Thursday, 5 April 2012

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பாதுகாப்பான வழிகள்--ஜஸ்ட் தெரிந்து கொள்ளலாமே!--கம்ப்யூட்டருக்குப் புதியவரா நீங்கள்--GMX இலவச இமெயில்கீ--போய்ச் சேர்ந்ததா இமெயில்?


இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பாதுகாப்பான வழிகள்


இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பாதுகாப்பான வழிகள்
உலகத்திலேயே மிகவும் ஆபத்தான இடம் எது? என்று என் மாணவர்களை சென்ற வாரம் கேட்டபோது ஒவ்வொருவரும் ஒன்றைச் சொன்னார்கள். ஒரு மாணவி புத்திசாலித்தனமாக ஒன்றைச் சொன்னவுடன் எல்லாரும் அதனை ஒத்துக் கொண்டார்கள். அது – இன்டர்நெட் எனும் இணைய வெளி.

ஆம், இன்றைக்கு வருகின்ற வைரஸ் செய்திகள், இமெயில் ஏமாற்று வேலைகள், ஸ்பைவேர் மூலம் தகவல் திருட்டு, கிரெடிட் கார்ட் தகவலெடுத்து பண மோசடி, ஆபாச படங்களை ஒட்டி வெட்டி பயமுறுத்தல் என்றெல்லாம் செய்தி வருகையில் உலகிலேயே இணைய வெளி தான் ஆபத்தானது என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதன் ஆபத்தை உணர்ந்து ஒரு சிலர் நமக்கு எதற்கு வம்பு? இப்படி ஓர் ஆபத்தின் மூலம் வரும் அறிவுத் தேடல்கள் எல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கவும் செய்கின்றனர். இவர்களை மன்னிக்கலாமா? வேண்டாமா? என்ற கேள்விக்குள் இறங்குமுன் இந்த துன்பங்களில் இருந்து ஏன் விடுதலை கிடைக்காது? என்ற கேள்விக்கான விடையைப் பார்க்கலாமே.
அண்மையில் வெளியான இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பதிப்பு இதற்கான விடையைத் தந்துள்ளது. அவை குறித்து விரிவாகக் காணலாம். போன ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7ன் இலவச பதிப்பு வெளியானது. பின் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து வெளியிடப்பட்டது. இதனைக் கொண்டுள்ளவர்கள் எப்படி எல்லாம் பாதுகாப்புகளைப் பெறுகின்றனர் என்று பார்க்கலாம்.
1.முதலில் உங்களிடம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 இல்லை என்றால் http://www. microsoft.com/windows/downloads/ie/getitnow.mspx    என்ற முகவரி சென்று இதனை முழுமையான புரோகிராமாகவோ அல்லது அப்டேட்டிங் புரோ கிராமாகவோ டவுண்லோட் செய்து கொள்ளலாம். நாம் கண்கூடாகக் காணக் கூடிய ஒரு புதிய வசதி பிஷ்ஷிங் பில்டர் வசதி.  இந்த வசதி ஏற்கனவே நாம் பிரவுஸ் செய்துள்ள இணைய தளங்களை தன்னிடம் உள்ள மோசமான அல்லது போலியான தளங்களின் தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எச்சரிக்கை செய்கிறது. அதே போல் மோசமான தளங்களின் பட்டியலை அவ்வப்போது அப்டேட் செய்து கொள்கிறது. இதனை Tools  சென்று Phishing Filter  என்பதில் ‘Turn on Automatic website checking’  என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
2. இந்த பில்டர் ஒவ்வொரு இணைய தளத்தையும் பின்னணியில் சோதனை செய்கிறது. இதனால் ஆபத்தான ஒரு தளத்தின் முகவரியை அட்ரஸ் பாரில் டைப் செய்தாலோ அல்லது இமெயில் கடிதத்தில் அந்த முகவரிக்கான லிங்க்கில் கிளிக் செய்தாலோ Reported phishing website  என்னும் மெசேஜ் காட்டப்படும். அட்ரஸ் பாரின் நிறம் சிகப்பாக மாறும். உங்கள் கம்ப்யூட்டரை (உங்களையும் தான்) காப்பாற்றிக் கொள்ள ‘Click here to close this web page’   என்பதில் கிளிக் செய்து குறிப்பிட்ட இணைய தளம் சார்ந்த பைல்கள் கம்ப்யூட்டரில் இறங்குவதனைத் தடுக்கலாம். ஆனால் உங்களுக்கு அந்த தளம் உண்மையானதுதான், ஆபத்தானது இல்லை என்றால் இன்னொரு லிங்க்கில் கிளிக் செய்து அந்த செய்தியை அனுப்பலாம்.
3. ஒரு வெப்சைட் மோசமானது என்று அறியப்பட்டாலும் டேட்டா பேஸில் அது பட்டியலிடப்பட்டு இன்டர்நெட் எக்ஸ்புளோர் அது குறித்து எச்சரிக்கை தர சில நாட்களாகலாம். எனவே இத்தகைய எச்சரிக்கை வரவில்லை என்பதற்காக நீங்கள் சந்தேகப்படும் தளங்களை நல்ல தளங்கள் என்ற முடிவிற்கு வர வேண்டாம். அட்ரஸ் பார் இளஞ்சிகப்பு வண்ணத்திற்கு மாறினால், அல்லது வெப்சைட் அட்ரஸ் சந்தேகத்திற்குரியதாக இருந்தால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். Tools   சென்று Phishing Filter  என்பதில் Report this website  என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் I think this is a phishing website  என்பதில் கிளிக் செய்திட வேண்டும். அதன்பின் Next    கிளிக் செய்து பின்னர் கிடைக்கும் விண்டோவில் தேவையான வெரிபிகேஷன் கோட் எண்ணை டைப் செய்திடவும். இந்த வெப்சைட்டை ஒரு நாள் பொறுத்திருந்து பின் பார்க்கலாம். மைக்ரோசாப்ட் அதற்குள் அதனைச் செக் செய்திடும்.
4. ஆன்லைன் ஷாப்பிங் செய்திடுகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தரும் பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றுங்கள். இத்தகைய ஷாப்பிங் தளங்களுக்குச் செல்கையில் அட்ரஸ் பார் பச்சையாக மாறினால் அந்த சைட் பாதுகாப்பானது என்பதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது என்று பொருள். மேலும் தளத்தின் பெயர் முன்னால்  https  என இருந்தால் அது முற்றிலும் பாதுகாப்பானது என்று பொருள். அட்ரஸ் பார் அருகே பேட் லாக் ஐகான் இருந்தால் அதன் மீது கிளிக் செய்தால் அந்த வெப்சைட்டின் பாதுகாப்பு குறித்த சான்றிதழைக் காணலாம்.
5. பாப் அப் விண்டோக்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகத்திறமையுடன் சமாளிக்கிறது. எந்த வெப்சைட்டில் பிரவுஸ் செய்திடுகையில் பாப் அப் விண்டோ வந்தாலும் அது தடுக்கப்படுகிறது. அட்ரஸ் பாருக்குக் கீழாக ஒரு மஞ்சள் பார் காட்டப்படுகிறது. உங்களுக்கு அந்த வெப்சைட் மீது நம்பிக்கை இருந்து அந்த பாப் அப் விண்டோக்களைக் காட்டலாம் என்று எண்ணினால் அதற்கான அனுமதியைத் தரவும் வழி உள்ளது. ஏனென்றால் சில தளங்கள் இந்த பாப் அப் விண்டோக்கள் தடுக்கப்பட்டால் இயங்குவதில்லை. இது போன்ற அனுமதியை நீங்கள் வழங்கும் பட்சத்தில் அந்த தளம் தனி ஒரு பட்டியலில் இடம் பெறும். பின்னாளில் இந்த தளத்திலிருந்து வரும் பாப் அப் விண்டோக்கள் பிரச்னைக்குரியது எனத் தெரிய வந்தால் உடனே அந்த பட்டியலை பெற்று அந்த தளத்தை நீக்கிவிடலாம்.
6. எப்போது ஒரு பிரவுசரை பயன்படுத்தினாலும் நீங்கள் அதனைப் பயன்படுத்தியதற்கான தடயங்கள் அதிலேயே பதியப்படுகின்றன. இதனால் உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றவர்கள் பார்க்கும்படி அமைகின்றன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7ல் உள்ள பிரவுசிங் ஹிஸ்டரி பிரிவில் மொத்தமாக இவற்றை அழிப்பதற்கும் குறிப்பிட்ட சிலவற்றை அழிப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு Tools  சென்று பின் Deleting History  தேர்ந்தெடுத்து பின் கிடைக்கும் மெனுக்களில் வேண்டியதைக் கிளிக் செய்திடலாம்.
8. பொதுவாக குக்கிகள் நாம் வேகமாக பிரவுசிங் செய்திட உதவுகின்றன. எடுத்துக் காட்டாக ஒரு தளத்தை நாம் அடிக்கடி விசிட் செய்து அதிலிருந்து தகவல்களை எடுக்கிறோம் என்றால் அதில் நுழைவதற்கான நம் யூசர் நேம், பாஸ்வேர்ட்கள் குக்கிகளாக சேவ் செய்யப்பட்டு நம் வேலையை எளிதாக்குகின்றன. ஆனால் அனைத்து குக்கிகளும் ஆபத்தற்றவை எனச் சொல்ல முடியாது. இந்த குக்கிகளுக்கான கண்ட்ரோல் எப்படி இருக்க வேண்டும் என்பதைனை  Medium  முதல் High  வரை அமைக்கலாம். Tools / Internet Options   சென்று, பின் கிடைக்கும் டேப்களில் Privacy  டேப் கிளிக் செய்து இந்த மாற்றங்களை ஏற்படுத்தலாம். சில தளங்கள் அதற்கான குக்கிகள் இருந்தால் தான் இயங்கும். அப்படிப்பட்ட தளங்களை குறித்துவைத்திட  Sites  என்னும் டேபில் கிளிக் செய்து பின் அந்த தளத்தின் முகவரியை டைப் செய்து அதன் பின் Allow  என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.
9. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கும் பல ஆட்–ஆன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை ActiveX கண்ட்ரோல்கள் எனவும் அழைக்கிறோம். ஆனால் இத்தகைய சில புரோகிராம்கள் கெடுதல் விளைவிப்பவையாகவும் இருக்கின்றன. இந்த வசதிகளுடன் இயங்குகையில் சில தளங்கள் நமக்குத் தெரியாமல் வைரஸ் புரோகிராம்களை இறக்கத் தொடங்கும். உடனே நமக்கு இன்பர்மேஷன் பாரில்இதற்கான எச்சரிக்கை தரப்படும். நாம் விரும்பி அதற்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே இவை இறக்கப்படும்.
10. மேலும் பலவகையான செக்யூரிட்டி சமாச்சாரங்கள் புதிய பதிப்பில் கிடைக்கின்றன. இவற்றை Tools / Internet Options  சென்று பின் கிடைக்கும் டேப்களில் Security  டேப் கிளிக் செய்து ஏற்படுத்தலாம்.

No comments:

Post a Comment