Tuesday, 3 April 2012

எடுத்துச் செல்லக்கூடிய டிவிடி ரைட்டர்--இணைய வேகம் சரிதானா?--ரெவோ அன் இன்ஸ்டாலர்--தவழ்கிறதா விண்டோஸ்! --கூகள் சீதோஷ்ண நிலை அறிக்கை -- புதிய அடோப் பிளாஷ் பிளேயர் ++யு.எஸ்.பி. டிரைவில் குரோம் ஓ.எஸ்.


எடுத்துச் செல்லக்கூடிய டிவிடி ரைட்டர்


ட்ரான்ஸெண்ட் நிறுவனம் கையில் எடுத்துச் சென்று இணைத்துப் பயன்படுத்தக் கூடிய சிடி/டிவிடி ரைட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். மிகவும் ஸ்லிம்மான இந்த போர்ட்டபிள் டிவிடி ரைட்டர், 8எக்ஸ் வேகத்தில் டிவிடியையும், 24 எக்ஸ் வேகத்தில் சிடியையும் இயக்குகிறது. இதனை இயக்குவதற்கு தனியே மின் இணைப்பு வழங்க வேண்டியதில்லை. யு.எஸ்.பி. சக்தியிலேயே இயங்குகிறது.
இந்த ரைட்டருடன் பைல்களை எழுத, சைபர் லிங்க் பவர் டுகோ என்ற சாப்ட்வேர் வழங்கப்படுகிறது. சைபர்லிங்க் தரும் மீடியா ஷா என்ற சாப்ட்வேர், 30 நாட்களுக்கு சோதனை செய்து பார்க்கத் தரப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி சிடி/டிவிடிக்களில் டேட்டா எழுதுவது மற்றும் படிப்பதை மேற்கொள்வது மட்டுமின்றி, சிறிய சாப்ட்வேர் இன்டர்பேஸ் ஒன்றின் வழியாக இந்த மீடியா பைல்களை அடுக்கி வைக்கலாம். அண்மையில் பிரபலமான டூயல் லேயர் டிவிடி மீடியா வரையில் அனைத்து பார்மட்களிலும் இது இயங்குகிறது. இரண்டு ஆண்டு வாரண்டியுடன் ரூ.4,300க்குக் கிடைக்கிறது.

இணைய வேகம் சரிதானா?


பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் கண்டிஷன்களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம். உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின்http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.
அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.

No comments:

Post a Comment