Monday, 2 April 2012

பயர்பாக்ஸ் பிரவுசருக்கான புதிய பயனுள்ள ஆட் ஆன் தொகுப்பு,, 370 பாஸ்வேர்டுகளுக்கு ட்விட்டர் தடை ,,சிஸ்டத்தைச் சரிப்படுத்த எம்.எஸ்.கான்பிக் ,,டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்,,வீடியோ கட்டர்


பயர்பாக்ஸ் பிரவுசருக்கான புதிய பயனுள்ள ஆட் ஆன் தொகுப்பு


இப்போது அறிமுகமாகிப் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசர்கள் அனைத்திலும் டேப் பயன்பாடு தான் அடிப்படையாக உள்ளது. டேப் ஒவ்வொன்றிலும் ஒரு தளம் காணப்படுவதும், அதனைத் தேவைப்படுகையில் கிளிக் செய்து பயன்படுத்துவதும் நம் வாடிக்கையாகிவிட்டது. ஆனால் எத்தனை டேப்கள் திறக்கப்படுகின்றனவோ, அந்த அளவிற்கு ராம் மெமரி இடம் எடுக்கப்பட்டு காலியாகும். அண்மையில் பார்த்த டூ மெனி டேப்ஸ் (TooManyTabs) என்னும் ஒரு ஆட் ஆன் தொகுப்பு இந்த பிரச்னைக்கும் வழி காட்டுகிறது. தொடர்ந்து பயனபடுத்தாத, ஆனால் தேவைப்படும் டேப்களை, காத்திருக்கும் இடம் ஒன்றை உருவாக்கி அதில் போட்டு வைக்கிறது இந்த புரோகிராம். அவை நம் கண்ணில் படும்படி இருக்கும். ஆனால் செயல்படும் நிலையில் இருக்காது. எனவே ராம் மெமரி காலியாகாது. இந்த ஆட் ஆன் தொகுப்பு வழக்கமான டேப்களுக்கு மேலாக ஒரு புதிய டூல்பாரினை உருவாக்குகிறது. காத்திருப்பில் போட்டு வைக்க வேண்டிய டேப்பினை இழுத்து வந்து இந்த டூல்பாரில் விட்டுவிடலாம். அல்லது அப்போது திறக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டேப்பில் இடது பக்கம் உள்ள மேல் நோக்கி உள்ள ஸ்டைலான அம்புக் குறியில் கிளிக் செய்திடலாம். அப்படி கிளிக் செய்தால் அந்த டேப் இந்த டூல்பாருக்கு இழுத்துச் செல்லப்பட்டு வைக்கப்படும். இவ்வாறு இழுக்கப்பட்டு இந்த டூல்பாரில் வைக்கும் டேப் சும்மா இருக்கும். ராம் மெமரியில் இடம் பிடிக்காது. அதற்குப் பதிலாக அந்த டேப்பிற்கான முகவரி ஒரு புதிய புக்மார்க் போல்டரில் அமைக்கப்படும். இதன் மீது கிளிக் செய்தால் அந்த டேப்பிற்கான தளம் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இது போல ஆறு வரிசைகளில் இந்த டேப்களைக் கொண்டு சென்று வைக்கலாம். இந்த ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் தளத்தில் இது குறித்த சிறிய வீடியோ பைல் ஒன்றும் உள்ளது. இதனைக் கிளிக் செய்தால், இந்த ஆட் ஆன் தொகுப்பின் முழு பயன்பாட்டினையும் அறிந்து கொள்ளலாம். இது இலவசம். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: https://addons.mozilla. org/enUS/firefox/addon/9429

No comments:

Post a Comment