தக்காளி பருப்பு வகையுடன் நீங்கள் மற்ற காய்கறிகளையும் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்து, இதைக் பதார்த்தமாகவும் சாப்பாட்டிற்கு வைத்துக்கொள்ளலாம் அல்லது குழம்பாகவும் வைத்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். எப்படி செய்தாலும் இதன் சுவை அதிகமாக இருப்பதால், சாப்பாட்டை அதிகமாகவே சாப்பிடுவீர்கள்.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/4 கிலோ
துவரம்பருப்பு - 1/2 ஆழாக்கு
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - 2
வடகம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
முருங்கைக்காய் - 2
சாம்பார் வெங்காயம் - 8
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
நெய் (அ) வெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* துவரம் பருப்புடன் பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து மசித்து வையுங்கள்.
* தக்காளி, வெங்காயம், முருங்கைக்காயை வெட்டிக் கொள்ளுங்கள்.
* எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடகம், மிளகாய் வத்தல் போட்டுத் தாளித்துக் கொண்டு வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்குங்கள்.
* இதில் அரிந்த இஞ்சி, பூண்டு, முருங்கைக்காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்குங்கள்.
* மசித்து வைத்திருக்கும் பருப்பை இதில் சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.
* பருப்பு கொதித்ததும் நெய் அல்லது வெண்ணெய் விட்டு இறக்குங்கள்.
No comments:
Post a Comment