இந்திய இன்டர்நெட் சந்தையில் போட்டி
தொடர்ந்து வளர்ந்து வரும் இன்டர்நெட் பயன்பாட்டில், இந்திய வாடிக்கையாளர்களைப் பிடித்துப் போட முன்னணி நிறுவனங்களிடையே போட்டி தொடங்கி, நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது.
கூகுள் தன்னுடைய சோசியல் நெட்வொர்க் ஆர்குட் தளத்தினை முழுவதுமாகப் புதுப்பித்துள்ளது. யாஹூ மிகப் பெரிய அளவில் முன்னணி ஆங்கில செய்தித்தாளில் முதல் பக்க விளம்பரம் அளித்துள்ளது. இதெல்லாம் எதற்காக? எப்படி இவர்களுக்கு வருமானம் வரும்?
ஒரு இன்டர்நெட் தளத்தின் பெருமை அதில் மேற்கொள்ளப்படும் கிளிக்குகளின் எண்ணிக்கையில் தான் உள்ளது. எவ்வளவுக்கெவ்வளவு ஹிட்களும் கிளிக்குகளும் அதிகரிக்கின்றனவோ, அந்த அளவிற்கு விளம்பரம் அதிகரிக்கும். வருமானம் பெருகும். எனவே வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க இந்த தளங்களில் நாள்தோறும் ஏதேனும் புதுமை வந்து கொண்டே இருக்கிறது.
ஆர்குட் தளத்தில் புதிய வடிவமைப்பு வரக்காரணம், அதன் போட்டியாளரான பேஸ் புக் மாற்றம் பெற்றதாகும். இதை அந்த நிறுவனம் மறுத்தாலும் உண்மை அதுதான்.
புதிய ஆர்குட் தளம் முழுக்க முழுக்க கூகுள் வெப் டூல் கிட் பயன்படுத்தி அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தளத்தில் பதிந்து இதனைப் பயன்படுத்தி வருபவர்கள், மிக எளிதாக ஹோம் பேஜ் மூலமாகவே தங்கள் பைல்களை அப்லோட் செய்திட முடியும் என கூகுள் இந்திய பிரிவு தலைமை அலுவலர் வினய் கோயல் கூறி உள்ளார். தளத்தின் உள்ளாக அமைந்த சேட் ரூம் வழி ஒரே நேரத்தில் பலருடன் அரட்டை அடிக்கும் வசதி உள்ளது. தானாக போட்டோ முகம் அறிந்து உணரும் வசதி. போட்டோ ஆல்பம் பகிர்ந்து கொள்ளும் வழிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. இவற்றால் ஆர்குட் தளம் பலரை ஈர்க்கத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் விளம்பரங்கள் அதிகரிக்கும் என கூகுள் எதிர்பார்க்கிறது. நுகர்வோர் பொருட்களுக்கான விளம்பரங்கள் இப்போது இதில் வரத் தொடங்கி உள்ளன. இந்தியாவில் நுகர்வோர் பொருட்களுக்கு மட்டுமின்றி, பொதுவாகவே விளம்பரங்களைத் தருவதிலும், அவற்றைப் படிப்பதிலும் மக்களுக்கு ஆர்வம் உள்ளது. இதுவே இப்போதைக்கு ஆர்குட் தளத்தினை நஷ்டத்தில் இல்லாமல் இயங்க வைக்கிறது என்று கூகுள் அலுவலர்கள் கூறுகின்றனர். கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் தளத்தினை பத்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். பிரேசில் நாட்டுக்கு அடுத்தபடியாக அதிக நேயர்களை இந்தியாவிலிருந்து ஆர்குட் பெற்றுள்ளது.
இன்டர்நெட் வெப்சைட்டையும் பயன்பாட்டையும் தனி ஒருவனுடையதாக்க முடியும் என மக்களிடையே செய்தியைக் கொண்டு செல்ல இந்த சோஷியல் தளங்கள் முயற்சிக்கின்றன. யாஹூ வின் விளம்பரமும் பெரிய அளவில் இதனைத்தான் சொன்னது. உலக அளவில் இந்த விளம்பரத்திற்கு 10 கோடி டாலர் செலவழிக்கப்பட்டது.
இந்த தளங்களில் இப்போது இன்டர்நெட் வீடியோவினைப் பதிந்து மக்களைக் கவரும் வழிகளும் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக ஆர்குட் இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் 20 கோடி பேர் இன்டர்நெட் பிராட்பேண்ட் பயன்படுத்துவார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே அவர்களை மையமாக வைத்து இந்த தளங்கள் தங்கள் வர்த்தகத்தை வளப்படுத்துகின்றன. ஆனால் வருமானம் என்னவோ மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இன்னும் இருக்கிறது என்று ஒத்துக் கொள்ள வேண்டும். ஆர்குட் மற்றும் பேஸ்புக் ஒரு பயனாளர் வழி ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே ஈட்டுகின்றன. ஆனால் கூகுள் 25 டாலர் ஈட்டுகிறது. இருப்பினும் இந்த சோஷியல் நெட்வொர்க் தளங்கள் தங்கள் முயற்சிகளில் சற்றும் தளராமல் தொடர்ந்து முயன்று வருகின்றன.
எல்லா அப்ளிகேஷனுக்கும் அப்டேட்
விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது, மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும் பேட்ச் பைல்களைக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்வதுதான். அது மட்டுமின்றி இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் மற்றும் பிற அப்ளிகேஷன் புரோகிராம் களும் அவ்வப்போது பேட்ச் பைல் மூலம் அப்டேட் செய்திட வேண்டியுள்ளது. அப்படியானால் நாம் எத்தனை பைல்களுக்கான அப்டேட் பைல்களைக் கண்காணிக்க முடியும். எம்பி3, வீடியோ, தொலைபேசி, டிவி ட்யூனர், கேமரா மற்றும் மொபைல் இணைப்பிற்கான அப்ளிகேஷன் கள் என அனைத்தையும் நாம் கண்காணித்து அப்டேட் செய்வது எளிதா என்ன? சில வேளைகளில் இது போன்ற புரோகிராம்களுக்கு அப்டேட் இருப்பதாகச் சொல்லி, நம்மை ஒரு குறிப்பிட்ட தளத்திற்கு அழைத்துச் சென்று வைரஸ்களை நம் கம்ப்யூட்டருக்குள் தள்ளிவிடும் போலி புரோகிராம்களும் நிறைய உண்டு. இதற்கெல்லாம் விடிவாக நமக்கு ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் Secunia PSI. (PSI Personal Software Inspector) இதனை என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த புரோகிராம் நம் கம்ப்யூட்டரில் உள்ள பழைய புரோகிராம்களுக்கு அவற்றின் நிறுவனங்கள் அப்டேட் தந்தாலும் தரவிட்டாலும், செகுனியா அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. ஸ்கேன் செய்த பின் பாதுகாப்பற்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் என ஒரு பட்டியலை நமக்கு அளிக்கிறது. எந்த புரோகிராம்களுக்கெல்லாம் அப்டேட்டட் பைல்கள் உள்ளனவோ அவற்றின் லிங்க்குகளைப் பட்டியலிட்டு தருகிறது. இந்த லிங்க்குகளில் கிளிக் செய்து நம் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களை அப்டேட் செய்து கொள்ளலாம். இவற்றுடன் எந்த புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்களை அவற்றைத் தயாரித்து அளித்த நிறுவனங்கள் தரவில்லையோ அவற்றையும் சுட்டிக் காட்டுகிறது. செகுனியா சிஸ்டம் தொடங்கும்போதே இயங்கி, கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து புரோகிராம்களையும் ஸ்கேன் செய்கிறது. புதிய புரோகிராம்கள் இருந்தால் அவற்றிற்கான அப்டேட் பைல்களை ஆய்வு செய்கிறது. புரோகிராம்களில் ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் கோட் இருந்தால் அதனையும் சுட்டிக் காட்டுகிறது. செகுனியா பி.எஸ்.ஐ. கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் அல்லது பயர்வால் புரோகிராம்களுக்குப் பதிலியாகக் கொள்ள முடியாது. ஆனால் இவை மேற்கொள்ளாத ஒரு முக்கிய வேலையை மேற்கொண்டு நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது. இந்த அருமையான பாதுகாப்பு புரோகிராமினைhttp://secunia.com/vulnerability_scanning/personal/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். சென்ற ஆகஸ்ட் மாதம் இதன் அண்மைக் காலத்திய பதிப்பு வெளியானது. பதிப்பு எண் 1.5.0.1. இதன் பைல் சைஸ் 716,320 bytes ஆகும். 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நாளில் சராசரியாக இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3,228.
இந்த வார டவுண்லோட் – மெடிகல் ஸ்பெல் செக்கர்
மருத்துவ உலகில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கான ஸ்பெல்லிங், பின்பற்றவும் அறிந்து கொள்ளவும் மிகக் கஷ்டமான ஒன்றாகும். அந்தத் துறையில் உள்ளவர்களே தடுமாறும் அளவிற்கு இருக்கும். ஏனென்றால் மருத்துவ கலைச் சொற்கள் அனைத்தும் ஆங்கிலவழி வந்தவை அல்ல. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் புரோகிராம்களில் உள்ள ஸ்பெல் செக்கர்கள் என்னும் எழுத்து திருத்தும் டூல், மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து சொற்களின் எழுத்துப் பிழைகளைத் திருத்த இயலாது. ஏனென்றால் இதில் தரப்பட்டுள்ள டிக்ஷனரிகள், சாதாரண அன்றாட ஆங்கிலப் பயன்பாட்டில் உள்ள சொற்களை மட்டுமே கொண்டவையாகும். அப்படியானால் மருத்துவ கலைச் சொற்களை எழுத்துப் பிழையின்றி எப்படி அறிந்து கொள்வது? அதற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது மெடிகல் ஸ்பெல் செக்கர் (Free Medical Spell Checker). இந்த புரோகிராமினை http://download.cnet.com/ FreeMedicalSpellChecker/30002079_410154940.html?tag=lst01 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக இறக்கிப் பந்து கொள்ளலாம். இது சாதாரண சிறிய அப்ளிகேஷனாகப் பதிந்து அமர்ந்து கொள்கிறது. இந்த சிறிய விண்டோவில் நீங்கள் எழுத்துப் பிழையின்றி காண விரும்பும் மெடிகல் சொல்லை டைப் செய்திடத் தொடங்கலாம். ஒவ்வொரு கீ அழுத்தத்திற்குமாக அடுத்த அடுத்த எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு முழு சொல் கிடைக்கிறது. இதன் மூலம் நமக்கு மருத்துவச் சொற்கள் அடங்கிய நல்லதொரு டிக்ஷனரி கிடைக்கிறது. ஆனால் சொற்களுக்குப் பொருள் கிடைப்பதில்லை.
இந்த மெடிகல் ஸ்பெல் செக்கர் இலவசமாகக் கிடைப்பதால் வேர்ட் போன்ற புரோகிராம்களுடன் இணைந்து இயங்குவதில்லை. தனியே இயக்கித்தான் எழுத்துப் பிழைகளை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இதே போன்று உள்ள மற்ற மெடிகல் ஸ்பெல் செக்கர்கள் வேர்டில் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. ஆனால் அவற்றைக் கட்டணம் செலுத்திப் பெறவேண்டும். அவை கிடைக்கும் தள முகவரி:http://www.notypos. com/downloads.htm இந்த தளத்தில் இலவசமாக சில நாட்களுக்கு சோதனை முறையில் பயன்படுத்திப் பார்க்கவும் தொகுப்புகள் கிடைக்கின்றன.
இந்த மெடிகல் ஸ்பெல் செக்கர் இலவசமாகக் கிடைப்பதால் வேர்ட் போன்ற புரோகிராம்களுடன் இணைந்து இயங்குவதில்லை. தனியே இயக்கித்தான் எழுத்துப் பிழைகளை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இதே போன்று உள்ள மற்ற மெடிகல் ஸ்பெல் செக்கர்கள் வேர்டில் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. ஆனால் அவற்றைக் கட்டணம் செலுத்திப் பெறவேண்டும். அவை கிடைக்கும் தள முகவரி:http://www.notypos. com/downloads.htm இந்த தளத்தில் இலவசமாக சில நாட்களுக்கு சோதனை முறையில் பயன்படுத்திப் பார்க்கவும் தொகுப்புகள் கிடைக்கின்றன.
ஆசிய பசிபிக் நாடுகள் தேடலில் முதல் இடம்
இன்டர்நெட் தேடல்கள் இன்று அறிவியல் தாகத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. அவ்வகையில் சென்ற செப்டம்பர் மாதம் இன்டர்நெட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் எண்ணிக்கையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகள் முன்னணியில் இருந்தன.
ஏறத்தாழ 3 ஆயிரத்து 60 கோடி தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய ஆண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்டவற்றைக் காட்டிலும் 33% கூடுதலாகும். சராசரியாக ஒரு பயனாளர் இந்த மாதத்தில் மேற்கொண்ட தேடல்கள் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தேடல்களில் 44% கூகுள் சர்ச் இஞ்சின் வழியாக மேற்கொள்ளப்பட்டன. இதன் வழியாக 1,700 கோடி தேடல்கள் நடந்தன. இது மொத்தத்தில் 44.1 % ஆகும். அடுத்ததாக Baidu.com என்ற தேடுதல் (21.3%)தளம் இடம் பெற்றுள்ளது. மூன்றா வதாக யாஹூ 13.8% பங்குடன் 530 கோடி தேடல் களைக் கொண்டி ருந்தது. ஆனால் ஹாங்காங் மற்றும் தைவானில் அதிக தேடல்கள் யாஹூ தளம் வழியாகவே மேற்கொள்ளப்பட்டன.
மேலே தரப்பட்ட தேடல் தகவல்கள் அனைத்தும் 15 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொண்ட தேடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்தவையாகும். பொது இன்டர்நெட் மையங்கள் மற்றும் பிடிஏ சாதனங்கள் வழி மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.
இ – மெயில்’ ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!
அகண்ட அலைவரிசை வழங்கும் பிரிட்டனில் உள்ள “டாக்டாக்’ நிறுவனம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது.அந்த ஆய்வில் கூறப் பட்டுள்ளதாவது:இப்போது பிரிட்டனில் 15-24 வயதினர் 86 சதவீதமும், 65 வயதுக்கு மேற் பட்டோர் 98 சதவீதமும், 45-64 வயதுக்குட் பட்டோர் 96 சதவீதமும் இ-மெயிலைப் பயன்படுத்துகின்றனர். இ-மெயில் கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக பரிணாமம் அடைந்து இன்றைய நிலைக்கு வந்துள்ளது.
இருப்பினும் குறைந்த வேகம், அதிக வசதிகள் இன்மை, எளிமை மற் றும் புதுமையின்மை இவற்றால் இளைய தலைமுறை இ-மெயிலை விட்டு விலக ஆரம்பித்துவிட்டனர்.அதற்குப் பதிலாக ட்விட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் என்ற சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த வலைத்தளங் களில் ஒரே செய்தியை தங்களது நண்பர்கள் பலருக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடிகிறது. அதிக நேரம், செய்தியை தட்டச்சு செய்வது, பலருக்கு அடுத்தடுத்து அனுப்புவது போன்ற தொந்தரவுகள் கிடையாது.இ-மெயிலை வயதானோர்தான் இப்போது அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அது மூப்படைந்துவிட்டது எனலாம். இப்படியே போனால் இன்னும் 10 ஆண்டுகளில் இ-மெயில் காணாமல் போய்விடும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
லண்டன் : அகண்ட அலைவரிசை வழங்கும் பிரிட்டனில் உள்ள “டாக்டாக்’ நிறுவனம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது.அந்த ஆய்வில் கூறப் பட்டுள்ளதாவது:இப்போது பிரிட்டனில் 15-24 வயதினர் 86 சதவீதமும், 65 வயதுக்கு மேற் பட்டோர் 98 சதவீதமும், 45-64 வயதுக்குட் பட்டோர் 96 சதவீதமும் இ-மெயிலைப் பயன்படுத்துகின்றனர். இ-மெயில் கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக பரிணாமம் அடைந்து இன்றைய நிலைக்கு வந்துள்ளது.
இருப்பினும் குறைந்த வேகம், அதிக வசதிகள் இன்மை, எளிமை மற் றும் புதுமையின்மை இவற்றால் இளைய தலைமுறை இ-மெயிலை விட்டு விலக ஆரம்பித்துவிட்டனர்.அதற்குப் பதிலாக ட்விட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் என்ற சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த வலைத்தளங் களில் ஒரே செய்தியை தங்களது நண்பர்கள் பலருக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடிகிறது. அதிக நேரம், செய்தியை தட்டச்சு செய்வது, பலருக்கு அடுத்தடுத்து அனுப்புவது போன்ற தொந்தரவுகள் கிடையாது.இ-மெயிலை வயதானோர்தான் இப்போது அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அது மூப்படைந்துவிட்டது எனலாம். இப்படியே போனால் இன்னும் 10 ஆண்டுகளில் இ-மெயில் காணாமல் போய்விடும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கூகுள் பிரைவசி
நாம் கூகுள் தரும் எந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கினாலும், நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கூகுள் வைத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிடும் என்று நாம் அறிவோம். ஜிமெயில், யு–ட்யூப், கூகுள் செக் அவுட், கூகுள் டாக்ஸ், கூகுள் காலண்டர், ஐகூகுள், பிகாசா வெப் ஆல்பம்ஸ், கூகுள் டாக் என எத்தனையோ இணைய வசதிகளைக் கூகுள் நமக்குத் தருகிறது. அப்போது நம்மைப் பற்றிய தகவல்களையும் பெறுகிறது. அது மட்டுமின்றி நாம் இவற்றைப் பயன்படுத்தும்போது, அது பற்றிய புள்ளி விபரங்களையும் தன்னிடம் வைத்துக் கொள்கிறது.
ஒரு சிலர் கூகுள் நம்மைப் பற்றிய அளவுக்கதிகமான தகவல்களைப் பெற்று வைத்துக் கொள்கிறது என்று கருதுகின்றனர். ஒரு சிலர் இது நம் தனி உரிமையைக்குள் தலையை விடும் செயல் என்றும் எண்ணுகின்றனர்.
இதனை எண்ணிப் பார்த்தோ என்னவோ, கூகுள் சென்ற மாதம் தன்னிடத்தில் தன் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் ஓர் ஏற்பாட்டினைச் செய்து தந்துள்ளது. தான் வைத்துள்ள தகவல்களை பயனாளர்கள் எடிட் செய்திடவும் வழி தருகிறது. இத்தகைய தகவல்கள் தங்கவைத்திடும் இடத்திற்கு கூகுள் பிரைவசி டேஷ்போர்டு எனப் பெயர் கொடுத்துள்ளது. இதில் நுழைந்து நாம் கூகுள் வைத்துக் கொள்ளக்கூடாத தகவல்களை எடிட் செய்திடலாம்.
http://www.google.com/dashboard என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றவுடன் நம்முடைய கூகுள் இமெயில் முகவரி கொடுக்கப்பட்டு பாஸ்வேர்ட் கேட்கப்படுகிறது. பின் நம்மைப் பற்றிய தகவல்கள் கூகுளின் பல்வேறு சாதனங்கள் வாரியாகத் தரப்படுகின்றன. நம் மின்னஞ்சல் கடிதங்கள் எண்ணிக்கை, தொடர்பு கொள்ளும் முகவரிகள் எண்ணிக்கை, படங்கள், காலண்டர், வெப் ஹிஸ்டரி என அனைத்தும் பகுதி பகுதியாகத் தரப்படுகின்றன. ஆனால் அனைத்துமே ஒருவர் ஏற்கனவே தான் அறிந்து தந்த தகவல்களாகத்தான் இருக்கின்றன. இதில் என்ன நல்ல செய்தி என்றால், மற்ற இணைய சேவைத் தளங்கள் போல் அல்லாமல், கூகுள் இவற்றையும் எடிட் செய்திட நமக்கு உரிமை தருகிறது. எந்த தகவலையாவது கூகுள் கொண்டிருக்கக்கூடாது என நாம் எண்ணினால், அதனை நீக்கவும் இடம் உள்ளது.
No comments:
Post a Comment