Thursday 5 April 2012

பொன்மொழிகள்


பொன்மொழிகள்



எனக்குப் பிடித்த பொன்மொழிகள் சில....
 


  • இன்று வரும் துன்பங்களைக் கண்டு நீ ஓடினால்


நாளை உன்னைத் தேடிவரும் இன்பங்களை யார் வரவேற்பது?



  • உன் கண்கள் நேர்மைறையாக இருந்தால் உனக்கு இந்த உலகத்தைப் பிடிக்கும்!
          உன் நாக்கு நேர்மறையாக இருந்தால் இந்த உலகத்துக்கு 
உன்னைப் பிடிக்கும்!


  • எதிர்காலத்தை மாற்றும் ஆற்றல் இயற்கையில் நமக்கு இல்லை. ஆனால் நம் நல்ல பழக்கவழக்கங்கள் எதிர்காலத்தையே மாற்றும் ஆற்றல் வாய்ந்தவை!



  • திட்டமிடத் தவறினால் நாம் தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்பது பொருள்.



  • நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது ஆனால் அப்படி ஒரு நண்பன் கிடைப்பது அரிது.


ஒட்டடைக் குச்சி ஓய்வு எடுத்துக்கொண்டால் சிலந்திப் பூச்சி சிம்மாசனம் ஏறும் -unknown

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது - கன்பூசியஸ்

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும் - எமர்சன்

பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. கடல் பழையது; மழை புதியது - இந்தோனேசியா 

கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்ததால்தான் என்னால் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது - தாமஸ் ஆல்வா எடிசன்

சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும் - செனாக்கா

உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது - ஜார்ஜ் 

எலியட்ய் நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது- கார்ல் மார்க்ஸ் 

கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள் - ஜி. டி. நாயுடு

சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் நமக்கு வேண்டும் - நேரு




உன‌க்கு ஒரே ந‌ண்ப‌ன் ‌நீயே, ஒரே பகைவனு‌ம் ‌நீயே, உ‌ன்னை‌த் த‌விர பகைவனு‌ம் இ‌ல்லை, ந‌ண்பனு‌ம் இ‌ல்லை

இய‌ற்கை த‌ன் வ‌ழி‌யிலேயே செ‌ல்லு‌ம், அட‌க்குத‌ல் எ‌ன்ன செ‌ய்யு‌ம்.

ச‌‌ன்மா‌ர்‌க்க‌த்‌தி‌ன் முடிவு சாகாத க‌ல்‌வியை‌த் த‌ெ‌ரி‌வி‌ப்பதேய‌‌ன்‌றி வே‌றி‌ல்லை.







Back to top Go down

 

தூ‌க்க‌த்தை ஒ‌ழி‌த்தா‌ல் ஆயு‌ள் ‌விரு‌த்‌தியாகு‌ம். 

அவசரமாக தவறு செ‌ய்வதை ‌விட தாமதமாக ச‌ரியாக‌ச் செ‌ய்வதே மே‌ல்

உ‌ண்மையான ந‌ட்பு ஆரோ‌க்‌கிய‌ம் போ‌ன்றது. அதை இழ‌‌க்கு‌ம் வரை அத‌ன் ம‌தி‌ப்பு தெ‌ரிவ‌தி‌ல்லை.
Back to top Go down

ம‌ற்றவ‌ர்க‌ளி‌ன் ந‌‌ற்செய‌ல்களை‌ப் பா‌ர்‌த்து ம‌கி‌ழ்‌ச்‌சி அடையாதவனா‌ல் ந‌ற்செய‌ல்களை செ‌ய்ய இயலாது.

ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். 

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.
Back to top Go down

மி‌ன்‌மி‌னி‌ப் பூ‌ச்‌சி எ‌வ்வளவு ஒ‌ளியுட‌ன் ‌திக‌ழ்‌ந்தாலு‌ம் அது ‌தீ ஆகாது.

ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

எ‌ளியாரை வ‌லியா‌ர் அடி‌த்தா‌ல், வ‌லியாரை‌த் தெ‌ய்வ‌ம் அடி‌க்கு‌ம்.

நன்றி: வெப்துனியா.
Back to top Go down

 

அறிவு மவுனத்தை கற்றுத் தரும், அன்பு பேசக் கற்றுத் தரும். - ரிக்டர்.

யாரையும் தீயவன் என்று கூற வேண்டாம்; நீ நல்லவன், இன்னும் நல்லவனாய் இரு என்று சொல்லுங்கள். - விவேகானந்தர்.

எல்லாச் செல்வங்களிலும் ஞானமே அழியாத செல்வமாகும். - சாக்ரடீஸ்.
Back to top Go down

 

உயிர் பிரியும் முன் பலமுறை இறப்பார்கள் கோழைகள், வீரனுக்கு மரணம் ஒருமுறைதான். - ஷேக்ஸ்பியர்.

நான் என்ற அகந்தையைப் போக்கி விடுவதுதான் அடக்கம் என்பதற்கு உண்மையான பொருள். - மகாத்மா காந்தி.

மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமானது. - பாரதியார்.
Back to top Go down

 

உண்மையைச் சிலசமயங்களில் அடக்கி வைக்க முடியும். ஆனால் ஒடுக்கிவிட முடியாது. -நேரு.

தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல். —கன்பூஷியஸ்.

கடினமான வேலையை செய்து முடிப்பவர்கள் வீரர்கள். —மில்டன்.

சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.

மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர்.

உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.

நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.

உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.

அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.
Back to top Go down

 

கர்வம் பிடித்தவன் கவுரவத்தை இழக்கிறான். —ஷேக்ஸ்பியர்.

உழைப்பு, மூன்று தீமைகளை களைகிறது. அவை, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை. —வால்டேர்.

வேலையை விட அதிக களைப்பைத் தருவது சோம்பல். —ஆவ்பரி.

தன்னைத் தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவன். —கதே.

உழைப்பும், நேர்மையும் உயர்வுக்கு வழிகள். —நெப்போலியன்.

உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும். —பியாட்டி.
Back to top Go down

எதையும் தாங்குபவன் இறுதியில் வெல்வான். —பெர்சியஸ்.

முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் சொல்லாதே. —ஸபர்ஜியன்.

நன்றாக வாழ வேண்டுமானால், முன் கூட்டியே திட்டமிடுங்கள். —நெப்போலியன்.
 Go down

 

வெற்றிகளை சந்திக்க விரும்பினால், உடனே இடையூறுகளுக்கு தீர்வு காணுங்கள். —எல்லீஸ்.

தைரியமாக இருக்க வேண்டுமானால் பொய் சொல்லாதிருங்கள். —ஹெர்பர்ட்.

சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை; காலம், சோம்பேறிகளை மதிப்பதில்லை. —காந்திஜி.

முட்டாள், ராஜ உடை அணிந்தாலும் முட்டாள் தான். —பல்வெர்.

குணத்தில் மிக உயர்ந்தவனும், அடிமட்டத்தில் இருப்பவனும் மாறவே மாட்டார்கள். —கன்பூஷியஸ்.

துணிவு இல்லையேல் வாய்மை இல்லை; வாய்மை இல்லையேல், பிற அறங்களும் இல்லை. —காந்திஜி.
Go down

 

ஆசைகளை அடக்க முடியாத தனி சுதந்திரம் அழிவையே அளிக்கும். —கதே.

அன்பு குறைந்த இடத்தில், குற்றங்கள் பெரிதாகத் தோன்றுகின்றன. —பிரதர்டன்.

அளவற்ற உழைப்பைத்தான் மேன்மை என்கிறோம். —லாங்பெல்லோ.


No comments:

Post a Comment