பணம்...
உயிருள்ள மனிதர்கள் சண்டையிடும்
உயிரற்ற பொருள்...
இந்த இறந்துபோன
பணத்திற்காக பிறந்த நான்...
அன்பான தாயின் வயிற்றில்
பிறந்திருக்கிறேன் என நினைத்தேன்...
இல்லை!
தாசியின் வயிற்றில் பிறந்திருக்கிறாய்
என்றாள் அவள்!
உன்னால் என் பிழைப்பு
ஒருவருடம் வீணாய்ப்போனது
வயிற்ருக்கு ஏதுமின்றி
வழியில் துடித்திருக்கிறேன் என்றாள்...
வயிருநிறைய நானிருந்தது
இன்பமில்லை துன்பமென்று
தூக்கிஎரிந்தாள்!
அனாதையான எனக்கு
அடைக்கலம் தந்தாள் என்தாய்...
அவள்பெயர்...
குப்பைதொட்டி...
உறங்க இடம் தந்தாள்...
உன்ன உணவு தந்தாள்...
சிரிக்க மழை தந்தாள்...
சிந்திக்க பசி தந்தாள்...
இருபதுவருடம் இத்தனையும் தந்தவள்
இப்போது
நாகரீக மாற்றத்தால்
நாலுசக்கர வாகனத்தால்
நாடுகடத்தப்பட்டு புதைக்கபட்டால்!
அவள் அன்பில் வளர்ந்த நான்...
மீண்டும் அனாதையானேன்!
கல்லாய் இருந்த அவள்
கல்லறையானாள்...
No comments:
Post a Comment