Sunday, 15 January 2012

ஆங்கில பாடப் பயிற்சி 3


ஆங்கில பாடப் பயிற்சி 3 (Grammar Patterns 3)

நாம் ஏற்கெனவே கற்ற Grammar Patterns -1, Grammar Patterns -2 போன்றே, இந்த Grammar Petterns -3 லும் ஒரு வாக்கியத்தை 73 ன்று விதமாக மாற்றி பயிற்சி செய்யப் போகின்றோம்.

ஆனால் Grammar Patterns -1 றைப் போன்றல்லாமல் Grammar Patterns -2 இல் சில இலக்கங்களின் போது ஏற்பட்டிருந்த இலக்கண மாற்றங்களை அவதானித்திருப்பீர்கள். அவ்வாறே இன்றைய "Grammar Patterns 3" லும் சில இலக்கங்களின் போது ஏற்படும் இலக்கண மாற்றங்களை அவதானித்துக் கொள்ளுங்கள். இவற்றை சரியாக விளங்கிக்கொண்டு கற்பீர்களானால் ஆங்கில இலக்கணம் கற்பது மிகவும் இலகுவானதாக இருக்கும்.

Grammar Patterns -1 இல் I "First Person Singular" உடன் "am" இணைந்து வந்திருந்தது.

Grammar Patterns -2 இல் He, She, It " Third Person Singular" உடன் "is" இணைந்து வந்திருந்தது.

இன்று இந்த Grammar Patterns -3 இல் "You" எனும் "Second Person Singular" உடனும், "We, They, You எனும் "Plural" பன்மையுடனும், "are" இணைந்து வருகின்றது.

அதாவது "You - நீ/உனக்கு" எனும் ஒருமையுடனும், "We - நாம்/ நாங்கள்/ எமக்கு/ எங்களுக்கு, They - அவர்கள் /அவைகள் எனும் பன்மையுடனும் "are" எனும் நிகழ்காலத் துணைவினை சொல் இணைந்து வரும்.

இவ்வாறு "Grammar Patterns 3" இல் இரண்டாவது வாக்கியமான "We are going to school" என்பதில் ஏற்படும் "are" எனும் சொல்லின் மாற்றத்தை தொடர்ந்து 2, 8, 9, 10, 13, 14, 16, 18, 20, 22, 56, போன்ற இலக்கங்களின் போதும் இலக்கண மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றை அவதானித்து பயிற்சிச் செய்யுங்கள்.

இன்றையப் பாடத்தில் "go to school" எனும் வார்த்தையை உதாரணமாக எடுத்து பயிற்சி செய்வோம்.

கீழே சொடுக்கி ஒலிவடிவிலும் பயிற்சி செய்யலாம்.


1. We go to school.
நாங்கள் போகின்றோம் பாடசாலைக்கு.

2. We are going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோம் பாடசாலைக்கு.

3. We went to school.
நாங்கள் போனோம் பாடசாலைக்கு.

4. We didn’t go to school.
நாங்கள் போகவில்லை பாடசாலைக்கு.

5. We will go to school.
நாங்கள் போவோம் பாடசாலைக்கு.

6. We won’t go to school.
நாங்கள் போகமாட்டோம் பாடசாலைக்கு.

7. Usually we don’t go to school.
சாதாரனமாக நாங்கள் போகின்றோமில்லை பாடசாலைக்கு.

8. We are not going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோமில்லை பாடசாலைக்கு.

9. We were going to school.
நாங்கள் போய்க்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு

10. We weren’t going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு.

11. We will be going to school.
நாங்கள் போய்க்கொண்டிருப்போம் பாடசாலைக்கு.

12. We won’t be going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்க மாட்டோம் பாடசாலைக்கு.

13. We are going to go to school.
நாங்கள் போகப்போகின்றோம் பாடசாலைக்கு.

14. We were going to go to school.
நாங்கள் போகப்போனோம் பாடசாலைக்கு.

15. We can go to school.
16. We are able to go to school.
எங்களுக்கு போக முடியும் பாடசாலைக்கு.

17. We can’t go to school
18. We are unable to go to school.
எங்களுக்கு போகமுடியாது பாடசாலைக்கு.

19. We could go to school.
20. We were able to go to school.
எங்களுக்கு போக முடிந்தது பாடசாலைக்கு.

21. We couldn’t go to school.
22. We were unable to go to school.
எங்களுக்கு போக முடியவில்லை பாடசாலைக்கு.

23. We will be able to go to school.
எங்களுக்கு போக முடியுமாக இருக்கும் பாடசாலைக்கு.

24. We will be unable to go to school
எங்களுக்கு போக முடியாமலிருக்கும் பாடசாலைக்கு.

25. We may be able to go to school.
எங்களுக்கு போக முடியுமாக இருக்கலாம் பாடசாலைக்கு.

26. We should be able to go to school.
எங்களுக்கு போக முடியுமாகவே இருக்கும் பாடசாலைக்கு.

27. We have been able to go to school
எங்களுக்கு சற்று முன்பிருந்து /கிட்டடியிலிருந்து போகமுடியுமாக இருக்கின்றது பாடசாலைக்கு.

28. We had been able to go to school.
எங்களுக்கு அன்றிலிருந்து / அக்காலத்திலிருந்து போக முடியுமாக இருந்தது பாடசாலைக்கு.

29. We may go to school.
30. We might go to school.
31. We may be going to school
நாங்கள் போகலாம் பாடசாலைக்கு.

32. We must go to school.
நாங்கள் போக வேண்டும் பாடசாலைக்கு. (அழுத்தம்)

33. We must not go to school.
நாங்கள் போக வேண்டியதில்லை பாடசாலைக்கு.
நாங்கள் போகக்கூடாது பாடசாலைக்கு. (அழுத்தம்)

34. We should go to school.
நாங்கள் போகவே வேண்டும் பாடசாலைக்கு. (மிக அழுத்தம்)

35. We shouldn’t go to school.
நாங்கள் போகவே வேண்டியதில்லை பாடசாலைக்கு.
நாங்கள் போகவே கூடாது பாடசாலைக்கு (மிக அழுத்தம்)

36. We ought to go to school.
நாங்கள் எப்படியும் போகவே வேண்டும் பாடசாலைக்கு. (மிக மிக அழுத்தம்)

37. We don’t mind going to school.
எங்களுக்கு ஆட்சேபனையில்லை போவதற்கு பாடசாலைக்கு.

38. We have to go to school.
நாங்கள் போக வேண்டும் பாடசாலைக்கு.

39. We don’t have to go to school.
நாங்கள் போகவேண்டியதில்லை பாடசாலைக்கு.

40. We had to go to school.
நாங்கள் / எங்களுக்கு போக வேண்டி ஏற்பட்டது பாடசாலைக்கு.

41. We didn’t have to go to school.
நாங்கள் / எங்களுக்கு போக வேண்டி ஏற்படவில்லை பாடசாலைக்கு.

42. We will have to go to school.
நாங்கள் / எங்களுக்கு போகவேண்டி ஏற்படும் பாடசாலைக்கு.

43. We won’t have to go to school.
நாங்கள் / எங்களுக்கு போகவேண்டி ஏற்படாது பாடசாலைக்கு.

44. We need go to school.
நாங்கள் / எங்களுக்கு அவசியம் போகவேண்டும் பாடசாலைக்கு.

45. We needn’t go to school.
நாங்கள் / எங்களுக்கு அவசியமில்லை போக பாடசாலைக்கு.

46. He seems to be going to school.
அவன் போகின்றான் போல் தெரிகின்றது பாடசாலைக்கு.

47. He doesn’t seem to be going to school.
அவன் போகின்றான் போல் தெரியவில்லை பாடசாலைக்கு.

48. He seemed to be going to school.
அவன் போகின்றான் போல் தெரிந்தது பாடசாலைக்கு.

49. He didn’t seem to be going to school.
அவன் போகின்றான் போல் தெரியவில்லை பாடசாலைக்கு.

50. Going to school is useful.
போவது(தல்) பாடசாலைக்கு பிரயோசனமானது.

51. Useless going to school.
பிரயோசனமில்லை போவது பாடசாலைக்கு.

52. It is better to go to school.
மிக நல்லது போவது பாடசாலைக்கு.

53. We had better go to school.
நாங்கள் / எங்களுக்கு மிக நல்லது போவது பாடசாலைக்கு.

54. We made him go to school.
நாங்கள் அவனை வைப்பித்து போனோம் பாடசாலைக்கு.

55. We didn’t make him go to school.
நாங்கள் அவனை வைப்பித்து போகவில்லை பாடசாலைக்கு.

56. To go to school we are ready.
போவதற்கு பாடசாலைக்கு நாங்கள் தயார்.

57. We used to go to school
நாங்கள் பழக்கப்பட்டிருந்தோம் போக பாடசாலைக்கு.

58. Shall we go to school?
நாங்கள் போகவா பாடசாலைக்கு?

59. Let’s go to school.
போவோம் பாடசாலைக்கு.

60. We feel like going to school.
எங்களுக்கு நினைக்கின்றது போவதற்கு பாடசாலைக்கு.

61. We don’t feel like going to school.
எங்களுக்கு நினைக்கின்றதில்லை போவதற்கு பாடசாலைக்கு.

62. We felt like going to school.
எங்களுக்கு நினைத்தது போவதற்கு பாடசாலைக்கு.

63. We didn’t feel like going to school.
எங்களுக்கு நினைக்கவில்லை போவதற்கு பாடசாலைக்கு.

64. We have been going to school.
நாங்கள் கிட்டடியிலிருந்து/ சிலகாலமாக போயிக்கொண்டிருக்கிறோம் பாடசாலைக்கு.

65. We had been going to school.
நங்கள் அன்றிருந்து/ அக்காலத்திலிருந்து போயிக்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு.

66. We see him going to school.
எங்களுக்கு தெரிகின்றது அவன் போகின்றான் பாடசாலைக்கு.

67. We don’t see him going to school.
எங்களுக்கு தெரிகின்றதில்லை அவன் போகின்றான் பாடசாலைக்கு.

68. We saw him going to school.
எங்களுக்கு தெரிந்தது அவன் போகின்றான் பாடசாலைக்கு.

69. We didn’t see him going to school.
எங்களுக்கு தெரியவில்லை அவன் போகின்றான் பாடசாலைக்கு.

70. If we go to school, we will get good results.
நாங்கள் போனால் பாடசாலைக்கு, நாங்கள் பெறுவோம் நல்ல பெறுபேறுகள்.

71. If we don’t go to school, we won’t get good results.
நாங்கள் போகாவிட்டால் பாடசாலைக்கு நாங்கள் பெறமாட்டோம் நல்ல பெறுபேறுகள்.

72. If we gone to school, we would have got good results.
நாங்கள் போயிருந்தால் பாடசாலைக்கு நாங்கள் பெற்றிருப்போம் நல்ல பெறுபேறுகள். (போகவுமில்லை பெறவுமில்லை)

73. It is time we went to school.
இது தான் நேரம் நாங்கள் போவதற்கு பாடசாலைக்கு.

Home work:

1. We pray.
நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.
2. We learn English.
நாங்கள் கற்கின்றோம் ஆங்கிலம்.
3. We watch movie.
நாங்கள் பார்க்கின்றோம் திரைப்படம்.
4. We listen to songs.
நாங்கள் செவிமடுக்கின்றோம் பாடல்களுக்கு.
5. We have lunch.
நாங்கள் பகல் உணவு உண்கின்றோம்.

இவ்வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் முறையே 73 விதமாக மாற்றி பயிற்சி செய்யுங்கள். அவ்வாறு பயிற்சி செய்தால் தான் இப்பாடத்திட்டத்தின் முழுமையான பயனை நீங்கள் பெற முடியும்.

எதிர்வரும் பாடங்களில் நாம் கற்ற 73 வார்த்தைகளும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்போது அதனதன் பயன்பாடுப் பற்றியும், இலக்கண விதிமுறைகள் பற்றியும் மேலும் விரிவாக பார்க்கலாம்.
aangilam.blogspot.com
கீழுள்ள இலக்கங்களின் போது எப்பொழுதும் பிரதான விணையுடன் "ing" யும் இணைந்து வரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும்.

Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

Example:

We pray
We are praying.

சரி பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.

No comments:

Post a Comment