இது உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தருகிறது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்வார்கள்.பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் உண்டு.
இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். இது பசியையும் தூண்டும். சிறுநீர் பெருகும். மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.
ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது இது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. ஆனால் இது சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை ஆகும்.
இதற்கு வாத குணமும உண்டு. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் மட்டும் போதும்.பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, வறட்சி முதலிய குறைகள் நீங்கி இது நல்ல பசி தூண்டும்.
நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இதை சாப்பிட கூடாது. பரங்கிக்காயின் விதைகளை எடுத்து உலர்த்தி பின் உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும்.
இது நல்ல சுவையுடனும் இருக்கும்.பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்
No comments:
Post a Comment