Thursday, 5 April 2012

சைவ சமயப் பக்தி இலக்கியம்


நாயன்மார்களாகிய மூவர் முதலிகளும்மாணிக்கவாசகரும்ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர்.அதே போன்று வைணவத்தின் பெருமையையும் சிறப்பையும்பாடியவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்தமிழ்நாட்டில்நாயன்மார்கள்ஆழ்வார்கள் காலத்தில் தொடங்கிய பக்திஇயக்கம் இந்தியா முழுவதிலும் பக்தி இலக்கியம் வளர்வதற்குஅடிப்படையாக அமைந்தது.

சம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரர் ஆகிய மூவர் பாடல்களும்தேவாரம்     எனப்     பொதுப்பெயரால் அழைக்கப்பெற்றனதே -தெய்வம்வாரம் - இசைப்பாட்டுதெய்வத்தைப்பாடிய,தெய்வத்திடம் பாடிய இசைப் பாடல்கள் இவைஇம்மூவரும்பாடியவை ஆயிரக் கணக்கான பாடல்கள்நமக்கு இப்போதுகிடைப்பவை : சம்பந்தர் பாடியவை 4158 பாடல்கள்நாவுக்கரசர்பாடியவை 3066 பாடல்கள்சுந்தரர் பாடியவை 1026 பாடல்கள்.இத்தேவாரப் பாடல்கள் அனைத்தும் கி.பிபத்தாம் நூற்றாண்டில்சோழப் பேரரசன் பெருமுயற்சியால் கிடைத்தனஎனவேஅச்சோழ மன்னன் திருமுறை கண்ட சோழன் எனஅழைக்கப்பட்டான்நம்பியாண்டார் நம்பி இவற்றை எல்லாம்தொகுத்து வகைப்படுத்தினார்.

இதே போன்று ஆழ்வார்களில் பேயாழ்வார்பூதத்தாழ்வார்,பொய்கையாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் என்றுஅழைக்கப்பட்டனர்அடுத்து வந்த ஒன்பதின்மரையும்சேர்த்துஆழ்வார்கள் பன்னிருவர் எனப்பட்டனர்அவர்கள் பாடியபாடல்கள்     அனைத்தும் பாசுரங்கள் எனப்பட்டன.அவற்றையெல்லாம் தொகுத்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம்என்றழைத்தனர்நாதமுனிகள் என்பவர் இதனைத் தொகுத்தவர்ஆவார்.

No comments:

Post a Comment