Thursday, 5 April 2012

ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்--இமெயில் அனுப்பிவரின் ஐ.பி.முகவரி--பயர் பாக்ஸ் பிரவுசர் டிப்ஸ்--யாங்க்கி கிளிப்பர் விரிந்து அகன்ற கிளிப்போர்டு--யு-ட்யூப் மூவிகளை பிரசன்டேஷன் ஸ்லைடில் காட்ட


ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்


ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்

மோடம் சாதனம் தற்போது கீ போர்டில் இணைக்கப்பட்டே வந்தாலும் இன்னும் பலர் வெளியில் வைத்து இணைத்துப் பயன்படுத்தும் மோடத்தையே விரும்பி வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதனால் புதிதாய்க் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அறிமுகமாகிறவர்கள் இவை இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்று அறிய பல கடிதங்களை அனுப்பி உள்ளனர். இவற்றின் அடிப்படை வேறுபாடுகளையும் செயல்படும் முறையையும் இங்கு காணலாம். ஹார்ட்வேர் மோடம் கீ போர்டு, மவுஸ் போன்று கம்ப்யூட்டருடன் சீரியல் போர்ட் மூலம் மற்றும் டெலிபோன் கேபிள் மூலம் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு துணை சாதனம்.
ஒரு மோடம் பயன்படுவதற்குத் தேவையான அனைத்தும் இதன் உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமானவை கண்ட்ரோலர் (Controller) மற்றும் டேட்டா பம்ப் (Data pump)  கம்ப்யூட்டர் மற்றும் மோடம் இணைந்த செயல்பாட்டில் ஏதேனும் பிழை ஏற்பட்டால் மோடத்தினுள் உள்ள கண்ட்ரோலர் சரி செய்து தொடர்ந்த இயக்கத்தினைத் தரும்.
டேட்டாக்களைச் சுருக்கி அனுப்புதல் மற்றும் டேட்டா தொடர்ந்து பரிமாறுதல் ஆகிய பணிகளையும் முக்கியமாகக் கவனித்துக் கொள்ளும். டேட்டா பம்ப் என்பது கம்ப்யூட்டர் மற்றும் டெலிபோன் இடையே வரும் சிக்னல்களை மாற்றித்தரும் முக்கிய பணியைக் கையாள்கிறது.  டெலிபோன் வழி வரும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்களாகும். இவற்றைக் கம்ப்யூட்டர் கையாளுவதற்கு டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றப்பட வேண்டும். அது போல கம்ப்யூட்டரிலிருந்து வரும் டிஜிட்டல் சிக்னல்களை டெலிபோன் வழி அனுப்ப அனலாக் சிக்னல்களாக மாற்றப்பட வேண்டும். இதுதான் ஒரு மோடத்தின் முதன்மையான செயல். இதனை இந்த டேட்டா பம்ப் என்னும் பிரிவு கவனித்துக் கொள்கிறது. இதற்கு இதில் தரப்பட்டுள்ள டி.எஸ்.பி. எனப் பொதுவாக அழைக்கப்படும் (digital sinal processor (DSP))  டிஜிட்டல் சிக்னல் பிராசசர் உதவுகிறது. மேலே சொல்லப்பட்ட அனைத்தும் ஒருங்கிணைந்து கம்ப்யூட்டரை டெலிபோன் வழியே இன்டர்நெட்டில் இணைக்கும் பணியை மேற்கொள்கின்றன.  சாப்ட்வேர் மோடத்தினைப் பொதுவாக விண் மோடம் (Win Modem)   என்றும் அழைக்கின்றனர். மேலே சொன்ன ஒரு மோடத்தின் அனைத்து செயல்பாடுகளையும் இவை மேற்கொள்வதில்லை. இவை செயல்பட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள டிரைவர் பைல் தேவையாய் உள்ளது.
சில விண் மோடங்களில் கண்ட்ரோலர் மற்றும் டேட்டா பம்ப் தரப்பட்டுள்ளது. ஆனால் இவையும் கம்ப்யூட்டரின் சி.பி.யு. வால் தான் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. மொத்தமாக அனைத்து பணியையும் கம்ப்யூட்டரின் சிபியுக்குத் தள்ளிவிட்டு இடையே பாலமாகச் செயல்படும் சாப்ட்வேர் மோடம் ஒரு வகை. இரண்டாவது வகையில் ஒரு டிஜிட்டல் சிக்னல் பிராசசர் இருக்கும். இது ஓரளவிற்கு சிபியுவிற்குச் செல்லும் சிக்னல்களைக் கையாண்டு சிபியுவிற்கு பணிச் சுமையைப் பகிர்ந்து கொடுக்கும்.
4.A . ஒரே ரிமோட் ஓய்ந்தது பிரச்னை
டிவிடி பிளேயர், டிவி, ஹோம் தியேட்டருக்கான ஆம்பிளிபயர் என ஒவ்வொன்றுக்குமான ரிமோட் சாதனங்களை எடுக்கக் கூடிய இடத்தில் வைத்துத் தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்துவது ஒரு பெரிய பிரச்னையாக இன்றைய வீடுகளில் எதிர்கொள்ளப்படுகிறது. அப்படியே கிடைத்தாலும் ஒன்றோ டொன்று இணைந்து செயலாற்றி நாம் விரும்பும் வகையில் படம் மற்றும் இசையின் வெளிப்பாடு இருக்க வேண்டும்.  மேலும் இவற்றிற்கான பேட்டரிகளைச் சரியான காலத்தில் மாற்றி செயல்படுத்துவது இவற்றைக் காட்டிலும் பெரிய பிரச்னையாகும். இதற்கெல்லாம் தீர்வாக கெமிலியான் என்ற பெயரில் (ஆங்கிலத்தில் பச்சோந்திக்கான சொல் – சரியான பெயர் தான்) ஒரு ரிமோட் சாதனம் உருவாக்கப்பட் டுள்ளது. வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் பன்னாட்டளவில் இயங்கிக் கொண்டிருக்கும் யுனிவர்சல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்த ரிமோட் சாதனத்தை வடிவமைத்துள்ளது. இதனை 5 முதல் 8 சாதனங்களுக்கு செட் செய்து பயன்படுத்தலாம்.
இதில் தரப்பட்டுள்ள டிஸ்பிளே எந்த சாதனத்திற்கு ரிமோட் பயன்படுத்தப் படுகிறதோ அந்த கீகளை மட்டும் அடையாளம் காட்டுகிறது. மார்க்கட்டில் விற்பனையாகும் பல்வேறு டிவிக்கள், வி.சி.ஆர், டிவிடி பிளேயர், சாட்டலைட் சாதனங்கள், ஆடியோ மற்றும் சிடி சாதனங்களுடன் பயன்படுத்தும் வகையில் இந்த ரிமோட் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த கெமிலியான் ரிமோட்டை இன்ஸ் டால் செய்வது சற்று கவனத்துடன் செய்ய வேண்டிய செயலாக த் தோன்றும். பொறுமையாக இவற்றை டவுண்லோட் செய்து பதித்துவிட்டால் பின் எந்த காலத்திற்கும் பிரச்னை இன்றி செயல்படலாம். இந்த ரிமோட் சாதனத்தினுள் மோடம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதால் டவுண்லோடிங் செய்வது சுலபமாகிறது. இந்த ரிமோட்டின் விலை ரூ.5,000 முதல் ரூ. 6,000 வரை விலையிடப்பட்டுள்ளது.

இமெயில் அனுப்பிவரின் ஐ.பி.முகவரி


இமெயில் அனுப்பிவரின் ஐ.பி.முகவரி

நமக்கு வந்த இமெயில்களை நாம் திறக்கையில் அதனை அனுப்பியவரின் யூசர் நேம், சப்ஜெக்ட், அதன் காப்பியைப் பெறுபவர் போன்ற தகவல்கள் நிச்சயம் இருக்கும். ஒரு சில இமெயில்களில் தான் அதனை அனுப்பியவரின் ஐ.பி. முகவரி, எந்த நெட்வொர்க்கிலிருந்து அனுப்பப்பட்டது, அதற்குப் பதில் இமெயில் அனுப்பினால் எந்த முகவரிக்கு போய்ச் சேரும்; அல்லது பதில் அனுப்பினால் அது பெறப்படாத மெயில் வகையா என்ற அனைத்துத் தகவல்களும் இருக்கும். சில நேரங்களில் யூசர் நேம் வித்தியாசமாக இருக்கும். அதனால் யார் அனுப்பியது என்றே தெரியாது.
அப்போது நாம் அனுப்பியவரின் ஐ.பி. முகவரியைக் கண்டறிந்தால் அதனை அனுப்பியவரின் முகவரியை நெருங்க முடியும். எப்படி இமெயில் அனுப்பியவரின் ஐ.பி. முகவரியைக் கண்டறிவது என்று பார்க்கலாம். யாஹூ, ஜிமெயில் மற்றும் ஹாட்மெயில்களில் இதற்கான செயல்முறைகளைப் பார்க்கலாம்
ஹாட்மெயில்: முதலில் உங்கள் ஹாட்மெயில் அக்கவுண்ட்டில் உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லவும். மேலாக உள்ள Mail   டேப்பில் கிளிக் செய்திடவும். ஐ.பி.முகவரி பார்க்க வேண்டிய மெயிலைத் திறக்கவும். ஹெடர்ஸ் என்று மேலே சொல்லப்பட்ட அனைத்து தகவல்களும் தெரிகிறதா என்று பார்க்கவும்.
தெரியவில்லை என்றால் ஹெடர்கள் காட்டப்படாமல் செட் செய்யப்பட்டு உங்களுக்கு மெயில் அனுப்பப்பட்டது என்று பொருள். இப்போது ஹெடர்களைக் கண்டறிய வேண்டும்.
மேலே வலது மூலையில் உள்ள  Options  என்பதில் கிளிக் செய்திடவும். Mail Options   பக்கத்தில் Mail Display Settings  என்பதில் கிளிக் செய்திடவும்.   Message  ஹெடர்ஸ் என்பதில் Advanced option  செக் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திடவும்.
ஓகே கிளிக் செய்திடுக. மீண்டும் மெயில் சென்று சம்பந்தப்பட்ட மெயிலைத் திறக்கவும். அங்கு XOriginatingIP  என்று தொடங்கி அதனுடன் ஒரு ஐ.பி. முகவரி இருக்கும். அதுதான் அனுப்பியவரின் ஐ.பி. முகவரி.

No comments:

Post a Comment