Sunday 18 March 2012

இனவிருத்திக் கோழிகள் பராமரிப்பு,, கூண்டு முறைப் பராமரிப்பு,, வீடு / கொட்டகை அமைப்பு


இனவிருத்திக் கோழிகள் பராமரிப்பு


இக்கோழிகள் குஞ்சு பொரிக்கும் முட்டைகள் இடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெருவாரியான முட்டைகளில் இருந்து நல்லக் குஞ்சுகளைப் பெறவேண்டுமெனில் முறையான பராமரிப்பு அவசியம். இனச்சேர்க்கைக்கென தனியாக சேவல்கள் வளர்க்கப்படவேண்டும். இவ்வாறு இனச்சேர்க்கை சேவல்களை எடைக் குறைந்த இனங்களுக்கு சேவல்,பெட்டைக் கோழிகள் விகிதம் 1:10 என்றும் எடை மிகுந்த இனங்களுக்கு 1:8 என்றும் இருக்குமாறு 20வது வாரத்தில் விடவேண்டும். 24வது வாரத்திலிருந்து முட்டைகளை சேகரித்துக் கொள்ளலாம். புல்லோரம் கழிச்சல் நோய் மற்றும் மைக்கோபிளாஸ்மாசிஸ் போன்ற நோய்கள் தாக்காமல் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
கோழிகளின் ஆரோக்கியத்திற்கும், அதிகமாகக் பொரிக்கும் திறனுக்கும் நன்கு சுத்தமான உலர்ந்த கூளங்களைப் பயன்படுத்துதல் அவசியம். அடைக்காக்க வைக்கப்படும் முட்டைகள் புதிதாக இடப்பட்டவையாகவும், ஓடுகள் தரமாகவும் (கெட்டியாகவும்) இருக்கவேண்டும். 5 கோழிகளுக்கு ஒரு கூடு என்ற அளவில் கூடுகள் தேவைப்படும்.

கூண்டு முறைப் பராமரிப்பு

இம்முறையில் கோழிகளைக் கையாள்வது எளிது. குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கலாம். முட்டைச் சேகரிப்பு எளிது, ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்த்தொல்லை குறைவு. பயனற்ற கோழிகளைக் கண்டு நீக்குவது எளிது போன்ற பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. எனினும் ஆரம்ப முதலீடு அதிகம், ஈரக்கழிவுகள், துர்நாற்றம், கொசு, ஈ போன்ற குறைபாடுகளும் உள்ளன. இவற்றில் சில பிரச்சனைகளுக்கு உயர்த்தப்பட்ட கூண்டு முறை சிறந்தது. 4 கோழிக் கூண்டு வீடுகள் பண்ணைக்குப் போதுமானது. நான்கு கூண்டு முறையின் அளவுகள் முறையே.
நீளம்                                   45 செ.மீ (முன்பக்கம்)
உயரம் (பின்பகுதியில்)        38 செ.மீ
உயரம் முன்பகுதியில்          42 செ.மீ
அகலம்                                42 செ.மீ
எனினும் உயரத்தை அளவிட 2 முறைகள் உள்ளன. கூண்டின் தரை முன்பகுதி நோக்கி சரிந்து இருக்கும். பொதுவாக முட்டையிடும் கோழிகளுக்கான தரையமைப்பு இணைக்கப்பட்ட கம்பி வலையாக இருக்கும். சில இடங்களில் இக்கம்பிகள் பிளாஸ்டிக் உறைகளைக் கொண்டிருக்கும். தரைக் கம்பி 14 கஜமுள்ள கம்பிகளாக இருப்பது சிறந்தது. வலைச்சல்லடை அளவு 2.5×5.0 செ.மீ (1 x2”) கூண்டின் முன்பக்கம் கூண்டையும் தாண்டி வலையமைப்பு சிறிது நீண்டிருக்கும். இதன் வழியே முட்டைகளை எளிதில் சேகரித்துக் கொள்ளலாம். இந்து நீண்ட அமைப்பு 18 செ.மீ தூரம் சற்று வளைந்து காணப்படும். குறைந்த அளவு இடத்தில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க ஏதுவாக ஒரு அடுக்கு, இரண்டு மற்றும் 3 அடுக்கு வரை அமைத்துக் கொள்ளலாம்.
கூண்டானது தரையிலிருந்து 1 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். எச்சங்களைச் சேகரிக்கக் கூண்டின் அளவிற்கேற்ப தரையில் 30 செ.மீ ஆழத்திற்கு குழி அமைத்தல் சிறந்தது.
நீளமான, தொடர்ச்சியான தீவனத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. நீரானது நீளவாக்கில் அமைக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ச்சியாக வழங்கப்படவேண்டும். தீவனத் தொட்டிக்கு மேலே கூண்டிற்கு வெளிப்புறப் பகுதியில் நீர்க்குழாய்கள் செல்லுமாறு வைத்தல் வேண்டும். ஆங்காங்கு கீழே வரும் குழாய்களில் துளையிட்டு அடைப்புடன் நீர்த் தேவையான அளவு சொட்டுசொட்டாக வரும்படி வைத்தல் வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும்.

வீடு / கொட்டகை அமைப்பு

18 வார வயதில் சரியாக வளர்ச்சியடையாத பெட்டைக் குஞ்சுகளைப் பிரித்து நீக்கிவிடவேண்டும். கொட்டகைப்படுத்தும் சமயத்தில் சரியாகப் பிரித்து விடுதல் நல்லது. பிரிக்கப்பட்ட கோழிகளை தனி அமைப்பில் வளர்த்துப் பின் முட்டையிடும் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் அல்லது அங்கேயே வளர்க்கலாம். சரியான அளவு இடவசதியுடன் அதிக இடம் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது முட்டையிடும் கோழி ஒன்றிற்கு 65 அடி இடம் அளிக்கப்படவேண்டும். முட்டையிடுவதற்கு 2 வாரம் முன்பு கூடுகள் அல்லது வலைப்பின்னல் அமைக்கப்படவேண்டும். அப்போது தான் கோழிகள் புதிய அமைப்பிற்கு பழகிக் கொள்ள ஏதுவாகும்.
Layer
முட்டையிடும் கோழி
பட்டைத் தீட்டிய அரிசி13
கோதுமைத் தவிடு4
மீன் துகள் / உலர்த்தியது6
உப்பற்ற மீன்6
டை கால்சியம் பாஸ்பேட்1
உப்பு0.25
தாதுக் கலவை1.75
ஓடுத்துகள்5
மொத்தம்100.00
தீவனத்தை நீளமான தீவனப் பெட்டியிலோ அல்லது தொங்கும் அமைப்புள்ள தீவனப்பெட்டிகள் அமைத்தோ கொடுக்கலாம். 50 செ.மீ விட்டமும் 20-25 கிலோ எடைக் கொள்ளளவுக் கொண்ட தொங்கும் வகையில் அமைந்த தீவனப்பெட்டி 100 குஞ்சுகளுக்கு போதுமானது. நீர்த் தொட்டியிலிருந்து 3 மீட்டர் தொலைவில் தீவனப்பெட்டிகள் இருக்குமாறு அமைக்கவும். தீவனத்தை அவ்வப்போது நன்கு கலக்கிவிடவேண்டும்.
நீரானது 2.5 செ.மீ குறைந்த இடைவெளியில் வைக்கப்படவேண்டும். வெப்பநிலை அளவு 27 டிகிரி செல்சியஸிற்கு மேல் செல்லும் போது நீர்த்தொட்டிகளை அதிகப்படுத்தவேண்டும். தீவனத் தொட்டிகளின் மேல் முனை (நுனி) யானது கோழிகளின் பின்பாத்தியை விட சற்று உயரே இருக்குமாறு அமைக்கவேண்டும். தொட்டியின் 3ல் ஒரு பங்கு மட்டுமே தீவனம் நிரப்பவேண்டும்.



No comments:

Post a Comment