Saturday 17 March 2012

இறைச்சிக்கோழி வளர்ப்பு


இறைச்சிக்கோழி வளர்ப்பு

இறைச்சி / கறிக்கோழி

இறைச்சிக் கோழிகள் என்பவை இறைச்சித் தேவைக்காக (கறிக்காக) வளர்க்கப்படுபவை. 6லிருந்த 8 வாரங்கள் வயதுடைய இளம் ஆண் மற்றும் பெண் கோழிகள் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

பண்ணை / கொட்டகை அமைப்பு

ஒரு குஞ்சுக்கு 930 செ.மீ 2 என்ற அளவில் நல்ல காற்றோட்டமான இடவசதி தேவை. பிற கொட்டகைப் பராமரிப்புகள் முட்டைக் கோழிகளைப் போலவே பின்பற்றப்படுகின்றன.

உணவூட்டம்

2 வாரம் வரையிலும் 5 செ.மீ அளவும் 3 வது வாரத்திலிருந்து 10 செ.மீ அளவும் ஒரு குஞ்சுக்குக் கொடுக்கவேண்டும். குஞ்சு வளர வளர தீவன அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தீவனத்தொட்டியை பாதிக்கு மேல் நிரப்பக்கூடாது. குழாய் தீவன முறையாக இருப்பின் 100 குஞ்சுகளுக்கு 12 கிலோகிராம் தீவனத்தை 3 முறையாகப் பிரித்து அளிக்கவேண்டும்.

இறைச்சிக் கோழித் தீவனக்கலவை

சேர்க்கும் பொருட்கள் சேர்க்கவேண்டிய அளவு ஆரம்பித்தல் (0-5 வாரங்களில்) முடிவில் (6-7 வாரங்களில்) மஞ்சள் சோளம் 47.00 54.50 தீட்டப்பட்ட அரிசி 8.00 10.00 சோயாபீன் துகள் 17.50 14.00 கடலைப்புண்ணாக்கு 15.00 11.00 உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன் 10.00 8.00 தாதுக்களின் கலவை 2.00 2.00 உப்பு 0.50 0.50 மொத்தம் 100.00 100.00 …

இறைச்சிக் கோழித் தீவனக்கலவை

சேர்க்கும் பொருட்கள்
சேர்க்கவேண்டிய அளவு
ஆரம்பித்தல் (0-5 வாரங்களில்)முடிவில் (6-7 வாரங்களில்)
மஞ்சள் சோளம்47.0054.50
தீட்டப்பட்ட அரிசி8.0010.00
சோயாபீன் துகள்17.5014.00
கடலைப்புண்ணாக்கு15.0011.00
உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன்10.008.00
தாதுக்களின் கலவை2.002.00
உப்பு0.500.50
மொத்தம்100.00100.00
இது தவிர வெளியில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் கலந்து விற்கும் வணிக ரீதியான கலப்புத் தீவனங்களையும் அளிக்கலாம்.

நீர்

நீர்

  • 2×2 லிட்டர் கொள்ளளவுள்ள நீர்த்தொட்டியில் 2 வார வயதுடைய 100 குஞ்சுகளுக்கு வைக்கலாம்.
  • 3 வார வயதுடைய குஞ்சுகளுக்கு 2 x5 லிட்டர் அளவு கொண்ட தொட்டிகளில் அளிக்கவேண்டும்.
  • எப்போது புதிய, தூய தண்ணீரை வழங்கவேண்டும்.
  • அடைகாக்கும் தருணங்களில் சரியான கவனிப்பும் நீர் ஆகாரமும் அவசியம். குஞ்சுகளின் இறப்பு எண்ணிக்கை 2 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் அடைகாப்புப் பராமரிப்புகள் முறையாக இருக்கின்றனவா என்றும், இறந்த குஞ்சுகளின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகளையும் வைத்து  இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்தல் வேண்டும்.
  • அடைக்காப்பானில் வெப்பநிலைய வாரத்திற்கு 3 செல்சியஸ் என்ற அளவில் குறைத்துக் கொண்டே வரவேண்டும். அடைக்காப்பானை நீக்கும் போது குஞ்சுகளுக்கு 40 வாட்ஸ் ஒளி விளக்கு என்ற அளவில் வெளிச்சம் வழங்கப்படவேண்டும்.
  • 100 கோழிகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான உணவு மற்றும் நீரின் அளவை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட சூத்திரத்தின் மூலம் அறியலாம்.
  • 100 கோழிகளுக்குத் தேவையான தீவனம் கிலோகிராமில் வயது நாட்களில் 14.4
  • நீரின் அளவு லிட்டரில் (100 கோழிகளுக்கான) வயது நாட்களில் 12.0
  • சாதாரண சூழ்நிலையில் மேற்கண்ட சூத்திரத்தின்படி கணக்கிட்டுக் கொள்ளலாம். பருவ நிலை (அ) தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து 5-10 சதம் வரை வேறுபடலாம்.

No comments:

Post a Comment