Tuesday, 3 April 2012

கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஐ-குறள்--பேஜ் செட் ஆப் எக்ஸ்பிரஸ்--இணையத்தில் உதவிடும் புக்மார்க்லெட்ஸ்--டிபிராக்செய்திடும் Drfraggler இலவச புரோகிராம்கள்--பதற்றத்தில் பைல்களை அழித்தால்….--அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர


கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஐ-குறள்


கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஐ-குறள்

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கிறீர்கள். இன்டர்நெட்டில் இருந்தவாறே ஒரு வேர்ட் ப்ராசசர் வேண்டும். அல்லது ஒரு கிராபிக்ஸ் எடிட்டர் வேண்டும் என்றால் அப்போது ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பை பதிந்து கொண்டு பயன்படுத்த முடியாது. இந்த சிரமத்திலிருந்து பயனாளர்களை விடுவிக்க இந்த வசதியை நேரடியாக நெட்டிலேயே தருவதுதான் கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud computing).அவ்வகையில் தமிழில் டெக்ஸ்ட் டைப் செய்திட ஒரு டெக்ஸ்ட் ப்ராசசரை குறள் சாப்ட் (Kural Soft KSoft) நிறுவனம் தந்துள்ளது. கம்ப்யூட்டர், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் மற்றும் இமெயில் புரோகிராம்களில் தமிழில் உள்ளீடு செய்திட பல ஆண்டுகளாக உலகளாவிய அளவில் பிரபலமானது குறள் தமிழ்ச் செயலி. இதனை வடிவமைத்து வழங்கிய குறள் சாப்ட் நிறுவனம், தற்போது ஐ–குறள் சாதனத்தை இலவசமாக வழங்கியுள்ளது.
இது இணையத்தில் இயங்கும் வேர்ட் ப்ராசசர். தற்போதைக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் இதன் மூலம் இணையத்திலேயே டைப் செய்திட முடியும். ஆங்கில ஒலி வழி (Phonetic)தமிழ் நெட் 99 மற்றும் தமிழ் டைப்ரைட்டர் கீ போர்டுகளை அவரவர் வசதிக்கென பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், சபாரி அல்லது கூகுள் குரோம் என எந்த பிரவுசரிலும் இது சிறப்பாக இயங்குகிறது.
இணையத்தில் கொடுக்கப்படும் இந்த டெக்ஸ்ட் ப்ராசசர் ஒரு ஏ4 அளவிலான தாள் அளவிற்கு டெக்ஸ்ட் பக்கத்தினை அமைத்துத் தருகிறது. மிக எளிதாக ஆங்கிலம் மற்றும் தமிழ் இடையே மாறிக் கொள்ளலாம். அதே போல கீ போர்டு லே அவுட்களையும் மாற்றிக் கொள்ளலாம். ட்ராப்ட் மோடில் (Draft Mode) சென்றால் வேகமாக டைப் செய்திட முடியும். மவுஸால் கிளிக் செய்து டைப் செய்திட விரும்புவோருக்கு ஆன் ஸ்கிரீன் கீ போர்டு வசதி தரப்பட்டுள்ளது. இந்த ப்ராசசர் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை இயக்கhttp://www.kuralsoft.com/ikural.htm என்ற தளத்திற்குச் செல்லவும்.
அங்கு ஒரு வேர்ட் ப்ராசசரில் உள்ள அனைத்து வசதிகளுடன் பாக்ஸ் கிடைக்கும். இதில் மவுஸ் கர்சரை டெக்ஸ்ட் டைப் அடிக்கும் இடத்தில் வைத்து நேரடியாக இயக்கலாம். ஆங்கிலம் அல்லது தமிழில் டைப் செய்திடலாம். இது சோதனை முயற்சி என்பதால் யூனிகோட் தமிழ் எழுத்துரு பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் டைப் செய்து எடிட் செய்து பின் அதனை கட் அண்ட் பேஸ்ட் மூலம் இமெயில் புரோகிராம்களில் பயன்படுத்தலாம்.
கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud computing)
இதில் கிளவுட் – மேகம் – என்பது இன்டர்நெட்டிற்கு மறுபெயராகப் பயன்படுத்தப்படுகிறது. இன்டர்நெட்டில் இருந்தவாறே கம்ப்யூட்டர் பயன்பாட்டை மேற்கொள்வதற்கு இந்த பெயர் வழங்கப்படுகிறது. பல நிறுவனங்கள் வெவ்வேறு வசதிகளை இந்த அடிப்படையில் தந்து வருகின்றன. பெரும்பாலும் இந்த சேவைகள் இலவசமாக இருந்தாலும் ஒரு சில நிறுவனங்கள் கட்டணம் வாங்கிக் கொண்டு இதனைத் தருகின்றன. ஒரு கம்ப்யூட்டர் கட்டமைப்பினையும் சார்ந்த சேவையையும் இந்த வகையில் நாம் பெறலாம். ஒரு மேகம் பலவற்றை மறைக்கிறது. அதே போல கம்ப்யூட்டர் கட்டமைப்பை எல்லாம் மறைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் வசதி மட்டும் தருவதற்கு இந்த பெயர் தொடர்ந்து பயன்படுகிறது.

No comments:

Post a Comment