைய இணையத்தில் கிடைக்கின்றன.
25. விண்டோஸ் இயக்கத்திற்கான டிரைவர் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்திடவும்.
26. கண்ட்ரோல் பேனலைத் திறந்து அதில் Add or Removeஎன்ற பிரிவைப் பார்த்துப் பயன்படுத்தாத புரோகிராம்களை நீக்கவும்.
27.குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் மவுஸ், கீ போர்டு, சிபியுவில் உள்ள சிறிய மின்விசிறிகள் மற்றும் பிற இடங்களில் உள்ள தூசு நீக்கிச் சுத்தம் செய்திடவும்.
28. உங்கள் ஹார்ட் டிஸ்க் 7200 ஆர்.பி.எம். சுழற்சிக்கும் குறைவான வேகத்தில் செயல்படுவதாக இருந்தால், உடனே குறைந்தது அந்த வேகத்தில் சுழலும் ஹார்ட் டிஸ்க்குக்கு மாறவும்.
29. அவ்வப்போது ஆண்ட்டி வைரஸ் கொண்டு உங்கள் டிஸ்க் முழுவதையும் சோதனை செய்திடவும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து இயக்க விருப்பமில்லை எனில், ஆன்லைனில் கிடைக்கும் இலவச புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.
30. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் விண்டோஸ் டாஸ்க்பாரில் தேவையற்ற டூல்பார்களை நீக்கவும். விஸ்டாவில் சைட் பாரினை பயன்படுத்தவில்லை என்றால் நீக்கலாம். இது தேவையற்ற இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டையும் எடுத்துக் கொள்கிறது.
31. விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. அல்லது நீங்களே உங்கள் ஷார்ட் கட் கீகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
32.நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் டெக்னீஷியனாக இருந்தால் உங்கள் ப்ராசசருக்கு ஒரு ஓவர்கிளாக் போடலாம். இதனை எப்படி போடுவது என்பதை http://www.wikihow.com/OverclockaPC என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
33. ஸ்கேன்டிஸ்க் அல்லது செக்டிஸ்க் பயன்படுத்தி உங்கள் ஹார்ட் டிரைவில் பேட் செக்டார் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
34. உங்கள் கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ், சிடி ராம் டிரைவ், யு.எஸ்.பி. போர்ட், ஐ.ஆர். போர்ட், பயர்வயர் போன்றவை தரப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றை (எ.கா. பிளாப்பி டிரைவ், ஐ.ஆர். போர்ட், பயர்வயர்) நாம் பயன்படுத்துவதே இல்லை. உங்கள் பயாஸ் (BIOS)செட்டிங்ஸ் சென்று, பயன்படுத்தாதவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்; இதனால் பூட் ஆகும்போது இவை சார்ந்த பைல்கள் லோட் ஆகாமல் இருக்கும். மேலும் இவற்றிற்கு செல்லும் மின்சக்தி மிச்சமாகும்.
35. சிலர் ரீசன்ட் டாகுமெண்ட் லிஸ்ட்டைப் பயன்படுத்தமாட்டார்கள். அவர்கள் இந்த வசதியை எடுத்துவிடலாம். ஏனென்றால் பெரிய லிஸ்ட்டில் இந்த பைல்கள் இடம் பெறுவது கம்ப்யூட்டர் இயக்கத்தினை மந்தப்படுத்தும்.
36.புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுகையில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller) போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும். இவை அந்த புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்கிவிடும்.
37. தற்போது பயன்படுத்தாத பிரிண்டர்கள், மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களுக்கான டிரைவர்களை நீக்கவும்.
38. உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா மிகவும் மெதுவாக இயங்குகிறதா? எந்தவிதத் தயக்கமும் இன்றி எக்ஸ்பிக்கு மாறவும். அடுப்பு எதாக இருந்தால் என்ன, சோறு சீக்கிரம் வெந்தால் சரிதானே! லினக்ஸ் அல்லது மேக் சிஸ்டத்திற்கும் கூட மாறலாம்.
39. மிக மிக ஸ்லோவாக இயங்குகிறதா? தயங்காமல் ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்திடவும். பைல்களைக் கவனமாக பேக் அப் செய்துவிட்டு, விண்டோஸ் சிஸ்டம் டிஸ்க் மற்றும் டிரைவர் பைல்களைத் தயாராக வைத்துக் கொண்டு இந்த வேலையை மேற்கொள்ளலாம்.
40. எரிச்சல் அடையும் அளவிற்கு, கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்குகிறதா? இன்னொரு வழியும் உள்ளது. புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி, அனைத்துமே புதியதாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்களேன்.

எம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்பு 15 நாட்களில் 10 லட்சம் டவுண்லோட்


மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பின் சோதனைத் தொகுப்பினைத் தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட 15 நாட்களில் 10 லட்சம் பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனக்கு பெருமைக்குரிய விஷயமாக மைக்ரோசாப்ட் கருதுகிறது. வரும் ஜூன் மாதம் இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும். ஆறு வகைகளில் (Starter, Home and Student, Home and Business, standard, Professional and Professional Plus) இது விற்பனை செய்யப்படும். இதில் ஒரு வகை வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்புகள் அடங்கியதாகவும், அடிப்படை பயன்பாட்டி னைக் கொண்டதாகவும் கொண்டு இலவசமாகத் தரப்படும். இதில் விளம்பரங்களும் இருக்கும். வர இருக்கும் ஆபீஸ் தொகுப்பு என்ன விலையில் இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. உங்களுக்கும் இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்க ஆசையாக இருந்தால், http://www.microsoft. com/office/2010/en/default.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த ஆபீஸ் தொகுப்பில் என்னவெல்லாம் புதியதாக உள்ளன என்று தெரிய பல தளங்கள் உள்ளன.http://www.neowin. net /news/main/09/11/18/microsoftoffice2010topnewfeatures என்ற முகவரியில் உள்ள தளத்தில் சிறப்பான தகவல்கள் உள்ளன.

கம்ப்யூட்டர் கிராஷ்


சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
1. ஹார்ட்வேர் பிரச்னை: கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் StartSettingsControl PanelSystemDevice Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
2. ராம் மெமரி சிப்ஸ்: ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்: பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
4. வீடியோ கார்ட்: சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
5. வைரஸ்: பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
6. பிரிண்டர்: பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
7. சாப்ட்வேர்: முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
8. அதிக வெப்பம்: இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
9. மின் ஓட்டம்: கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கவும்.

No comments:

Post a Comment