விரிப்பின் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோத்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ளவும, இடுப்பிலிருந்து கால்களை நேராக தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு இரண்டு முறை செய்யலாம்.
பலன்: மூளை நரம்பு செல்களின் அழிவைத்தடுக்கும், நுண் ரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும். தலைக்கு தேவையான ரத்த ஓட்டம் அளிக்கும். கண்பார்வை கோளாறு மறையும். பெரும்பான்மையான காது, மூக்கு, தொண்டை, பாதிப்புகள் அகலும். ஞாபகத்திறன் கூடும். பீனியல், பிட்யூட்ரி, தைராய்டுகளின் சுரப்பிகள் இயக்கம் சீர் பெறும்.
குறிப்பு: இந்த ஆசனம் செய்து விட்டு, சாதாரண நிலைக்கு திரும்பும் போது தரையிலிருந்து தலையை மிக நிதானமாக உயர்த்தவும், படபடப்பு, இதயத்தின் ரத்த அழுத்த கோளாறு உள்சளவர்கள், முகம், தலை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனம் செய்யக் கூடாது.
No comments:
Post a Comment